Bookmark and Share
தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Saturday, July 31, 2010

உ த ப: அணிவகுப்பில் .....

அந்த வீரன் அந்த செய்தியோடு வந்து நின்றான்.
"என்னோடு அணிவகுப்பில் வர இருந்த  மூணு பேருக்கும்  உடல் நலமில்லை"
 "என்ன சொல்கிறாய் ?" - தளபதி கேள்வி கேட்டார்
"திடீர் என்று உடல் நலமின்மை"
"மூவருக்குமா ?"

வீரன் தலையை இடமும் புறமும் ஆட்டினான்.
நெற்றியில் கை வைத்து அமர்ந்தார் தளபதி.

"கவலை வேண்டாம்" - வீரன் மீண்டும் பேசினான்
"அவர்களுக்கு பதிலாக மூணு பேரு உள்ளனர்" - மீண்டும் வீரன்

"நல்லது அவர்களை பயன்படுத்திகொள்"
தளபதி சொல்லி விட்டு நகர்ந்தார்.

வீரனும் ஒரு தளபதிதான்.

அந்த நாள் வந்தது. படை அணிவகுப்பு திருநாள். அதிபருக்கு முன்னால்.

அதிபர் வந்தார் தன்னோடு இருந்த படை தலைவர்களுடன் பேசிக்கொண்டே அமர்ந்து இருந்தார். அணி வகுப்பு நடந்து கொண்டு இருந்தது.
விமானங்கள் வானத்தில் வேடிக்கை காட்டின. வான மேகங்கள் வண்ணக்கோலம் பூண்டன.

அதிபரின் முகத்தில் புன்னகை. அவர் நாட்டின் படை திறமை அவருக்கு முன்னால் தன்னை வெளிக்காடிகொண்டு இருந்தது.

அந்த பிரங்கி வண்டி பயணித்துக்கொண்டு வந்தது. அந்த வீரன் வணக்கம் வைத்தான். அதிபரை நோக்கி நடந்தான்.
அவர் முதலில் புன்னகைத்தார். வீரனும்.

பின்னர் வீரன் அதிபரை நெருங்கினான்.

வீரன் குண்டுவீசும் கருவி மூலம் குண்டு வீசினான். இரண்டு க்ராநிடே குண்டுகள். மீண்டும் தாக்குதல்.
பதிந்து கொண்டிருந்த ஊடகங்கள் உள்ளே இது பதிவாகி கொண்டு இருந்தது,.

எகிப்திய அதிபர் அன்வர் சதாத் அரச படை அணிவகுப்பில் சுட்டு கொல்லப்பட்டார். சுட்ட வீரனின்  தளபதியின் பெயர்   காலித்  இஸ்லம்புஇல்.


தொடரும்

Friday, July 30, 2010

ஞாநியும் குமுதமும் வெற்றி பண்பலையும்

ஊடக விடுதலை குறித்து எழுதும் போது இந்தியாவில் அது மோசம் இல்லை என்று நம்பிக்கையை விளைவித்த பதிவை திரு லோஷனின் பதிவில் கண்டேன்.

அவர்களது ஊடகம் மீதான தாக்குதலின் காரணம் தெரியாத போதிலும் - தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவையே.


திரு ஞாநி அவர்கள் தன் கருத்து உரிமையின் கழுத்து நெரிக்கபடுவதில் வெறுத்து போய் தற்போதைய  குமுத வாழ்வின் கடைசி தருணங்களை கடிதம் எழுதி முடித்து கொண்டு உள்ளார்.


ஞாநி அவர்களின் மீது கருத்து மாறுபாடு என்றுமே நான் கொண்டதில்லை என்று சொல்வது தவறு. ஆனாலும் அவரின் எழுத்துக்களில் என்றும் நான் ஈர்ப்பு இழந்தது இல்லை.


ஞாநி அவர்களின் ஒ பக்கங்கள் தமிழ் நாட்டின் அரசியல் தொடர்பான ஒரு ஆவணமாக உருமாறி நிச்சயம் ஒரு நாள் நூலகங்களில் ஆசனம் கொள்ளலாம்.  அது ஒரு தனி மனிதனின் பார்வை மட்டும்தானே ஒழியே தமிழ் நாட்டின் பார்வை இல்லை. ஆனாலும் ஒரு ஆய்வறிவு கொண்ட மனிதனின் ஆழமான பார்வை.


ஞாநி அவர்களின் ஆளுமை தமிழ் செய்தி உலகில் ஆழம் கொண்டது. அவருடைய பிரச்னைக்கு உரிய கட்டுரையை நான் படிக்கவில்லை. எனவே அது
தொடர்பாய் கருத்து வெளியிட நான் விரும்பவில்லை. ஆனாலும் கருத்து கூறுவது அவர் பனி. எனக்கு பிடிக்காத ஒன்றை எழுதினால் வெளியேறு என்பது கொஞ்சம் அதிகம்தான்.

திரு ஞாநி அவர்களின் ஒ பக்கங்கள்  தொடர்பாக ஒரு விவாத குழு எங்களிடம் இருந்தது. அதிகம் விவாதிப்போம். அவரை நான் எழுத்து உலகின் பழுத்த கருத்துரிமை மனிதராக பார்க்கிறேன்.


அவர் எழுதிய ஒரு கட்டுரை வெளியிட முடியாமைக்கு கரணங்கள் சொல்லி உள்ள குமுதம், அந்த கட்டுரையை வெளியிட்டு அதற்கு தன் நிலை விளக்கம்  அளித்து இருக்கலாம்.


ஏடுகள் தங்களை கருத்துக்கள் சொல்லும் களமாக இல்லாமல் காசு பார்க்கும் காலமாக மாறிப்போவது  மனதுக்கு வருத்தம் தருகிறது.

மக்களாட்சியின் நான்காம் தூண் வீழ்ந்து போவது ஏடுகளுக்கு மட்டும் அல்ல - யாருக்கும் நல்லதல்ல.

குமுதம் தன் கருத்து சரி என்று எண்ணி கட்டுரையை நிறுத்தி  இருக்கலாம். அவர்கள் மீண்டும் ஒரு ஆய்வு களத்தை தங்கள் வர்த்தக எண்ணங்களை தாண்டி மீண்டும் துவக்கலாம்.  குமுததின் மீது நான் ஆத்திரம் கொள்ள வில்லை இத்தனை நாள் குமுதத்தில் இந்த தொடர் வந்ததற்கு நன்றி சொல்லி நாளையை நோக்கி பயணிப்போம்.


ஞாநி அவர்களின் கருத்து உரிமைக்கு நான் அதரவு தருகிறேன் - அவர் கருத்தில் என்றேனும் நான் வேற்றுமை கொண்டு இருந்தாலும்.

ஞாநி அவர்களே உங்களோடு  நாங்கள் உள்ளோம். மீண்டும் ஒரு இதழ் உங்களை உச்சி முகர்ந்து முத்தமிடம். அங்கும் ஒரு நிலையில் இப்படி வந்து விழலாம்  ஒரு நிகழ்ச்சி அப்போதும் ரௌத்திரம் கொள்ளுங்கள். அது உங்கள் இயல்பு - அதில் உறுதி கொள்ளுங்கள்.

வெற்றி பண்பலை - இது ஏன் தாக்கப்பட்டது என்பது எனக்கு தெரியவில்லை. ஊடக உலகம் தங்கள் கருத்தை சொல்ல பயம் கொள்ள வேண்டும் என்று யாரேனும் நினைத்தால் வீழப்போவது  அவர்கள்தான்.


வெற்றி பண்பலையில் பனியாற்றிய இருவர் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டதாக அறிந்தேன். தீக்கு  செய்தி நிலையம்  இறையாக்கபட்டதாம்.

தீ அணைப்பு வண்டி வந்தும் பெரிதும் எதுவும் காப்பாற்ற முடியவில்லையாம்.

வெற்றியில் வேலை செய்யும் எல்லோருக்கும் என் கவலையை தெரிவிக்கிறேன். உண்மை சுடும் என்று கேள்வி பட்டு உள்ளேன். ஆனால் எரிக்கும் என்று என்பதும் தெரிய வந்து உள்ளது.


கண்ணுக்கு விருந்தும் மதிமயக்க நகைச்சுவையும் மட்டுமே போதும் என்ற நிலை வந்தால், தமிழினம் வீழ்ந்து விடும்.


ஒரே நேரத்தில் ஊடகங்கள் பயம் கொண்ட, பயம கொள்ள செய்த  நிகழ்வுகள் கரையின் இரண்டு புறங்களிலும். வங்க கடல் நம் மானத்தை வாங்கி விலை பேசி கொண்டு உள்ளது. வாங்குவார் யாரோ ?

Tuesday, July 27, 2010

உ த ப : லியோன் டிராட்ஸ்கி

மெக்ஸிகோ மண்ணில் அது சிவப்பு சூரியனின் அன்றய நாளின் கடைசி தருணங்கள்.

அந்த இளம் மாலை பொழுதில் தன குறுந்தாடியை தடவியபடி அமர்ந்து இருந்தார் அந்த நான்காம் தலைமுறையாளர்.
தன் கண்ணாடியை சரி செய்து கொண்டு அந்த மேசையில் அவர் புத்தகங்களோடு ஒருங்கிணைந்து இருந்தார்.

சிந்தனை குதிரை முலைக்குள் இருந்து சிங்கத்தை போல உறுமியது.
அந்த நேரத்தில் வீட்டுக்கு முன்னாள் அந்த மகிழுந்து வந்து நின்றது. அந்த மகிழுந்தின் உறுமல் நிற்க. சிந்தனை சிங்கத்தின் கற்பனை வகுப்பறையிலும் மணி அடித்தது.

அந்த மகிழுந்தில் வந்தது அவர் மனம் கவர்ந்த நண்பன் பிரான்க் ஜாக்சன்.
மகிழ்ச்சியில் மனம் துள்ளியது சிந்தனையாளருக்கு .

வழக்கம் போல சிந்தனை அரட்டை சம்மனமிட்டது. அவன் அந்த காகிதங்களை தந்தான் அவரிடம்.
வழக்கமாகவே அவன் காகிதங்களில் கருத்து கட்டுரைகள் எழுதி வர - அதன் தொடர்பான கருத்து விவாதம் நடப்பது இயல்பான ஒன்று.

சிந்தனையாளரின் பாதுகாவலரும், மனையாளும் இந்த இயல்பான கலந்து உரையாடலில் கலந்து கொள்ளவில்லை.
அவர்களை பொறுத்த வரை இது நாள் தோறும் நடக்கும் கருத்து விவாதம். கற்றாரை கற்றார் காமுறுவர். பிரான்க் சின்ன பையன் அவனிடம் தனி அக்கறை கொண்டு அவர் விவாதிப்பார்.

நிமடங்கள் நகர்ந்து கொண்டு இருந்தன. மகிழுந்தில் அந்த பெண்மணி தன் கடிகாரத்தை பார்த்துகொண்டு இருந்தாள்.
நிமிடங்கள் மெதுவாக நகர்ந்தன. படபடப்பு கண்ணிலும் நெஞ்சிலும் குடிகொண்டது.

சிவப்பு சூரியன் கண்ணடித்து விட்டு கரைக்குள் தன்னை மூல்கடித்துகொண்டு இருந்தான். மெக்ஸிகோவின் சமரச கொடி பறந்து கொண்டு இருந்தது.
அந்த பெண் நகத்தை கடித்துக்கொண்டு இருந்தாள்.

அந்த சப்தம் கேட்டது.
"வெற்றி" நெஞ்சம் கத்தியது.

சிந்தனையாளரின் அறையில் ....

நேற்று வரை பற்றுகொண்டு யாருடன் பேசிக்கொண்டு இருந்தார். அந்த பிரான்ச ஜாக்சன் கொடுத்த கட்டுரையை படிக்க ஆரம்பித்தார். பிரான்க் எழுந்து கொண்டான் - மரியாதை.

அவர் காகிதங்களை போராட்ட. அவனது கைக்குள் அந்த ஆயுதம் இறுக்கமானது.
பிரான்க் அந்த ஐஸ் மழை ஏறும்பொது ஐஸ் குத்தும் பண்ணிக்குத்தியை ஓங்கினான்.

பின்மண்டையில் போட்டு தாக்கினான்.

பாதுகாவலர்கள் ஓடி வந்தனர் பிடித்தனர். பிராங்கை அடித்தனர்.
டிரோட்ச்கி என்கிற அந்த சிந்தனையாளர் பின் மண்டையை பிடித்த படி சொன்னார்.
"அவனை அடிக்காதீர்கள். அவன் பேசட்டும்" - என்றார். கோபம் அவர் கண்ணை மறைக்கவில்லை.

