அட! அவன் அல்லவா இவன் ? மனதுக்குள் வெடி வெடித்தது. இவன்தான் மாடசாமி.
இரவின் மடியில் படுத்து உறங்கியது எனக்கே தெரியாது. முகத்தில் கதிரவன் ஒளியை காய்ச்சி ஊற்றிக்கொண்டிருந்தான். கண் விழித்தேன்.
பாறைகளுக்கு நடுவே நான் படுத்து உறங்கிகொண்டிருந்தேன். எழுந்து பார்த்தால் யாரும் இல்லை. ஓடி விடலாம் என்று நினைத்தால்.
படுபாவி அவன் வந்து நின்றான்.
"என்ன சாப்புடுவீக ?" - அவன் முரட்டுதனமாய் கேட்டான்.
"என்ன ஏன் கடத்தின ?"
"அங்கனக்குள்ள தண்ணியும் சோறும் இருக்கு. சாப்புடுங்க"
சொல்லிவிட்டு போய் விட்டான். என்னை கட்டி போடவில்லை. மிரட்டவில்லை. ஆனால் அவனுக்கு தெரியும் நான் தப்பிக்க முடியாது என்று. அவன் ஆட்கள் எங்கும் இருப்பார்கள். நான் எதுவும் பண்ணமுடியாது ஆனால் சத்யா எப்படியும் என்னை காப்பாற்றுவார்.
அருவி பாறைகளில் மோதி கூச்சல் இட்டுக்கொண்டு இருந்துது. என் மீதும் தண்ணீர் துளிகள் விழுந்தன.
வயிறு கிள்ளியது. சாப்பிட நினைத்தது.சாப்பாட்டுக்கு பக்கத்தில் பல்பொடி.பல் விளக்கினேன். சாப்பிட மனமில்லை.
போலீஸ் ஜீப்புகள் வனப்பகுதிக்குள் என்னை தேடி சுற்றிகொண்டிருக்கும். நான் எங்கே இருக்கிறேன் என்று விசாரணை நடந்து கொண்டு இருக்கும்.
திருமணம் ஆகி ஆறு மாதம்தான் ஆகிறது எங்களுக்கு. கடவுளே! இது என்ன சோதனை.
கதிரவன் உச்சிக்கு வந்தான். ஒரு பாம்படம் போட்ட கிழவி மலை மீது ஏறி வந்தாள். நான் பாறையில் அமர்ந்திருந்தேன்.
ஏற்கனவே வைத்திருந்த சாப்பாட்டை பார்த்தாள்.
"தாயீ சாப்பிடலையா ?" - கேட்டாள்.
நான் எதுவும் சொல்லவில்லை.
மௌனம் பேசினேன்.
அவள் என்னை ஒரு மாதிரி பார்த்தாள்.
"நால்லா வயிறார சாப்பிட்டு செத்தால் சொர்கமாந் தாயீ. சொல்ல வேண்டியது எங் கடமை" - சொல்லிவிட்டு பாம்படம் போட்ட கிழவி கிளம்பிவிட்டாள்.
சாவு பக்கத்தில் வந்து சாப்பாடு வைத்திருக்கிறது. சாப்பாடு சாவதற்கு நுழைவு சீட்டாய் வந்து உள்ளது.
வானத்தை பார்த்தேன்.
"நீங்க எங்க சத்யா ?" - உள்ளுக்குள் கத்தினேன்.
அருவி சத்தமாய் சிரித்தது.
பக்கத்தில் துப்பாக்கி குண்டு வெடித்தது.
திரும்பி பார்த்தேன். மாடசாமி.
"எப்ப சாகுறதா உத்தேசம் ?" - கேட்டான்.
எச்சில் முழுங்கினேன். அவனது துப்பாக்கி வானம் நோக்கி சுட்டதில் இருந்து என் நெஞ்சை நோக்கி குறி வைத்தது.
அருவி சலசலத்து.
என்ன செய்வது என்று தெரியாத போது - அந்த குரல் கேட்டாது. என்ன வென்று சொல்ல்வது அந்த குரலை ?
தொடரும்
Shane Warne - எனக்கு ராஜாவா நான் வாழுறேன் - இறந்த பின்பும் !
-
Shane Warne !1990களில் அவுஸ்திரேலியா அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறை
சுழல்பந்துவீச்சாளரை அறிமுகப்படுத்தி வந்திருந்த காலத்தில், ‘யார்ரா இது ?’
என்று ஆச்சர...
2 months ago
4 மறுமொழிகள்:
பரப்பரப்பான கதை..... தொடருங்கோ!
Thanks Chitra. Will continue.
wow... chilling narration
Thanks அப்பாவி தங்கமணி. தொடர்ந்து படியுங்கள்.
Post a Comment