Skip to main content

Posts

Showing posts from June, 2010

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 8

க ரும் பாறை கருனைன்றி என் கண்களுக்கு முன்னால். அதில் அந்த சேலை தலைப்பு ரத்தக்கறையுடன். என் இதயம் என்னிடம் இல்லை. மெல்ல அதன் அருகில் சென்றேன் சேலை தலைப்பை எடுத்தேன். "மாட.....சாமி......" - நான் அலறினேன். காடு முழுக்க அது எதிரொலித்தது. நெஞ்சு வெடிக்க கதிரினேன். என் கை துப்பாக்கியை எடுத்து வானம் நோக்கி சுட்டேன். வேறு என்ன செய்ய முடியும் அருகில் இருப்பவர்கள் எல்லாம் எங்களவர்கள். எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். அவர்கள் பார்வையில் அதிர்ச்சி இருந்தது. என்னை விட அவர்கள் எல்லோரும் ஒரு அடி தள்ளியே இருந்தனர். நான் அங்கு வேதனையின் வலியில் துக்கத்தின் விழிம்பில் நின்று கொண்டிருந்தேன். என் கால்கள் வலு இழந்துகொண்டிருந்தன. நான் அந்த கரும்பாரையில் அவளுடைய சேலை தலைப்புடன் அமர்ந்தேன். அருவி என் கன்னத்தில் அறைந்தது. இந்த நதி அவளுக்கு நடந்த கொடுமையை பார்த்திருக்கும். நான் கண்களில் வைத்துக்கொண்டேன் அந்த சேலை தலைப்பை. வானத்தை பார்த்தேன். சூரியன் உச்சியில் இருந்தான்.நெஞ்சுக்குழிக்குள் அந்த நினைவுகள் விழுந்தன. அவளை நான் முதன் முதலில் பார்த்த நாள். எங்கள் திருமணம் ஒரு நிச்சயக்க

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 7

நா ன்  சத்யா. எங்கள் திருமண வாழ்வின் மிக பெரிய துயரம் அது. கட்டியவளை   ஆறே மாதங்களில் பறி கொடுத்து விட்டு நிற்கிறேன். கட்டியவளை காப்பாற்ற முடியாத ஆண்மகன் நான். இந்த செய்தியை சொன்னவுடன் பெருமாளும் மற்றவர்களும் மௌனமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இருட்டு காட்டில் நாங்கள் புரியாமல் நின்று கொண்டு இருந்தோம். என்ன செய்வது ? எங்கள்தேடலில் எங்கும் அவள் கிடைக்கவில்லை. இருட்டு  காட்டுக்குள் குருட்டு பூனை திருட்டு மனிதர்களை தேடி அலைந்தால் இது தான் நடக்கும். விடிந்து விட்டது. சில காவலர்களுக்கு தூக்கம் கண்களில் ஆட்சி செய்ததது. எங்கள் படை குடில் அமைத்து கொண்டது. தூங்கினோம். நான் இந்த வேட்டைக்குத்தான் வந்தேன் ஆனால் தற்போது லட்சியம் மாறி உள்ளது. பறவைகள் இறை தேட பறந்தன. கதிரவன் பூமிக்கு வணக்கம் சொன்னான். இப்போதுதான் சிலர் தூங்கினர். தூக்கம் எனக்கு வரவில்லை. தொலைத்து நான். அழைத்து வந்தது தொலைத்து விடவா ? கண்களின் ஓரத்தில் கண்ணீர் சம்மனமிட்டது. ஒரு சிறுமி சுள்ளி போருக்க வந்தாள். குடில்களை பார்த்தவுடன் ஓடினாள். அவளோடு ஒரு இளம் பருவ மங்கை.இருவரும் இந்த மலை வாழ் மக்கள். கருதமேநியினர். நான் ஓடி

