Bookmark and Share
தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Saturday, August 28, 2010

விஜய் டிவியும் தமிழ் கடவுளும்

என் கண்களில்  விழுந்த செய்தி அது. அப்போது நான் போதி தர்மரை பற்றி ஒரு ஆய்வை செய்து கொண்டு இருந்தேன். ஒரு நிலையில் போகரும் போதி தர்மரும் ஒன்றோ என்கிற குழப்பமான நிலை வந்தது.

போகர் சித்தர், போதி தர்மர் - புத்தர். சித்தி பெற்றவன் சித்தன் - அதாவது ஆய்ந்து அறிந்தவன். புத்தி பெற்றவன் புத்தன் - அதவாது எப்போதும் விழிப்புடன் இருப்பவன்.

இவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. யோ என்கிற சீடன் போதிதர்மருக்கு இருந்ததாகவும் ஒரு செய்தி உண்டு. புலிப்பாணி என்கிற சீடனை கொண்டிருந்தார் போகர். இருவரும் ஒருவரே என்கிற கருத்தும் உண்டு.

போதி தர்மத்தில் குமாரசாமி அதாவது கௌமார மதத்தின் தெய்வம் வழிபட பட்டு உள்ளதா என்கிற கேள்வி என்னிடம் உண்டு. போதி தர்மத்தவர்கள் போலவே முருகன் சிலைகள் திருப்பதி மற்றும் பழனியில் நிறுவப்பட்டு உள்ளதாம். இதுவும் ஆய்வுக்கு உட்படுத்த படவேண்டிய ஒன்றே.

திருப்பதி புத்த தளம் என்றும் அங்கே இருப்பது முருகன் என்றும் கருத்துக்கள் உண்டு. முருகன் போதி தர்மத்தில் வழிப்படபட்ட தருணத்தில் சாகிய முனி கௌதம புத்தன் தெய்வமாக இல்லாமல் இருந்து இருக்கலாம்.

முருகனின் அருளின் காரணமாகவே எல்லாளனை தான் வென்றதாக துட்டகாமினி நினைத்ததாக ஒரு செய்தி சிங்கள மக்களிடம் உண்டாம். முருகன் தமிழ் கடவுள் என்பது நம் நம்பிக்கை.

இப்படி நான் எந்த அளவுக்கு குழம்பி உள்ளேனோ அதே போன்ற குழப்பங்களின் மேல் நகர்கிறது விஜய் தொலைகாட்சியில் வரும் யாமிருக்க பயமேன். ஆய்வுக்கு உரிய செய்திகள் வருகின்றன.

அதே போல தேரையார் என்கிற சித்தர் பற்றியும் ஆய்வு நிறைய செய்ய வேண்டி உள்ளது. பால் எல்லாம் எண்ணெய் என்கிற மொழி சித்த பாடல்களில் உண்டு.

பல்லவர்களின் ஆரம்பகால கோயில்கள் எல்லாம் இடித்து தரைமட்டம் ஆன கதைகள் உண்டு. மாமல்லபுரம் அதன் காரணமாகவே வந்தது.
பல்லவர்களின் அழிக்கப்பட்ட கோயில்கள் புத்த கோயில்களோ என்கிற கேள்வி இன்னும் உண்டு.

பசுபதி நாதர் வழிபாடு கொண்டவர்கள் தமிழர்கள். முருகன் அவர்கள் தெய்வம் என்பது மோகன்ஜதரோ சொல்லும் செய்தி. முருகன் தமிழ் கடவுள் என்கிற பதமே ஆய்வின் சாவி. புத்த மதம் மற்றும் சைவம் சார்ந்த இருவரும் முருகனை வழிபட்டு உள்ளனர் என்று நினைக்க வேண்டி உள்ளது.

புலிப்பாணியின் வேண்டுகோளின்  படி உருவாக்கப்பட்ட சிற்பம் பழனி சிற்பம்.

