Bookmark and Share
தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Monday, May 31, 2010

தமிழுக்கு என்று ஒரு ஆண்டு!

இது தமிழ் தல வரலாறு தொடரின் பகுதி இல்லை. இன்று தான் தமிழ் செம்மொழி மாநாட்டின் கரு பாடலை பார்த்தேன். ஏற்கனவே கேட்டிருந்தாலும், இந்த ஒலி-ஒளி வடிவம் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் நம்பி பார்த்தேன்.

Wednesday, May 26, 2010

த நா வரலாறு: ஒன்றுபட்ட தமிழர்கள்

த நா தல வரலாறு எழுதும் எண்ணம் எதோ சிறுபிள்ளைதனமாக தோன்றிய ஒன்றே எனக்கு. அதிலும் எந்த விதமான ஆய்வும் செய்த மனிதன் இல்லை நான்.

நான் எழுதிய பல விஷயங்கள் நான் கேள்வி பட்டவை மற்றும் சிலர் கூற கேட்டவை அல்லது படித்தவை. பெரும்பாலும் அவை உண்மை என்பதை அறிந்தேன். அவற்றை சில தருணங்களில் படித்தும் உணர்ந்தேன்.

தமிழ் மண்ணில் தமிழன் ஒற்றுமையோடு வாழ்ந்ததே இல்லையோ என்ற கேள்வி என்னுள் நிறையவே உண்டு. தமிழ் சாதி ஒன்றே என்பதை விட தமிழரில் பல சாதி என்பதே உண்மை.

தமிழன் தென் அமெரிக்காவின் முதல் குடி. தமிழன் மொழியை அடிபடையாக கொண்டு தாய் மொழி ( தாய் லாந்தின் மொழி ) தோன்றி இருக்கலாம்.
தமிழன் பண்பாட்டின் நீட்சி இன்றும் இந்தோனேசியாவில் உள்ளது. தமிழ் நாட்டின் வேட்டிதான் வெளி நாடு போய் லுங்கயாய் வந்தது. தமிழ் எண்களே இன்று உலகெங்கும் பயன்படுத்தப்படும் எண்களின் அடிப்படை. தசமத்தை தமிழன் ஏற்றுக்கொண்டான். அதை பதிவும் செய்தான். ஆனால் வால்மிகியின் ராமாயணத்தில் கூட தமிழன் பிரிவுகளாய் சித்தரிக்கப்பட்ட அளவு அவனது ஒற்றுமை என்றும் சொல்லப்படவில்லை.

உண்மையில் தமிழன் ஒன்று பட்டு வாழ்ந்ததே இல்லையா ? இந்த கேள்வி கேட்டபோது எனக்கு கிடைத்த பதில் ஆம்? ஒரு 113 வருடம் மூன்று வேந்தர்களும் ஒன்று கூடி வாழ்ந்தனர்.ஆனால் பிற மன்னர்கள் இருந்திருக்க கூடும்.

தமிழ் நாட்டின் ஆய்வாளர் முனைவர் மதிவாணன் அவர்கள் ஆய்வுப்படி- 113  வருடங்கள் தமிழ் மண்ணின் மூன்று வேந்தர்கள் ஒன்று கூடி வாழ்ந்தனராம். தமிழர்களுக்கு ஒற்றுமை என்றால் எனக்கு முதலில் ஞாபகம் வருவது இமயவரம்பன் பற்றிதான். அவனுக்கு இந்த தமிழ் குருதிஅதிகம்.

மன்னர்கள் கருங்கை பெருவழுதி மற்றும் தேவ பாண்டியன் - இமயவரம்பன் அவர்களுடன் இந்த உடன்படிக்கை இட்டுகொண்டனறாம் - நாங்கள் ஒற்றுமையாய் வாழ்வோம் என்று. நந்த வம்ச வீழ்ச்சிக்கு பின் தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய கட்டாயம் இருந்ததாம். காரணம் மௌரிய ஆட்சி தமிழ் மண்ணை தாக்க ஆயத்தமாய் இருந்ததாம். அசோகரின் காலத்தில் தமிழர்கள் கல்வெட்டில் பதிக்க பட்டுஉள்ளனர்.

இந்த ஒற்றுமை உடன்படிக்கை 113  வருடம் உயிர் வாழ்ந்ததாம். அவ்வை இந்த பெருமையை தன கண்ணால் கண்டால் என்பதை சின்ன வயதில் அவ்வையார் படம் பார்க்கும் பொது அறிந்து கொண்டேன். ஆனால் அந்த படத்தில் இந்த ஒற்றுமை பெருமையாய் சொல்லபடாது.