அடுத்த நாள் அவர் இறந்து போனார். பிராங்கின் கதை பேசப்பட்டது. ரஷ்ய புரட்சி டிரோட்ச்கி கொல்லப்பட்டார். காலமாற்றத்தில் நிறையவே மாறிப்போய் இருந்தன. சமத்துவ மெக்ஸிகோ கை பிசைந்தது.

கொலையாளியின் உண்மை பெயர் ரமோன் மேற்கடர் என்று தெரியவந்தது. கொலை புரிந்தவர் ரஷ்ய புலனாய்வு பிரிவின் மனிதர்.
மகிழுந்தில் காத்து இருந்த பெண் ரமோனின் தாய்.


இந்த கொலையின் காரணங்கள்  பற்றி எனக்கு முழுமையாக தெரியாது.

தொடரும்

நல்ல தமிழ்

எனக்கு தெரிந்த சில நல்ல தமிழ் வார்த்தைகளை இங்கே பகிர்கிறேன். நீங்கள் உங்களுக்கு தெரிந்தவைகளை பகிருங்கள்.

Screw  driver - திருப்புளி ( இது மதுரையில் நான் கேட்ட வார்த்தை )
முழுத்தம் ( முகுர்த்தம் என்னும் வடமொழியின் உண்மை வார்த்தை - சிலப்பதிகாரம் இதனை பயன்படுத்துகிறது. இதன் பயன்பாடு கடந்த தலைமுறையுடன் நின்றுவிட்டது )
போகணி ( Tumbler , drinking Glass என்கிற வார்த்தைகளின் தமிழ் வார்த்தை - இன்றும் சிலரிடம் பயன்பாட்டில் உள்ளது )
மெய்யாளும் (  நிஜம் என்கிற வார்த்தையின்  தமிழ் பதம் - சென்னையில் மட்டும் வாழ்கிறது )
வாழ்வரசி ( சுமங்கலி என்கிற வடமொழி வார்த்தையின் தமிழ் வார்த்தை - இன்றும் சிலரிடம் பயன்பாட்டில் உள்ளது )
மைக் - ஒலி வாங்கி


பழமை பேசி அவர்கள் தந்த சில தொடுப்புகளின் மூலம் அறிந்து கொண்ட சில நல்ல தமிழ் வார்த்தைகள் கீழே

ஜெட் லாக் - மெய்க்குணகம்
Out of sync - பிறழ்வு
குணகம்ன்னா, இடத்தைப் பொறுத்து பொருள் மாறுமுங்க....
multiplier கூட குணகம்தான்....
குணகு அப்படின்னா, பிறழ்ந்து பிசகுவது.... பெயர்ச்சொல்லா மாறும் போது குணகம் ஆயிடுது...

இடநியசு - GPS
Chat  மின்னாடல் ( நான் இதனை இது நாள் வரை இனைய அரட்டை என்றே பயன்படுத்திவந்தது உள்ளேன் )

தொடர்பான பதிவு
http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/2010/07/blog-post_16.html

பழமை பேசி அவர்களின் தளம்
http://maniyinpakkam.blogspot.com/

நன்றி,
கார்த்திக் சிதம்பரம்

Monday, July 26, 2010

உ த ப : மவுண்ட் பேட்டன் பிரபு

Classiebawn

நீர் சலசலத்தது.  பெரும் இரைச்சலுடன் அந்த படகு தகர்ந்தது.அந்த படகு சிதறி இருந்தது.

ஓடி வந்த காபற்றுனர்கள் - அவரை நீரில் இருந்து எடுத்தனர். உயிர் இருந்தது. கால்கள் சிதறி இருந்தன.
கடைசி மூச்சுகளை கொடுத்து வாங்கிக்கொண்டு இருந்தார் அவர்.

லார்ட் மவுண்ட் பேட்டன் மரணத்தை சில நிமிடங்களில் தழுவினார். ஒருங்கிணைந்த இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் ஆட்சி தலைவர், அரச குடும்பத்தின் உறுப்பினர், பர்மாவிர்கான ஏர்ள் ( Earl ) என்கிற பொறுப்பை வகித்த ஆங்கில ஆட்சி முகம், இராண்டாம் உலக யுத்தத்தில் கூட்டு படைகளின் கடற்படை தலைவர், அதிரடி படைவீரர்களின் பயன்பாட்டை முன்னிறுத்திய ஆங்கில வீரர்  , மரபு சாரா போர் முறைகளையும் பயன்படுத்த எத்தனித்த தலைவர் இறந்து கிடந்தான்.

குற்று உயிராய் கிடந்த அவரது பேரன் அள்ளிக்கொண்டு செல்லப்பட்டான்.

ஐரிஷ் பகுதியான இந்த ச்லிகோ பகுதிக்கு வந்த மவுண்ட் பேட்டன் கொல்லப்பட வாய்ப்புகள் அதிகம் என்கிற எச்சரிக்கை ஏற்கனவே இருந்தது. ஐரிஷ் நிலத்தில் பிரிட்டிஷ் அரசு தனதாக்கி ஆக்கிரமித்து  கொண்டு வருவதாக வட மற்றும் அயர்லாந்து மண்ணில் எண்ணம் இருந்தது.


டீப்பே என்கிற தவறான போர் சோதனையில்  பல உயிர்கள் போக காரணமானவர் என்கிற குற்றச்சாட்டு   உடையவர் ( இது கனடா தொடர்பான விடயம் ) மட்டும் இன்றிஅயர்லாந்து தொடர்பான விவகாரங்களில் பிரிட்டிஷ் ஆளுமை முகங்களுள் ஒருவராக இருந்தவர்.
அயர்லாந்து குடியரசு படையின் கோபத்திற்கு உரியவராக இருந்தார்.

சில மணித்துளிகளில் முள்ளக்ஹ்மோரே சாலைகளில் அந்த கார் படுவேகமாக சென்று கொண்டு இருந்தது. போக்குவரத்து காவலருக்கு முலையில் எச்சரிக்கை மணி அடிக்க. அந்த கார் வழிமறித்து நிறுத்தப்பட்டது.

அவர்  ஒரு அயர்லாந்துகாரர் . காருக்குள் இருந்து இறக்கவிடப்பட்டார். வெளியில் வந்தவர், உடலில் நைட்ரோ கிளிசரின் துணுக்குகள் இருந்தன, கொஞ்சம் பச்சை வண்ணம் ஒட்டி இருந்தது. படகில் இருந்த அதே வண்ணப்பூச்சின்  எச்சங்கள்.

விசாரணை உடனடியாக தொடங்கியது. அந்த மனிதரின் பெயர் மக் மோகன். அவர் மவுண்ட் பேட்டனின் கொலையாளி.

கரை ஓரம் இருந்து தூர கட்டுபாட்டை ( Remote Control ) கொண்டு மவுண்ட் பேட்டன் கொள்ளப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
பல வருட சிறை வாழ்விற்கு பின் புனித வெள்ளி உடன்படிக்கை என்கிற உடன்படிக்கையில் பிரிட்டிஷ் அரசு மக் மோகனை விடுவித்தது.

புனித வெள்ளி உடன்படிக்கை என்றால் என்ன ? டீப்பே சோதனை ( The Dieppe Raid ), ஏர்ள் என்பவை பற்றி எல்லாம் விருப்பம் உள்ளவர்கள் படித்து தெரிந்து கொள்ளவும்.

Classiebawn  என்கிற கோட்டை இல்லத்தில்தான் மவுண்ட் பேட்டன் தங்கி இருந்தார். அந்த இல்லம் இன்றும் உள்ளது.

அடுத்த பதிவில் வேறு ஒரு தலைவரின் கடைசி தருணங்களை பற்றி பதிவிடுகிறேன்.

தொடரும்

Sunday, July 25, 2010

உ த ப - முன்னால் கடற்படை தலைவர்

நன்றி:fineartamerica.com
அது ஒரு அழகிய நிலம். பச்சை வண்ணம் உங்களை இச்சை கொள்ள வைக்கும் ஒரு சுற்றுலா தளம். கடல் மென்மையாக ஓடும்போது உங்கள் இதயம் குழந்தை போல் ஆகும்.

அன்றும் அந்த கடல்  வழக்கம் போலவே தன வனப்பின் மிகுதியில் மிதந்து கொண்டு இருந்தது.

நல்ல உயரமும் அரச கம்பீரமும் நிறைந்த அந்த முன்னால் கடற் படை தளபதி தன் பணிக்கு பிந்தைய நாட்களில் தன் பேரக்குழந்தைகளைகளுடன் இன்று தன் பொழுதை மகிழ்ச்சியாக கழிக்க வந்திருந்தார்.

வந்த நாள் முதல் பெய்து கொண்டு இருந்த மழை - இன்று வருகை பதிவேட்டில் கை எழுத்து இடாமல் எங்கேயோ திரைப்படம் பார்க்க போய் இருந்தது.
தன் பேரக்குழந்தைகளைகளுடன் நடந்தார் அந்த மனிதர்.

சாலமன் மீன்கள் பிடிப்பதில் தளபதிக்கு இன்று நிறையவே ஆசை இருந்தது. நிழல் என்கிற பெயரில் ஒரு மீன்பிடி படகை எடுத்துக்கொண்டார் தளபதி.
பேரன் பால் வண்டியை செலுத்த. அங்கே ஒரே மகிழ்ச்சியும் நகைச்சுவயும்தான்.

விழுந்து விழுந்து சிரித்தார் கடற் தளபதி. படகு பச்சை வண்ணமிட்டு தேவதை போல் அழகாவவே இருந்தது.

பச்சை புல் வெளி, நீலக்கடல், மென்மையான உலா. அவர்கள் சிரித்து பேசிகொண்டிருக்கும் போது யாரோ ஒரு மனிதன் கரையில் இருந்து நோட்டம் இட்டுக்கொண்டு இருந்தான்.

பத்து நிமிடங்கள் முடிந்திருக்கும் அவர்கள் படகு உலாவில்.  படகு ஆடத்தொடங்கியது. சில நொடிகளில் .....

தொடரும்

உலகக் தலைவர்கள் படுகொலைகள் - I

பழுப்பு மார்டின் லூதரும், கருப்பு காந்தியும்:
தன் அறையில் திரு மார்டின் லூதர் கிங்
இன்னொரு தொடர் எழுதும் ஆர்வம் திடீர் என்று வந்தது. வரலாறு என்கிற எனக்கு பிடித்த பாடத்திற்குள்ளேயே என் பயணம் இந்த முறையும்.

உலகத்தின் தலைவர்கள் என்று போற்றப்பட்ட மனிதர்கள் படுகொலை செய்ய பட்டு உள்ளனர். இவர்களின் படுகொலைகளுக்கு பின்னால் நிறைய காரணங்கள் இருக்கும். சில காரணங்களா என்றும் தோன்றும் ?

காந்தியின் படுகொலைக்கு பின் சாட்சியம் அளித்த கொலையாளி நாதுராம் விநாயகம் கோட்சே - காந்தி இந்து மத தளங்களில் இஸ்லாமிய வாங்கு ஊத சொன்னத்து கூட தான் அவரை கொள்ள காரணம் என்று சொன்னான்.

மார்டின் லூதர் கிங் அவர்களை கொன்ற பொடித்திருடன் காரணம் எதுவும் பெரிதாக சொல்லவில்லை. கென்னடியின் கொலை அரசியல் கொலை என்றும் அதில் ஹைடி மற்றும் அமெரிக்காவின் தலைமைகள் பங்கு ஆற்றி இருக்கலாம் என்றும் சிலர் சொல்வது உண்டு.

ஹைடியின் அப்போதைய ஆட்சி கென்னடி கொலை தங்களின் வழிப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என்று நினைத்தாம்.

கொலை செய்யப்பட்டாரா என்று சந்தேகத்துடன் தொடர்வது லால் பகதுரின் மரணம்.

ராஜிவின் கொலை மர்மங்களின் முடிச்சாகவே இன்றும் உள்ளது. அது மர்மங்களின் அட்சய பாத்திரம்.
அதில் முழு உண்மை வெளிவந்து உள்ளதா என்று நம்மை குழப்பும் செய்திகள் ஏராளம்.

பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ரோய் என்ற பெருமைக்கு உரிய லார்ட் லூயி மவுண்ட் பட்டேர்ன் அவர்களின் படுகொலை தொடர்பிலும் கேள்விகள் உண்டு. மவுண்ட் பட்டேர்ன் தன்னுடைய மரணத்தை தானே தேடி கொண்டவர் என்பது இன்றும் ஆங்கில மனிதர்களின் கருத்து.

படுகொலைகளில் பெண்கள் அதிர்டசாலிகள் - அவர்கள் பெரும்பாலும் தப்பித்தே இருக்கிறார்கள். படுகொலையில் இருந்து தப்பிய மார்கெட் தட்சேர், சந்திரிகா குமாரதுங்க போன்றவர்கள் பற்றியும் கேள்விகள் ஆயிரம் இருக்கும்.

படுகொலையில் இறந்த இந்திரா அம்மையாரின் கடைசி நாட்களை பற்றி பதிவு செய்யும் திருமதி சோனியா - "இந்திராவிற்கு தான் படுகொலை செய்யப்படப்போவது தெரியும்" என்றே சொல்கிறார். எல்லோரும் அப்படியே பதிவு செய்கின்றனர்.

அபிரகம் லின்கானின் படுகொலை மக்கள் திரள் மிகுந்த இடத்தில் நடந்தும் கொலையாளி தப்பி ஓடுகிறான் அதுவும் ஒரு கால் உடைந்த நிலையில்.
கால் உடைந்த ஓட்டம் என்கிறார்கள். அந்த நேரத்தில் மக்கள் தங்களை காத்துக்கொள்ளவே விரும்பினாரோ. ஏன் கொலையாளி உடனடியாக அதே இடத்தில பிடிபடவில்லை ? என்று கேள்விகள் எழலாம்.

நான் படித்தவைகள் பற்றி  பகர்கிறேன். தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டவும்.

தொடரும்

Saturday, July 24, 2010

ஜோவும் நாமும்!

காலகணிதம் என்கிற ஜோதிடம் நம்மை படுத்தும் பாடு கொஞ்சம் நகைச்சுவையும் அவலச்சுவையும் ஏற்படுத்துவது.

ஆரம்ப காலம் தொட்டே இந்த கணிதம் என்று இல்லை எந்த கணிதமும் நமக்கு பிடிப்பதில்லை. எல்லா பாடத்திலையும் நல்ல மதிப்பெண் வாங்கிவிட்டு கணிதத்தில் கோட்டை விட்ட நாட்கள் எல்லாம் நிறைய உண்டு.

"உலக கோப்பை வாங்கினால் என்ன எங்ககிட்ட தோத்த அணிதனே அது " - என்று பாகிஸ்தான் உலக கோப்பை வாங்கியபோது தேற்றிக்கொண்ட எல்லா இந்தியனை போல. கணிதத்தில் போனா என்ன ... மத்ததுல வந்தொட்டோம்ல என்று நினைத்து கொள்வேன். ( வேற வழி? )

கிளி ஜோதிடம், கை ஜோதிடம், கட்டம் போட்ட ஜோதிடம் எல்லாம் நமக்கு மனதிடம் வர்ற மாதிரி பெரிதாக எதுவும் சொல்லவில்லை.

"பையன் நல்ல படிப்பானா ?" - என்று கேட்டால்
"பையன் வெளிநாடு போவான் நல்ல வருவான்" - என்று பதில் வந்து விழும்.

அர்த்தம் என்ன? - பையன் பெரிசா ஒன்னும் படிச்சு கிழிக்க மாட்டான்.

கணிதம் தான் நம்ம வில்லன். ஜோவும் ( அட! ஜோதிகா இல்லைங்க, ஜோதிடத்தை செல்லமா கூப்பிட்டேன் ) - நமக்கு வில்லன்தான்.

"போரடி ஜெய்ப்பீர்கள்" - இப்படி ஒருத்தர் என்கிட்டே சொன்னார். ஜோதிடமாம் .நல்லவேளை ஜெயபீர்கள் என்று சொன்னார்.

ஜோதிடம் என்கிற வார்த்தையே தமிழ் மாதிரி தெரியல. ஆனால் ஜோதிடம் என்கிற வார்த்தை வருவதற்கு முன்னே ஜோதிடம் வந்து இருக்கும்.
நான் அதான் காலகணிதம் என்று தமிழ் படுத்தினேன். தப்புனா சொல்லுங்க.

சில பேருக்கு கல்யாணம் தள்ளிபோச்சுனு அங்க நம்ம ஜோவுக்கு நிறைய பங்கு உண்டு.

பல பேரு நொந்து போனா உடனே நம்ம ஜோவா பாக்க வந்துடுவான். "இப்ப உங்களுக்கு கொஞ்சம் நேரம் சரி இல்லை. வர்ற ( எதோ ஒரு மாசம் இங்க போட்டுக்குங்க ) மாசத்துக்கு அப்புறம் உங்க கஷ்டம் எல்லாம் போய் விடும்"  - இது ஜோவின் பஞ்ச் டயலாக்.

ஜோவும் லேசு பட்ட ஆள் இல்ல. இந்த சாமிய கும்பிடு. உனக்கு சனி இருக்கு. இப்படி நிறைய நிகழ்ச்சி நிரல் வச்சிருக்கு உங்களுக்கு. மங்கள இசை என்னைக்கு அப்படிங்குறது அது கிட்டதான் இருக்காம்.

ஜோவின் பெரிய ரசிகர் வட்டாரம் என்றால் அது அரசியல் தலைங்கதான். யாக மோகத்தை அவர்களுக்கு உண்டு பண்ணுவதில் ஜோ பெரிய ஆளு.
"இந்த தேர்தல ஏன் நீங்க தோத்தீங்க ?" - என்று ஒரு அரசியல்வாதி மனசிடம் கேட்டுப்பாருங்கள். எந்த அரசியல்வாதியாவது மக்களுக்கு ஒன்னும் செய்யல அதான் தோத்தம்னு நெனச்சா  நாடு முன்னேறும். யாகம் பண்ணல அதான் தோத்தோம்னு நெனச்சா .... அது ஜோவின் வெற்றி! மக்களாட்சியின் தோல்வி.

வேலை கிடைக்காத போது திருவல்லிக்கேணி பெரிய தெரு பிள்ளையார் கோயிலுக்கு போற பசங்க உண்டு. நானும் போய்  இருக்கேன். நான் கடவுள் மறுப்பாளன் எல்லாம் இல்லை. ஆனால் அதில் ஆர்வம் இல்லை அவ்வளவுதான்.

யாரோ இந்த கோயில் போய் வாங்க ... வேலை கிடைக்கும்னு சொன்னா நம்ம பசங்க படை எடுப்பாங்க. இந்த மாதிரி பரிந்துரை சொல்வதில் ஜோதிடர்கள் திடமானவர்கள். எல்லாத்துக்கும் இப்படி ஒரு பரிந்துரை உண்டு. இது ஜோ ஸ்டைல்.

வயிறு வலியா? -  இந்த மருந்து. தலை வலியா? - இந்த மருந்து - அப்படிங்கிற மாதிரி எல்லாவற்றிற்கும் ஒரு கோயில் உண்டு.

ஜோதிடம் என்பது மனதிடம் இல்லாதவர்களிடம் நிறைய எடுபடும். பலவீனமான மனம் நம்ம கஷ்டம் எப்படா தீரும்னு நினைக்க அதுக்கு ஒரு இனிப்பு மிட்டாய் தந்து அழுகிற குழந்தைய அமைதி படுத்தும் நுட்பம்தான் ஜோதிடம். இல்லாவிட்டால் இந்தியாவில் புரட்சி வெடிச்சு இருக்கும் ?

"கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன்" - இது ஜோதிட கொள்கை பரப்பு பாடல். நம்ம ஊர்ல கட்டம் சில ஊர்ல வட்டம்.

ஜோதிடம் படிச்சா தலையே சுத்துமுங்க ... சூரியன் சுத்துறான், பூமி சுத்துறான், அப்படியே தலை சுத்தும். அடிக்கடி இந்த ஆளுங்க வீடு வேற மாறிக்கிட்டே இருப்பாங்க.

இந்த  ஜோதிடங்களால் அரசாங்களுக்கு ஒரு நன்மையும், மக்களுக்கு ஒரு நன்மையும் (?) நடந்திருக்கு.

அரசாங்கங்களுக்கு பெரிசா புரட்சி ஏற்படாது. (ஏற்பட்டா  நசுக்கிட மாட்டார்கள்?)
தற்கொலைகள் ஜோ இல்லாவிட்டால் கொஞ்சம் அதிகரித்திருக்கும் ( மனச அப்ப அப்ப அமைதிபடுத்துறாங்க இல்ல ?)

ஜோவின் ரசிகர்கள் கோவிக்க வேண்டாம். நானும் ஜோவிடம் என்னைக்காவது போகலாம். அரசியல்வாதி பேச்சைகேட்டு மட்டும்தான் ஏமாறனுமா ?

ஜோ எப்பவுமே சிரிக்கும் . சில நேரம் கலகலன்னு. சில நேரம் லக்கலக்கன்னு. நாமதான் புலம்பணும்.

ஆமா ஜோவின் சேவகர்களே ....! இந்த முறை வோட்டு போட என்ன குடுப்பாங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன். Ipod , iphone , Laptop ?

Thursday, July 22, 2010

சாதியும் அதன் தேவையும்

இன்று படித்த இரண்டு பதிவுகளில் சாதி பற்றி இருந்தது. சாதி ஏன் இன்னும் மண்ணில் இருக்கு.

சில கரணங்கள் கீழே:
இவை சிலதான் இன்னும் நிறைய இருக்கலாம் நீங்கள் அதை சொல்லலாம்.

1 . தேர்தலில் சீட்டு வாங்க சாதி வேணும். சீட்டு வாங்க மட்டுமில்ல ஓட்டு போடவும் சாதி வேணும். வேற சாதிக்கு ஒட்டு போட்டா அது சாதி குத்தம்.
2 . கலவரமே இல்லாம நாடு இருந்தா நல்லதுக்கு இல்லை ( நெசமா ?) - அதுனால சாதி மதம் வேண்டும்
3 . நம்ம ஊரு கொஞ்சம் பரவா இல்லை. மத்த ஊரில் எல்லாம் பேருக்கு பின்னாடி போட சாதி வேண்டும்.
4 . கல்யாணம் பண்ணிக்க சாதி வேண்டும்.
5 . அடுத்தவன திட்ட சாதி வேணும். ( இன்னும் இது இருக்கு .... )
6 . கட்சி நடத்த  சாதி வேணும்.
7 . விண்ணப்பங்கள் நிரப்ப நிறைய சாதி வேண்டும்.
8 . தலைவனாக சாதி வேண்டும்
9 . அரசாங்கத்துக்கிட்ட ஏதாவது சாதிக்க சாதி வேணும்.
10 . ரெட்டை குவளை முறைக்கு சாதி வேண்டும்

சாதியால் ஒரு மனிதன் தாழ்வாக அல்லது உயர்வாக கருதப்படுவது தவறு. நானெல்லாம் ஏழை சாதி அப்படின்னு சொல்லறாங்களே ... அந்த சாதியாவது ஒழியுமாங்க ?

Tuesday, July 20, 2010

மதராசபட்டினமும் கூவமும் நீங்களும்

அது நீண்ட வருடங்களுக்கு முன்னாள் பார்த்த கலைவாணரின் படம்.
"என்ன அப்படி பாக்குற அது வைகை ... தண்ணி வெள்ளமா ஓடுத்துலா ?" - கலைவாணர் ஒரு காட்சியில் சொல்லும்  போது  பலரும் சிரித்து விட்டோம்.

இந்த படம் பார்க்கையில் மதுரையில் இருந்தேன். நாங்கள் பார்த்த வரை வைகையில் தண்ணீர் அதிகம் ஓடவில்லை. கலைவாணரின் காலத்திலும்தான். ஆனால் கலைவாணர் ஓடும் என்று தன நம்பிக்கையை விதைத்து இருந்தார். இன்னும் அந்த நம்பிக்கை விதை மௌனமாய் ஏதோ திரை சுருளுக்குள் சுருண்டு கிடக்கிறது.

மதராசபட்டினம் படம் பார்த்தவர்கள் பலரும் சொல்லும் விடயம் - கூவத்தில் படகு விட்டதை. இப்பக்கூட விடலாம்தான். நீங்கள் போகமாட்டீங்க அதான் விடல.

