மணிரத்தினம் அவர்கள் ஒரு ரவனானயணம் செய்து உள்ளார். அவரிடம் நிறைய எதிர்பார்ப்புகள் உண்டு.
இந்த படத்தை பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன் ஒன்றை சொல்லி விடுகிறேன் - நான் திரைவிமர்சகன் இல்லை. இது வரை எழுதியதும் இல்லை.
மணி ரத்தினம் படங்களுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை உண்டு. ரோஜா வந்த பின்னர் இந்தியாவின் எல்லா மொழிபடங்களின் வில்லன்களும் பாகிஸ்தானில் இருந்தே வந்தார்கள் அல்லது இருந்தும் வந்தார்கள்.
மற்றபடங்களினால் பெரிதும் பின்விளைவுகளை ஏற்படுத்தமுடியாவிட்டலும் சில பாதிப்புகளை ஏற்படுத்த முடிந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கு பின் இலங்கையின் பிரச்சனை சிலாரல் நினைக்கப்பட்டது.
இன்றுதான் ராவணன் பார்த்தேன். இந்த படம் இந்தி மொழியில் நிறையவே தோற்க வாய்ப்புகள் உண்டு. அங்கே உட்காரும் போதும் எழுந்திருக்கும் போதும் கூட ராம் ராம் என்று சொல்வார்களாம். ராம் என்பதுதான் அவர்களின் செயல்பாடு. ஆராம் என்றால் ஓய்வாக இருக்கும்.
ராவனனில் மணிரத்தினம் சில விடயங்களை சொல்ல முடியாமல் அல்லது சொல்ல விரும்பாமல் தவிர்த்து உள்ளார். இராவணன் நல்லவன் என்பதை மட்டும் திரை படம் பார்பவர்கள் கொஞ்சம் ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
ராவனானில் ராவணன் மிகுந்த பண்போடு நடந்து கொல்கிறான். ஆனால் அவனது ஆளுமை அவனை தலைவனாக மக்கள் ஏன் ஏற்றுகொள்கிறார்கள் என்று சொல்ல மணிரத்தினம் தவறுகிறார் அல்லது தவிர்க்கிறார்.
ஆனால் சில குறீடுகளை பார்க்கும் போது மணிரத்தினம் - ராமாயணத்தை நோக்கிய விமர்சனத்தை பதிவு செய்வதாகவும் எடுத்துகொள்ள வேண்டி உள்ளது. நீங்கள் தேவ பிரகாசங்கள் ( ப்ரிதிவியின் பெயர் தேவ் பிரகாஷ் ) என்று நினைப்பவர்கள் வன்புணர்ச்சி கூட்டத்தின் ஆதரவு பெற்றவர்கள் என்று சொல்கிறாரோ ? என்று கேள்வி எழுகிறது. நீங்கள் ஞானப்ரகசன்களாய் நினைப்பவர்கள் காட்டிகொடுப்பவர்கள். தி க -வில் மணி சேர்ந்து விட்டாரா என்ன ?
ஆனால் படத்தில், பச்சை வேட்டை என்கிற ஒன்றை புரிந்து கொண்டவர்கள் நிறைய அலசலாம். அப்புறம் வீரப்பன் ஒரு முறை சொன்ன வாசகம் எங்கள் பெண்களை கெடுத்தார்கள் காக்கிகள்.
கதை - தனிமனிதர்களின் யுத்தம் என்பது போன்றே செல்கிறது. ஆனால் இது ஒரு - இரு தரப்பு போர். ஆயுதம் இருவரிடமும் உண்டு. ஆனால் சட்டம் ஒரு பக்கத்தில் மட்டும்.
பிரச்சனைகளை முன் வைப்பதை விட்டு விட்டு - ஒரு தரப்பின் நல்ல பண்புகளை சொல்கிறார். விக்ரம் அனாயாசமாக செய்து உள்ளார். அடுத்தவன் மனைவியை ஆசை பட்ட ராவணன் என்கிற கருத்து இங்கும் கொஞ்சம் உண்டு. மணி கொஞ்சம் துணிச்சல் இல்லாது சில விடயங்களை தொட மறுக்கிறார்.
ராவணனை முழுமையாக நம்பும் நாயகி என்று பெருமிதம் படும் இடத்தில் - அவளின் கணவன் கடமை வீரன் பட்டம் பெற்றுவிடுகிறான்.