அவ்வை பாரி மகளிரை வறுமை கோலத்தில் பார்க்கும் போது "பாரி எங்கே ?" என்று கேட்க - "மூவேந்தர்களும் சேர்ந்து கொன்றுவிட்டனர்" என்பர்.
இது ஏதோ மூன்று முதலாளிகள் சேர்ந்து ஒரு உழியர் சங்க தலைவனை கொள்கிற மாதிரி அப்போது பட்டது. இப்போதும் படுகிறது. துலாபாரம் தாக்கம்.

தமிழனின் ஒற்றுமை இன்னொரு தமிழனை வீழ்த்தவா இல்லை உண்மையில் தமிழனை காக்கவா ? நம்மிடம் அப்படி வரலாறு உண்டா ?

தொடரும்

Monday, May 24, 2010

த நா வரலாறு : மாமல்லபுரத்துக்கு அண்ணன்

குடை வரை கோயில்கள் தமிழ்மண்ணில் உருவாக பெரும் காரணமானவர்களில் ஒருவர் என்று போற்றபடுபவர் மாமல்லன் என்கிற மகேந்திர வர்ம பல்லவன்.

மாமல்லபுரத்தை கட்டுவதற்கு முன் மாமல்லன் கட்டியதாக சொல்லப்படுவது மண்டகப்பட்டு குகை கோயில். மண்டகப்பட்டு என்பது புதுவை அருகே உள்ளது. புதுவையில் இருந்து 50  கி மி தூரம் இருக்கலாம்.

Sunday, May 23, 2010

த நா வரலாறு: சிங்கம் வைத்த லிங்கம் ?

சில தருணங்களில் அந்த பக்கம் சென்று வந்து உள்ளேன். அதற்கு சமணர் மலை என்று பெயர். மதுரை மாநகரின் புறநகர் பகுதி. அந்த பகுதியை ஒட்டி ஒரு கல்லூரி ஒன்று தற்போது உள்ளது.

சமணர்கள் நம் மண்ணில் ஆழமாய் கால் பத்திது இருந்ததன் வெளிப்பாடு அந்த மலை. மக்களோடு வாழாமல் இந்த சமண துறவிகள் வாழ்ந்தது இந்த மலையில். இவர்கள் ஆடை இன்றி வாழ்ந்தமையால் மக்களோடு வாழ்வது அவளவு வசதி படவில்லை. இந்த மலைக்கு அம்மணர் மலை என்றும் வேறு ஒரு பெயர் உண்டு.

Saturday, May 22, 2010

த நா வரலாறு: கோட்டை இல்லாத ஊரா புதுகோட்டை ?

கடந்த பதிவில் அறந்தாங்கி பற்றி எழுதி இருந்தேன். அறந்தாங்கி கோட்டை பற்றி எழுதும்போதே நினைவுக்கு வந்த ஊர் கிழநிலை கோட்டை.

18  ஆம் நூற்றாண்டின் முடிவில் தென் இந்தியாவின் வரி வசூல் வேந்தர்களான நவாப்கள் தங்கள் அந்திம பொழுதை நோக்கி இருந்தனர். அவர்கள் புத்திசாலிதனமாக ஏற்கனவே தங்களின் வரிவசுலிக்கும் உரிமையை வெள்ளையர்களுக்கு வழங்கி இருந்தனர்.

Friday, May 21, 2010

த நா வரலாறு: வரலாறு தெரியாத தமிழன்

புதுக்கோட்டை மாவட்டம். அங்கே சிலகாலம் என் பள்ளி பருவம் கழிந்தது. நான் வாழ்ந்த ஊரின் பெயர் அறந்தாங்கி. அது என்னடா இடிதாங்கி மாதிரி அறந்தாங்கி என்று நான் பல தருணங்களில் யோசித்து உண்டு. இங்கு தான் அறம் தாங்கபடுகிறதாம்.

இப்படி ஒரு அழகான பெயர் கொண்ட அறந்தாங்கி தொண்டைமான்களின் ஆட்சியின் கீழிருந்த பகுதி. அறந்தாங்கிக்கு என்று அரச பிரதிநிதிகள் இருந்தனராம்.

