Bookmark and Share
தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Friday, June 18, 2010

என் பயணங்களில்: தமிழும் இங்கிலீஷ் அய்யாவும்

என்னுடைய  பள்ளி இறுதி தருணங்களில் என்றாலும் நான்கு வருடம் அந்த பள்ளியில்தான் படித்தேன்.

ஒழுங்காக ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில்லை என்று சிலர் சொன்னாலும் - அவர்கள் நல்லபடியாகவே நடத்தினர். இல்லை என்றால் நான் எல்லாம் எப்படி முன்னேறுவது?

எங்களுக்கு ஒரு ஆங்கில ஆசிரியர் வருவார். அதிகம் பேச மாட்டார். பாடம் எடுத்துவிட்டு கெத்தோடு போய் விடுவார். அவரை பற்றி பதிவு செய்ய
ஒரு காரணம் உண்டு.

தமிழில் எல்லா ஒலி குறிப்புகளும் உண்டு என்று சொன்னார். ஆனால் அவை நன்முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்று.

ஒரு நாள் "G " என்கிற ஆங்கில எழுத்து இன்னும் தமிழில் உள்ளது என்றார். அதற்கு அவர் சொன்ன வார்த்தை தங்கம் - இதில் "G " அல்லது " Gha " உள்ளது என்று சொன்னார்.

உண்மைதான் அப்புறம்தான் நானும் அதிகம் கவனிக்க ஆரம்பித்தேன். சென்னையை சேர்ந்த இன்னொரு  நபரை நான் அமெரிக்க மண்ணில் சந்தித்த போது - இன்னும் கொஞ்சம் அதிகமாய் தெரிந்து கொண்டேன்.

எங்களுடன் இருந்த ஒரு வேற்று மொழிக்காரர் வடமொழி பெருமை பற்றி சொன்னார். நாங்கள் கொஞ்சம் மென்மையாய் எதிர்த்தோம்.
இந்த மனிதர் வந்தார்.

வேற்று மொழி நண்பர் - தமிழில் "G " - "B " "F" போன்ற எழுத்துக்கள் இல்லை என்பதை சொல்லி ஏளனம் செய்ய ஆரம்பித்தார்.
நாங்கள் கொஞ்சம் அமைதி காத்தோம். இந்த மனிதர் மென்மையாக ஆரம்பித்தார்.
"நண்பரே - யார் சொன்னது தமிழில் இல்லை என்று ?" - என்று கேட்டார்.
"அட! இருக்கா என்ன ?" - வேற்று மொழி யாளரின் முகத்தில், வார்த்தையில் ஏளனம் இருந்தது.
"தமிழை குறை சொல்லும் முன் தமிழை தெரிந்துகொள்ளுங்கள்"
"எனக்கு தெரியுங்க" - என்றார் வேற்று மொழி யாளர்.
"தமிழ் மொழியில் இந்த எழுத்து எல்லாம் இருந்தது. இவை எல்லாம் பின்னால் கலயபட்டது. கடினமான எழுத்துக்குள் உடல் நலனை கெடுக்கும் உச்சரிப்பை உடையவை என்கிற உண்மை கண்டறியப்பட்டு பின்னர் அவை கலயபட்டன. அப்படி இருந்தும் இன்னும் சில தமிழில் உண்டு - அதில் ஒன்று தங்கம்" என்றார் நம்ம ஆளு.

எனக்கு இப்போது என் ஆங்கில ஆசிரியர் ஞாபகம் வந்தார். அப்படி என்றால் இந்த கடின எழுத்துக்கள் தமிழில் இருந்தனவா ? நண்பர் சொன்னார் -
வடமொழி உருவாக்கப்பட்ட மொழி - தமிழ்: உருவான மொழி பின்னர் உருமாறிய மொழி.

ஆங்கில இலக்கணங்கள் பல இந்தியாவின் வேறு மொழிகளுடன் ஒத்துபோகாமல் - தமிழோடு ஒத்துபோகும் விடயங்களை நானே கவனித்து உள்ளேன்.

தமிழர்கள் பலரும் தாங்கள் ஆற்றும் பணி மற்றும் செயல்படும் இடம் என்று எதுவும் தமிழ் ஆய்வுக்கு வழி செய்யாவிட்டாலும்  -ஆய்வு செய்கின்றனர்.
ஆங்கிலத்தில் வரும் a , an , the  என்பன தமிழ் குறி சொற்களான ஒரு, ஓர், அந்த மற்றும் இந்த என்பவையே.

தமிழ் எழுத்து படிக்க மட்டும் கத்துகொடுதுவிட்டால் போதும். தமிழ் தானாய் வளரும். அடுத்த பதிவில் நான் தமிழ் கற்ற விதம் பற்றி சொல்கிறேன்.


இதை பற்றி நான் ஏற்கனவே எழுதிய ஒரு இடுக்கையின் தொடுப்பு கீழே தந்து உள்ளேன்.

ஆங்கிலம் தமிழில் இருந்து தான் தோன்றியதா ?பயணம் தொடரும்

2 மறுமொழிகள்:

Chitra said...

வடமொழி உருவாக்கப்பட்ட மொழி - தமிழ்: உருவான மொழி பின்னர் உருமாறிய மொழி....... மகிழ்ச்சி மட்டும் அல்ல - பெருமை படக்கூடிய செய்தி, இது..... தமிழ், எனது தாய் மொழி ..........!!!!!!!!

Karthick Chidambaram said...

பெருமைபட நமக்கு நிறையவே உள்ளது - சித்ரா. எனக்கு ஆரம்பத்தில் நிறைய தெரியாது.
இந்த தளத்தில் என் முதல் பதிவை படியுங்கள். படித்து விட்டு கருத்து சொல்லுங்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails

Pages

Powered by Blogger.

நான் தொடர்பவை