அந்த காலத்து சென்னையை / மதராசை காட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்ப சென்னை எவ்வளவு அழகா இருக்கு என்கிறார்கள் படம் பார்த்துவிட்டு வருபவர்கள். என் நண்பர் சொல்வார் குழந்தையில எல்லாம் அழகாதான் இருக்கும் வயசாயடுச்சுனா .... போய்டும்பா. சென்னைக்கும் இதுதான் நடந்துவிட்டது என்று யாரும் சொல்லாதவரையில் நலம்.

விடுதலை பெற்ற தருணத்தில் சென்னை நல்லாத்தான் இருந்தது என்கிற எண்ணம் நிறைய பேருக்கு வருவதை தடுக்க முடியாது. அடப்பாவிகளா! சென்னையை இப்படி கெடுத்தீடங்கலேன்னு ஒரு புரட்சியும் வரப்போரத்தில்லை, இப்படி கெடுத்துடோமேன்னு ஒரு ஆதங்கமும் வந்து திருந்தப்போறதும் இல்லை. கூவத்தில் வழக்கம் போல குப்பை விழத்தான் போகுது.

அரசாங்கத்தின் மெத்தனம் என்று விடுதலைக்கு பின்னைய ஆட்சிகளை குறை சொல்லப்போவதில்லை. யாரும் எதுவும் மாற்றி இருக்க முடியுமா என்று தெரியவில்லை.

சென்னையில் ஏன் இந்த மக்கள் நெருக்கடி - இரண்டாம் தர நகரங்கள் தமிழ் மண்ணில் ஏன் முன்னேற்றபடவில்லை? இந்த கேள்வி படம் பார்ப்பவர்களின் இதயத்தில் எழுந்து உள்ளதா என்று தெரியவில்லை.

திரையில் கூட நகரம் என்றால் சென்னைதான் ரொம்ப காலமாய். இப்போதுகூட மதுரை அரிவாள் தூக்கும் பெரிய கிராமம் அவ்வளவுதான்.
திருநெல்வேலியும் இப்படிதான். தஞ்சையை மையமாக வைத்து அல்லது கதைகலனாக வைத்து ஏதாவது படம் வந்திருக்கா ? இது பெரும்பான்மை தமிழ் நகரங்களின் நிலை. நகரம் என்றால் சென்னை. மாநகரம் என்றாலும் சென்னைதான். அதில் இருந்து மக்களும் மாறவில்லை - ஆட்சிகளும் மாறவில்லை. பெல் திருச்சிக்கு வந்தது என்றால் அது தெளிவான சிந்தனை.

கூவம் எப்படி இப்படி ஆச்சு ? தண்ணீர் வளம் இப்படி எப்படி ஆனது ? ஏதாவது ஆய்வு நடக்க போவதில்லை. தமிழ் மண்ணில் மீண்டும் நீர் மேலாண்மை வந்துவிடப்போவதில்லை.


மீண்டும் வைகை கதைக்கு வருகிறேன். கலைவாணர் சொன்னது ரெண்டு நாளில் நடந்தது. மதுரை வெள்ளத்தில் மூழ்கியது.கலைவாணரை போல நாமும் நம்பிக்கையை விதைப்போம். சென்னை மீண்டும் நலம்பெற. இந்த முறை அந்த நம்பிக்கை விதை விருட்சமாகட்டும்.

டிஸ்கி: நான் இன்னும் மதராசபட்டினம் பார்க்கவில்லை

Monday, July 19, 2010

2012 : மாயன் என்னும் தமிழர் கூட்டம்


2012  டிசம்பர் மாதம் 21  ஆம் நாள் உலகம் அழிந்து விடும் என்று யாராவது நம்பினால் - அவர்கள் கை காட்டுவது மாயன் என்னும் தமிழர் கூட்டத்தின் நாட்காட்டியைதான்.

இந்த மாயன் கூட்டம் தமிழர்கள் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் மூலம் முன் வைக்கபடுகிறது. அவர்கள் சொல்லும் ஆய்வுகளை என்னால் முடிந்த அளவிற்கு முன் வைக்க முயற்ச்சிக்கிறேன்.

தற்போது கௌதமால என்கிற இடத்தில் மயன்களின் கடைசி மண்ணின் இருப்பிடம் கண்டறிய பட்டு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் சொல்லுகின்றன.

கௌதமால என்கிற இடமே இவர்களின் ஆட்சி தலை நகர் இருந்து பகுதியாக இருக்கலாம்.

உலகில் பல்வேறு இனங்கள் வெற்றி வாகை சூடி வந்து உள்ளன. நீண்ட நாட்களாகவே நம்பபடும் விடயம் அட்லாண்டிஸ், லெமுரியா போன்ற கண்டங்களின் இருப்புகள். இவை இருந்தனவா என்கிற கேள்வியை பலர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Le Plongeon  என்கிற ஆய்வாளர் ஆரியர்கள் மற்றும் எகிப்தியர்கள் மயன்களின் தாக்கம் பெற்று விளங்கினர். மயன்களிடம் இருந்தே அறிவு பெற்றனர் என்கிற கருத்தை முன் வைக்கிறார்.

இந்த மயன்களின் தோற்றம் பற்றி ஆய்வு செயப்பவர்கள் பலரும் இவர்கள் தமிழர்களாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிகின்றனர்.

தமிழ் திரு ஆலயங்களின் வடிவிலேயே பிரமிடுகள் என்னும் எகிப்திய கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கலாம் என்றும் நம்பலாம். கோயில் என்பது அரசனின் வீடு என்னும் பொருள் படும். அரசர்கள் இறந்தபின்னும் வாழும் வீடுதான் பிரமிடுகள். மயன்களின் பிரமிடுகளும் இதில் தமிழ் கட்டிட கலை என்கிறார்கள். தமிழக கோயில்களின் வடிவமும் குறிப்பாக தஞ்சை கோயில் வடிவமும் பிரமிடுகளும் ஒத்த வடிவம் கொண்டு உள்ளன.

தமிழ் மண்ணில் இருந்த நாகர்களில் சிலரே  தமிழ் மண்ணை விட்டு வெளியேறிய மாயன்கள் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.
மாயன் என்பவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள். இவர்கள் அறிவீர் சிறந்தவர்கள். இவர்கள் தென் இந்தியர்கள் அல்லது ஈழத்தவர்கள். மாயன் என்கிற கட்டமைப்பளர்கள் கட்டிய நகரமே பொன் இலங்கை என்கிறது பண்டைய ராமாயணம். 

அசுர வழிபாடு செய்யும் மக்களும் இவர்களின் தாய் மண்ணில் வாழ்ந்தாதாக சொல்லபடுகிறது. நாகர் , நகார், நகர் என்கிற வார்த்தைகளில் நான் ஒரு ஒற்றுமையை காண்கிறேன்.

நகார் என்பது மாளிகை கட்ட பயன்படும் ஒரு பொருள். நாகர் என்பவர்கள் தமிழர்கள். நகர் என்பது மாளிகை அமைந்த பகுதி. நகரம் அமைப்பவர்கள் மாயன்கள்.  ( தலை சுத்துதா  ? ). நாகர்கள் என்பவர்கள் நகர் அமைத்து வாழ்ந்தவர்கள்.

இந்த மாயன்கள் ஒரு நிலையில் தங்கள் கடல் வழி பயணத்தில் அடைந்த இடம்தான் - மெக்ஸிகோ அல்லது கௌதமால. இது தற்போதைய தென் மற்றும் நடு அமெரிக்க மண்.

இன்றும் இலங்கையில் உள்ள பெயர்கள் மேசிகோவில் உள்ளது என்கிறார்கள். இலங்கை என்பதே  பல மெக்ஸிகோ நகர்களின் பெயர்களில் உள்ளதாம். பால் இலங்கை, சிவ இலங்கை என்று நிறைய சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். சிலோன் என்பது கூட சிவலங்கை என்பதின் திரிபோ என்னவோ.

மேலும் மாயன்களின் நாட்காட்டி கணித முறை தமிழர்களின் திருகனித பஞ்சாங்கம் போல் உள்ளதாம். பஞ்சாங்கம் என்பது தமிழ் வார்த்தை போல் தெரிகிறது. பஞ்சம் என்பதை தமிழ் கொண்டு விளங்க வேண்டும் என்றால் - தமிழில் நான்கு தினைகளே ஆரம்பத்தில் இருந்ததாம்.
இந்த நான்கு திணைகளில் பஞ்சம் ( ஐந்தாம் நிலை ) ஏற்பட்டால் அது பாலை ஆகுமாம். அதாவது பஞ்சம் உள்ள பகுதி ஆகுமாம். ஐந்தாம் பகுதி பஞ்ச பகுதி.

நிரம்பவே என் சரக்கும் இருந்தாலும் - மாயன்கள் தமிழர்கள், அப்போகாளிப்டோவில் காட்டப்படும் பழங்குடியினர் தமிழர்கள்.
அழிக்கப்பட்ட அமெரிக்க பழங்குடியினர் தமிழர்கள்.  ஆஸ்திரேலியா நாட்டின் பூர்வ குடிகளும் தமிழர்கள் என்று ஆய்வாளர்கள் கருதிகின்றனர்.

மொத்தத்தில் கதை இதுதான் தமிழன் அழிந்து கொண்டே உள்ளான்.

ஆப்பிள் இபோனில் பயன்படுத்தப்படும் குறுக்குவழி ( short cut  நு அதானேங்க ? ) யாவும் மாயன் குறி சித்திரங்கள் போல் உள்ளதாம்.
கதிரவனை ஆதி தெய்வமாக கொண்டவர்கள் மாயன்கள். அதி-தேய்த்தவன் - அதிதியன் - அதித்ய என்பவை கதிரவனே.  திருக்குறள் அதி பகலன் முதற்றே உலகு என்கிறாராம். அகர ( ஆல்பா ) முதல எழுத்து எல்லாம் - எனபது உலகின் பெரும்பான்மையான மொழிகளுக்கும் பொருத்தும்.

அடுத்த பெரும் வெற்றியாக இவர்கள் வாழ்ந்த நாட்டின் வருங்காலதியவர்கள் வெல்வார்கள். அவர்கள் பிரேசில் நாட்டவர்கள் ஆவார்கள் என்று ஆருடம் உள்ளதாம். பிரேசில் தற்போது பொருளாதார ஆற்றலாக ஆகி வருவது இன்னும் புருவம் உயர்த்துகிறது.

மேலும் படிக்க:
http://www.hiddenhistoryhumanity.com/43%20Esoteric%20History%20IIIb%20SthAmMayaShamBraz.htm

Sunday, July 18, 2010

பண்பலையும் தமிழ் நிலையும்

.
சென்னையில் இருக்கும் தருணங்களில் நான் கேட்கும் எந்த பண்பலையும் தமிழ் பேசுவதில்லை. தமிழ் மாதிரி ஏதோ பேசுகிறார்கள்.

" Welcome Back " , " Stay  tuned ", "Break " , " None  other  then " - இதெல்லாம் தெரிய வேண்டும் தமிழ் ஊடகம் எதுவும் பார்க்கவோ / கேட்கவோ.

அதிலும் சிலர் பேசும் வேகமான ஆங்கிலத்தில் தமிழ் திணறுகிறது. விட்டுதொலைடா அப்படின்னு கெஞ்சுது தமிழ்.

ஆங்கில வார்த்தைகள் நம்மிடம் நீக்கமற நிலைத்து விட்டது எனபதில் நான் வேறுபடவில்லை. ஆனால் நம் பயன்பாட்டில் இல்லாத வார்த்தைகள் இந்த வானொலிகளில் புழங்குகிறது.

பண்பலை எங்கள் ஊரில் கேட்டவன் என்கிற நிலையில் சென்னை வானொலி பணபலைகள் எனக்கு கொஞ்சம் ஆச்சிரியம் தருவது. எங்க ஊரில் பண்பலை கேட்டு இப்போது வருடங்கள் ஓடிவிட்டது. இணையத்தில் சென்னை பண்பலை வானொலிகள் வரும்.

சரி! நிகழ்ச்சி தொகுப்பாளர்தான் வேற்று மொழிக்காரரோ என்று நினைத்தால், பேசும் நேயர்களும் - ஏதோ எலிசபெத் ராணி வீட்டு அண்டை வீட்டுக்காரன் மாதிரிதான் பேசுகிறார்கள்.

நாம் தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா இல்லை அமெரிக்காவிலோ ஆங்கில நாட்டில் இருக்கிறோமோ என்று நினைக்க வைக்கிறது.