Thursday, May 20, 2010

த நா தல வரலாறு: சர்ச்சில் அறிந்த திருச்சி

இந்தியாவுக்கு பல பெருமைகள் உண்டு. நான் அயல் நாடு ஒன்றில்  ஒரு விமான சேவை நிறுவனத்தில் பயணிக்கும் போது பம்பாய் சரக்கு என்று ஒன்று மெனு அட்டையில் இருந்தது. இது உலக புகழ் பெற்ற சரக்கு இதை அருந்துவது மரியாதை - கவுரவம் என்கிற மாதிரி எழுதி இருந்தது.

அப்புறம் நண்பர் ஒருவர் சொன்னார் அந்த மாதிரி ஒரு போதை பெருமை தமிழ் மண்ணுக்கும் உண்டு என்று. அந்த பெருமையின் பெயர் திருச்சி புகை இலை. சர்ச்சிலுக்கு மிக பிடிக்குமாம். அது என்ன திருச்சி போகயிலை என்று விசாரித்த போது அது திருச்சியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புகை இலையாம். அனால் அது திண்டுக்கலில் பயிரிட பட்டதாம்.

திருச்சி மண் பலதருணங்களில் பலர் கைகளில் இருந்து உள்ளது. சோழர் தலைநகரம் என்கிற பெருமையும் அதற்க்கு உண்டு. ஆனால் அது ஒரு வளமான இலக்காக பல போர்களிலும் இருந்து உள்ளது. கடைசி போரை கர்நாடக போர் என்று அழைகிறார்கள். அது என்ன கர்நாடக போர் என்று கேட்டால். கருநாடக என்றால் தமிழில் பழைய நாடு என்று பொருள். கருநாகம் என்பதற்கு கூட அப்படிதான் பெயராம்.

முதலில் காவிரியை ஒட்டி நாடுதான் பழமை நாடு என்கிற கருத்தில் இது உருகொண்டிருகலாம்.

ராபர்ட் கிளைவ் மற்றும் டுப்லே என்கிற இரண்டு பெரிய பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் போர் படை தளபதிகளுகளுக்கு நடந்த நாடு பிடிக்கும் போட்டியில் திருச்சி மாட்டிகொண்டது.

ராபர்ட் கிளைவ் திருவரங்கம் மற்றும் சமயபுரம் எதையும் தொடக்கூடாது என்று சொல்லி விட்டாராம். சந்தா சாஹிப் என்கிற மன்னனின் புத்திசாலித்தனம் அற்ற போர் முறையில் திருச்சி விழுந்தது. இந்த சந்தா சாஹிப் ஒன்று தமிழர் அல்ல. இவர் மராட்டியர். மராட்டியர்கள் தஞ்சையையும் திருச்சியையும் ஆண்டனர்.

டுப்லே அவர்களின் மொழிபெயர்ப்பாளர் ஆக இருந்த அனந்த ரங்க பிள்ளை - திருவரங்கம் இந்த போரில் அடைந்த பாதிப்பை சொல்கிறார். அனந்த ரங்க பிள்ளையின் நாட்குறிப்பு மிகுந்த புகழ் பெற்ற ஒன்று. அதில் இந்த கருநாடக போர் பற்றி சொல்ல பட்டு உள்ளது.

ஆனந்த ரங்க பிள்ளை அவர்களை து-பாஷி என்று அழைக்கின்றனர். அதாவது இரு மொழி தெரிந்தவர். சந்தா சாஹிப் குறைவான படை வீரர்களை விட்டுவிட்டு தன் நண்பனை பிரிட்டிஷ் போரில் இருந்து காக்க போய் திருச்சியை ராபர்ட் கிளைவின் முட்ட்ருகையில் விழ வழி செய்த்துவிட்டாராம்.

புத்திசாளிதனமற்ற போர் முறையால் திருச்சி விழுந்ததாக சொல்வது உண்டு. திருச்சிராப்பள்ளி என்கிற பெயரை கேட்கிறபோதே அதன் புத்த சமண தொடர்பும் தெரியும் - பள்ளி என்பது துறவிகள் தங்கும் இடம். சர்வபள்ளி வேங்கடபள்ளி என்று பல தென் இந்தியாவில் உண்டு. தமிழ் மண்ணில் உள்ளது திருச்சிராப்பள்ளி.

உறையூர் என்பதே சோழர்களின் தலைநகரம் அதன் புறநகரை ஒரு வேலை திருச்சி இருந்திருக்கலாம். ஆனால் இன்று நிலை வேறு.