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 6

அட! அவன் அல்லவா  இவன் ? மனதுக்குள் வெடி வெடித்தது. இவன்தான் மாடசாமி. இரவின் மடியில் படுத்து உறங்கியது எனக்கே தெரியாது. முகத்தில் கதிரவன் ஒளியை காய்ச்சி ஊற்றிக்கொண்டிருந்தான். கண் விழித்தேன். பாறைகளுக்கு நடுவே நான் படுத்து உறங்கிகொண்டிருந்தேன். எழுந்து பார்த்தால் யாரும் இல்லை. ஓடி விடலாம் என்று நினைத்தால். படுபாவி அவன் வந்து நின்றான். "என்ன சாப்புடுவீக ?" - அவன் முரட்டுதனமாய் கேட்டான். "என்ன ஏன் கடத்தின ?" "அங்கனக்குள்ள தண்ணியும் சோறும் இருக்கு. சாப்புடுங்க" சொல்லிவிட்டு போய் விட்டான். என்னை கட்டி போடவில்லை. மிரட்டவில்லை. ஆனால் அவனுக்கு தெரியும் நான் தப்பிக்க முடியாது என்று. அவன் ஆட்கள் எங்கும் இருப்பார்கள். நான் எதுவும் பண்ணமுடியாது ஆனால் சத்யா எப்படியும் என்னை காப்பாற்றுவார். அருவி பாறைகளில் மோதி கூச்சல் இட்டுக்கொண்டு இருந்துது. என் மீதும் தண்ணீர் துளிகள் விழுந்தன. வயிறு  கிள்ளியது. சாப்பிட நினைத்தது.சாப்பாட்டுக்கு பக்கத்தில் பல்பொடி.பல் விளக்கினேன்.  சாப்பிட மனமில்லை. போலீஸ் ஜீப்புகள் வனப்பகுதிக்குள் என்னை தேடி சுற்றிகொண்டிருக்கும். நான

கராடே கிட்: சீனமும் அமெரிக்காவின் வலியும்

வெள்ளி மாலை இந்த திரைப்படம் செல்வது என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தோம். ஏற்கனவே வந்த கராடே கிட் படங்களை பார்த்தவன் என்பதோடு மட்டும் அல்லாமல் - ஜாக்கி இருக்கிறார் என்பதாலும் - இந்த படம் நாங்கள் பார்க்க வேண்டிய பட்டியலில் வந்து இருந்தது. மாலை நேர மயக்கத்தில் - வாரக்கடைசியின் துவக்கத்தில் திரைப்படம் பார்ப்பது மகிழ்ச்சி தருவது. நாங்கள் திரை அரங்கம் நோக்கி பயணித்தோம். திரை அரங்கில் கூட்டம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருந்தது. திரையில் படம் ஆரம்பிக்கையில் என் கண்களில் விழுந்த ஒன்று - படம் தயரிதவர்களில் ஒருவர் வில் ஸ்மித். அமெரிக்காவை பிரதிநிதுவபடுத்தும் மக்களில் நம் வண்ணத்தோடு ஒத்து செல்லும் இந்த ஆப்ரிக்க அமெரிக்கர்கள் நிறைய. நம்மவர்களும் இப்போது அமெரிக்க பிரதிநிதிகள் ஆகிவருகின்றனர். திரையில் படம் விரியும் போதே - நாயகனின் ( சின்ன பயங்க  ) தந்தை மரணடைந்துவிட்டார் என்பது வெகு நேர்த்தியாக சொல்லப்பட்டுவிடுகிறது. அப்போதே சரன்யவோ, மனோரமாவோ, சுஜாதாவோ தான் நாயகனின் தாய் என்று மூளை நினைக்க - தாயாக வேறு ஒருவர் வர - நாம் பார்ப்பது இங்கிலீஷ் படம் என்று மூளை சொன்னது. சீனாவிற்கு நாய

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 5

எ ன் பெயர் பைரவி. நான் சத்தியமூர்த்தியின் மனைவி. நாங்கள் அந்த நாட்களில் தேனீ பகுதிக்கு சென்றோம். அந்த வெள்ளம் நிறைந்த காட்டு மலை பகுதியில் எங்கள் வண்டி பயணித்த போது இவர் இறங்கிஏதோ கத்திக்கொண்டு இருந்தார். நான் பயத்தில் உறைந்து இருந்தேன். துப்பாக்கி சூட்டுக்கிடையில்  எங்கள் பயணம் இருந்தது. எங்களுக்கு என்று மிக அழகான ஒரு வானமும், வனமும் அதன் அருகில் ஒரு வீடும் இருந்தது. மென்மையான ஓட்டி தரை. நெஞ்சம் கவரும் சூழல். இங்குதான் எங்கள் வாசம் என்கிற போது மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன. எங்கள் வாழ்வின் தேனிலவு இது என்று இதயம் சொன்னது. ஆனாலும் துப்பாக்கியும் கையுமாக இவர் சுற்றினார். தடினமான ஜெர்கின் - தடினமான பூட்ஸ் என்று எல்லாம் இவர் இதயம்  போலவே. ஆனாலும் இவர்என் செல்ல காதலர். அந்த நாள் எனக்கு நிறையவே  ஞாபகத்தில் உள்ளது. இரவு பொழுது. நிலவு இந்த மண்ணில் குளுமை தந்துகொண்டிருந்தாள். பொன்னிற நிலவு சிதறிய நட்சத்திரங்களும் ஒரு அழகிய ஓவியம் போல இருந்தது. இவர் காவல்நிலையத்தில் இருந்தார். வருவதற்கு தாமதம் ஆகும் என்று தொலை பேசி அழைப்பு விடுத்து சொன்னார். இவர் தொலைபேசி அழைப்பு விடுத்து சொன

தமிழர்கள் யார் ?