தமிழ் பட நாயகிகள் தமிழர்களாக இருப்பதில்லை. அதே மாதிரி நிகழ்ச்சி தொகுபாளினிகள் தமிழர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

எங்கள் ஊர் பண்பலை - கோடை பண்பலை. அது இன்னும் அப்படியேதானே இருக்கு?

நீங்கள் தமிழ் பண்பலைகளில் அதிகம் கேட்கும் ஆங்கில வார்த்தை என்ன என்று பின்னூட்டத்தில் சொல்லவும்.

கழுகு - நண்பர்களின் களம்சில நாட்களுக்கு முன்னாள் நான் பார்வை இடும் பதிவுகளில் தெரிந்த அந்த அரசபறவையின் பார்வை, என் பார்வையை இழுத்தது.கருப்பு மேனியும் கருத்து வேகமுமாய்; கருப்பு விழியும் அதில் பொறுப்பு வழியும் பார்வையும்; வெள்ளி தலையும் சொல்லில் புரட்சி நிலையும் என்று அது ஒரு புரட்சி சின்னம். அமெரிக்காவிற்கும் அதுதான் சின்னம் என்பது வேறு கதை.

நண்பர் தேவா, தம்பிகள் சௌந்தர், விஜய் ஆகியோரின் கருத்து களம் என்று அறிகிறேன்.

இப்படி ஒரு கருத்து களம் உருபெற்று உள்ளத்தில் மகிழ்ச்சியே! தொடர்ந்து நடத்துவோம் என்கிற வெறியோடு கூடிய பொறுப்புணர்வு தேவை என்பதை நண்பர்களுக்கு சொல்ல விழைகிறேன்.

தமிழ் நாட்டின் இருகட்சி ஆட்சி முறை பற்றி ஒரு விவாதத்தை அவர்கள் வெளி இட்டு உள்ளனர். வரவேற்கவேண்டிய முயற்சி.

என்னோடு இணைந்து கொள்ளுங்கள் அவர்களை வாழ்த்துவதில்.

அவர்களின் வலை பூவை நீங்கள் உங்கள் வலைப்பூவில் இணைப்பு தரலாம் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.

வாழ்த்துகிறேன் - நல்ல பதில் நீங்கள் பயணிக்க வேண்டும் என்கிற ஆசையுடன். மொக்கைகளை உங்கள் பதிவுகளில் வைத்துக்கொள்ளுங்கள். கழுகை பறக்கவிடுங்கள்.

http://kazhuhu.blogspot.com/

Friday, July 16, 2010

தமிழ் வளர்ப்போம் வாருங்கள்!

சில சமயங்களில் நான் பெருமையோடு பார்க்கும் விடயம் தமிழில் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரும் தமிழாக்க வார்த்தைகள்.

HOME என்று ஆங்கில இணையதளங்களில் இருந்த வார்த்தை தமிழுக்கு வந்த பொது முகப்பு ஆனது. அருமையான கண்டுபிடிப்பு.

சிவகங்கை மாவட்டத்தில் இந்த வார்த்தை ஒரு வகுப்பினரிடம் அன்றாட புழக்கம்.

ஈமெயில் - மின்னஞ்சல் ஆனது.
Chat - என்பது அரட்டை / இனைய அரட்டை.
டவுன்லோட் - தரவிறக்கம் / தகவிறக்கம் ஆனது

இந்த சூழ்நிலையில்தான் கவிஞர் திரு வைரமுத்து அவர்கள் தமிழ் சார்ந்த அரசுத்துறையில் தமிழ் ஆட்சி மொழிக்காக வார்த்தை உருவாக்கும் போது - நிகழ்ந்த ஒன்றை அறிந்தேன். அதில் நீர் வீழ்ச்சி என்று வார்த்தை அவர்கள் குழுவின் காரணமாக உருவாக்கப்பட்டதாகவும் - பின்னர்தான் அவர்கள் அந்த வார்த்தை என்பது ஏற்கனவே தமிழில் அருவி என்று இருப்பது தெரியவந்ததாகவும் பதிகிறார்.

நாம் பல வார்த்தைகளை இலக்கியத்திலும் வரலாற்றிலும் வைத்து விட்டு, புதிதாக சில வார்த்தைகளை கண்டு வருகிறோமோ ?

திரு பழமைபேசி அவர்களின் தளத்தில் சில வார்த்தைகளை அறிந்து வருவது உண்டு.
MUTE - மௌனப்படுத்தல் , அமைத்திபடுத்தல் என்கிற வார்த்தைக்கு மூகாத்தல் சரியாக இருக்கலாம்
பிளாஸ்மா panel , LCD டிவி - இதற்கு எல்லாம் ஏதாவது வார்த்தை இருக்கா ? .... இல்லை நீங்கள் கண்டுபிடித்தால் எப்படி இருக்கும் ?
GADGET, WIDGET ( சிறுவி என்று நான் பதிவில் விழித்திருந்தேன் ), ரிங்க்டோன் ( மணி ஓசையா ? ), GPS ( இது அமெரிக்க வாழ் தமிழர்களின் தேவை ) - இதெல்லாம் எப்படி தமிழ் படுத்தலாம் ?

உங்களால் முடிந்த வார்த்தைகளை ஆராய்ந்து இங்கே பின்னூட்டமாய் கொட்டுங்கள். பார்ப்போம். நான் கொடுத்த வார்த்தைகள் மட்டும் அல்ல புதிய வார்த்தைகளும் வரவேற்க்கபடுகின்றன.

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் - அதுதாங்க வளர்ச்சி.
தமிழனும் வளரனும் தமிழும் வளரனும் - அதுதாங்க வளர்ச்சி.

நன்றிகளுடன்,
கார்த்திக் சிதம்பரம்

Thursday, July 15, 2010

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன்.

இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது.

அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன.

வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது.

ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம்.

தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது.

பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன.

பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்றி நகல் எடுக்கும் வேலையை இந்திய பொருளாதார ஆற்றல் மற்றும் அதிகார மையங்கள் எடுக்கின்றன. இந்திய மண்ணின் பல வேளான் நிலகங்கள் சிறப்பு பொருளாதார பகுதிகள் ஆகி வருகின்றன.

வேளாண்மை வறட்சி மற்றும் உணவு தட்டுபாட்டை நோக்கி இந்திய நிலம் பயணிப்பதை BBC தன் ஆய்வு ஆவன படம் ஒன்றில் வெளி கொண்டு வந்து இருந்தது.

இந்த பொருளாதார நகல் எடுக்கும் பங்கில் தற்போது முன்னிலை பெற்று உள்ளது ஒரு புதிய நாணய அல்லது பணக்குறியீடு.

நான் நினைத்து போலவே இந்தி மொழியின் ரூ மற்றும் ஆங்கில R கூட்டணி அமைத்து தங்களை இழந்து ஒரு குறியீடு உருவாகி உள்ளது.

இந்த குறியீடு பொது-உடமை சின்னம் போல் இருப்பதாக கோவி அண்ணன் தன் பதிவில் எழுதி இருந்தார்.

நம்ம நாட்டின் முதலாளி விரும்பும் குறியீடு அப்படி இருப்பது  நகைச்சுவையான ஒன்றுதான். அனால் அவர் சொல்வது போலதான் உள்ளது. நல்ல கண்டுபிடிப்பு.

வல்லரசு திட்டம் எல்லாம் சரிதான். நல்லரசாகும் திட்டம் நம்மிடம் உள்ளதா ?

Wednesday, July 14, 2010

தமிழில் ஒரு மொழிபெயர்ப்பு சிறுவி

நீண்ட நாட்களாக இந்த தேடல் என்னிடம் உள்ளது. என்னுடைய நண்பர்கள் பலர் "உங்கள் வலைப்பூ முகவரியை தாருங்கள்" - என்னும் தருணத்தில் "தரலாம்தான் ஆனால் என் வலைப்பூ தமிழில் இருக்கிறது" என்றவுடன். "நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது இல்லையா ?"
என்கிற கேள்வி வந்து விழும்.

"எழுதினேன். ஆனால் இப்போது இல்லை " - என்பது உண்டு.

அவர்கள் என் எழுத்துக்களை படிக்க விரும்புகிறார்கள். மற்ற மொழி நண்பர்கள் அவர்கள்.

இந்தி மொழியில் எழுதினால் கூகிள் ஆண்டவர் வரம் தருகிறார் - மொழி பெயர்த்துக்கொள் என்று. அதற்கு ஒரு சிறுவி ( widget ) அல்லது ஒரு கருவி ( tool ) இருக்கு. தமிழில் இல்லை.

இந்தியாவின் ஒரே வாழும் செம்மொழி நொண்டுகிறது. தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழி பெயர்க்கும் சிருவியோ கருவியோ வர நாம் செய்ய என்ன வேண்டும்.

இது தொடர்பாக ஏற்கனவே சில பல்கலை கழகங்கள் முயன்று உள்ளன. ஆனால் இனைய வெளியில் பயன்பாட்டிற்கு என்று ஒன்றும் இல்லை.

பல நண்பர்களின் தமிழில் எழுத்தப்பட்ட கருத்துக்கள் மனித முயற்சி இன்றி வேற்று மொழி நண்பர்களுக்கு புரிய வைக்கும் சாத்தியம் இல்லை என்றே உணர்கிறேன்.

தமிழ் மொழி பெயர்ப்பு கருவிக்கு தமிழக அரசோ, இந்திய அரசோ, சிங்கை போன்ற அரசுகளோ, தமிழ் ஆர்வலர்களோ, தமிழ் கணிப்பொறி நண்பர்களோ இதுவரை செய்தவை எதுவும் உள்ளனவா என்று தெரியவில்லை.

இணைத்தில் இது தேவை என்று நான் உணர்கிறேன். தமிழில் செய்தி திரட்டிகள், வலைப்பூ திரட்டிகள் என நிறைய படிக்க வழி அமைத்தபின்னும் தமிழ் வேற்று மொழியாளர்களை சென்றடைய வழி வரவேண்டும்.

தமிழ் கல்வி மற்ற மொழியாளர்களுக்கு கற்பிக்கப்படல் அதிகரிக்கபடவேண்டும். தமிழ் பரப்பு கழகங்கள் உருவாக்கபடவேண்டும்.

இந்தி மொழியாளர்கள் பிரசார சபா என்று ஒன்று வைத்து உள்ளார்கள். அதை பாராட்ட வேண்டும். அது அவர்கள் மொழி மீது அவர்கள் கொண்ட பற்று. தமிழ் மண்ணிற்கு இந்தி பயன்பாடு அவசியம் இல்லை என்பது வேறு கதை.

எழுத்துக்களின் பயன்பாடே இல்லாத சௌராஸ்டிரம் போன்ற மொழிகளை தமிழ் மண் இன்னும் காத்து வரும்போது. தமிழை விடலாம் ?

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். என்ன செயலாம் தமிழ் மொழி பெயர்ப்பு கருவியோ சிருவியோ செய்ய ? மற்றவர்களிடம் விவாதியுங்கள். இந்த பதிவை வேண்டுமானால் அனுப்பி வையுங்கள்.

நன்றிகளுடன்
கார்த்திக் சிதம்பரம்

Monday, July 12, 2010

உன்னில் எது அழகு?

அனிச்ச மலர் அழகா ? - நீ
அணிந்த மலர் அழகா ?

குனிந்த மயிர் அழகா ? - இல்லை
நிமிர்ந்த மார் பழகா ?

பணிந்த சடை அழகா ? - நீ
பகன்ற சொல் அழகா ?

தனித்த தமிழ் அழகா ? - உன்
பவள இதழ் அழகா ?

கனிந்த மொழி அழகா ? - இல்லை
காந்த விழி அழகா ?

நினைத்த நெஞ்  அழகா ? - இன்றும்
அணைக்கும் கரம் அழகா ?

உன்னில் எது அழகு ? - என்றேன்
என்னில் நீ அழகு என்றாய்.

Sunday, July 11, 2010

யாரடி நீ ?

யாரடி நீ ?
வருடங்கள் சிலவற்றிற்கு முன் எழுதிய சில கவிதை
-------------------
சிற்ப கலைகள் கூடி
கற்பம் தரிக்க பிறந்த
அற்புதமோ நீ ?

யாரடி நீ ?
யாரடி நீ ?

கம்ப நாட்டான்
சொற் கொடுக்க
கண்ணதாசன்
பா அமைக்க
காளிதாசன்
தொகுத்து வைத்த
காவியமோ நீ ?

யாரடி நீ ?
யாரடி நீ ?