சரி சர்ச்சிலுக்கு வருவோம் - அவர் ஒரு மென்மையான சுருட்டுக்கு தேர்ந்தெடுத்த புகை இலை திருச்சி புகை இலை. அந்த புகை இலை சென்னை வழியாக இரண்டாம் உலக போரின் தருணத்தில் கூட லண்டனை அடைந்ததாம். அவருக்கு அதன் மீது ஒரு காதல் இருந்ததாம்.

நீங்க தம் போடுற ஆளா - திருச்சி தம் கிடைக்குமான்னு பாருங்க.

தொடரும்

Wednesday, May 19, 2010

த நா தள வரலாறு: குங் ப்ஹு தந்த காங்-ஷி

இப்படி ஒரு ஊர் தமிழ் மண்ணில் இருப்பது உங்களுக்கு தெரியுமா ? அது என்னங்க காஞ்சிதானே தெரியும் இது என்ன காங்-ஷி என்று யாரவது கேட்டால் அவர்களுக்கான பதில் - ரெண்டும் ஒன்றுதான்.

நமக்கு காஞ்சியை பல்லவ மண்ணின் தலைநகராய் தெரியும். உங்களுக்கு தெரியுமா சீனர்கள் தங்கள் வரலாற்று புத்தகங்களில் நம் காஞ்சியை பற்றி எழுதி உள்ளது.

Tuesday, May 18, 2010

த நா தள வரலாறு: பிறவி பகை தமிழர்கள்

தமிழனின் ஒற்றுமை உலகறிந்த உண்மை. உலகத்தில் பல நாடுகளில் தமிழும் தமிழனும் இருந்தததாக சொல்லப்பட்டாலும். ஆய்வுகள் நிரூபித்தாலும்.
தமிழன் தன் ஒற்றுமையால் அதை உறுதி படுத்துகிறான்.

தமிழன் தனக்கு எதிராக இன்னொரு தமிழனை பார்கிறான். சிங்கத்திற்கு பகை சிங்கமாகதானே இருக்கவேண்டும்.

தமிழ் மண்ணில் இரண்டு கிராமங்கள் - இன்றும் தங்களை பிறவி பகையளிகளாய் நினைப்பதை ஒரு முறை அறிந்தேன்.

Monday, May 17, 2010

த நா தள வரலாறு : யாதும் ஊரே சொன்னவனின் ஊரு!

"யாதும் ஊரே யாவரும் கேளிர் !" என்று சொன்னவன் ஊர் எத்தனை பேருக்கு தெரியும்.
சிலர் பூங்குன்றம் என்று சொல்லிவிட்டு இருந்து விடுவர். ஆமா ? பூங்குன்றம் என்கிற ஊர் தமிழ் மண்ணில் எங்கு உள்ளது.

நீங்கள் தமிழ்நாட்டின் வரைபடத்தை திறந்து வைத்து என்றாவது இந்த ஊரை கண்டு பிடிதிருக்கீன்களா ?

உண்மையில் அந்த ஊரின் தற்காலத்திய பெயர் பூங்குன்றம் இல்லை. அந்த ஊர் தென் தமிழகத்தில் உள்ளது. அந்த ஊரின் பெயர் மகிபாலன் பட்டி.
மகிபாலன் என்பவரின் ஊர் என்றுதான் தெரியும். அல்லது அவர் பெயரில் உருவான ஊர்.

இந்த ஊரில் கணியனாக இருந்தவர்தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் சொன்னவர். அவர் சொல்வது இருக்கட்டும்.

அவரின் இந்த ஊரில் எத்தனை பேருக்கு அவருடைய ஊர் இந்த ஊர் என்று தெரியும். அவர் ஊரின் பக்கத்து ஊர் நண்பர் ஒருவர் சொன்னார்.

"இந்த ஊர் பெயர் மாற்றம் பெற்றதுமட்டும் இல்லை. இங்கே எந்த ஒரு ஆய்வும் நடந்த மாதிரி தெரியவில்லை."

தமிழ் மண்ணின் உருவம் தந்த வரிகளின் மனிதனின் வாழ்வை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் எண்றால் - மகிபாலன் பட்டி செல்லலாம்.

தொடரும்

Sunday, May 16, 2010

த நா வரலாறு : குமரிக்கண்ட மனிதர்களின் முதல் அடி ?

