Skip to main content

த நா வரலாறு: இந்தியாவில் வரி வசூலிப்பு outsourcing

மருத நாயகத்தின் வரலாற்றை எழுதுவது இந்த இடுகையின் நோக்கம் அல்ல. அதற்கு திரு கமல் ஹாசன் அவர்கள் உள்ளார்கள்.

நம்மில் பலருக்கு தெரியாத வரலாறுகள் - நம் மண்ணில் நடந்து உள்ளன. வரி வாங்கும் உரிமையை எங்களுக்கு ஆர்காட் நவாப் தந்து உள்ளார் - என்று வெள்ளை மனிதர்கள் பேசும் வசனங்களை நீங்கள் வீர பாண்டிய கட்டபொம்மனிலும் சிவங்கை சீமையிலும் கேட்டிருப்பீர்கள். இவர்கள் தங்கள் பாளையத்தை காக்க போராடியவர்கள் பின்னர் விடுதலை வீரர்கள் ஆகி விட்டனர் - என்று படிக்கிற போது எனக்கு கொஞ்சம் நகை சுவையாய் இருக்கம்.

அந்த காலத்தில் இந்தியா என்பது ஒரு கருத்து இயல் - நாடு அல்ல. அப்படி இருக்கையில் எப்படி இந்திய விடுதலைக்கு போராடி இருக்க முடியும்.இந்தியா என்பதை கட்டி எழுப்பியது வெள்ளையர்களே.

சரி! வரி பெறுதல் என்பது என்ன என்பதை விட வரி வாங்கும் உரிமை - இந்த கேள்வி தான் அதிகம் யோசிக்க வைக்கும் கேள்வி. இன்று அமெரிக்கர்கள் எப்படி தங்கள் நாட்டை காலி செய்ய outsourcing - அதாவது வேறு ஒருவருக்கு உங்கள் வேலையை கொடுத்து விட்டு நீங்கள் கால்மேல் கால் போட்டுகொண்டு உணவு சாப்பிடுவது.

இந்த அமெரிக்கர்களுக்கு இந்திய வரலாறு தெரியுமா என்று எனக்கு தெரியாது. வரி வாங்குவது என்கிற உரிமையை outsourcing செய்தவர்கள் இந்திய மன்னர்கள். அவர்கள் முதலில் ஆளுநர்கள் கொண்டு இருந்தனர் - பின்னர் வெள்ளையனுக்கு தந்தனர். ஆட்சி என்பது வர்த்தகமாக இருந்திருக்கு - இப்பவும் அப்படிதான்.

மதுரையில் இருந்த விஜய நகர் அரசர்களின் ஆளுநர்கள் தான் நாயகம் அல்லது நாயக்கர்கள். தெலுங்கில் ஒரு படம் பள்ளியில் படிக்கும் போது பார்த்தது ஞாபகம். அதில் நாயகர்களில் ஒருவர் விஜயநகர அரசருக்கு எதிராக செயல்படுவார். பின்னர் அவரது மகன் என்று நினைக்கிறேன் அவர் அரச விசுவாசி - அவர் அரசருக்காக தன் தந்தையை எதிர்த்து போராடி மன்னரிடம் நன்மதிப்பை பெறுவார். அரசர் - நீயே அந்த மண்ணை வைத்துக்கொள் என்று சொல்லிவிடுவார். சரியான மசால படம்தான். ஆனால் அதில் வரலாறும் உண்டு. இந்த படம் ஒரு முறை இந்திய தொலை காட்சியில் பார்த்த ஞாபகம். அப்போதெல்லாம் இந்த மாநில மொழி திரை படங்கள் ஒலிபரப்பாகும். ஆங்கில துணை தலைப்புகளுடன்.

நாயகம் அல்லது நாயக்கர்கள் ஆட்சியாளர்களை எதிர்த்து ஒரு நிலையில் போராடி தங்களை ஆட்சியாளர்களாய் நிலை நிறுத்த முயன்று இருக்கலாம். மதுரையில் பட்டு நூல் காரர்கள் என்று ஒரு மக்கள் திரள் உண்டு. அவர்கள் தற்போதைய குஜராத்தின் ஒரு பகுதியில் இருந்து வந்தவர்கள் - திருமலை மன்னரின் ( இது இயற் பெயரா - அரச பெயரா - அல்லாத மக்கள் வழங்கிய பெயரா என்று ஆராய வேண்டும்) ஒரு துணைவிக்கு பட்டு நெய்ய வந்தாதாக சொல்லப்படுகிறது.இவர்களின் தாய் மொழி சௌராஸ்டிரம். இதற்கு எழுத்து இருப்பதாய் தெரியவில்லை. எழுத்தே இல்லாத மொழி கூட தமிழ் மண்ணில் பாதுகாக்கப்பட இலக்கியம் கொண்ட தமிழ் சில இடங்களில் புறம் தள்ளபடுவது வேதனேயே. சௌராஷ்டிரா மக்களிடம் எந்த அளவு மொழி பற்று இருந்தால் அது இன்றளவும் வாழும். அவர்களுக்கு ஒரு அரசமரியாதை( அதாங்க ராயல் சல்யுட் ).