அப்புறம் வஜ்ராயனம் என்கிற வார்த்தை தமிழில் இருந்து உருவான வார்த்தை. ஆங்கிலம் தவிர்த்த ஐரோப்பிய மொழிகள் வைரம் என்று எழுத வஜ்ரம் என்றுதான் எழுத வேண்டும் ஆனால் படிக்கும் போது வைரம் என்று படிப்பார்கள்.

நான் இருந்த அமெரிக்க நகர் ஒன்றின் பெயர் சான் ஜோஸ் ஆனால் சான் யோசே என்பார்கள். காரணம் J  - அதாவது ஜா என்கிற எழுத்து வடிவிற்கு Y  அதாவது யா என்கிற உச்சரிப்பு. அதாவது வஜ்ரம் ( Vajram )- வய்ரம் ( vairam ) வஜ்ரம் வட மொழி அல்ல. வஜ்ராயனம் என்கிற பீடம் நிறுவும் நிலை - அயனம் - நிலை. சயனம் - தூங்கும் நிலை. அசயணம் ( அசையாத நிலை ) - அமர்ந்த நிலை ( இதைதான் ஆசனம் என்கிறாகள். தமிழிலும் ஆசனம் என்கிற வார்த்தை உண்டு).அயனம் என்பதற்கு வழி என்றும் பொருள் உண்டு.

சரி! குழப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். மதங்களின் பால் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை ஆனால் இந்த ஆய்வு சுவாரசியமாய் எனக்கு தெரிகிறது. நண்பர் ஒருவர் ஒரு நூலகத்தை அறிமுக படுத்தி தொடருங்கள் ஆய்வை என்றார். நம்ம வேலையே மாறுதே என்று குழப்பத்துடன் மௌனம் காத்தேன்.

Tuesday, August 24, 2010

மீண்டும் நான்

இந்திய மண்ணிற்கு வந்து. பின்னர் இனைய இணைப்பு பெற்றுவிட்ட பின்னும் இன்றுதான் எழுதுகிறேன்.

இந்தியா, தமிழகம், என் இல்லம் - இவற்றில் நான் எதிர்பார்த்த பலவும் அப்படியே உள்ளன.

மதுரையில் நிறையவே உள்ளூர் தொலைக்காட்சிகள். இன்னும் மண் மனம் மாறவில்லை. பேருந்துகளில் சென்னையை போல் நகரும் மின் எழுத்துக்கள். கட்டணம் பற்றி கேட்பது இந்த பதிவில் தடை செய்யபடுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாய் நாம் அமெரிக்கத்தனம் நோக்கி நகர்கிரோமோ என்று கூட நான் சில இடங்களில் நினைத்தேன்.

அம்மா தினமும் கோயில் செல்கிறார். வழக்கம் போலவே. அப்பா நிறைய அரசிலும் சமூகமும் பேசுகிறார் வழக்கம் போலவே.

எப்போது சென்னை வருகிறாய் என்று நண்பர்கள் கேட்கிறார்கள் வழக்கம் போலவே. மிட்டாய்கள் விநியோகம் வழக்கம் போலவே.

வாழ்க்கை உயிர்ப்புடன் மட்டும் அல்ல சுட சுடவும் உள்ளது. அப்புறம் தமிழ் நாடு முழுதும் மழை மதுரை நீங்கலாக.

எழுதுவதை தொடர்வேன். அவ்வளவு சீக்கிரத்தில் விட்டு விடுவேனா ?

Saturday, August 7, 2010

இந்தியாவிற்கான பயணம்

எதிர்பார்த்து கேட்ட ஒன்று. கடைசியில் அமெரிக்க அரசாங்கத்தின் கருணையால் நடந்து விட்டது ( விசா முடிஞ்சுருசுல ).