2012 என்று ஒரு ஆங்கில படம். பட்டயை கிளப்பிய படம். இந்த படம் சொல்லும் கதை ஒரு மிகப்பெரிய பேரழிவு. அதில் இருந்து மக்களை காப்பாற்ற நினைக்கும் ஒரு உன்னதமான மனிதன்.

இது போன்ற மிகப்பெரிய இயற்கை சீற்றங்களை சந்தித்த வரலாறு தமிழ் மண்ணிற்கு உண்டு. விவிலியம் நோவ என்கிற மனிதரின் கதை சொல்லும் போது - இப்படி பட்ட ஒரு பேரழிவு பற்றி பேசுகிறது. மச்சாவதாரம் பற்றி பேசும் போது வைணவம் கடற் பேரழிவு ஒன்று நடந்தது குறித்து சொல்கிறது.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு தள வரலாற்றை தன்னிடம் கொண்டு அமைதி சாட்சியாய் நம்மிடம் வாழும் ஊர் சீர்காழி.

உலகம் ஒரு பேரழிவை சந்திக்கப்போவது குறித்த உண்மை ஒரு உன்னதமான மனிதனுக்கு தெரிகிறது. அவன் வெட்டியானை வேலை செய்திருக்கலாம். அவன் இந்த உண்மை அறிந்த மக்களை காப்பாற்ற தோணி செய்கிறான். மக்களிடம் சொல்கிறான். உலகம் அழியப்போகிறது என்று.

ஒரு கடல்கோள் நடக்கபோவதை சொல்கிறான். பலர் உணர்ந்துகொள்ள மறுத்தாலும் கடைசியில் அந்த நிகழ்வு நடக்கிறது. கடல் கொந்தளிக்க
குமரிகண்டம் திணறுகிறது. தோணியில் மக்கள் முண்டியடித்து ஏறுகின்றனர். முடிந்த அளவு எல்லா உயிர்களையும் காக்கிறான் சிவன் என்கிற அந்த வெட்டியான்.

எல்லா உயிர்களில் குறைந்தது ஒரு ஆண் ஒரு பெண் இருக்கிற மாதிரி பார்த்து கொள்கிறான். தோணி கிளம்ப - குமரி கண்டம் நீரில் மூள்கிறது.
நீண்ட பயணத்திற்கு பின் அவன் தொனியுடன் தரை தாட்டிய இடம் சீர்காழி.

சிவன் என்கிற உயிர் காத்த அந்த மனிதனின் பெயர் ஆகுபெயர் ஆகி உயிர் என்று பொருள் கொள்ள ஆரம்பிக்கப்பட்டதாகவும் பின்னர் அது வடமொழியை அடைந்த போது அது ஜீவன் என்று ஆனது என்று என் தமிழ் ஆசிரியர் சொல்ல கேள்வி. இது மோகன்ஜதரோவுக்கு முந்தய காலமாக இருக்கலாம்.

தொடரும்

Saturday, May 15, 2010

த நா தல வரலாறு - கம்பன் இறந்த ஊர்

மதுரையை அடுத்த சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிற்றூரின் பெயர் நாடரசன்கோட்டை.
நாடரசன்கோட்டை என்கிற ஊரில் தான் கம்பர் தன் கடைசி நாட்களை கழித்தார்.

சோழ மன்னனிடம் பிணக்கம் ஏற்பட்ட பின்னும் தன் மகனின் மரணத்திற்கு பின்னும் கம்பன் தன் உறவினர்கள் வாழும் ஊரான நாட்டரசன்கோட்டைக்கு வந்தாராம்.

நாடரசன்கோட்டையின் மக்களின் தமிழ் அறிவு கண்டு - தங்கினால் இங்குதான் தங்குவேன் என்று அவர் முடிவு எடுத்ததாகவும் கதை உண்டு.நாட்டரசன்கோட்டை போன்ற இடங்களில் கம்பன் காலத்தில் சோறு விற்கும் பழக்கம் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் கம்பன் அறிந்தவரையில் சில இடங்களில் அது இருந்திருக்கலாம்.

தன்மான தமிழனாய் விளங்கிய கம்பன் - யாரிடமும் இலவசமாய் உணவு வாங்கி உன்ன மறுத்து நாட்டரசன் கோட்டை வந்த தருணத்தில் அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம் - "எங்கு சோறு விக்கும் ?" -என்று கேட்டாராம்.
"தொண்டயில்தான் விக்கும்" - என்றான் ஒரு சிறுவன் அதற்கு. அன்றில் இருந்து கம்பன் அங்கேயே தங்கி விட்டானாம்.