அஸ்கோ  பர்போலா  அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழை பற்றியும் வரலாற்றை பற்றியும் எழுத ஒரு வாய்ப்பு - இல்லாவிட்டால் ஒரு நிலை வந்தமயில் எனக்கு மகிழ்ச்சியே. தமிழர்கள் யார் ? தமிழ் மொழி எப்படி உருவாகியது? ஏன் தமிழ் என்கிற வார்த்தை திருக்குறளில் இல்லை ? தமிழர்கள் குமரி கண்ட மனிதர்கள். கடலில் குமரி கண்டம் அழிந்துவிட்டது - இது ஒரு நம்பிக்கை. நான் நமக்கு தெரிந்த விடயத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன். அனகோண்டா - இது ஒரு தமிழ் சொல். ஆணை கொண்டான் என்கிற தமிழ் சொற்களின் இணைப்பே இது. அப்புறம் அதிகம் பேசப்படும் மாயன் நாட்காட்டி - மாயன் அல்லது மயன் என்பவர்கள் இலங்கையை வடிவமைத்த அல்லது இலங்கையில் தொழில் புரிந்த வர்த்தக குழு. இராமாயணத்தில் என்று நினைக்குறேன் - நீலன் மாயன் என்கிற இருவரின் திட்டத்தில் உருவானதே பொன் இலங்கை என்று சொல்லப்படும் இலங்கையின் ஒரு பகுதி என்கிறது. இந்த மாயன்கள் பின்னர் மெக்ஸிகோ பயணித்தமை பற்றி viewzone .com என்கிற ஆங்கில இணையதளத்தில் படித்தேன். தமிழின் பயன்பாடு இவர்களை போன்ற வர்த்தக குழுக்களால் அதிகம் பரப்பப்பட்டது. இவர்கள் தங்கள் வர்த்தக மொழியாக தமிழையே பயன்படுத்

ஒரு அரவமில்லா காட்டில் .... பகுதி 4

பசுமை காடுகளின் நடுவில் எங்கள் தேடுதல் வேட்டை ஆரம்பமானது. என் கை துப்பாக்கி என் கைபிடிக்குள் இருந்தது. தடினமான ஜெர்கின் என் மீது இருந்தது. கல்லும் முள்ளும் சூழ்ந்த அந்த இடத்திற்குள் என் கண்கள் துருவி துருவி தேடியபடி இருக்க நான் பயணித்தேன். எனக்கு பின்னாடி எங்கள் ஆட்கள். நதி சலசல என ஓடிக்கொண்டு இருந்தது. எங்களை யாரும் தாக்க வில்லை. நாங்கள் அந்த வெட்ட வெளிக்குள் நுழைந்தோம். என் கை துப்பாக்கி வானம் பார்த்து வெடித்தது. கூட்டம் சலசலத்து. அது ஒரு கோயில் திருவிழா. ஒரு நிமிடம் நிசப்பதம். சுற்றிய ராட்டினங்கள் நின்றன. "மாடசாமி - ஓடி ஒழியாத! நாங்க வலைச்சிட்டோம் " - நான் கத்தினேன். கூட்டம் மௌனம் காத்தது. இளைய பெருமாள் என் பக்கத்தில் வந்தான். அந்த விஷயத்தை சொன்னான். இந்த முறையும் ஏமாற்றம். தோல்வி எங்கள் தோள்பட்டைகளில் உள்ள நட்சித்திரங்கள் மாதிரி எங்கள் உடுப்பில் ஒட்டிகொண்டது. தோற்றுபோவதில் ஒரு வலி உண்டு. அதுதான் வெற்றியை நோக்கி செலுத்தும் சக்தி படைத்தது. தோற்பவர்கள் எல்லாம் வெல்வதற்கு என்னவேண்டும் என்றுதான் ஆராய்வார்கள் - ஒரு நிலையில் அவர்களுக்கு எந்த விதிமுறைகளும் கண்களுக