இந்த முறை விசா நீடிப்போ, மீண்டும் விண்ணப்பிக்கும் என்னமோ இல்லை என்று சொன்னபோது மேலாளர் ஒரு மாதிரி பார்த்தார்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் - நான் ரசித்த மண் அமெரிக்கா. நீங்களும் வாருங்கள் எங்கள் ரத்த கொடை நாளுக்கு. தொடர் நடை பயணத்திற்கு என்று தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்ட மனிதர்கள்.

ஏதாவது தவறாக செய்தால் அறைக்கு அழைத்து - நீ ஏன் இப்படி முயற்ச்சிக்க கூடாது. என்று எடுத்து சொன்ன வெள்ளைக்கார மேலாளர்.அவர் ஒரு இஸ்ரேலியர். நல்லது செய்தால் ஊரையே கூட்டி பாராட்டும் நல்ல மனிதர்.
அமெரிக்கர்களிடம் நிறையவே கற்றுக்கொண்டேன். அவர்களின் தேவைகள், சிந்திக்கும் தன்மை எல்லாம் வேறுபட்டதாக இருந்தது. காரணம் அவர்கள் வளர்க்கப்பட்ட முறை.

திருமணத்திற்கு பின்னும் பெற்றோருடன் வாழ்வீர்களா ? எப்படி இது என்று கேட்ட ஆப்பிரிக்க அமேரிக்க நண்பர்.மீண்டும் வா ... என்று தன் தனிப்பட்ட தொலைபேசி மற்றும் தொடர்புகளை தந்து உச்சி முகந்து அனுப்பிய சீனர்.எனக்கு நிறையவே கற்றுக்கொடுத்த கிரேக்கர்.கை குலுக்கி விட்டு நிறுவனம் மாறினாலும் தொடர்பில் இருக்கும் ஐரிஷ்க்காரர்.  இந்தியர்கள் என் நண்பர்கள் என்று சொல்லும் போலிஷ்காரர் ( போலந்தை சேர்ந்தவர்).
சிங்கை வழியாக பயணம் மேற்க்கொள்ள சொன்ன மலையாள நண்பர்.அமெரிக்கா திகட்டவில்லை. வேறு நாடு பயணிப்பேன் அடுத்த முறை என்ற போது - ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றை விளக்கி அந்த நாடுகளுக்கு செல்ல சொன்ன ஜேர்மன் காரர்.
அமெரிக்க கடற்படையில் பணியாற்றிவிட்டு இன்று நான் வேலை பார்க்கும் கட்டடத்தில் பணியாற்றும் அந்த மனிதர்  நிறைய முறை என்னிடம் இந்திய வரலாற்றை கேட்ப்பார்.

நீ நன்றாக படம் வரைகிறாய் - ஏன் நீ ஊடக தொழிலுக்கு செல்லக்கூடாது ? என்று கேட்ட கிரேக்கர்.நீ ஆய்வுத்துறைக்கு செல் - என்று சொன்ன வெள்ளை நண்பர்.  ( யாரும் நீ தகவல் தொழில்நுட்பத்தில் இரு என்று சொல்லவில்லை :((()

இனிதே ஆரம்பம் ஆகிறது என் இந்திய பயணம் 10 ஆம் நாள் அதிகாலை சிங்கை வழியாக மதுரை பயணம்.மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போய் வருவேன். மீண்டும் சென்னையில் வாழலாம்.

பதிவெழுத நேரம் கிட்டுமா என்பது மட்டுமே தெரியவில்லை. கிட்டும் என்று நம்புகிறேன். உலக தலைவர்கள் படுகொலை தொடரை இயன்றவரை எழுதி முடிக்க முயல்வேன்.

சென்ற பதிவில் அருண் பிரசாத் கொலைக்கான காரணங்களை கேட்டார். வரும் பதிவுகளில் தெரிந்த காரணங்களை எழுத முயற்சிக்கிறேன்.
நாளையும் நாளை மறுநாளும் பதிவு எழுத முயற்சிக்கிறேன்.