கம்பனின் உறவினர்கள் நாட்டரசன் கோட்டை வாழும் வணிகர்களிடம் வேலை செய்திருக்க கூடும் எனவே அங்கு அவர் தங்கி வாழ முடிவு செய்திருக்கலாம் என்று செய்திகள் உண்டு.

இன்று கம்பன் நினைவு இடம் கம்பன் கோவில் என்று அழைக்கப்பட்டு பாதுகாக்க படுகிறது. கம்பன் விழாவின் நினைவு நாள் அங்குதான் நடக்கும்.

முடிந்தால் இந்த தமிழ் திருதளதிருக்கு சென்று வாருங்கள். கம்பன் கோவிலுக்கு சென்று வாருங்கள். இன்றும் கம்பன் நினைவு மண்ணை பாலில் கலந்து குடித்தால் அறிவு பெருகும் என்று நம்பிக்கை உள்ளது.

பயணம் செய்ய சிறந்த நாட்கள்: கம்பன் விழா நடைபெறும் நாட்கள்.

கம்பன் புகழ் வாழ்க.

தொடரும்.

Wednesday, May 12, 2010

தமிழ் நாட்டின் தள புராணம் - அம்பாசமுத்திரம்

அம்பாசமுத்திரம் - கல்லிடைகுரிச்சியின் சகோதர தளம். அம்பாசமுத்திரம் அவளோகதீஸ்வரர் என்கிற இறைவனின் உறைவிடம்.
அவளோகதீஸ்வரர் இந்து கடவுள் இல்லை. அவர் புத்தர்களின் கடவுள். அம்பை என்று அழைக்கப்படும் இந்த ஊரில் உள்ள இந்த கடவுளை பற்றிய
சீன வரலாற்று குறிப்புகளில் உள்ளதாம்.

தாமிரபரணி என்பது தம்மபாணி என்று வட இந்திய புத்த சமயத்தவர்களால் அழைக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் கூட ஒரு தம்மபாணி உண்டு என்று கேள்வி. அம்பாசமுத்திரம் பல மன்னர்கள் கை மாறி இருக்கும். புத்த சமயத்தவர்கள் கழுவில் ஏற்ற பட்டு இருக்கலாம்.

விகிரமசிங்கபண்டியன் என்கிற மன்னனின் பெயரில் ஒரு ஊர் அருகமையில் உள்ளது. அகத்தியர் உலகம் சமநிலை பெற இங்குதான் வந்து அமர்ந்தாராம். பாண்டியர்கள் சோழர்கள் என கைமாறிய நகரம் இது. இங்கே சோழர்கள் கட்டிய கோயிலும் உண்டு.

காடையர்கள் என்கிற மக்கள் கூட்டத்தின் ஊரான கடையம் இதன் அருகில் உள்ளது. தமிழ் மண்ணில் பல சமண புத்த தளங்கள் இருந்தன. அவை பின்னர் வரலற்றில் இருந்து அழிக்கப்பட்டன.

அம்பையின் அவளோகதீஸ்வரர் மட்டும் அல்ல - புத்த மத்ததை நிலை நாட்டிய பல சீனா ஜப்பானிய முனிவர்கள் தமிழர்களாக இருக்கலாம் என்று நம்பபடுகிறது. அமிதாப்பா புத்தர், பொதி தர்மர் போன்றோர் தமிழர்கள் என்பது பலரின் நம்பிக்கை.

அம்பிக்கு போனால் அவளோகதீஸ்வறரை பாருங்கள்.

தொடரும்

தமிழ் நாட்டின் தள வரலாறு - II

தமிழர்கள் குடியானவர்களாகவும் வேடுவர்களாகவும் இருந்து உள்ளனர். முருகன் வேட்டுவ கடவுள். முருகனை வணங்கியவர்கள் தங்களுக்கு என ஒரு மதம் வைத்திருந்தாகவும் கூறப்படுவது உண்டு. இவர்கள் பெரும்பாலும் மலை பகுதிகளில் வசித்தனர். குடியானவர்கள் அதாவது ஒரே இடத்தில தங்கள் வாழ்வை அமைத்து கொண்டவர்கள் - வேளாண் பெருமக்கள் இவர்கள் பல தெய்வ வழிபாட்டில் இருந்திருக்க கூடும்.