சிவப்பு சிந்தனையை பதிவு செய்ய நினைத்து (அவரின் மௌன ராகம் காலத்தில் இருந்தே சிவப்பு அவர் படத்தில் சில இடங்களில் இருக்கும்) தடுமாறி உள்ளார் .சிவப்பு சிந்தனையை சொல்ல நினைக்கிறார் என்றே நினைக்கிறேன் ஆனால் அவரின் சூழல் அவரை தடுக்கிறது. அவர் திறமைசாலி ஆனால் சில இடங்களில் அவர் நேர்மை இன்றி நடக்க வேண்டி உள்ளதோ ?
அப்புறம் யார் இந்த கொடு போட்டா பாடலை எழுதியது - கொஞ்சமும் விக்ரமின் கதாபாத்திரத்திக்கு பொருந்தாத வரிகள். ஏதோ வன்முறை அரசுகளின் கொள்கை பிரச்சார பாடல் போல உள்ளது. யாருப்பா இப்படி சேம் சைடு கோல் போடுவது ?
பச்சை வேட்டை பற்றி என்னை நினைக்க வைத்த படம் என்கிற ரீதியில் நான் இந்த படத்தை பாராட்டவே நினைக்கிறேன். படம் ராவணன் நல்லவன் என்று இந்தி மக்களிடமும் பதிவு செய்வது குறித்து மகிழ்கிறேன்.
மொத்தத்தில் ஒரு நல்ல படம். ஆனால் மிக அதிகமாக சமரசம் செய்த செய்தி மட்டுமே படத்தில் உள்ளது. ஒரு முறை பாருங்கள் .
Shane Warne - எனக்கு ராஜாவா நான் வாழுறேன் - இறந்த பின்பும் !
-
Shane Warne !1990களில் அவுஸ்திரேலியா அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறை
சுழல்பந்துவீச்சாளரை அறிமுகப்படுத்தி வந்திருந்த காலத்தில், ‘யார்ரா இது ?’
என்று ஆச்சர...
2 months ago
6 மறுமொழிகள்:
//பச்சை வேட்டை பற்றி என்னை நினைக்க வைத்த படம் என்கிற ரீதியில் நான் இந்த படத்தை பாராட்டவே நினைக்கிறேன். படம் ராவணன் நல்லவன் என்று இந்தி மக்களிடமும் பதிவு செய்வது குறித்து மகிழ்கிறேன்.//
MEE TOO SIR ..
மொத்தத்தில் ஒரு நல்ல படம். ஆனால் மிக அதிகமாக சமரசம் செய்த செய்தி மட்டுமே படத்தில் உள்ளது.
............. a movie review - - - in a different point of view.
Thanks Senthil.
Thanks Chitra.
//அப்புறம் யார் இந்த கொடு போட்டா பாடலை எழுதியது - கொஞ்சமும் விக்ரமின் கதாபாத்திரத்திக்கு பொருந்தாத வரிகள். ஏதோ வன்முறை அரசுகளின் கொள்கை பிரச்சார பாடல் போல உள்ளது. யாருப்பா இப்படி சேம் சைடு கோல் போடுவது ?//
நண்பரே இந்த பாடலை எழுதியது வைரமுத்து. எதை same side goal என்கிறீர்கள்?
இந்த கேள்வியை கேட்டமைக்கு நன்றி நண்பரே கலாநேசன். அந்த பாடல் வரிகளை படித்து பாருங்குள்.வீரப்பன் பற்றி நீதிமன்றம் இப்படி ஒரு வாதத்தை முன் வைத்தது.
கோடு போட்டா கொன்னு போடு - நீதிமன்றம் கிட்டத்தட்ட இதுதான் சொன்னது. அதாவது வீரப்பன் தனி ராஜ்ஜியம் நடத்துகிறான்.
கோடு என்பது கட்டுபாடா ... எல்லையா ?வீரப்பனை போலவே கதாநாயகன் காட்டபடுகிறான். அவனது கதாபாத்திரம் அப்படியே சித்தரிக்க படுகிறது.
அந்த நீதிமன்ற வாசகங்களை படித்தவன் என்பதாலும் கதாபாத்திரம் வீரப்பனோடு ஒன்றுவதாலும் வந்த சிந்தனை இது.
இந்த படம் அரபி மொழியில் பார்த்தேன் நன்றாக இருந்தது ஆனா வசனம் புரியல
Post a Comment