சேரநாட்டான் மை
கொடுக்க
சோழ நட்டன் - அது
குலைக்க
பாண்டி நாட்டான்
செய்துவைத்த
ஓவியமோ நீ ?

யாரடி நீ ?
யாரடி நீ ?

என்ன ஆளவந்த
ஆட்சியா ? -இல்லை
வீழ்த்தவந்த
சூழ்சியா ?

யாரடி நீ ?
யாரடி நீ ?

Friday, July 9, 2010

ராம ராவணன் : தமிழர் விரோத படமா ?

இந்த படத்தை பற்றி சில நாட்களாக கேள்வி பட ஆரம்பித்தேன்.

இந்த படம் மலையாள புதினமான மனோமி என்பதை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது என்று அறிந்தேன்.மலையாள புதினங்கள் படிக்கும் பழக்கம் எனக்கு இல்லை. தமிழை ; ஆங்கிலத்தை தவிர வேறு எந்த மொழியும் படிக்க தெரியாத மனிதர்களுள் நானும் ஒருவன்.மாதவி குட்டி என்கிற மலையாள புதின எழுத்தாளரின் கற்பனை கதை இது என்றே அறிகிறேன். புதின கதையின் படி - தமிழ் போராளி ஒருவன் சிங்கள பெண்ணை காதல் செய்வதாகவும் அதன் காரணமான நிகழ்வுகளும் சொல்லபடுகின்றன.மனோமி என்கிற பெயரில் இந்த புதினம் எழுதப்பட்டு உள்ளதாகவும். திரைபடத்திற்கு ராம இராவணன் என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பதாகவும் அறிகிறேன்.

இதில் ராமன் யார் ராவணன் யார் என்று தெரியவில்லை.சிங்கள பெண் ஒருத்தியை காதலிக்கும் தமிழ் இளைஞனின் கதையாக வந்த படமே புன்னகை மன்னன். கமல் அவர்கள் நடிப்பில் வெளி வந்த படம்.

சிங்களத்து சின்னக்குயிலே என்று ஒரு பாடலே அதில் உண்டு.தமிழர்களின் நிலையை அறியாமலும் அதன் பின் புலம் தெரியாமலும் எழுத்தப்பட்ட கதையா இந்த ராம ராவணன் என்று தெரியவில்லை.

ஆனால் அப்படி இருக்கவே சாத்தியங்கள் உண்டு என்று நினைக்கிறேன்.புன்னகை மன்னனிலோ தெனாலியிலோ கமலும் பெரிதாக தீவு தேசத்தின் நிலையை பற்றி சொல்லவில்லை. கன்னத்தில் முத்தமிட்டால் ஓரளவுக்கு சொல்ல முயன்றாலும் முழுமை குறை இருந்தது.போர் நிலைகளை அடிபடையாக கொண்டு நிறைய திரைப்படங்கள் ஆங்கிலத்தில் வந்திருந்தாலும் தமிழில் அதுவும் நம் அண்டை மண்ணில் நடந்த நிகழ்வுகள் குறித்த படங்கள் வெளிவந்தது கிடையாது.கன்னத்தில் முத்தமிட்டால் - மணி அவர்களின் இயக்கம் என்பதால் விருது கூட பெற்றது.ஆரோக்கியமான விவாதமும் அப்பாவி தமிழர்களின் நல்வாழ்விற்கான முயற்சிகளும் உயிர் பெருத்தல் நலம்.

Wednesday, July 7, 2010

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 14

என் அருகில் வந்தான் மாடசாமி. என் கண்களை பார்த்தான். அவனது கண்களில் வெறி இருந்தது. தன வலது கரத்தை நீட்டினான்.
அந்த மெலிந்த தேகத்தவன் ஒரு பெரிய அருவாளை கொடுத்தான்.

அருவாளை பிடித்த மாடசாமி. மெதுவாக அதை என் கழுத்தருகில் கொண்டு வந்தான்.
கழுத்தில் வைத்தான்.

"கொன்னுடவா ?"
என்னிடம் கேட்டான்.

கோயிலுக்கு நேந்து விட்ட ஆட்டிடம் சம்மதம் கேட்பது மாதிரி. நான் திரு திரு என முழித்தேன்.
என் கண்கள் பயத்தில் உறைந்தன. வியர்வை என்னை நனைத்து இருந்தது.

நா வறண்டு போனது. அருவா என் கழுத்தை நெருக்கியது. ஆனால் அறுக்கவில்லை.
"சொல்லு ஆத்தா ... தம்பி கேக்குதுல்ல"
பாம்பட பாட்டி குறுக்கே புகுந்து சங்கு ஊதிக்கோ என்றது.

"கொன்னுடுங்க தம்பி"
மாடசாமியின் அண்ணனும் வேகபடுதினான்.

குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. எல்லோரும் ஒரு நிமிடம்  கவனம் சிதறினர்.
அந்த சிறுவன் மலை மீது இருந்து கீழே எட்டி பார்த்தான்.

"அண்ணே வந்துட்டாய்ங்க"
அது நிச்சயமாக காவல்துறையாகதான் இருக்கும்.

என்னை மாடசாமி ஒரு முறை பார்த்தான்.
"உங்கள கொல்ல கூட்டி வரல. எங்க வீட்டு பொண்ணுகள மத்தவன் தொட்டா மட்டும் இல்ல, மத்த வீட்டு பொண்ணுங்கள நாங்க தொட்டாலும் குத்தம்தேன். நீங்க என்ன செஞ்சீங்க ... கொல்ல?"
சொல்லி விட்டு அருவாளை கீழே போட்டான்.

"எங்கள கொன்னுட்டு இந்த மலய எடுத்துக்குவாக , ... யாருக்கு வேணா வித்துக்குவாக  ... எங்க பொண்ணுக உசுரோட இருந்தா அவுகளையும் ... " - மாடசாமி இதயத்தில் இருந்து கத்தினான்.
அடிவாரத்தில் போர் உக்கிரம் அடைந்தது. இவர்களும் துப்பாக்கியும் ரவயுமாக தயார் ஆகினர்.

நான் எதுவும் புரியாதவளாய் நின்றேன். போரின் வெம்மை அவர்களை துரத்தியது.

குண்டுகளை வீசுவதும்  துப்பாக்கியால் சுடுவதுவுமாக மாறினார் அவர்கள். அந்த பெண்ணின் உடல் முழுமையாக எரிந்து முடிவதற்கு முன்னால் அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர வேண்டி இருந்த்தது. நானும் அவர்களுடன் பயணிக்க வேண்டி இருந்தது.

ஒரு நிலையில் விண்ணில் ஹெலிகோப்டேர்கள் சுழல தொடங்கின. கை எறி குண்டும் துப்பாக்கி சூடும் இனி அவர்களை காக்க போதுமானதாக எனக்கு தென்படவில்லை.

அவர்கள் ஓடி ஓடி மறைந்து மறைந்து போர் புரிந்தனர்.
இரவும் பகலுமாய் போர்.

அது ஒரு இரவு பொழுது ....
மாடசாமி அந்த மெலிந்த தேக மனிதனிடம் எதோ சொன்னான்.

அவன் என்னருகில் வந்தான்.
வந்தவன் என்னை ஒரு விதமாக பார்த்தான்.
"வாங்க .. அடிவாரத்துக்கு போகலாம்" -சொன்னான்.
"அவுங்க எல்லாம் ?" - நான் கேட்டேன்.
"செத்துபோவாய்ங்க" -சொல்லிவிட்டு என் முன்னால் நடந்தான்.

துப்பாக்கியால் காவலர்களின் நிலைகளை பார்த்து சுட்டு கொண்டிருந்த மாடசாமி திரும்பி பார்த்தன்.
"போங்க  ... இங்க இருந்தா செத்து போவீக" என்று கண்களால் சொல்லி  வழி அனுப்பி வைத்தான்.

அவனது வார்த்தைகளை என்னால் மறுக்க முடியவில்லை. ஒரு வீரனின் வார்த்தையை மதிக்க வேண்டிய நிலை.
அவன் ஒரு நல்ல இதயம் கொண்ட வீரன்.

நான் அந்த மெலிந்த தேகத்தவனின் பின்னால் நடந்தேன்.
தாக்குதல்களின் நடுவில் பயணித்தோம்.

அந்த இளம் பெண்ணின் மரணம் கண்ணில் வந்து மோதியது.
அழகானவள் ... அவளின் மரணம் ஒரு மிக பெரிய வருத்தம்தான். அந்த சிறுவன் இப்போது அநாதை. அந்த சிறுவன் போல பலர்.

ஒரு பெண்ணை தொட்ட காவலர்கள் எங்கே ? என்னை விட்ட  இந்த வீரன் எங்கே ?

நாங்கள் மலை காடு  அப்புறம் அந்த நதியையும் கடந்தே வந்தோம்.

அடிவாரத்திற்கு வந்தோம். காவல் நிலையம் என்று ஒரு பெரிய எழுத்து பலகை தெரிந்தது.
"நீங்க  போங்க ?" - அவன்  சொல்லி விட்டு காட்டுக்குள்  ஒளிந்து கொள்ள போனான்.
"ஏய் நில்லு "
அவன் என்னை பார்த்தான்
"ராக்காயி ?" - நான் கேட்டேன்
"அவுக மாடசாமி அண்ணனுக்கு வாச்ச தெய்வம். தெய்வமாயிட்டாக   " - சொல்லி விட்டு மறைந்தான்.

நான் காவல் நிலையத்துக்குள் வந்தேன்.
ஒரு ஏட்டு இருந்தார்.

நான் அப்போதுதான் அந்த சத்தம் கேட்டேன். மலை உச்சியில் மாடசாமி கொல்லபட்ட சத்தம். ஒரு யானை விழுந்த சத்தம். வீரன் விழுந்த சத்தம்.

நானும் ஏட்டும் வெளியில் வந்து பார்த்தோம்.

"நான் ராக்காயி மாதிரியா இருக்கேன்" - கேட்டேன்.
"அந்த அம்மா கருப்ப கலையா கடவுள் மாதிரி இருக்குங்க "
"அப்ப நான் ?" -கேட்டேன்
"ஒரு சாடையில அப்படிதான் இருக்கீக. என்ன வெள்ளையா இருக்கீங்க" - என்றார் ஏட்டு.

அப்புறம் சத்யா வந்தார் அடிவாரத்திற்கு.

நாட்கள் ஓடின. இன்னும் என் இதயத்தில் அந்த காடு உள்ளது. அதற்காக உயிர் தந்த நல்ல உள்ளங்கள் உள்ளனர்.

இன்று பாராட்டு விழா. என்னிடம் மாடசாமியை கொல்லவில்லை என்று பொய் சொல்லி கொண்டு உள்ளார்.
நீரை பார்த்தால் சிவப்பாய் தெரிகிறது என்கிறார் சத்யா . 

வெளியில் இருந்து பார்த்தால் அவர்கள் பயங்கரவாதிகள்.

நன்றிகளுடன்
பைரவி.

நான் சத்யா பேசுறேங்க ....
நான் என் மனைவியை கொஞ்சம் ஏமாத்திக்கொண்டு தான் உள்ளேன். அவள் வந்த பின் அவளுக்கு தெரியாமல் அவளை பரிசோதித்துவிட்டேன். அவள் உத்தமி.

அவளிடம் நான் மாடசாமியை கொல்லவில்லை என்று சொல்லிக்கொண்டு உள்ளேன். என் அலுவலக தோழர்கள் மற்றும் என் நலன் விரும்பிகளின் காரணமாக நான் கடைசியில் இன்று சென்று பதக்கம் வாங்கிக்கொள்வேன்.

இப்படிக்கு
சத்யா

முற்றும்.

இது ராவணன் பார்த்த பாதிப்பில் எழுதிய கதை. ராவணன் சாயல் நிறைய இருக்கும். விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன.

Tuesday, July 6, 2010

ஒரு அரவமில்லா காட்டில் .... பகுதி 13

ந்த இளம் பெண் மரணம் அடைந்து விட்டாள். இவர்களோ சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர். மலைக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள் மாதிரி இவர்கள். இவர்களால் அவளை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடியாது. காவல்படைகள் நெருங்கு கின்றன. இவர்களின் தோல்வி இவர்களின் தோளில் ஏறி அமர நேரம் அதிகம்இல்லை.

மாடசாமி அந்த இளம் பெண்ணை பார்த்து விம்மி விம்மி அழுதான். தன் உடன் பிறந்தவளை இழந்த மாதிரி.
சுடுகாட்டுக்கு செல்ல முடியாது - தற்போதைய சூழலில்.

