Bookmark and Share
தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Friday, June 4, 2010

த நா வரலாறு : சித்தன வாசல் சித்ராஞ்சலி

தமிழ் மண்ணின் பெருமை பற்றி என்னுடைய வேற்றுமொழி நண்பர் ஒருவர் சொல்லும்போது.உங்கள் மண்ணை எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் கலைகளுக்கு மிகுந்த ஆதரவு தருகிறீர்கள்.சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி! திருவைஆற்றில் இசை விழா! சென்னையில் மார்கழி இசை விழா.

பெருமையோடு சொல்லி விட்டு - காப்பாற்றுங்கள் இவற்றை என்று தட்டி கொடுப்பார்.
இப்போது அவரிடம் பேசும் வாய்புகள் குறைவு. அவர் ஒரு சிற்ப வேலை நிபுணர்.

மல்லையில் சிற்பங்களுக்கு - சிற்ப விற்பன்னர்களுக்கு ஒரு மாதத்தை ஒதுக்கி ஆதரவு - விழா தரலாம்.அரசுதான் செய்யவேண்டும் என்று இல்லை - இதை சிற்ப நிபுணர்களே செய்யலாம்.

அப்படி பார்க்கும் போது - கண்ணில் வந்து நிழல் ஆடியது சித்தன்னவாசல். சமண சமயத்தின் கடைசி எச்சமாய் நிற்கும் வரலாற்று ஆதாரம்.

சித்தனவாசல் - அஜந்தா எல்லோர குகைகளுக்கு அடுத்த நிலையில் நிற்கும் ஒரு கலை தளம்.

சிற்பங்கள் தமிழ் மண்ணின் பெருமை என்றால் வண்ண ஓவியங்களின் பெருமை சொல்லி நிற்பது சித்தன்னவாசல். சித்தன்னவாசல் மாதிரியான பிற சித்திர தளங்கள் எங்கே போனது என்று தெரிய வில்லை.

சித்தன்னவாசல் மண்டபங்களில் படுத்துறங்கும் வகையில் பாறை படுக்கைகள் உள்ளன. அவற்றில் சமண முனிவர்கள் படுத்துறங்கி இருக்கலாம்.அவர்களின் பெயரில் அது வழங்கபடுவதாகவும் சிலர் நம்புவது உண்டு.

பல ஓவியங்கள் சில கேள்வி எழுப்பவும் செய்கின்றன. தமிழ் மண்ணில் காஞ்சி அருகில் உள்ள கைலாசநாதர் மற்றும் பணமலையில் ஓவியகங்கள் சித்தன்னவாசளுக்கு பின் வந்தவை என்று சொல்ல படுகிறது.

அரசனும் அரசியும் இருக்கும் ஒரு ஓவியம் - அரசன் அதிக நகை அணிந்திருப்பது போலவும் அரசி நகைகள் குறைவாய் அணிந்திருப்பது போலவும் உள்ளன. அரசனுக்கு மீசை வேறு இல்லை. அரசனின் உடை அணிந்து எகிப்து மண்ணில் ஒரு அரசி ஆண்டதாக வரலாறு படித்த ஞாபகம்.அவளுக்கு மீசை இல்லை. அதை நான் இதனுடன் ஒப்பிடவில்லை என்றாலும் தமிழ் மண்ணில் மீசை அற்ற அரசர்களின் படங்கள் குறைவே. ராஜராஜனுக்கு மீசை இருந்தது இல்லை என்கிற செய்தி ஒரு நண்பர் சொன்ன போது - பக்கத்தில் இருந்தவர் மறுத்தார்.

அஜந்தாவில் உள்ள - அப்சரஸ் என்கிற ஓவிய நிலையோடு இங்கு உள்ள நடன மங்கையர் ஓவியம் ஒத்து செல்வதை ஆய்வாளர்கள் கவனிக்கிறார்கள்.

சித்தனவசலில் ஏன் ஒரு ஓவியவிழா வருடத்தின் ஓரிரு நாட்களில் நடத்த கூடாது. சித்தனவசலில் பல ஓவியங்கள் அழிந்து கிடக்கின்றன.

சமண புத்த சமயங்களின் பல வரலாறுகள் தமிழ் மண்ணில் காணமல் போய் உள்ளன. சீனர்கள் வணங்கும் போதி தர்மர் ஒரு தமிழர் என்று சீனம் பதிவு செய்கிறது. அவரை அவர்கள் புத்தி தார பல்லவர் என்று சொல்கின்றனர்.

பெருமான் என்று ஒரு அரச குலம் தமிழ் மண்ணில் இருந்திருக்கலாம் என்று ஒரு மலையாள நண்பர் சொல்ல கேள்வி.

தமிழ் மண்ணில் எப்படி வரலாறுகள் அழிந்தன என்பது வியப்பான ஒன்றே! தமிழன் வரலாற்றை பதிவு செய்யும் ஆசை கொண்டவன். பழைய - கீழ் கணக்கு - மேல் கணக்கு - தொல் - போன்றவை அதன் வெளிப்பாடே.

பத்து என்கிற எண் கண்டு பிடிக்கபடுவதற்கு முன் ஒரு பத்து வழங்கப்பட்டதே ஒன்பது -( ஒரு பத்து ). தொண்ணுறு - பழைய நூறு. தொளாயிரம் - பழைய ஆயிரம். இதெல்லாம் சாமானியன் செய்த பதிவுகளா? இல்லை அரசமுறை பதிவுகளா என்று ஆய்வு செய்வது நலம்.

சித்தன்னவாசல் - புதுகோட்டை மாவட்டத்தில் உள்ளது. சித்தனவாசல் பற்றி தமிழ் இலக்கியம் என்ன பதிவு செய்து வைத்து உள்ளது.

ஒரு தூரிகையுடன் சித்தன்னவாசலுக்கு பயணியுங்கள். ஒரு தூரிகை திருவிழா செய்யலாம். ஆனால் சரியான காலம் எது என்பதை ஆய்வாளர்கள் சொன்னால் நலம்.

2 மறுமொழிகள்:

Unknown said...

இதுவரை சித்தன்ன வாசல் போனதில்லை.. போகும் ஆர்வத்தை தூண்டிவிட்டது உங்கள் பதிவு .

Karthick Chidambaram said...

நன்றி நண்பரே! தங்கள் கருத்துக்கு. சித்தன்னவாசலுக்கு அருகில் உள்ள பலரே சென்றதில்லை.
என் நண்பர் ஒருவர் சொல்லுவார் - தாஜ்மஹாலுக்கு கூட இந்தியன் போய் இருக்க மாட்டான் - வெள்ளை காரன் அது அற்புதம் என்று சொல்லி இருக்காவிட்டால்.

Post a Comment

Related Posts with Thumbnails

Pages

Powered by Blogger.

நான் தொடர்பவை