Friday, August 6, 2010

சிந்தனையில் மூழ்கிய தேவதை ( சிறுகதை )

நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுதிய கதை. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
******************
அது ஒரு இருள் பொழுது. அந்த இருள் தேசத்திற்குள் வந்து குத்திதாள் அந்த வெள்ளை உடை தேவதை.

இளம்பெண் அவள். புன்னகை பூத்தாள்.

"உன் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது"

தன் கையில் இருந்த மந்திரக்கோலால் இருளில் ஆசிர்வதித்தாள். அங்கே ஒரு மனித உருவும் மண்டியிட்ட நிலையில் உயிர் பெற்றது.
"நன்றி" - மௌனத்தில் சொன்னான்.

அது ஒரு அதிகாலை வேலை.வரண்ட பூமி.
வந்து விழுந்தான் அவன்.

வரப்பில் ஒருவர் படுத்து இருந்தார். பக்கத்தில் எலிக்கறி.
அவரை எழுப்பினான்.

"காய் ..." - தன மொழியில்  வந்து விழுந்த மனிதன் ஆரம்பித்தான்.
"அட! காயாவது பழமாவது? சொத்துக்கு வழி இல்லாம செத்துக்குட்டு இருக்கோம்"  - வரப்பு மனிதன் மீண்டும் களைப்பில் படுத்தான்.

வானத்தில் இருந்து வந்தவன் கொஞ்ச தூரம் நடந்தான்.
பெட்டி கடைகளில் செய்தி ஏடுகள் தொங்கி கொண்டு இருந்தன. குஜராத்தில் சமயக்கலவரம்.

நடந்தான். இன்னும் சாதியும் மதமும் ... கண்டு நகர்ந்தான்.
பக்கத்து நாட்டில் படுகொலைகள் மறைமுகமாய் இந்திய மண் உதவி ? கேள்வி குறிகளோடு அடி அளந்தான்.

நிமிர்ந்து பார்த்தான். உச்சி வெயில்.
தண்ணீர் தவித்தது.

பெட்டி கடைக்கு போனான்.
தண்ணீர் என்று மௌனத்தில் கேட்டான்.
ஒரு பாலித்தின் பையுக்குள் அடைக்கப்பட்ட நீர்.

குடித்து முடித்தான்.
காசு கேட்டான் கடைக்காரன். வந்தவனுக்கு புரியவில்லை. தண்ணீரை விற்கிறார்கள் ? ஆச்சிரியத்துடன் நடந்தான்.
கடைக்காரன் விட்டான் தொலைகிறது என்று.

மெல்லமாய் கல்வி வர்த்தகம் கடை பரப்பி உள்ளதை ஊருக்கு வெளியே இருந்த கல்லூரி சாலைகள் காட்டின.

நூலகங்களில் கூட்டம் இல்லை. திரை அரங்குகளில் அலை மோதியது.
ஒரு கல்லில் அமர்ந்தான். ஊர் பரபரப்பை ஓடிக்கொண்டு இருந்தது.

தான் என்ன தவறு செய்த்தோம்? மனது அவனிடம் கேட்டது.
காந்தி அடிப்படை கல்வி கோரினார். இங்கே கல்வி வர்த்தகம்.
நீருக்கு விலை. உயிரோ மலினம். சாதியையும் மதமும் இன்னும் விசமாய் மனிதனை பிரிக்கிறது. காந்தி ஒருங்கிணைந்த இந்தியா கேட்டார்.
இங்கே ?. வேளாண்மை வேகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் வாழ்கிறது. குழம்பிப்போய் பார்த்தால் - நாங்கள் அடுத்த வல்லரசு என்று முழக்கங்கள்.

பார்க்கவே பிடிக்கவில்லை ஆனால் ஒரு நிம்மதி. வந்த இடத்திற்கே போய் விட நினைத்தான்.