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 3

ம டை உடைந்து வெள்ளம் வடிவத்தை நான் பார்த்திருக்கிறேன். எங்களிடம் தப்பிக்க வழியில் சேதம் ஏற்படுத்துவதை  பார்த்திருக்கிறேன். சமூக விரோதிகளிடம் பண்பை எதிர்பார்க்க முடியாது. கெஞ்சி மன்றாடிய பலரை போட்டு தள்ளி  உள்ளோம். எங்களுக்கு தெரியும் அதெலாம் உயிர் வழியில் பிறக்கும் நாடகம் என்று. நான் எப்போதும் இறக்கபட்டதில்லை சமூக விரோதிகளுக்கு; ஆயுதம் ஏந்திய சட்டவிரோதிகளுக்கு; ரௌடிகளுக்கு. ஆனால் நான் அங்கே பார்த்தது ஒரு மிக பெரிய ஆச்சரியம். வெள்ளத்தின் நடுவே பிழை குடிகளுடன் குடும்பம் குடும்பமாய் மக்கள் வெள்ளம். வண்டியை விட்டு இறங்கினேன். என் குளிர் கண்ணாடியை கழட்டினேன். கதிரவன் மேலே இருந்து செங்குத்தாய் விழுந்தான். வட்ட வட்டமாய் அவனது கதிர்கள் வட்டமிட்டன ஒரே நேர்கோட்டில். திரும்பிப்பார்த்தேன் - பைரவி, நடுக்கத்துடன் இருந்தால் ஜீப்பில். எங்கள் வண்டியின் ஓட்டுனர் இறங்கி வந்தார். நான் அந்த நீர் வெள்ளத்தின் மேல் என் அழுத்தமான பூட்ஸ் கால்களை அழுத்தி வைத்திருந்தேன். நான் எங்களுக்கு பின்னல் வந்த ஜீப்பை வெறித்து பார்த்தேன். இந்த பகுதி இன்ஸ்பெக்டர் இளைய பெருமாள் அந்த ஜீப்பில்தான்  இருந்தார். வே

ஒரு அரவமில்லா காட்டில் ... : பகுதி 2

எ ன் நினைவு தெரிந்த நாள் முதல் நான் மற்றவர் செயலுக்கு பாராட்டு பெற்றதில்லை. அப்படி இருக்கும் போது ஒரு குற்றத்திற்கு ... என்னால் நிச்சயம் முடியாது. நான் மாடசாமியை சுடவில்லை. உங்களுக்கு மாடசாமியை பற்றி சொல்லி ஆக வேண்டும். தமிழ் நாட்டின் தேனீ மாவட்டத்தில் அவன் பெயருக்கு ஒரு பயம் உண்டு. மரியாதையும் உண்டு. மாடசாமி இதுவரை ஏழு காவல் துறை மனிதர்களை கொன்று உள்ளான். ஒரு முறை காவல் நிலையத்தை சூறை ஆடி உள்ளான். ஈவு  இறக்கம் இல்லாத மனிதன். சிலருக்கு அவன் அய்யனார் - அதாவது காவல் தெய்வம். ஆனால் காவல் துறைக்கு அவன் பொறுக்கி தலைவன்; ரவுடி ராஜா; ஆயுதம் ஏந்திய சட்ட விரோதி; தேடப்படும் குற்றவாளி. ஆனால் அவனை நான் சுடவில்லை. எனக்கு அவனை சுட்டதிற்கு ஒரு பதக்கமும் வேண்டாம். நான் அந்த சித்திரை மாதத்தின் முதல் நாளில் தொலைபேசியில் அழைக்கப்பட்டேன். அது இரவு நேரம். சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் என் வீடு. நானும் என் மனைவியும் எங்கள் சித்திரை திருநாளின் நாளின் நாளை முடித்து விட்டு இருந்தோம். எங்கள் படுக்கை அறையில் அவள் என்  அருகில் படுத்திருந்தாள். அதுவும் என் நெஞ்சில் தலை வைத்து. இன்று கோயிலுக்கு ப

ஒரு அரவமில்லா காட்டில் ...

