Skip to main content

த நா வரலாறு : சோழன் ஆண்ட மண்ணில் ....

தமிழ் மண்ணின் முதலாளித்துவத்தின் கோர முகம், சதி முகம் வெளிப்பட்ட இடம் கீழவெண்மணி. அதை அவன படுத்தும் முயற்சியில் ஏற்கனவே பலரும் முயன்றிருந்தாலும் - நாங்களும் கொஞ்சம் முல்கிறோம்.

கீழவெண்மணி என்பது தற்போதைய நாகை மாவட்டத்திலும் முன்னாலய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலும் உள்ள ஒரு சிறிய ஊர்.
இந்த ஊரில் ஒரு பெரும் வேட்கதிருக்கு உரிய நிகழ்வு ஒன்று நடந்தது. அரை படி கூலி உயர்வு கேட்ட அப்பாவி தொழிலாளிகள் - கூலி உயிர்வு கேட்ட காரணத்திற்காகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்கிற காரணத்தாலும் உயிருடன் கொளுத்தப்பட்டனர். இந்த வரலாறு இன்றும் நம் வரலாற்று புத்தகங்களில் இல்லை. மாறாக நம் பெருமை பேசும் பல விடயங்கள் உண்டு. அறியாதவற்றை சொல்ல்வதே எண்ணம் என்றாலும் - எங்களுக்கு முன்னாள் பலர் இதை ஆவன படுத்தி உள்ளனர்.

"இனி" என்கிற தன் புதினத்தில் திரு மேலான்மை பொன்னுசாமி இதைதான் மைய கருத்தாய் வைத்து எழுதினார் என்று என் பேராசிரியர் சொல்லுவார்.

ராமயவின் குடிசை இதன் ஆவண வடிவமே. இயன்றால் வாங்கி பாருங்கள். நாங்களும் இயன்றால் பதிவேற்ற முயற்சிக்கிறோம்.

உங்களுக்கு வேறு ஒரு இனைய பக்கத்தை அறிமுக படுத்த உள்ளேன் இன்று. அதன் முகவரி http://lenz101.com/

ஆவன ஒழி கீற்றுகளை பதிவேற்ற நானும் நண்பர் ஜூலிச்டனும் சேர்ந்து எடுத்து உள்ள முயற்சி இது. உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன.
உங்கள் பார்வை எங்கள் தேவை.

Comments

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

த நா வரலாறு : திப்புசுல்தான் ஒளிந்திருந்த திண்டுக்கல்

இந்த இடுக்கயோடு த நா வரலாற்றை கொஞ்சம் இடை நிறுத்தலாம் என்று எண்ணம். இன்னும் நிறைய எழுத வேண்டி உள்ளது.ஆனால் அதற்கு இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் ஆழமாய் எழுத வேண்டும்.