இந்த நாயகர்களுக்கு பிறகு நமக்கு தெரிந்தவர் மதுரை நாயகமாய் ( அதாவது மதுரையின் ஆளுநராய் இருந்த கான் சாஹிப் ) இருந்த மருத நாயகம்.மதுரை என்பதன் திரிபே மருத என்று வாதிடும் மனிதர்கள் உண்டு - அதில் உண்மையும் இருக்கலாம். இன்றும் மருத என்று அழைக்க படுவதை நான் மிக சாதரணமாய் கேட்டு உள்ளேன்.

இந்த மருத நாயகமும் - ஒரு ஆளுநர் தான் - ஆனால் இவருடய முதலாளி ஆற்காடு நவாப். வெள்ளையர்களுக்கு ஆதரவாய் இருந்தவர்தான் இவர். ஊமைத்துரையைமுரியடித்ததற்க்கு பாராட்டப்பட்ட பட்டியலில் இவருக்கு ஒரு இடம் உண்டு. கடைசியில் இவர் வெள்ளையர்களுக்கு எதிராய் மாறினார்.

இன்னும் அமெரிக்கா வரி வாங்கும் உரிமையை ஆற்காடு நவாப் போலவோ ஜெகாங்கிரை போலவோ வெளி ஆட்களுக்கு வழங்கவில்லை. வழங்காது என்று நம்புவோமாக.

மருதநாயகத்தின் சமாதி இன்றும் மதுரையில் உள்ளதாய் சொல்ல படுகிறது.

அப்புறம் சொல்ல மறந்து விட்டேன் - அறந்தாங்கிக்கும் பட்டுகொட்டைக்கும் உள்ள தொடர்பை - இதுவும் கேள்வி பட்டதே. ஆதாவது ஒரு காலதில் அறந்தாங்கிக்கும் பட்டுகொட்டைக்கும் ஒரு சாலை போட பட்டுள்ளது. அதன் வழியாக செல்வதே பல போக்குவரத்துகளின் வாடிக்கையாய் இருந்து உள்ளது. இந்த சாலை எப்போது உருவானது யார் காலத்தில் என்று எல்லாம் தெரியவில்லை. இதன் வாயிலாகவே பட்டுகோட்டை அறந்தாங்கி என்கிற தொடர் பயன்பாடிற்கு வந்து உள்ளது. இதுவும் ஆராய படவேண்டிய ஒன்றே.

தொடரும்

Comments

  1. வரி வசூலிப்பு பற்றிய கட்டுரை நன்று..
    அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலை பற்றி விசாரித்து சொல்கிறேன்

    ReplyDelete
  2. //// "இவர்கள் தங்கள் பாளையத்தை காக்க போராடியவர்கள் பின்னர் விடுதலை வீரர்கள் ஆகி விட்டனர் - என்று படிக்கிற போது எனக்கு கொஞ்சம் நகை சுவையாய் இருக்கம்.அந்த காலத்தில் இந்தியா என்பது ஒரு கருத்து இயல் - நாடு அல்ல. அப்படி இருக்கையில் எப்படி இந்திய விடுதலைக்கு போராடி இருக்க முடியும்.இந்தியா என்பதை கட்டி எழுப்பியது வெள்ளையர்களே."

    சரியான கருத்து, கட்டபொம்மன் பட வசனமெல்லாம் வெறும் கற்பனையே,

    ReplyDelete
  3. மிக்க நன்றி செந்தில். யாரவது விசாரித்தால் நலம் என்று நினைத்தேன்.

    ReplyDelete
  4. நன்றி அருண். இந்தியாவில் வரலாறு என்பது ஏதோ புதினம் போல் எழுத்தப்பட்டு உள்ளது.
    அது நமக்கு வசதியாக போக - நாமும் ரசித்தோம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்