மி க பெரிய மலை உச்சி. கீழே விழுந்தால் சாம்பல் கூட மிஞ்சாது. பச்சை பசேல் என்று அந்த மலைக்கு பச்சை கம்பளி போர்த்திவிட்ட மாதிரி காடு. கதிரவன்னின் கதிர் மலை உச்சியில் விழுந்து தண்ணீரில் விழும்போது வெள்ளியை காய்ச்சி உற்றியமாதிரி தண்ணீர் விழும். அருவி வீழும் இடத்தில் -- குருதி விழுந்தால். அதுவும் ஒரு ஆண் சிங்கம் கத்திகொண்டே விழுந்தால் ... இதயம் சுருங்கி விட்டு விரிய மறுக்கும். கண்கள் மூடுவதா   இல்லை பார்க்க நேர்ந்ததே என்றுதன்னையே சாடுவதா என்று நினைக்கும். அவன் அப்படி தான் அந்த 120  அடி உயரத்தில் இருந்து விழுந்தான். "சத்யா ..... " - விழுகிற போது என் பெயரை சொல்லிக்கொண்டே. என்னை சுற்றி ஒரு கூட்டம் இருந்தது அவனை சல்லடை என    தோட்டாக்களால் துளைக்க. குண்டுகள் பாய அந்த வீரன் என் கண்களுக்கு முன்னால் கம்பீரத்தோடு விழுந்தான். அலாரம் அடித்தது. கண்களை கசக்கிவிட்டு எழுந்தேன். எனது வீட்டில்தான் படுத்திருக்கிறேன். மணியை பார்த்தேன் - ஆறு. ஆறும் அருவியும் இனி என் வாழ்வின் நினைவலைகளில் கலந்துவிட்டவைகள். எழுந்து உட்கார்ந்தேன். என் படுக்கைக்கு பக்கத்தில் இருந்தது அந்த நாளேடு மேசையி

என் பயணங்களில் : எழுத்து அறிவித்தது!

தந்தையின் இடமாற்றங்கள் எனது கல்வியை பாத்தித்தது. எப்போதெல்லாம் இடமாற்றல் ஆணை வருகிறதோ அப்போதெல்லாம் முதல் பலி கல்வியாகவே இருந்தது. அதிலும் கல்வியின் ஆரம்ப கட்டம் அது. கணிதம் மற்றும் மொழிகளை அறிமுகம சேயும் தருணத்தில் நான் மரம் விட்டு மரம் தாவும் குரங்கு மாதிரி இடம் தாவி கொண்டிருந்தேன். என் தாய் மொழி தமிழ் - அதன் ஆரம்பம் கூட எனக்கு இப்படிதான் கிட்டியது. இடமாற்றல் பணிகளில் அம்மாவும் அப்பாவும் தீவிரம் காட்டவேண்டிய நிலை. இங்கிலீஷ் ஈ என இளிக்க தமிழ் கண்ணாமூச்சி காட்டியது. நல்லவேளை தமிழை சின்னத்திரை வழியாக நான் கற்கும் நிலை இல்லை. அப்போது இந்த தொலைகாட்சி அக்கபோர்கள் இல்லை. தமிழ் வாழ்ந்தது. பள்ளிக்கூடத்திலும் சூழலாலும் தமிழ் கற்றாலும் எழுத படிக்க கற்றுகொடுத்து பெருமை இவர்களை விட வேறு ஒன்றிற்கு உண்டு. அந்த ஆசிரியர்    காலையில் வருவார். "ஏக் காவ் மே ஏக  கிஷான்  ரகுதாத்தா" கதை சொல்லி தரும் ஆசிரியர் அல்ல அது. அது ஒரு நாளேடு. அதன் பெயர் தினமணி. தினமணி மூலம்தான் நான் ஆரம்பகாலத்தில் எழுத கற்றுக்கொண்டேன் . எழுத்து அறிவித்தது தினமணி தமிழ் மண்ணிலேயே நிறைய இப்படி பிரச்சனை இருக்கும

இராவணன் : பச்சை வேட்டையா ? வீரப்பன் கதையா ?

மணிரத்தினம் அவர்கள் ஒரு ரவனானயணம் செய்து உள்ளார். அவரிடம் நிறைய எதிர்பார்ப்புகள் உண்டு. இந்த படத்தை பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன் ஒன்றை சொல்லி விடுகிறேன் - நான் திரைவிமர்சகன்  இல்லை. இது வரை எழுதியதும் இல்லை. மணி ரத்தினம் படங்களுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை உண்டு. ரோஜா வந்த பின்னர் இந்தியாவின் எல்லா மொழிபடங்களின் வில்லன்களும் பாகிஸ்தானில் இருந்தே வந்தார்கள் அல்லது இருந்தும் வந்தார்கள். மற்றபடங்களினால் பெரிதும் பின்விளைவுகளை ஏற்படுத்தமுடியாவிட்டலும்  சில பாதிப்புகளை ஏற்படுத்த முடிந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கு பின் இலங்கையின் பிரச்சனை சிலாரல் நினைக்கப்பட்டது. இன்றுதான் ராவணன் பார்த்தேன். இந்த படம் இந்தி மொழியில் நிறையவே தோற்க வாய்ப்புகள் உண்டு. அங்கே உட்காரும் போதும் எழுந்திருக்கும் போதும் கூட ராம் ராம் என்று சொல்வார்களாம். ராம் என்பதுதான் அவர்களின் செயல்பாடு. ஆராம் என்றால் ஓய்வாக இருக்கும். ராவனனில் மணிரத்தினம் சில விடயங்களை சொல்ல முடியாமல் அல்லது சொல்ல விரும்பாமல் தவிர்த்து உள்ளார். இராவணன் நல்லவன் என்பதை மட்டும் திரை படம் பார்பவர்கள் கொஞ்சம் ஒப்புக

