Skip to main content

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல.
url
ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ?

இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட்.எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம்.

“என்னங்க புள்ளைக்கு ‘ஷு’-ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள்.
நம்ம யோகராஜன் பரிந்துரை!
‘தமிழ்ல ஷு இல்லடி’ – நான் சொன்னவுடன் எரிக்கிற மாதிரி பார்த்தாள். கொலையும் செய்வாள் பத்தினி.
“சொல்றத செயுங்கள்” – கட்டளையிட்டாள்.
பேரு தேடனும் அதுவும் ‘ஷு’ ல தேடனும்.

அலுவலகத்தில் என் மேஜையில் ஸ்வீட் வைத்து இருந்தேன் .வாழ்த்து சொன்னார்கள் சக பணியாளர்கள். பக்கத்துக்கு இருக்கை பரமசிவந்தான் நான் நினைத்த கேள்வியை கேட்டான்.
“என்ன பேரு வைக்க போறீங்க?”
“பரமா, ஷூ-ல ஆரம்பிகனுமாம்”
“நல்லதா போச்சு. செருப்புன்னு வையுன்னு சொல்லாம. சரி! யாரு சொன்னது?”
“நம்ம யோகராஜாதான்”
“ஜோதிட சிகாமணி, நியுமரலாஜி நாகபோஷினியா ?. அப்ப வச்சிடுப்பா”

ஒண்ணுமே புரியல. ஆண் பிள்ளை பிறந்தா, தாத்தா பேரு, பெண் பிள்ளை பிறந்தா பாட்டி பேருன்னு – தமிழ் நாடு நல்லாதானே இருந்துச்சு. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை? ஷூ-ல பேராம்? இது என்ன லேசுபட்ட காரியமா ?

மீண்டும் இரவு படுக்கையில் ரேவதி வந்து அமர்ந்தாள். இப்ப எல்லாம் எனக்கு வீட்டுக்கு வரவே பயமா இருக்கு. அதுவும் ரேவதி வந்து பேச ஆரம்பிச்சா.. பயத்துல வயுத்துக்குள்ள என்ன என்னமோ பண்ணுது.

ரேவதியின் கையில் ஒரு பேப்பர். அதில் நூறு பேரு.
“என்னங்க இந்த பேரு எப்படி இருக்கு?” – ரேவதி கேட்டாள்.
“என்ன பேரு ?”
“ஷுர்ஜித்”
“என்னடி பஞ்சாப் சிங் பேரு மாதிரி இருக்கு?”
“ஓ! இது எப்படி இருக்கு .. ஷுக்மோகன் ஷால்மியா?”
“ஐயோ விடு ரேவதி. நானும் பேரு தேடுறேன்?”
“சீக்கிரம்” – கட்டளையோடு கிளம்பினாள். நாள்ளதனே இருந்தா ?

ஒரு ஷுமினதனோ, ஷுநிலோ, ஷுந்தரஜனோ வீட்ல உருவானா ஆச்சரிய படவேண்டாம்.

ரெண்டு நாளா விடுப்பில் இருந்த அக்கோண்டன்ட் அன்றுதான் வந்தார், கடுப்பில் இருந்த என்னை பார்த்தார்.

“யோகராஜன் பேச்ச விளையாட்டா எடுத்துக்கலாமா ? ‘ஷு’ல இன்னமா பேர் வைக்கல?”
“ஒன்னும் சிக்கல சார்” – இது நான்.
“புள்ளைக்கு நோய் கியி பிடிச்சிடாம இருக்கனும்னா ... சீக்கிரம் பேரு வை”
என்ன கொடுமைட இது? ஊருல இருக்கிறவன் எல்லாம் சாபம் தர்றான்.

அவரே மீண்டும் ஆரம்பிச்சாரு.
“என் பொண்ணு பேரு அஹானா. அதுல ‘ஹா’நாவ எடுத்தப்புறம் இப்ப கிளாஸ்லையே அவதான் முதல்ல வர்றா...”
“இப்ப உங்க பொண்ணு பேரு ‘ ஆ’ வா?” – இது நான்
“இல்ல ஆனா”
“அதுதான் நானும் சொன்னேன்” – என்று நான் சொன்னவுடன். என்னை முறைத்துவிட்டி போய்விட்டார். அவர் பிள்ளைக்கு ஆனா உபயம் நம்ம யோகராஜன். அது இப்பதான் யு கே ஜி படிக்குது. அதுல அது நூத்துக்கு தொன்னுத்தி அஞ்சு எடுக்குமாம் ... இப்ப நூறு எடுக்குதாம். அதுல அது நூறு எடுத்தா என்ன தொண்ணுறு எடுத்தா என்ன?

