Skip to main content

என் பயணங்களில்: ஊரை சொல்ல மாட்டேன்

எப்போதும் எங்களுக்கு இடமாறுதல்கள் புதிய அனுபவங்கள் பலவற்றை கொண்டு வந்து உள்ளன..

எங்களின் வாழ்வில் நல்ல அனுபவங்கள் பல இந்த பயனத்தில்  உண்டு - நாங்கள் தமிழ் மண்ணின் பூர்வ குடிகளை ஒரு முறை பார்த்தோம். அவர்களை பண்பாடு அற்றவர்கள் - பட்டிகாட்டார்கள் - என்று யாரவது இன்னமும் சொல்லி கொண்டுதான் இருக்கின்றனர். இது வருத்தத்திற்கு உரியது.

அந்த உள்வாங்கிய சிற்றூரின் உள்ளே எங்களுக்கு வங்கி அமைந்து இருந்தது. அப்பாவிற்கு எங்களை எப்போதும் கூடவே அழைத்து செல்லும் வழக்கம்.இதனால் என் பள்ளி கல்வி கெட்டாலும் - உலக கல்வி விரிவடைந்தது.

எங்களுக்கு அந்த வங்கி கட்டடத்தின் உரிமையாளர் அவர்கள்  வீட்டிலேயே வாடகைக்கு ஒரு வீடு கிடைத்தது. நாங்கள் தான் அங்கே தங்கினோம்.மற்றவர்கள் பக்கத்தில் இருக்கும் நகரத்தில் தாங்கிக்கொண்டனர்.

அந்த வீட்டின் ஒரு பகுதியில் வீட்டுக்காரர்கள். இன்னொரு பகுதி வாடகை பகுதி - எங்கள் இடம்.

எப்போது எது சமைத்தாலும் எங்களுக்கும் கொண்டு வந்து தருவார்கள். அவர்கள் மிகவும் வெள்ளந்தியான மனிதர்கள். ஒரு நாள் அவர்களின் பேச்சின் போது சுவாரசியமாக நிறைய விஷயம் சொல்லினர். வேட்டையாட போவது பற்றி.

வேட்டை என்றால் சிங்க வேட்டை, புலி வேட்டை எல்லாம் இல்லை. அருகில்  காடு இருந்தாலும் - சிங்கம் புலி எல்லாம் இல்லை.

அவர்கள் நரி வேட்டை ஆடுவது கூட இல்லை. அவர்கள் பெரிய வேட்டை என்று சொன்னது காட்டு பன்றி பற்றி. அது கரும் பன்றி. அம்மா ஒரு நிமிடம் திகைத்து விட்டார்.

அப்புறம்தான் உச்சகட்டமே - அவர்கள் அந்த பன்றி கரியின் ருசியை பற்றி பேசினர். ஒரு நிலையில் - அது சமைத்தால் உங்களுக்கு தருகிறோம் என்று சொல்ல அம்மா - இல்லைங்க நாங்க எல்லாம் சைவமங்க ( அட! முழு பொய்ங்க ) என்கிற மாதிரி சொன்னார்.

எனக்கு ஆச்சிரியம் - இன்னமும் வாழும் பாம்பு பிடிக்கும் இருளர்கள். காட்டு பன்றி பிடிப்பவர்கள், உள்ளார்கள். இவர்கள் பூர்வ குடிகள். இவர்களுடன் சேர்ந்து வாழ்வது நமக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் இவர்களின் வாழ்விற்கு அரசுகள் சில விடயங்கள் செய்கின்றனர் - குறைந்த பட்சம் தமிழ் நாட்டில். பாம்பை பிடித்து இருளர்கள் அரசிடம் பாம்பு பண்ணைக்கு கொடுலாம் என்று கேள்வி பட்டு உள்ளேன்.

 தமிழ் மண்ணில் ஒரு பச்சை வேட்டை - இது வரை இல்லை. நல்லதே நடக்க வேண்டுவோம்.

பயனம தொடரும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.