இருளின் தேசத்தில் மீண்டும் அவன். எதிர்பார்த்து காத்திருந்த தேவதை.
"நன்றா ?" - தேவதை கேட்டாள்
"நிம்மதி அடைகிறேன்" - அவன் சொன்னான்.
"என்ன சொல்கிறாய் ?"
"நான் என்ன தவறு செய்தேன்?"
"கோட்சே " - கோபப்பட்டாள் தேவதை.
"இந்த மன்னிர்க்குதான் விடுதலை வாங்கித்தர நினைத்தார அந்த மனிதர். காந்தி தேசம் ... இப்போது ஒரு குப்பை கூடம்.
வெள்ளையன் போனனான் கொள்ளையன் வந்தான் என்பது தான் கதை. நல்லவேளை காந்தியை கொன்று நான் காப்பாற்றினேன்."

தேவதை சிந்தனையில் மூழ்கினாள். கோட்சே மீண்டும்  உருவம் இழந்தான் இருளில் கலந்தான்.

Wednesday, August 4, 2010

உ த ப : மூன்று தலைவர்கள்

அவருடைய வேலை பளுவுக்கு இடையில் அந்த நாடகம் பார்ப்பது அவருக்கு சற்று இளைப்பாற செய்யும்.
அதுவும் அந்த நாடகத்தின் ஒரு சிரிப்பு நிகழ்வு அவர் மனதை இலகுவாக்கும்.

தன குடும்பத்துடன் அந்த நாடக ஆரங்கத்திற்கு வந்தார். மௌனமா அவர் அந்த நாடகம் பார்க்கும் மாடத்தில் அமர்ந்தார்.
அந்த மாடத்திற்கு பாக்ஸ் 13  என்று பெயர்.

மாடத்திற்கு கீழே மக்கள் திரள். ஆர்வமாய் அந்த கூட்டம் நாடகம் பார்க்க திரண்டு இருந்தது.

நாடகம் ஆரம்பித்தது. எல்லோரும் ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தனர் - அவனைத்தவிர. மாடத்திற்க்கான கதவு அருகில் வந்து நிட்று கொண்டான்.
தன் கைத்துப்பாக்கியை சரி பார்த்துக்கொண்டான்.

மெல்லமாய் கதவை திறந்தான். தலைவரின் மெய்க்காவலன் அங்கே இருந்தான்.
மெய்க்காவலன் இவனை இன்னும் பார்க்கவில்லை.

துப்பாக்கியில் குறிபார்த்தான். விசையை அழுத்தினான். குண்டு பறந்தது. பட் என்று தலைவரின் கபாலத்தில் பட்டு தலைவர் துடிதுடித்தார்.
கூட்டம் கூச்சலும் குழப்பமுமாய் மாறியது.

உடனடியாக அந்த மாடத்தின் கைப்பிடி சுவரில் ஏறி நாடக மேடையில் குதித்தான். வெற்றி முழக்கம் இட்டுவிட்டு ஓடினான். கிட்டத்தட்ட ஒழிந்தான் கொடுங்கோலன் என்கிற மாதிரியான ஒரு முழக்கம் அது.அவனால் வெளியில் ஓடி நதியில் ஒரு படகில் பயணிக்க முடிந்தது.

இதே நேரத்தில் அவனுடய நண்பர்கள் துணை குடியரசு தலைவரையும் வெளியுறவு செயலரையும் கொன்றனர்.
சுடப்பட்ட குடியரசு தலைவர் ஆபிரகாம் லின்கன். கொலையாளியின் பெயர் பூத்.

உள்நாட்டு நெருக்கடியில் அன்று அமெரிக்க பிரிந்து நின்றது.