“சார்! நேம்சொநேம்ஸ்.காம்ல தேடுங்க” – புது டைபிஸ்ட் சுஷீலா சொன்னங்க. யோகரசனால் கிடைத்த ஒரு நன்மை அவன் வேலையைவிட்டு போனப்புறம் அவன் சீட்டுக்கு ஒரு அழகான பொண்ணு வந்ததுதான்.
ஷு...ஷு... கோடி பேரு கொட்டுது. நேம்சொநேம்ஸ்.காம் ஒரு நேம் பரிந்துரிக்கும் இணையத்தளம். இப்ப எல்லாத்துக்கும் இண்டர்நேட்டுதான்.


ஷுந்தமில ஸாரி செந்தமிழல்ல பெருவைக்க நேச்ச என்ன இந்த ஷுவாலையே அடிச்சுக்கணும்.

ஒரு பேர நானும் ரேவதியும் தேர்ந்து எடுத்தோம். “ஷுக்ரேக் சேப்பல்” – இவரு ஒரு ரிக் வேதகால பூர்வகுடி வீரராம். சேப்பல் என்பது இவர் வம்சமாம். அதனால அத வைக்கனும்னு அவசியம் இல்லையாம் – ரேவதி சொல்லிவிட்டாள். ஷுக்ரேக் என்றால் சிறந்த வீரன்னு அந்த கால பூர்வகுடி மொழில அர்த்தமாம்.

ஊரெல்லாம் டமாரம் அடித்துவிட்டோம். ஷுக்ரேகின் பேர் சூட்டு விழா வெகு விமர்சியாக கொண்டாடிநோம்.

காலங்கள் ஓடியது.

ஒருநாள் ஷுக்ரேகை கூப்பிடும்போது வேறு ஒரு ஆசாமியும் திரும்பி பார்த்தார்.

ஒரு வேலை அவர் பெரும் ஷுக்றேகோ ?
அவர் அருகில் வந்தார்.

“இந்த பேரு உங்களுக்கு எப்படி தெரியும்” – நான் என் டமாரத்தை அடித்தேன். நதி மூலம் ரிஷி மூலம் எல்லாம் சொன்னேன். பொறுமையாய் கேட்ட நண்பர் – கொஞ்சம் வாடிய முகத்துடன் பேச ஆரம்பித்தார்.

“இப்படி நடக்கும்னு தெரியாது சார். நான் தான் ஒரு நாள் தண்ணி அடிச்சுட்டு ... நேம்சொநேம்ஸ்.காம்ல contribute பட்டன அழுத்தி ஷுக்ரேக்-நு ஒரு பேர எழுதி அதுக்கு ஒரு கதையும் எழுத்தி வச்சேன்”

தலையில் கையை வைத்து அமர்ந்து கொடேன். அப்புறம் விக்கிபீடியாவில் நான் போயி ஷுக்ரேக் பத்தி ஒரு பக்கம் போட்டேன். ஷுக்ரேக் ஒரு சிறந்த வீரர் அவர் சேப்பல் வம்சத்தவர். சேப்பல் வமசதவர்கள் ஒரு காலத்தில் உலகத்தையே ஆண்டவர்கள் என்று.

காலம் உருண்டு ஓடி விட்டது. இப்ப ஷுக்ரேக் பாட்டு எழுதுறான் சினிமால.

இந்த வருடம் தேசிய விருது வாங்கி இருக்கும் ஜீவன்-தான் அவன். ஜீவன் என்கிற புனைபெயரில் எழுதிகிறேன். எல்லோரும் இப்போது அவனை ஜீவன் என்றுதான் அழிகிறார்கள். இப்பதான் அவன் பெயரில் ஜீவன் இருக்கிறது.

நல்லவேலயாய் அவன் புனை பேருக்கு ஜோசியர்களை தேடவில்லை.

பெயரிலும் ஜீவன் வேண்டும்!

Comments

  1. கதையிலும் ஒரு ஜீவன் இருக்கிறது. :-) ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விஜய் டிவியும் தமிழ் கடவுளும்