வர்த்தக சமுகம் ஒன்றும் உருவாக தொடங்கியது இவர்கள் பொருள் தேடி பல தேசங்கள் பயணம் செய்தனர். நம் மொழியின் வார்த்தைகளும் பழமொழிகளும் இவை சொல்லும்.

அம்மாவாசை என்பது வணிக குலத்தின் திருநாள். இந்த நாளில் அவர்கள் கப்பல் பயணம் மேற்கொள்வர். காரணம் வருவது வளர்பிறை.
தாயின் வசம் பிள்ளையை ஒப்படைத்து செல்வதே அம்மா வாசை என்றும் சொல்வது உண்டு. இந்த வணிக மக்களின் பெருநகரம் பூம்புகார்.

தற்போது பூம்புகார் பெரிய அளவில் இல்லை. பூம்புகார் மட்டுமே நகரம் என்று அழைக்கப்பட்டதாக ஒரு செய்தி உண்டு. இந்த மண்ணில் வாழ்ந்த கண்ணகி பத்தினி வழிபாட்டின் அச்சாணி. தாய் வழி சமூகமான இந்த வணிக சமூகம் கண்ணகியை தங்கள்கடவுளாய் ஏற்றுகொண்டது.

இந்த பூம்புகார் நகரத்தை சேர்ந்தவர்கள் தமிழ் மண்ணின் வேறு நகரங்களுக்கு இடம் பேராதவர்கள் என்றும் அதனாலே இது புகார் என்று அழைக்க பட்டதாகவும் செய்திகள் உண்டு. இது ஒரு சோழர் கால நகரம். இதற்கென போர்கள் நடந்ததா எனதெரியவில்லை.

இந்த பூம்புகார் ஒரு கடற்கோளில் அழிந்து போனது. சிலப்பதிகாரம் இந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் பதிவே. தமிழ் மண்ணில் முதன்முதலில் அரசர்கள் அல்லாமல் செல்வ செழிப்போடு வாழ்ந்தவர்கள் இந்த மண்ணை சார்ந்தவர்களே. இந்த பூம்புகார் மண்ணை போலவே வட தமிழ் மண்ணில் ஒரு துறை முகம் நகரம் பிற்காலத்தில் பெருமையோடு விளங்கியதாகவும் அங்கே சிங்கர்கள் என்கிற வணிகர்கள்வாழ்ந்ததாகவும் செய்திகள் உண்டு. அது மல்லை.

தொடரும்

Sunday, May 9, 2010

தமிழ் நாட்டின் தள வரலாறு - I

இப்படி ஒன்றை எழுதலாம் என்று எனக்கு ஒரு ஆசை. முடிந்தவரை எழுதவும் முற்சிக்கிறேன். தமிழ் நாடு என்று ஒன்று ஆரம்ப காலத்தில் இல்லை.
தற்போதைய கர்நாடகம்தான் கிஷ்கிந்தை என்கிறார் ஒரு நண்பர். இந்த கிஷ்கிந்தையை சார்ந்தவர்களே குரங்குகள் என்று ராமாயணத்தில் சொல்லபட்டிருதாக அவர் சொல்வதற்கு பதில் எங்கள் மண்ணின் மைந்தர் அனுமன் என்றார்.

அனுமநிடத்தில் சீதை உள்ள இலங்கை எங்கு உள்ளது என்று ராமன் கேட்க அது சேர நாடு, பாண்டிய நாடு சோழ நாடு எல்லாம் கடந்தால் ஒரு கடல் வரும் அதை தாண்டினால் இலங்கை வரும் என்று அன்மான் சொல்கிறார்.

இது தான் தமிழ் நாட்டை பற்றி ராமாயணம் சொல்லும் செய்தி. சரி சேரர்கள் சோழர்கள் பாண்டியர்கள் என்ற பெயர்கள் எப்படி உறவாகி இருக்கும் ? என்று ஆய்வு செய்வது அவசிய படலாம். ஆனால் அவை நம் ஆய்வின் நோக்கம் அல்ல.

நான் முதலில் தமிழ் மண்ணின் எல்லைகள் என்று விடுதலைக்கு முந்தய இந்தியாவில் பாரதி சொன்ன வேங்கடத்தையும் குமாரியையும் எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன். தவறுகளை சுட்டி காட்டுங்கள். திருத்துங்கள்.

விமர்சனங்கள் வரவேற்கப்படும்!