என் பயணங்களில்: தமிழும் இங்கிலீஷ் அய்யாவும்

என்னுடைய  பள்ளி இறுதி தருணங்களில் என்றாலும் நான்கு வருடம் அந்த பள்ளியில்தான் படித்தேன். ஒழுங்காக ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில்லை என்று சிலர் சொன்னாலும் - அவர்கள் நல்லபடியாகவே நடத்தினர். இல்லை என்றால் நான் எல்லாம் எப்படி முன்னேறுவது? எங்களுக்கு ஒரு ஆங்கில ஆசிரியர் வருவார். அதிகம் பேச மாட்டார். பாடம் எடுத்துவிட்டு கெத்தோடு போய் விடுவார். அவரை பற்றி பதிவு செய்ய ஒரு காரணம் உண்டு. தமிழில் எல்லா ஒலி குறிப்புகளும் உண்டு என்று சொன்னார். ஆனால் அவை நன்முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்று. ஒரு நாள் "G " என்கிற ஆங்கில எழுத்து இன்னும் தமிழில் உள்ளது என்றார். அதற்கு அவர் சொன்ன வார்த்தை தங்கம் - இதில் "G " அல்லது " Gha " உள்ளது என்று சொன்னார். உண்மைதான் அப்புறம்தான் நானும் அதிகம் கவனிக்க ஆரம்பித்தேன். சென்னையை சேர்ந்த இன்னொரு  நபரை நான் அமெரிக்க மண்ணில் சந்தித்த போது - இன்னும் கொஞ்சம் அதிகமாய் தெரிந்து கொண்டேன். எங்களுடன் இருந்த ஒரு வேற்று மொழிக்காரர் வடமொழி பெருமை பற்றி சொன்னார். நாங்கள் கொஞ்சம் மென்மையாய் எதிர்த்தோம். இந்த மனிதர் வந்தார். வேற்று மொழ

அய்யா TVR அவர்களின் நூல் வெளியீட்டு விழா. கலந்து கொண்ண்டு சிறப்பியுங்கள்.

கீழே இருக்கும் தொடுப்பை பயன்படுத்துங்கள் - மேலும் விவரங்களுக்கு 'கலைஞர் என்னும் கலைஞன்' - புத்தக வெளியீட்டுவிழா

என் பயணங்களில்: ஊரை சொல்ல மாட்டேன்

எப்போதும் எங்களுக்கு இடமாறுதல்கள் புதிய அனுபவங்கள் பலவற்றை கொண்டு வந்து உள்ளன. . எங்களின் வாழ்வில் நல்ல அனுபவங்கள் பல இந்த பயனத்தில்  உண்டு - நாங்கள் தமிழ் மண்ணின் பூர்வ குடிகளை ஒரு முறை பார்த்தோம். அவர்களை பண்பாடு அற்றவர்கள் - பட்டிகாட்டார்கள் - என்று யாரவது இன்னமும் சொல்லி கொண்டுதான் இருக்கின்றனர். இது வருத்தத்திற்கு உரியது. அந்த உள்வாங்கிய சிற்றூரின் உள்ளே எங்களுக்கு வங்கி அமைந்து இருந்தது. அப்பாவிற்கு எங்களை எப்போதும் கூடவே அழைத்து செல்லும் வழக்கம்.இதனால் என் பள்ளி கல்வி கெட்டாலும் - உலக கல்வி விரிவடைந்தது. எங்களுக்கு அந்த வங்கி கட்டடத்தின் உரிமையாளர் அவர்கள்  வீட்டிலேயே வாடகைக்கு ஒரு வீடு கிடைத்தது. நாங்கள் தான் அங்கே தங்கினோம்.மற்றவர்கள் பக்கத்தில் இருக்கும் நகரத்தில் தாங்கிக்கொண்டனர். அந்த வீட்டின் ஒரு பகுதியில் வீட்டுக்காரர்கள். இன்னொரு பகுதி வாடகை பகுதி - எங்கள் இடம். எப்போது எது சமைத்தாலும் எங்களுக்கும் கொண்டு வந்து தருவார்கள். அவர்கள் மிகவும் வெள்ளந்தியான மனிதர்கள். ஒரு நாள் அவர்களின் பேச்சின் போது சுவாரசியமாக நிறைய விஷயம் சொல்லினர். வேட்டையாட போவது பற்றி. வே

