Skip to main content

Posts

Showing posts from April, 2011

புத்தர் - தமிழர் - சிங்களர் - II

தமிழ் மற்றும் பாலி பற்றி பேசுகையில் எனக்கு நினைவில் வரும் ஒன்று மேக  சந்தேசதில் வரும்  ஒரு காட்சி. "அய்யா உத்தா" - என்று ஒரு வார்த்தை. அதாவது ஐயாவின் ரத்தம்.  இதை ஆர்ய புத்திரன் என்று வடமொழி பொருள் சொல்லும். ( ஆதாரம் : ஆரிய மாயையா ? திராவிட மாயையா ? - பி ராமமூர்த்தி என்று நினைவு ) புத்தம் என்பது ஒரு வகையில் ஒரு வாழும் வழி சொல்ல வந்த இயக்கம். புத்தம் என்பது தமிழ் மன்னர்களின் சைவ நெறி பரப்பல் காலத்திலும் அரச ஆதரவு பெற்றே வந்தது.  புத்த மடாலயம் ஒன்று சாவக தீவின் அரசனால் நாகபட்டினத்தில் கட்டப்பட்டது  - ராஜராஜ சோழனின் அனுமதியின் பெயரால். சமண கோயில் ஒன்றை ராஜராஜ சோழனின் சகோதரி கட்டியுள்ளார். புத்தம் மதத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் பல்லவர்களுக்கு நிறைய உண்டு. சிம்ஹா வர்மா பல்லவன் என்கிற பல்லவன் ஒருவனின் பேரனோ என்று போதி தர்மர்  என்று என்னவும் வழி  உண்டு. முதன் முதலில் புத்தம் சார்ந்த மத சின்னங்கள் தமிழ் மண்ணில் தோன்றி இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. தமிழ் கடவுள் முருகனின் திரு ஆலயமாக புத்த மதத்தினர் நிறுவிய கோயில்தான் திருப்பதி என்பதும் எங்கோ படித்த ஞாபகம்.  புத்தர் தமிழ் மண்

புத்தர் - தமிழர் - சிங்களர் - I

தமிழ் மண்ணாகட்டும் வேறு எந்த மண்ணாகட்டும் வரலாறுகள் நடுநிலை தவறுவது என்பது இயல்பு. உண்மையான வரலாறு என்பது கிட்டத்தட்ட உண்மையாக இருப்பது இல்லை. அதற்காக வரலாறுகள் வெறும் கட்டுகதையாக - வெறும் புதினமாக இருக்க இயலாது.  தமிழ் மக்கள் திரளில் வணிகர்களில் பெரும்பான்மையினர் ஒரு நிலையில் சமணர்களாக இருந்து இருக்கலாம் என்றும் பின் அவர்கள் சைவர்களாக மாறி இருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு.  இலங்கையை பற்றிய  வரலாறு தமிழ் நாட்டு தமிழர்களுக்கு பெரிதும் தெரிவதில்லை. தங்கள் தமிழ் நாட்டு வரலாற்றை தெரிந்து கொள்ளும் நிலை  தமிழர்களுக்கு வாய்த்து  இருந்தும் அதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.  புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது வரலாறு. அவர் நாகதீவில் இருந்த தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது சிலரின் கருத்து. இந்த நாக தீவு இன்றைய இலங்கையின் ஒரு பகுதி என்பது கணிப்பு. புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்த போது அவர் என்ன மொழியில் பேசினார் என்பது ஆய்வுக்கு உரியது.  இயக்கர்கள் ( யட்சர்கள் ) மற்றும் நாகர்கள் இடையே இருந்த எல்லை தகராறு புத்தர் பேச்சுவார்த்தையால் தீர்ந்தது என்கிற கதை கூட உண்டு. நாகர்கள் பற்