திருபதி என்கிற தற்போதய நகரத்தின் ஆரம்ப காலத்திய பெயர் திருப்தி இல்லை. அது வேங்கடம் என்று அழைக்க பட்டு உள்ளது. வேங்கடம் என்பது ஒரு காலத்தில் புத்த நிலையமாக இருந்திருக்க வாய்புகள் உண்டு என்று சிலர் சொல்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி அங்கு புத்தம் இருந்தது. இன்றும் ஆந்திரத்தில் வேங்கடம் பள்ளி என்று ஒரு தளம் உண்டு - பள்ளி என்பது புத்த சமண சமயத்தவர்கள்தங்கும் பகுதி.

இந்த பகுதியின் கடவுள் வேங்கட ஈஸ்வரன் ஆதாவது வேங்கடத்தின் கடவுள். வேங்கடம் ஒரு மலை பகுதி. வேங்கடத்தின் இறைவன் எப்படி இங்கு கோயில் கொண்டான் என்பதற்கு பெரிய ஆதாரம் இல்லாவிட்டாலும். இந்த இறைவனின் கோயில் பலராலும் பராமரிக்கப்பட்டு வந்து உள்ளது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வட வேங்கடம் என்று கூறுகின்றன. ஒரு வேலை தென் வேங்கடம் உள்ளதா என்று தெரியவில்லை.
வழக்கமாகவே வட காசி என்று ஒன்று இருந்தால் தென் காசி என்று ஒன்று இருக்கும். எனவே தென் வேங்கடத்தை தேடுவது நலம்.

பிறகு மலைக்கு இறைவனின் பெயர் வந்தது அதாவது திருவின் கணவர் திருபதி என்று ஆயிற்று என்றாலும் திரு அம்பதி ஆதாவது செல்வத்தின் தளம் என்பது கூட மருவி திருபதி ஆகி இருக்கலாம். மதுரையம்பதி பழநியம்பதி என்பது போல.

இந்த கடவுள் அணிகலன் எதுவும் அணியதவாரகவே காட்சி தந்தாகவும் பின்னரே இவர் செல்வர் ஆனதாகவும் சொல்பவர்கள் உண்டு. பல்லவ குடைவரை குகை கோயில் வடிவமைப்பில் இது கட்டப்பட்டு உள்ளது.

இது தமிழ் நாட்டின் வட எல்லை. இனி மற்ற ஊர்களை பற்றி பார்ப்போம். உங்கள் கருத்துக்களை கூறவும்.

Thursday, May 6, 2010

தமிழ் நாடு : வாழும் கடைசி செவ்வியல் சமுதாயம்!

தமிழனக்கு பெருமை பட நிறையவே உள்ளது. அவற்றில் ஒன்றுதான் இது. மைகேல் வூட்ஸ் என்கிற ஆவன பட தயாரிப்பாளரின் நேர்காணலை கண்ட பொது அவர் தன்னுடைய தமிழ் ஆர்வம் பற்றியும் தமிழ் நாடு பற்றியும் சொல்ல. நாம் அந்த சமுதாயத்தின் ஒரு அங்கம் என்கிற பெருமை நெஞ்சில் வந்த சில்லென்று தென்றல் வீசியது.

தமிழ் ஐரோப்பிய மொழிகளுக்கு எல்லாம் முந்தையது என்றார். அவரது பேச்சில் வெள்ளையர்கள் இந்தியாவின் உண்மையான கலையை காண மறந்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

அவரது மொழி நடையும் அவரது ஆர்வமும் மெய்சிலிர்த்தது.

தமிழ் நாடு வாழும் கடைசி செவ்வியல் சமுதாயம் என்றார்.

அவரது பேச்சில் மிகுந்த பக்குவம் தெரிந்தது. முருகனின் சிரிப்பில் என்று அவர் ஒரு ஆங்கில நூல் எழுதி உள்ளார். அவர் பதிவு செய்தது உள்ள இந்தியாவின் கதை பல நாடுகளில் ஒளிபரப்பான ஒரு ஆவன படம்.

தமிழர்கள் மொகஞ்சதாரோ மனிதர்கள் என்கிறார்.

அவரது இந்த சொற்பொழிவு மற்றும் கேள்வி பதிலை காணுங்கள் - உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

http://www.intelligencesquared.com/talks/south-india-the-last-classical-civilisation
Related Posts with Thumbnails

Pages

Powered by Blogger.

நான் தொடர்பவை