மாடசாமியின் அண்ணன் வந்தான். பார்க்க கொஞ்சம் கனமாக இருந்தான். மீசை முறுக்கி விடப்பட்டு இருந்தது.
அவனோடு ஒரு மெலிந்த தேகதவன்.

மாடசாமி வந்த அண்ணனிடம் பிணத்தை காட்டினான்.
கண்களை கசக்கினான். அழுதான்.

"தம்பி. நம்ம பயலுகு வலுவா நிக்குராணுக. கண்ண கசக்காத"
தன் தம்பியை தாங்கிக்கொண்டான் அண்ணன்.

அந்த மெலிந்தவன் என்னை பார்த்தான்.
"இது தான் அந்த படுபாவி பொண்டாட்டியா?" - மாடசாமியிடம் கேட்டான்.

எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"யார படுபாவிங்குற ?"

நான் கோபத்தோட அந்த மெலிந்த தேகதவனை நெருங்கினேன்.
மாடசாமி அந்த மெலிந்த தேகத்தவனை பிடித்துக்கொண்டான். அவன் திமிறினான்.

ஒரு சின்ன சிறுவன் வந்தான்.
எல்லோரும் அவனை நோக்கி தங்கள் பார்வையை திருப்பினர்.
"அக்காடா ....."
எல்லோரும் அவனை கண்டிக்கொண்டு அழுதனர்.

அவன் அந்த இளம்பெண்ணின் தம்பி போல.
"அவளுக்கு கண்ணாலம் கட்டி வைக்கனும்னு இருந்தோமே ... " - பாம்பட பாட்டி கதறினாள்.

நிமிடங்கள் கடந்த பின்.
மரக்கட்டைகள் கொண்டு வரப்பட்டு அந்த குகைக்கு வெளியில் அவள் எரிக்கபட்டாள்.

இந்த புகை கூட அவர்களை காட்டி கொடுத்துவிடும் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். மனிதர்கள் எங்கு எல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இங்கே தாக்குதலும் இருக்கின்றது. காரணம் - இங்கே மனிதர்கள் என்றால் இவர்கள் இல்லாவிட்டால் காவலர்கள்.அண்ணன்  - மாடசாமிக்கு, அந்த சிறுவனுக்கு  ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தான்.

நான் அவர்களை பார்த்தேன் என் மீது அவர்களின் வெறுப்பு திரும்பவில்லை.
போலீஸ் அவர்களை நெருங்கி கொண்டு இருந்தது.

அந்த பெண்ணிடம் எப்போதும் ஒரு நட்பு புன்னகை இருக்கும். சில தருணங்களில் அவளுக்கு ரத்த போக்கு இருந்தது. பாதிக்கப்பட்டவள்.

நாங்கள் இருக்கும் இடத்திற்கு கொஞ்ச தூரத்தில் மோதல் நடந்து கொண்டு இருக்கலாம். கிளம்ப ஆயத்தம் ஆகினர் மாடசாமியின் அண்ணனும் அந்த மெலிந்த தேகத்தவனும். அந்த பெண்ணின்  தம்பி இங்கேயே தங்கி விட இருந்தான்.

"சரி. இந்த பொம்பளைய என்ன செய்ய போற தம்பி ?" - மாடசாமியின் அண்ணன் போகிற போக்கில் கொல்லி வைத்தான்.

எனக்குள் ஒரு பயம் சம்மணம் இட்டது.
என்னை மறித்துக்கொள்ள மனதளவில் தயார் ஆனேன்.

நான் மட்டும் அல்ல எல்லோரும் மாடசாமியின் வார்த்தைக்காக காத்திருந்தோம்.
அவனது வாயை பார்த்தேன்.
அவன் கண்களில் ஒரு வெறி இருந்தது. பழிவாங்கும் வெறி.
அவன் வாய் திறந்தான். என் கதி அவன் வாயில் ....


தொடரும்

Monday, July 5, 2010

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 12

இது மீண்டும் பைரவி. மாடசாமியிடம் ஒருவன் ஓடி வந்து எதோ காதில் கிசுகிசுத்தான்.

மாடசாமி வானத்தை ஒரு முறை பார்த்தான். பின்னர் குகைக்குள் திரும்பி பார்த்தான். நான் பயத்தில் இருந்தேன்.

திரும்பவும் இடம் மாறல் ஆரம்பித்தது.
பாட்டி எங்களை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தனர் - அதாவது என்னையும் அந்த இளம் பென்னையும்.

காடு மலை. மீண்டும் வானம் கொட்டியது.
என் கால்கள் கல்லிலும் முள்ளிலும் நடந்தது.

சில இடங்களில் "
பார்த்து நடங்கள்" என்று மாடசாமி சொல்லும் போது. அதில் முரட்டுத்தனம் இல்லை.

நாங்கள் நதியின் வேறு ஒரு பக்கத்திற்கு வந்தோம்.
மீண்டும் ஒரு குகை கண்ணில் பட்டது. நாங்கள் உள்ளே போனோம்.

"என்ன மாடசாமி?" - கிழவி கேட்டாள்.
"அந்த பறவைங்க சத்தம் பதிவாகிடுச்சுல அதேன்"

அந்த பதிவு ஞாபகத்திற்கு வந்தது எனக்கு. அவன் அவர்களது போராட்டத்தை சொல்லி அனுப்பிய பதிவு அது.
என்னோடு இருக்கும் இளம் பெண்தான் பாதிக்கப்பட்டவள்.

அவர்கள் ஆயுதம் தூக்க நிறைய காரணங்கள் இருக்கு. அவர்களின் தாய் நிலம் - அங்கே இருந்து அவர்கள அப்புறபடுத்தபடுத்த நிறைய திட்டங்கள்.
எல்லாம் வளம் வாய்ந்த இந்த மலைககாக.

முதலில் மனுவெல்லாம் கொடுத்து தோற்றுபோய் ஆயுதம்
ந்த ஆரம்பித்து உள்ளனர். தோற்று போகும் ஒரு அறப்போராட்டம் ஒரு ஆயுத போராட்டத்தின் ஆரம்பம் ஆக சில தருணங்களில் உள்ளன.

அன்று இரவு வரை நாங்கள் அங்குதான் இருந்தோம். மாட
சாமிக்காக  சிலர் போரடி நேற்று காவல்துறையை நேற்று திசை திருப்பி உள்ளனர்.

இந்த மலையின் வளத்தை சிலர் வருவாய் ஈட்டும்  ஒன்றாக நினைக்க அதனோடு இந்த பகுதி பணக்காரர்கள் இணைந்து கொண்டனர். அவர்கள் இந்த மலை வாழ் மக்களின் காரணமாகவே அவர்களுக்கான பண்ணை வீடுகள், தோப்புகள் என்று மலைக்குள் வந்து குடி அமர முடியவில்லை.

தாய் நிலத்திற்காக அதன் அரசிடமே இன்று போராடும் நிலையில் மாடசாமியின் கூட்டம் இந்த மலை கூட்டம்.

உணவு சமைக்க ஆரம்பித்தா
ள் பாட்டி.
இன்னொருவன் ஓடி வந்தான்.
"அண்ணே நம்ம சனம் எல்லாம் தயாரா இருக்கு. அவனுக்கு உங்கள தொட முடியாது" - சொல்லி விட்டு எட்டி பார்த்தான்.
உள்ளே நானும் பாட்டியும் அந்த இளம் பெண்ணும்.
"ராக்காயீ அக்கா ..." - கொஞ்சம் மெதுவாக சொன்னான்.
அவன் காதில் மாடசாமி ஏதோ சொன்னான்.

வானம் கொட்டுவது நின்று இருந்தது.
ராக்காயீ - யார் இவள் ? 


அந்த நிகழ்வு நடந்தது. நாங்கள் மௌனமானோம். இரவு கவிழ தொடங்கியது.

நிலவும்  நட்ச்சத்திரங்கள் மௌனம் காத்தன. அந்த நிகழ்வு....

தொடரும்.

Sunday, July 4, 2010

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 11

என் துப்பாக்கியின் குழல் ஒரு வெறியுடன் மாடசாமியை தேட ... அங்கே இருந்தது ஒரு டேப் ரெகார்டர்.

அவன் பேச தொடங்கினான். இவன் என்ன குடியரசு தலைவரா என்ன ? இந்த டேப் ரேகோர்டேரை இங்கே எங்களிடம் மரணம் அடைந்த ஒரு பழங்குடியினன் தான் போட்டிருக்க வேண்டும்.

நாங்கள் டேப் ரேகோர்டேரை எடுத்து எங்கள் குடிலுக்குள் போட்டு கேட்டோம்.

"நாந்தேன் மாடசாமி பேசுறேன். கும்பிடுறேங்க. நீங்க எல்லாரும்  பெரிய பெரிய துப்பாக்கியோட குண்டோட என்ன பிடிக்க வந்திருப்பீங்க.
நீங்க புதுசு. அதுனால  எங்க போராட்டத்த பத்தி சொல்லுதேன். உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சுருக்கும் இருந்தாலும்.

நாங்க தாயா நெனச்ச மலைல ஏதோ கனிம வளம் - ஏதோ குந்தனைத் அப்படினாக. அது இருக்குன்னு யாரோ சில பேரு கண்டுபிடிச்சு அரசாங்கத்துக்கு சொன்னாங்க. அரசாங்கம்  வெளிநாட்டுகாரங்களுக்கு  சொன்னுச்சு.

வந்தாக படிச்சவுக. ஏதோ எங்க நிலத்த எல்லாம் தரனும்னாக. முதல்ல அடிவாரத்துல ஆரம்பிச்சுது இந்த கூத்து. அஞ்சு வருஷம் ஆச்சு நெலத்த குடுத்தவுகளுக்கு பணமும் வரல வேலை வெட்டியும் வரல. அப்புறம் எங்க ஆளுக எல்லாம் இனிமே நெலத்த தரமுடியாதுன்னு சொன்னாக. நான் கிராமதலைவன்கிற   மொறைல அவுகளுக்கா அரசாங்கத்துகிட்ட மனு கொடுத்தா...  எங்கள தாக்க ஆரம்பிச்சாக. இந்த நதில போனம் விழுந்துச்சு. இந்த நேரத்துல தான் இந்த கனிமவள தொண்டால் ஒரு அம்பது வருசத்துல முடிஞ்சா அப்புறம் இங்க ஒரு புல்லும் பூண்டும் மொளைக்கதுன்னு தெரியவந்துச்சு. ஏங்க இந்த மலைய மலடி ஆக்கனுமாங்க ?

அப்புறம் எங்கள சட்ட விரோதினாக. இப்ப எங்க பொண்டு புள்ளைகள  தொட அரம்பிச்சுடாக. எங்க கூட்டத்துல ஒருத்தி அவள .... அந்த நாலு பயலுகளையும் ஒப்படைச்சுட்டு ஒங்க வீட்டுக்கார அம்மாவ கூட்டிட்டு  போங்க. நீங்க அந்த நாலு பேரையும் ஒன்னும் பன்னமாட்டீக. உங்க மேல எங்களுக்கு நம்பிக்க இல்ல. இந்த மலைய காப்பதுறதுல எங்க உசிரு போனாலும் பரவ இல்ல சாமி"

அந்த சட்ட விரோதி நியாயம் பேசுகிறான். இவனை எல்லாம் பேச விடுறதே தப்பு. அரசாங்கம் எங்களை இங்கே அனுப்பி உள்ளது இவனை பிடிக்கத்தான். இவன் பக்கத்தில் இருப்பவர்கள் இவனால்தான் பாதிக்கபடுகிறார்கள்.

நான் டேப் ரேகோர்டேரை அமைத்தி படுத்திவிட்டு இளைய பெருமாளை பார்த்தேன்.

"ஒப்படச்சுடுலாமா சார்  ?"
நான் பெருமாளின் கண்ணை பார்த்தேன். அவன் குடிலுக்குள் குனித்து நின்று என் வாயை பார்த்துக்கொண்டிருந்தான்.

நான் எங்கள் படையை பார்த்தேன்.
ஒரு பெண்ணை தொடுவது குற்றம். குழந்தையை கொல்வது குற்றம்; பாவம். எல்லாம் உண்மைதான்.
ஆனால் மாடசாமி  யார் நீதிபதியா ?

யுத்தம் என்று வந்து விட்டால் அதில் நியாயம் அநியாயம் பார்க்க முடியாது.