என் பயணங்களில்: வெள்ளையான பெண்களும் நானும்

வழக்கம் போல அப்பாவிற்கு இடமாறுதல் ஆணை வந்திருந்தது. கொஞ்சம் காலம் கடந்தேனும் - எங்களை அப்பா அந்த ஊருக்கு அழைத்து போகவேண்டி இருந்தது. முதல் நாளில் இருந்தே அந்த ஊர் ஒரு புதிர். அவர்கள் பேசுகிற தமிழுக்கும் எங்கள் தமிழுக்கும் நிறைய வேறுபாடு. அவர்கள் வாழும் வாழ்க்கைக்கும் எங்கள் வாழ்க்கைக்கும் நிறையவே வேறுபாடு.

என் பயணங்களில் : வெள்ளம் வடிந்த பின்!

அப்போது மதுரையில் நான் பள்ளி படிப்பு படித்துக்கொண்டிருந்தேன். மதுரையில் வைகை ஓடுகிறது. இது சொல்லி தெரியவேண்டியதில்லை. அதை போலவே - அதில் தண்ணீர் அதிகம் ஓடுவதில்லை என்பதும் சொல்லி தருவதில்லை.

என் பயணங்களில் : இன்றய செய்தியும் நேற்றைய சாத்தூரும் !

என் அப்பா வங்கியில் வேலை பார்த்த காரணத்தால் எங்கள் வாழ்க்கை பயணத்தில் தமிழ் மண்ணின் பல பகுதிகளை காண முடிந்தது. இன்றைக்கு படித்த ஒரு செய்தி என்னை கொஞ்சம் பழைய காலத்திற்கு அழைத்து சென்றது.

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

த நா வரலாறு : திப்புசுல்தான் ஒளிந்திருந்த திண்டுக்கல்

இந்த இடுக்கயோடு த நா வரலாற்றை கொஞ்சம் இடை நிறுத்தலாம் என்று எண்ணம். இன்னும் நிறைய எழுத வேண்டி உள்ளது.ஆனால் அதற்கு இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் ஆழமாய் எழுத வேண்டும்.

த நா வரலாறு : குமரி கண்டத்தில் இருந்த ஊரா திருநெல்வேலி ?

திருநெல்வேலி - இந்த ஊருக்கு தமிழ் வரலாற்றில் மிக பெரிய பங்கு இருக்க வேண்டும். தற்போதைய திருநெல்வேலி என்கிற ஊர் குமரி கண்டத்திலோ அல்லது இந்தியாவின் வேறு ஒரு நிலா பகுதியிலோ உள்ள ஊர் ஒன்றின் காரணமாக பெயர் இடபட்டிருக்கலமோ என்கிற ஆய்வு ஒன்றை படிக்க நேர்ந்த தருணம் அது. தற்போதய பீகாரின் தலைநகரம் பாட்ன என்று அழைக்கபடுகிறது. இதனுடைய இன்னொரு பெயர் அல்லது வரலாற்று பெயர் பாடலிபுத்திரம். தமிழ் மண்ணின் பூம்புகாரை போல் ஒரு காலத்தில் பெருமையோடு விளங்கிய ஊர். அதன் பெயர் இன்னொரு ஊருக்கும் சூட்டப்பட்டது என்கிறார் ரா பி சேது பிள்ளை. இது பள்ளியில் படிக்கிற பொது படித்தது. ஒரு தலைவன் பெருமையோடு விளங்குகிறான் என்றால் - அவன் பெயர் பிளயகளுக்கு சூட்டப்படும். என்னோடு படித்த நண்பரின் பெயர் கார்ல் மார்க்ஸ் - ஆனால் அவர் கிருத்துவர் அல்ல. கார்ல் மார்க்ஸ் மார்க்ஸ் மதங்களுக்குள் சிக்குகிற மனிதர் அல்ல. நிரஞ்சன் ஜார்ஜ் மார்க்ஸ் என்று ஒரு நண்பர் படித்தார் - அவரும் கிருத்துவர் இல்லை. இது நிலங்களுக்கும் பொருந்தும். வடக்கேயும் ஒரு காசி - தெற்கேயும் ஒரு காசி. இந்த ஒப்பீடுதான் திருநெல்வேலியின் பெயரிலும் ஒளிந்து உள்ளத

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள

த நா வரலாறு: ஊமைத்துரை கட்டிய கோட்டை ?