தொடரும்

Monday, August 2, 2010

உ த ப : தோற்றுப்போன படுகொலை முயற்சி

இந்த கட்டுரை தொடரின் நோக்கம் தோற்று போன ஒரு படுகொலை முயற்சியை எழுதுவது இல்லை. அனாலும் ஒரு முறை ஒலி ஒளி வடிவத்தில்  கண்ட இந்த செய்த்திப்பதிவை  நான் பதிவிட நினைக்கிறேன்.
இதன் ஆதாரங்கள் உங்களுக்கு கிட்டலாம். 
என்னிடம் சரியான ஆதாரம் என்று கூறும் அளவில் எதுவும் கிட்டவில்லை. எனவே புறம்தள்ள தங்களுக்கு முழு உரிமை உண்டு.படிப்பவர்கள் இதன் நம்பத்தன்மையை ஆராய நினைப்பதன் மூலம் காணமல்  போன ஒரு வரலாற்று நிகழ்வு நமக்கு கிட்டலாம் என்கிற ஆவலின் அடிப்படையில் எழுத்தப்படும் பதிவே இது.
 
உலகின் உயர்வான மனிதர்களுள் அவருக்கு ஒரு பெயர் உண்டு.உலகமே வியந்த மனிதர் அவர். 
இன்றைக்கு நேற்றைக்கு அல்ல என்றைக்கும் அவருக்கு புகழ் உண்டு. 
 
மானுட வரலாற்றில் பூத்த பெருந்தலைவன் என்கிற கருத்து அவரது நாட்டை சேர்ந்தவர்களைப்போலவே இல்லாவிட்டால் கொஞ்சம் அதிகமாகவே மற்ற நாடுகளில் உண்டு.
 
காலை கதிரவன் வானில் பூக்க அந்த நகரம் சோம்பல் முறித்தது. பறவைகள் இரைதேடி பறக்க செவிக்கு உணவு தேடி ஒரு கூட்டம் வேற்று நகரங்களில் இருந்தும் வந்திருந்தது.
 
உலகத்தின் ஆட்சி மனிதர்களை கேள்வி கேட்கும் ஆற்றல் படைத்தவர் என்று நம்பப்பட்ட அந்த மனிதர் இன்று அந்த மண்ணில் உரை நிகழ்துக்கிறார்.
 
சீருடையிலும் வேறு உடையிலும் காவல் மனிதர்கள்.
மாநாட்டு பந்தல் மனித திரளில் தினறிக்கொண்டு இருந்தது.
 
அந்த மனிதர் வந்த நான்கு சக்கர வாகனம் மெதுவாகவே நகர வேண்டி இருந்தது.
கூட்டம் அதிகம்.  வண்டி மாநாட்டு பந்தலை நோக்கி நகர நகர் மக்களும் வண்டியோடு நகர்ந்தனர்.
 
அந்த இளைஞர்கள்    நால்வர் அவரது வண்டிக்கு அருகில் வந்து வண்டியோடு பயணித்தனர்.அவர்கள் இடைவாரில்  மௌனமாய் உறங்கிக்கொண்டு இருந்ததன கை துப்பாக்கிகள்.
 
கண்கள் துறுதுறுக்க அவர்கள் வண்டியோடு நடந்தனர்.
நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
 
நேரம் சரியாக இருந்தால் - சிரச்சேதம் செய்ய ஆயத்தமாய் இருந்தனர்.
இடை வாரை தொட்டுப்பார்தனர்  உள்ளே இருந்த துப்பாக்கி நலம் என்று சொன்னது.
 
உயிர் குடிக்க நேரம் கேட்டு நின்றது.
பொறுமை - நேரம் இன்னும் வாய்க்கவில்லை - என்று நெஞ்சுக்கும் ஆயுதத்திற்கும் சொல்லி விட்டு இன்னும் நடந்தனர்.
 
தலைவர் பார்த்து கை அசைத்தபடி வந்தார்.
அவர்கள் நெருங்கி விட்டனர். காலம் களம் அமைத்து கொடுத்தது.
 
