Skip to main content

Posts

Showing posts from November, 2010

சோழர்களும் அவர்கள் தோழர்களும்

பல  நாட்களுக்கு முன்பு  நடந்த உரையாடல் அது. நானும் நண்பர் ஒருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். காஞ்சியின் கைலாசநாதர் கோயில் வடிவமைப்பு கலை பற்றி பேச்சு வந்தது. பல்லவர்கால வடிவமைப்பு என்றும் அதன் தாக்கத்தில் உருவானதே தஞ்சை பெரியகோயில் என்கிற கருத்தை நண்பர் முன்வைத்தார். பல்லவர்களின் ஆட்சியின் தாக்கத்தை விட அவர்களின் கலைஆதிக்கத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் நிறையவே உண்டு. மதுரைக்கு அருகில் இருக்கும் வரிச்சூரில் உள்ளதாக சொல்லப்படும் உதயகிரி அச்த்தகிரி ஆகிவையும் பல்லவர்களின் கலை தாக்கம் கொண்டது என்று நானும் நினைக்கிறேன். பல்லவர்களின் கலை தாக்கம் அல்லது கலை தாகம் எப்படி பட்டது என்கிற போது - விச்சித்திர வர்மனின் வரலாறு நினைவுக்கு வருகிறது. அதுவும் விச்சிதிரவர்மன் தன் பெயரை விச்சித்திரவர்மன் என்று சூட்டிக்கொண்டதிற்கு சொல்லப்படும் காரணம் - அதாவது அவனுக்கு முந்தய பல்லவ மன்னர்கள் கட்டிய கோயில்கள் யாவும் அழிக்க பட்டுவிட்டதாகவும் எனவே அவனது காலத்தில் அவன் கட்டிய கோயில்கள் இன்றும் நிலவுவதே அதற்க்கான காரணங்கள். புத்த மத வழிபாட்டில் ஒரு அளவுக்கேனும் பல்லவர்கள் ஆர்வம் கொண்டு இருந்து உள்ளனர். புத்த ம

வெற்றி பெற்றவர்கள்

அரசியல்வாதிகள் அதிகாரிகள் என்று ஒருமிகப்பெரிய பட்டியல் இப்போது எல்லாம் தொலைக்காட்சிகளில் குற்றவாளிகள் என்று பெரிது படுத்தபடுகிறது. உண்மையில் நடந்திருப்பது வேதனைக்கு உரிய சுரண்டல். எதை தொட்டாலும் ஊழல் லஞ்சம் என்பது மக்களாட்சியின் இருத்தயம் வெந்து கொண்டு வருவதையே காண்பிக்கிறது. மன்னன் எவ்வழி மக்கள் எவ்வழி என்பது அரசர்கள் கால நடைமுறையாக இருக்கலாம். மக்கள் என்ன நினைக்கிறார்களோ அது நடைமுறைபடுத்தப்படுவதே மக்களாட்சியாக இருக்க வேண்டும். நடைபெறும் நிகழ்வுகளில் மனம் வருத்தப்பட்டேன். பின்னர் சிலரிடம் ஒரு கேள்வியை முன் வைத்தேன். உலகில் வெற்றி பெற்றவர்கள் அல்லது இந்தியாவில் வெற்றி பெற்றவர்கள் யார்? - என்பதே அந்த கேள்வி. யாரும் எந்த ஒரு போராளியின் பெயரையோ , மனித நேயரின் பெயரையோ  அறிவியல் மனிதரின் பெயரையோ , ஏன் மதபோதகர்கள் பெயரையோ சொல்லவில்லை. எல்லோரும் பணம் படைத்தவர்களின் பெயரையே சொல்லினர். போராளிகள் உருவாவது கட்டாயத்தின் அடிப்படையிலும் பணக்காரர்கள் உருவாவது தன் முனைப்பு ஆசையிலும் என்பதே நான் புரிந்து கொண்டது. வெற்றியின் அளவுகோல் பணம் என்று ஆகிவிட்டது. இன்னும் இம்மாதிரியான ஊளைகள் நிறைய வர