Bookmark and Share
தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Friday, September 24, 2010

தமிழும் நாமும்

முழுமையாக தமிழில் பேசுவது என்பது இயலாத காரியம் என்பது போல ஒரு உலகை நிர்மாணிக்கும்  வலையில் நாம் நிறையவே சிக்கிக்கொண்டு விட்டோம்.

நான் சில தருணங்களை நினைக்கிறேன்.

என் வாழ்வில் முதல் முறையாக என்னை கவர்ந்த அழகான சொற்றொடர் ஒரு கிராமத்து சொற்றடர்தான்.

"தம்பி, அந்த காத்தாடியை சத்த அமத்துங்க"

இதற்கு முன்னாள் அது "தம்பி, அந்த ஃபேன ஆப் பாண்ணுங்க".

மிளகாய் என்கிற வார்த்தையை பொட்டலம் மடித்து கொடுக்கும் நம் நண்பர்கள் தான் கண்டுபிடித்தனர். தேங்காய் பூதுண்டு என்பது மிக சாதரணமாய் புழக்கத்தில் உண்டு.

மணி அடிச்சு பேசினேன் - ஒரு ஈழ தமிழர் சொன்ன வாசகம். தொலை பேசியில் அழைத்தேன் என்பதின் சாதாரண வழக்கு.

படித்த பலரிடம் ஆங்கில பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆங்கிலம் நம் தேவை. ஆனால் தமிழில் பேசும்போது ஆங்கிலத்தை கலப்பதை நிறுத்த முயல்வோம். கடினம்தான் ஆரம்பத்தில். முயல்வோம். முடியும்.

தமிழ் இன்னும் வாழும். தமிழால் முடியும் என்கிற எண்ணம் வேண்டும்.

Wednesday, September 8, 2010

பெருகிவரும் சிறுவயது தற்கொலைகள்

பள்ளி செல்லும் சிறுவர்கள் செய்து கொள்ளும் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. ஆசிரியர் திட்டினார். நண்பன்  கேலி பேசினான். நடத்துனர் கடினமாக பேசினார் - என்று காரணங்கள் பல.

நடத்துனர்கள் மாணவர்களை சரியாக நடுத்துவது இல்லை என்று சிலர் என்னிடம் பேசும்போது சொல்லினர். அவர்கள் சொல்வது உண்மையோ என்று நினைக்கிற சம்பவங்களை நானும் நேரில் பார்த்தேன். இது வருத்தம் அளிக்கிறது.

ஆசிரியர்கள் அடிப்பது எல்லாம் இப்போது குறைந்தே உள்ளது என்று நம்புகிறேன். ஆசிரியர் திட்டினார் என்கிற காரணத்தால் தற்கொலை என்பது சரியான ஒன்றா - ஆசிரியர்கள் சிலரை மிக மோசமான தண்டனைக்கு உள்ளாக்குவது காலம் காலமாக நடந்துவரும் ஒரு தவறு. ஆனால் அவர் கடிந்து கொள்ளக்கூட கூடாதா என்பது விவாத பொருள். மண்டியிட்ட நாட்கள் எனக்கு நினைவில் இன்றும் உண்டு.

நண்பர்கள் கேலி பேசினர். இது மிகவும் வருத்தம் தரும் விடயம். நண்பனே எதிரி ஆவது - நல்லது அல்ல. சக மாணவன் அல்லது மாணவன் என்றே அவர்களை அழைக்க வேண்டும் - அவர்கள் நண்பர்கள் அல்ல.

இன்னும் ராகிங் கொடுமை இருக்கிறது - அதுவும் அண்ணா பல்கலையில் கூட என்கிற செய்திகள் வருத்தம் அளிக்கிறது.

எதிர்த்து போரிடும் மனநிலை நம்மிடம் இல்லாமற் போவது வருத்தம். மொஹெஞ்சதரோ நிலத்திற்கு அந்நிய படைகள் வந்தபோது - போருக்கு ஆயத்தம் அற்ற நிலையில் இருந்த ஒரு பண்பு உயர் கூட்டம் என்றே திராவிட மக்கள் வர்ணிக்கப்படுகின்றனர்.

மனநிலையில் நாம் வலிமை இழந்து உள்ளதாகவே நான் நினைக்கிறேன். இவை மாறவேண்டும்.

Thursday, September 2, 2010

ஆங்கிலத்தில் எழுதுங்கள்

நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர்.
சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர்.

நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?).
என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை )

ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? )
சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு.

நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com   என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது.

இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது.
மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம்.

இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் -  நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.
Related Posts with Thumbnails

Pages

Powered by Blogger.

நான் தொடர்பவை