அவர்கள் துப்பாகிகளை எடுக்க எத்தனிக்க காவலர்கள் அவர்களை பிடித்தனர்.
யாரும் பெரித்தும் கலவரப்படாத வகையில் அவர்களை அப்புற படுத்தினர்.
 
விசாரித்தனர்.
"எங்கள் தலைவனின் மரணத்திற்கு காரணமான அவரை கொல்ல வந்தோம்"
இளமை வேகத்தில் உண்மை வார்த்தைகளாய் வந்து விழுந்தது.
 
1931  -  லாகூர் நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு இது என்று சொல்லப்பட்டது அந்த பதிவில்.பகத் சிங்  என்கிற ஒப்பு உயர்வு அற்ற ஒரு வீரனின் மரண தண்டனையை இந்தியாவின் அண்ணல் அறப்போரில் விடுதலை வேட்கை நடத்திய அமைதி வீரர் மகாத்மா காந்தி அந்த மாவிரனை காக்க மனம் வைக்கவில்லை என்பது அவர்களின் கருத்து.
 
ஆயிர கணக்கான அமைத்திபோராளிகளின்  விடுதலையை உறுதி செய்த காந்தி அவர்கள் பக்கத்தின் மரணம் நிகழ்வதை தடுக்கவில்லை என்பது அவர்களின் வாதமும் வருத்தமும்.
 
தன் தந்தையின் வேண்டுகோளாலோ  - இல்லை யாருடைய வேண்டுகோளாலும் தான் வெள்ளைய சட்டத்திடம் பிச்சை எடுக்க
விரும்பவில்லை பகத் சிங்.
 
"அறவழி மாந்தர், அஹிம்சையின் உருவம் என்னிடம் விட்டுவிடுங்கள் விடலை போராளிகளை" என்ற போது நான் வியந்தேன் - உடன்பட மறுத்தேன் - என்று இர்வின் துரை  அவர்கள் தனக்கும் காந்திக்கும் இடையே நடந்த உரையாடல் பற்றி பதிவு செய்ததாகவும் கேள்வி.
 
காந்தியும் தான் இர்வினிடம் கேட்டதை கூட்டம் முடிந்து திரும்பு போது கருப்பு ரோசாக்களை வாங்கி கொண்டு சொல்கிறார்.ஆனால் அங்கேதான் அவர் ஒரு வரியை போடுகிறார் " நான் எப்போதும் அஹிமசையின் பக்கம்தான்"
 
இன்றும் இந்த நிகழ்வுகள் குறித்து குழப்பமான நிலை  நீடிக்கிறது. அவற்றை பற்றி சொல்வது இந்த தொடரின் நோக்கம் அல்ல.
 
தொடரும் 

Sunday, August 1, 2010

மீண்டும் ஒரு கவிதை!

வெண்ணிலா வதனம் கண்டேன்

செந்நிலா அதனில் கண்டேன்.

என்னவோ என்றிருக்க -
திலகம் என்று நீ உரைத்தாய்.மூக்கின் குழலா ?

மூங்கில் குழலா ?

காற்றை எடுத்து கீதம் தருதே!அதரங்களா

மதுரங்களா?

தேனின் சுவை கண்டுகொண்டேன்!


கண் விழியா ?

வன் குழியா ?

என்னை இழுக்குதே!


வேதனை நிலையில்

கொத்திதாலும்

வெள்ளரி பழமாய் உன் பேச்சு

குளிரச் செய்யுதே!


(உந்தன்)

சுட்டுவிரல்

அசைவிலே

சுத்துதே

உலகமே!


பட்டு மேனியை

தொட்டு பார்த்தால்

நெஞ்சில் சுகமே!


விட்டு விலகும்

நேரமெல்லாம்

சுட்டு விடுதே

நெஞ்சம்

முழுதும்!
Related Posts with Thumbnails

Pages

Powered by Blogger.

நான் தொடர்பவை