என் கண்களில்  விழுந்த செய்தி அது. அப்போது நான் போதி தர்மரை பற்றி ஒரு ஆய்வை செய்து கொண்டு இருந்தேன். ஒரு நிலையில் போகரும் போதி தர்மரும் ஒன்றோ என்கிற குழப்பமான நிலை வந்தது. போகர் சித்தர், போதி தர்மர் - புத்தர். சித்தி பெற்றவன் சித்தன் - அதாவது ஆய்ந்து அறிந்தவன். புத்தி பெற்றவன் புத்தன் - அதவாது எப்போதும் விழிப்புடன் இருப்பவன். இவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. யோ என்கிற சீடன் போதிதர்மருக்கு இருந்ததாகவும் ஒரு செய்தி உண்டு. புலிப்பாணி என்கிற சீடனை கொண்டிருந்தார் போகர். இருவரும் ஒருவரே என்கிற கருத்தும் உண்டு. போதி தர்மத்தில் குமாரசாமி அதாவது கௌமார மதத்தின் தெய்வம் வழிபட பட்டு உள்ளதா என்கிற கேள்வி என்னிடம் உண்டு. போதி தர்மத்தவர்கள் போலவே முருகன் சிலைகள் திருப்பதி மற்றும் பழனியில் நிறுவப்பட்டு உள்ளதாம். இதுவும் ஆய்வுக்கு உட்படுத்த படவேண்டிய ஒன்றே. திருப்பதி புத்த தளம் என்றும் அங்கே இருப்பது முருகன் என்றும் கருத்துக்கள் உண்டு. முருகன் போதி தர்மத்தில் வழிப்படபட்ட தருணத்தில் சாகிய முனி கௌதம புத்தன் தெய்வமாக இல்லாமல் இருந்து இருக்கலாம். முருகனின் அருளின் காரணமாகவே எ

தமிழும் நாமும்

முழுமையாக தமிழில் பேசுவது என்பது இயலாத காரியம் என்பது போல ஒரு உலகை நிர்மாணிக்கும்  வலையில் நாம் நிறையவே சிக்கிக்கொண்டு விட்டோம். நான் சில தருணங்களை நினைக்கிறேன். என் வாழ்வில் முதல் முறையாக என்னை கவர்ந்த அழகான சொற்றொடர் ஒரு கிராமத்து சொற்றடர்தான். "தம்பி, அந்த காத்தாடியை சத்த அமத்துங்க" இதற்கு முன்னாள் அது "தம்பி, அந்த ஃபேன ஆப் பாண்ணுங்க". மிளகாய் என்கிற வார்த்தையை பொட்டலம் மடித்து கொடுக்கும் நம் நண்பர்கள் தான் கண்டுபிடித்தனர். தேங்காய் பூதுண்டு என்பது மிக சாதரணமாய் புழக்கத்தில் உண்டு. மணி அடிச்சு பேசினேன் - ஒரு ஈழ தமிழர் சொன்ன வாசகம். தொலை பேசியில் அழைத்தேன் என்பதின் சாதாரண வழக்கு. படித்த பலரிடம் ஆங்கில பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆங்கிலம் நம் தேவை. ஆனால் தமிழில் பேசும்போது ஆங்கிலத்தை கலப்பதை நிறுத்த முயல்வோம். கடினம்தான் ஆரம்பத்தில். முயல்வோம். முடியும். தமிழ் இன்னும் வாழும். தமிழால் முடியும் என்கிற எண்ணம் வேண்டும்.

மதராசபட்டினமும் கூவமும் நீங்களும்

அது நீண்ட வருடங்களுக்கு முன்னாள் பார்த்த கலைவாணரின் படம். "என்ன அப்படி பாக்குற அது வைகை ... தண்ணி வெள்ளமா ஓடுத்துலா ?" - கலைவாணர் ஒரு காட்சியில் சொல்லும்  போது  பலரும் சிரித்து விட்டோம். இந்த படம் பார்க்கையில் மதுரையில் இருந்தேன். நாங்கள் பார்த்த வரை வைகையில் தண்ணீர் அதிகம் ஓடவில்லை. கலைவாணரின் காலத்திலும்தான். ஆனால் கலைவாணர் ஓடும் என்று தன நம்பிக்கையை விதைத்து இருந்தார். இன்னும் அந்த நம்பிக்கை விதை மௌனமாய் ஏதோ திரை சுருளுக்குள் சுருண்டு கிடக்கிறது. மதராசபட்டினம் படம் பார்த்தவர்கள் பலரும் சொல்லும் விடயம் - கூவத்தில் படகு விட்டதை. இப்பக்கூட விடலாம்தான். நீங்கள் போகமாட்டீங்க அதான் விடல. அந்த காலத்து சென்னையை / மதராசை காட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்ப சென்னை எவ்வளவு அழகா இருக்கு என்கிறார்கள் படம் பார்த்துவிட்டு வருபவர்கள். என் நண்பர் சொல்வார் குழந்தையில எல்லாம் அழகாதான் இருக்கும் வயசாயடுச்சுனா .... போய்டும்பா. சென்னைக்கும் இதுதான் நடந்துவிட்டது என்று யாரும் சொல்லாதவரையில் நலம். விடுதலை பெற்ற தருணத்தில் சென்னை நல்லாத்தான் இருந்தது என்கிற எண்ணம் நிறைய பேருக்கு வருவத