வரலாற்றை படிக்கிற போது - வெள்ளைய அதிகாரிகள் பெருமையோடு குறிப்பிடும் ஒரு கோட்டை -  ஊமைத்துரை கட்டிய கோட்டை. ஊமைத்துரை  ஒரு வாரத்துக்குள் காட்டி விட்டதாகவும் அதை பார்த்து வியந்ததாகவும் வெள்ளையர்கள் பதிவு செய்கிறார்கள்.

த நா வரலாறு: இந்தியாவில் வரி வசூலிப்பு outsourcing

மருத நாயகத்தின் வரலாற்றை எழுதுவது இந்த இடுகையின் நோக்கம் அல்ல. அதற்கு திரு கமல் ஹாசன் அவர்கள் உள்ளார்கள்.

த நா வரலாறு : சோழன் ஆண்ட மண்ணில் ....

தமிழ் மண்ணின் முதலாளித்துவத்தின் கோர முகம், சதி முகம் வெளிப்பட்ட இடம் கீழவெண்மணி. அதை அவன படுத்தும் முயற்சியில் ஏற்கனவே பலரும் முயன்றிருந்தாலும் - நாங்களும் கொஞ்சம் முல்கிறோம். கீழவெண்மணி என்பது தற்போதைய நாகை மாவட்டத்திலும் முன்னாலய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலும் உள்ள ஒரு சிறிய ஊர். இந்த ஊரில் ஒரு பெரும் வேட்கதிருக்கு உரிய நிகழ்வு ஒன்று நடந்தது. அரை படி கூலி உயர்வு கேட்ட அப்பாவி தொழிலாளிகள் - கூலி உயிர்வு கேட்ட காரணத்திற்காகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்கிற காரணத்தாலும் உயிருடன் கொளுத்தப்பட்டனர். இந்த வரலாறு இன்றும் நம் வரலாற்று புத்தகங்களில் இல்லை. மாறாக நம் பெருமை பேசும் பல விடயங்கள் உண்டு. அறியாதவற்றை சொல்ல்வதே எண்ணம் என்றாலும் - எங்களுக்கு முன்னாள் பலர் இதை ஆவன படுத்தி உள்ளனர். "இனி" என்கிற தன் புதினத்தில் திரு மேலான்மை பொன்னுசாமி இதைதான் மைய கருத்தாய் வைத்து எழுதினார் என்று என் பேராசிரியர் சொல்லுவார். ராமயவின் குடிசை இதன் ஆவண வடிவமே. இயன்றால் வாங்கி பாருங்கள். நாங்களும் இயன்றால் பதிவேற்ற முயற்சிக்கிறோம். உங்களுக்கு வேறு ஒரு இனைய பக்கத்தை அறிமுக படுத்த உள்ளேன்

த நா வரலாறு : சித்தன வாசல் சித்ராஞ்சலி

தமிழ் மண்ணின் பெருமை பற்றி என்னுடைய வேற்றுமொழி நண்பர் ஒருவர் சொல்லும்போது.உங்கள் மண்ணை எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் கலைகளுக்கு மிகுந்த ஆதரவு தருகிறீர்கள்.சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி! திருவைஆற்றில் இசை விழா! சென்னையில் மார்கழி இசை விழா. பெருமையோடு சொல்லி விட்டு - காப்பாற்றுங்கள் இவற்றை என்று தட்டி கொடுப்பார். இப்போது அவரிடம் பேசும் வாய்புகள் குறைவு. அவர் ஒரு சிற்ப வேலை நிபுணர். மல்லையில் சிற்பங்களுக்கு - சிற்ப விற்பன்னர்களுக்கு ஒரு மாதத்தை ஒதுக்கி ஆதரவு - விழா தரலாம்.அரசுதான் செய்யவேண்டும் என்று இல்லை - இதை சிற்ப நிபுணர்களே செய்யலாம். அப்படி பார்க்கும் போது - கண்ணில் வந்து நிழல் ஆடியது சித்தன்னவாசல். சமண சமயத்தின் கடைசி எச்சமாய் நிற்கும் வரலாற்று ஆதாரம். சித்தனவாசல் - அஜந்தா எல்லோர குகைகளுக்கு அடுத்த நிலையில் நிற்கும் ஒரு கலை தளம். சிற்பங்கள் தமிழ் மண்ணின் பெருமை என்றால் வண்ண ஓவியங்களின் பெருமை சொல்லி நிற்பது சித்தன்னவாசல். சித்தன்னவாசல் மாதிரியான பிற சித்திர தளங்கள் எங்கே போனது என்று தெரிய வில்லை. சித்தன்னவாசல் மண்டபங்களில் படுத்துறங்கும் வகையில் பாறை படுக்கைகள் உள்ள

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.