Skip to main content

ஒரு அரவமில்லா காட்டில் ... : பகுதி 2


ன் நினைவு தெரிந்த நாள் முதல் நான் மற்றவர் செயலுக்கு பாராட்டு பெற்றதில்லை.
அப்படி இருக்கும் போது ஒரு குற்றத்திற்கு ...
என்னால் நிச்சயம் முடியாது. நான் மாடசாமியை சுடவில்லை.

உங்களுக்கு மாடசாமியை பற்றி சொல்லி ஆக வேண்டும். தமிழ் நாட்டின் தேனீ மாவட்டத்தில் அவன் பெயருக்கு ஒரு பயம் உண்டு. மரியாதையும் உண்டு.

மாடசாமி இதுவரை ஏழு காவல் துறை மனிதர்களை கொன்று உள்ளான். ஒரு முறை காவல் நிலையத்தை சூறை ஆடி உள்ளான். ஈவு  இறக்கம் இல்லாத மனிதன். சிலருக்கு அவன் அய்யனார் - அதாவது காவல் தெய்வம். ஆனால் காவல் துறைக்கு அவன் பொறுக்கி தலைவன்; ரவுடி ராஜா; ஆயுதம் ஏந்திய சட்ட விரோதி; தேடப்படும் குற்றவாளி. ஆனால் அவனை நான் சுடவில்லை. எனக்கு அவனை சுட்டதிற்கு ஒரு பதக்கமும் வேண்டாம்.

நான் அந்த சித்திரை மாதத்தின் முதல் நாளில் தொலைபேசியில் அழைக்கப்பட்டேன். அது இரவு நேரம்.

சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் என் வீடு.

நானும் என் மனைவியும் எங்கள் சித்திரை திருநாளின் நாளின் நாளை முடித்து விட்டு இருந்தோம். எங்கள் படுக்கை அறையில் அவள் என்  அருகில் படுத்திருந்தாள். அதுவும் என் நெஞ்சில் தலை வைத்து. இன்று கோயிலுக்கு பொய் வந்தவள் அதே புடவையில் இருந்தா
ள். மெல்லிய பட்டு. பச்சை வண்ணம். வட்ட முகம். சிர்ப்பகலைகள் கூடி கற்பம் தரிக்க பிறந்த அற்புதம் அவள். மஞ்சள் பூச்சில் அவளின் முகம் அந்த பொன்னிற வெளிச்சத்தில் நிலவை விட அழகாக இருந்தது.

நான் அவளது உள்ளங்ககையில் என் முகம் பார்த்துகொண்டிருந்தேன்.
"என்ன பாக்குறீங்க ?" - மயில் இறகு  கை.
"கை ரேகை"
"தெரியுமா என்ன?" - என்னை நோக்கி திரும்பினாள். முகல் பார்த்தாள். நிமிர்ந்து அமர்ந்தாள். அவளது வெள்ளை தந்த கைகள் என் நெஞ்சில் மென்மையாய்  உரசியது.
"கொஞ்சம் கொஞ்சம்"
"சொல்லவே இல்ல"
"சொல்லிட்டா போச்சு "
"என்ன சொல்லுது கை ?"
"உலக உத்தமன் உன் புருசன்னு "
"கிழிஞ்சுது" - அவள் உதட்டை சுளுக்கினாள். மீண்டும்  நெஞ்சில் சாய்ந்தாள்.
 

அந்த நேரம் பார்த்து அந்த தொலை பேசி மணி அடித்தது. வெள்ளை மேனி தொலை பேசி அது. அதன் மீது எனக்கு எப்பவுமே ஒரு காதல் உண்டு.
வெள்ளை மேனி என்றாலே ஒவ்வொரு இந்திய ஆணுக்கும் அதுவும் தமிழ் ஆணுக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. அது பெண்ணாக இருந்தால் என்ன பேசும் தொலைபேசியாக  இருந்தால் என்ன.
 

"சத்யா" - என் பெயரை சொன்னேன்
"நான் DGP  பேசுறேன்" - மறு முனையில் ஒரு முரட்டு குரல்.
"சார்" - விரைத்துகொண்டது  என் உடம்பு. ஆண்மை  கொண்டது என் குரல்.
"உங்கள ஒரு முக்கிமான அசைன்மெண்டுக்கு பயன் படுத்த உள்ளோம்.
"என்ன அசைன்மென்ட் சார் ?"
 "நாளைக்கு சரியா பத்து மணிக்கு என்னோட ஆபிஸ் வாங்க"
"எஸ் சார்" - சல்யூட் அடிக்காத குறையை சொல்லி வைத்தேன்.

அவள் முகம் பார்த்தேன்.
"உங்க ஆளுங்களுக்கு நேரங்காலமே தெரியாதா ?" - சிணுங்கினாள்
"நான் அவளது முகத்தில் தவழ்ந்த அந்த சுருள் முடிகளை என் விரலால் வருடினேன். என்னவளின் மீதுதான் அது அழகு.

எங்கள் படுக்கை அறையின் விளக்குகள் அணைந்தன.

காலை நேரம். காவல் துறை தலைமை அலுவலகம். நான் எங்கள் தலைமை அலுவலரை சந்தித்தேன்.
அவர் கை கொடுத்தார். அவர் என்னை கை கொடுத்து பேசி விட்டு அனுப்பி வைத்தார்.

நான் என் மனிவியோடு கிளம்பினேன் தேனீ மாவட்டத்திற்கு. எங்கள் ஜீப் அந்த காடுகளில் பயணித்தது. அப்போதுதான் அது நடந்தது. நான் இதுவரை அப்படி ஒரு நிகழ்வை என் வாழ்வில் பார்த்தே இல்லை.

ஒரு முறை வியந்தும் பயந்தும் போனேன். எங்கள் வண்டி நின்றது. நான் பார்த்தேன். வருகிற வழி ஒன்றும் சிதைந்து கிடைக்கவில்லை. தாக்குதலும் இல்லை. ஆனால் நான் கொஞ்சம் துணுக்குற்றேன்.

அந்த நிகழ்வு ....

தொடரும்

Comments

  1. நல்லா விறுவிறுப்பான எழுத்து நடை...... மேலும் தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ம்ம்ம்.....நல்லாவே சுஸ்பன்ஸ் வெக்கறீங்க கார்த்தி... சூப்பர்

    ReplyDelete
  3. //அந்த நேரம் பார்த்து அந்த தொலை பேசி மணி அடித்தது. வெள்ளை மேனி தொலை பேசி அது. அதன் மீது எனக்கு எப்பவுமே ஒரு காதல் உண்டு.
    வெள்ளை மேனி என்றாலே ஒவ்வொரு இந்திய ஆணுக்கும் அதுவும் தமிழ் ஆணுக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. அது பெண்ணாக இருந்தால் என்ன பேசும் தொலைபேசியாக இருந்தால் என்ன.//

    ஆண்கள் சைகலாஜி- யா ?

    ReplyDelete
  4. @தனி காட்டு ராஜா
    அமாம் நண்பா ... நம்ம சைக்கலாஜிதான்.
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்