நான் எதுவும் சொல்லாமல் குடிலுக்கு வெளியில் வந்தேன். அப்போது அந்த பறவை ஒரு குன்றின் மீது பறந்து கொண்டிருந்தது.

எங்கள் அதிரடி படையில் இருந்தவன் ஒருவன் என் அருகில் வந்து சல்யுட் அடித்தான்.

அந்த பறவை பறப்பத்தை காட்டினான்.  நான் என் மோவாய் தடவிக்கொண்டே பார்த்தேன்.

அதில் எனக்கு ஒன்றும் புதிதாய் தெரியவில்லை.

என் காதுக்குள் அவன் சொல்ல ஆரம்பித்தான்.
அது ....

தொடரும்

Saturday, July 3, 2010

தி லாஸ்ட் ஏர் பெண்டர் - விமர்சனம்

னோஜ் நைட் ஷியாமளனின் படங்களின் மேல் நான் அதிகம் நம்பிக்கை வைப்பதில்லை.  எனவே இந்த படத்தை நான் அதிகம் எதிர்பார்க்கவில்லை.

நான் இதன் விமர்சனங்களை படித்துவிட்டு படம் பார்க்காமல் இருப்பதே சிறந்த்தது என்று இருந்த போது தோழர் ஒருவரின் குடும்பம் படம் நல்ல முறையில் எடுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் ஒரு முறை போய் பாருங்களேன் என்றனர். அதிலும் அவர்கள் இந்த படத்தின் மூல வடிவமான தொடரை அவர்கள் குழந்தைகள் பார்த்ததாக சொல்லினர்.

இரவு நேரத்தில் இந்த படத்தை பார்க்க திரை அரங்குக்குள் சென்றோம்.

திரையில் படம் ஒளிர தொடங்கிய தருணத்திலேயே சீன எழுத்துக்கள் மின்ன ஒருவன் சாகசம் செய்ய எழுத்துக்கள் மிளிர தொடங்கின.
கராட்டே கிட் - இப்போது இது. சீனம் வாழ்கிறது.

அவதாரம் - ஆங்கிலத்தில் அவதார் - பற்றி ஒரு முன்னுரை ஓடியது. அதில் ஒரு காலத்தில் காற்று, நிலம். நீர், நெருப்பு நாடுகள் எல்லாம் ஒரு காலத்தில் நட்புறவோடு இருந்ததாகவும். பின்னர் நெருப்பு நாடு ஆதிக்கம் கொள்ள ஆரம்பித்த தருணத்தில் அவதார் காணமல் போய் விட்டான் - என்று சொல்லப்படுகிறது.

கடைசி சோழன் பற்றி சொல்லும் ஆயிரத்தில் ஒருவன் என் நினைவுக்கு வந்தான்.

ஒரு சகோதரனும் சகோதரியும் இந்த அவதாரத்தை ( அதாவது  ஏற் பெண்டர் ) கண்டு பிடிக்கின்றனர். அவர்களின் ஊர் இன்று நெருப்பு நாட்டின் ஆதிக்க வெறியில் உள்ளதை தொடரும் காட்சிகள் சொல்கின்றன. நெருப்பு நாடும் அவதாரத்தை தேடி அலைகிறது. தேடுவது சேரி நாய் கோடிஸ்வரன்  புகழ் தேவ் படேல் மற்றும் அவர் நாடு.

தன் தந்தையிடம் இழந்த பெயரை திரும்ப பெற தேவ் இந்த முயற்சியில் உள்ளார். அவரது முயற்ச்சிகள் தோற்கின்றன.
யாளியிடம்  நினைவில் அவ்வப்போது அவதார் பேசுகிறான்.

மொட்டை தலையும் அதில்  சிறிய பச்சை (டட்டூ)    குறியீடுகளால் உருவான  மிக பெரிய அம்புக்குறி ஒன்றும் என
காட்சி அளிக்கிறான் அவதார்.
அந்த தலையை தன் அடையாளத்தை காட்டாமல் இருக்க மறைத்துக்கொள்கிறான். அவதார் ஒரு புத்த பிக்கு. அவன் பெயர் ஆங். அவன் நினைவுகளில் அவனது பழைய நாட்கள் வந்து போகின்றன. அவனது ஆசிரியருக்கு இந்திய முகம்.

காற்றை கை ஆள்வதை பற்றி மட்டுமே
அவதாருக்கு தெரிகிறது. நீரை கையாள அதாவது மடக்க கற்றுக்கொள்ள அவன் நீர் நாடு செல்கிறான். அவ்வப்போது அவன் கண்கள் மின்னுகின்றன - யாளி ( dragon ) பேசுகிறது - பழைய நாட்கள் விரிகிறது. குழந்தைகள் ரசிப்பார்கள்.

நான்கு தரப்பட்ட மக்கள் நான்கு நாடுகள் என்கிற போது என் நினைவில் வந்த நாடு இலங்கை. அங்கே நான்கு தரப்பு மக்கள் இருந்த வரலாறு உண்டு.

படம் கிராபிக்ஸ் கலாட்டாவாக உள்ளது. அவதாரை கண்டுபிடிக்கும் பெண் - சில இடங்களில் நன்றாக நடித்து உள்ளார்.
படம் - மூன்று பகுதிகள்  உள்ளது போல. வந்து உள்ளது முதல் பகுதி.

அவதாரை
அழிக்க வேண்டும் என்று நெருப்பு நாடு நினைக்க படம் வணக்கம் சொல்கிறது.

கெட்டவர்கள் பாத்திரங்கள் எல்லாம் இந்தியர்கள் செய்து உள்ளார்கள். படத்தில் பெரிய திருப்பம் எதுவும் இல்லை. போர் நடக்கையில் சில இடங்களில் நாயகன் தேமே என்று நிற்கிறான்.

குழந்தைகள் ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன். என்னுடன் வந்த நண்பர் - நல்ல முயற்சி என்றார். ஒரு திரைதொடர் பட வரிசைக்கு உள்ள நேர்த்தி படத்தில் இல்லை என்றே உணர்கிறேன். இதே குறை ஆயிரத்தில்  ஒருவனில் இருந்தது.


ஷியமலன் அவர்கள் இன்னும் உழைக்க வேண்டும். கதை சொல்லும் திறனில் கொஞ்சம் கற்க வேண்டும். நல்லபடம் எடுக்க முயன்று முக்கால் கிணறு தாண்டி உள்ளார்.


வீட்டில் குழந்தைகள் இருந்தால் அழைத்து செல்லுங்கள். மற்றபடி படம் பெரிய அளவில் இல்லை. காமிக்ஸ் விரும்பி படிப்பவர்களை கவரலாம். லாம்தான் .

Friday, July 2, 2010

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 10


நான் சத்யா. அந்த கருப்பு ஆட்டை எங்கள் வழி காட்டியாக வைத்துக்கொண்டு நாங்கள் எங்கள் வழியில் பயணித்தோம்.
எங்கள் ஜீப் அந்த காட்டு மலை பகுதிக்குள் சீறி பாய்ந்தது. பின்னல் எங்கள் படை.

நாங்கள் அவன் சொன்ன இடத்தில் நிறுத்தினால் - அங்கே யாரும் இல்லை.
"எனக்கு தெரியாதுங்க" - அவன் அலறினான்.

என் கை துப்பாக்கி அவனை பதம் பார்க்க நினைத்தது. அந்த நேரம் பார்த்து அந்த பழங்குடியின
ர் அந்த பக்கம் வந்தனர்.

நாங்கள் அவர்களை வழி மறித்தோம். அவர்கள் கையில் குருவி சுடும் துப்பாகிகள் இருந்தன.
"எங்கே மாடசாமி ?" - கேட்டேன்
"தெரியாது சாமி" - அவர்கள் சொன்னார்கள்.

நான் இளைய பெருமாளை அழைத்தேன்.
இந்த கருப்பு ஆட்டை தீர்த்து கட்டிவிட திட்டமிட்டோம்.

நாங்கள் எங்கள் துப்பாகிகளை பயன்படுத்தினோம்.
அந்த கருப்பு ஆடும் மற்றும் சிலரும் எங்கள் தரப்பில் இறந்தனர். அந்த பழங்குடி கூட்டத்தில் எல்லோரும்.

யுத்தம் முடிந்த மாதிரி இருந்தது. மாடசாமிக்கு யார் அதரவு அளித்தாலும் தீர்த்துக்கட்டவேண்டியததுதான். இந்த பழங்குடி கூட்டமும் அவனின் ஆதரவு கூட்டாம் தான்.

நான் எங்கள் குழுவை பார்த்தேன்.
அவர்கள் பிணங்களை அள்ளி கொண்டிருந்தனர்.

நான் தண்ணீர் குடித்தேன். என்
துப்பாக்கி குழலை ஊதி விட்டேன். அது துயில் கொள்ள தயார் ஆனது.

அப்போதுதான் அந்த குரல் கேட்டது.

அதிர்ந்தோம். நான் திரும்பிபார்த்தேன்.
நான் மட்டும் அல்ல எல்லோரும்.

"நாந்தேன் மாடசாமி"

என் துப்பாக்கியை தயார் செய்தேன். அது உயிர் குடிக்க தயாரானது.
ஆனால் ....

தொடரும்

Thursday, July 1, 2010

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 9

மீண்டும் நான் பைரவி. அந்த சத்தம் கேட்ட பிறகு நான் தரதரவென பாறைக்கு அந்த பக்கம் இருந்த ஒரு பெண்ணால் இழுத்து செல்லப்பட்டேன்.
எங்களுக்கு முன்னாலும் பின்னாலும் மாடசாமியின்  ஆட்கள். ஒரு நிலையில் என்னை இழுத்து சென்ற பெண் அடிவாயிற்றை பிடித்திக்கொள்ள. பாம்பட பாட்டி எங்கள் எல்லோரையும் பக்கத்தில் இருந்த குகைக்கு.

என் காலில் ரத்தம் சொட்டியது. அந்த இளம் பெண் இழுத்ததில் என் கால் அருகில் இருந்த மரக்கிளையில் குத்தி ரத்தம் பட. என் சேலைத்தலைப்பை கிழித்து காலில் கட்டிவிட்டால் அவள் அப்போது. பத்தி சேலை தலைப்பு இன்னும் பாறையில் கிடக்கும்.

குகை இருளாக இருந்தது. இப்போது சத்தம் எதுவும் இல்லை.

அந்த  இளம் பெண் சுருண்டு படுத்துக்கொண்டாள். மாடசாமியின் ஆட்களில் ஒருவன் வெளியில் போய் சில கிளங்குகளுடன் வந்தான்.

பாட்டி சமைத்தாள். சாப்பிட என்னிடம் நீட்டினால் பாட்டி.
நான் மறுத்தேன்.

"சரி! அந்த புள்ளைக்காவது கொடு"
நான் வாங்கிக்கொண்டேன். அவளிடம் நீட்டினேன்.

அவள் கண் விழித்தாள். சிநேகமாய் புன்னகைத்தாள்.
"தாங்க ராக்காயியக்கா" - வாங்கிக்கொண்டாள்.

வெளியில் மழை ஆரம்பம் ஆகி இருந்தது. ஓவென்று பேய்ந்து கொண்டு இருந்தது, மாடசாமி குகை வழியில் நின்று மழையை பார்த்துகொண்டிருந்தான்.

அந்த இளம் பெண்  சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
"ராக்காயியக்கா  ... "
மீண்டும் அழைத்தாள் அந்த பெண்.

பாட்டிக்கு கோபம் பொத்திக்கொண்டு வந்தது.
"இவளாடி ராக்காயி ?"

நான் புரியாமல் நின்றேன்.மாடசாமி திரும்பி பார்த்தான். மிரட்டும் பார்வை.
பாட்டி மௌனம் ஆனாள்.

யார் அந்த ராக்காயி ? எனக்கும் அவளுக்கும் என்ன தொடர்ப்பு.
மாடசாமி தன் கையில் இருந்த  துப்பாக்கியை என் நெற்றியில் வைத்தான்.

பாட்டியும் அந்த இளம்பெண்ணும் என்னையே பார்த்தனர்.
டிரிக்கரை அழுத்தினான். அதிர சிரித்தான்.

"ரா...க்...கா...யீ .... "
உரக்க கத்தினான். டிரிக்கரை அழுத்தினான்.

"சத்யா ...."
நான் கத்தினேன் என் நெஞ்சுக்குள். பயம் முகத்தில்... வியர்வை அதன் மீது.

தொடரும்
Related Posts with Thumbnails

Pages

Powered by Blogger.

நான் தொடர்பவை