Bookmark and Share
தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Saturday, June 26, 2010

தமிழர்கள் யார் ?

அஸ்கோ  பர்போலா  அவர்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழை பற்றியும் வரலாற்றை பற்றியும் எழுத ஒரு வாய்ப்பு - இல்லாவிட்டால் ஒரு நிலை வந்தமயில் எனக்கு மகிழ்ச்சியே.

தமிழர்கள் யார் ? தமிழ் மொழி எப்படி உருவாகியது? ஏன் தமிழ் என்கிற வார்த்தை திருக்குறளில் இல்லை ?

தமிழர்கள் குமரி கண்ட மனிதர்கள். கடலில் குமரி கண்டம் அழிந்துவிட்டது - இது ஒரு நம்பிக்கை.

நான் நமக்கு தெரிந்த விடயத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன். அனகோண்டா - இது ஒரு தமிழ் சொல். ஆணை கொண்டான் என்கிற தமிழ் சொற்களின் இணைப்பே இது.

அப்புறம் அதிகம் பேசப்படும் மாயன் நாட்காட்டி - மாயன் அல்லது மயன் என்பவர்கள் இலங்கையை வடிவமைத்த அல்லது இலங்கையில் தொழில் புரிந்த வர்த்தக குழு.

இராமாயணத்தில் என்று நினைக்குறேன் - நீலன் மாயன் என்கிற இருவரின் திட்டத்தில் உருவானதே பொன் இலங்கை என்று சொல்லப்படும் இலங்கையின் ஒரு பகுதி என்கிறது.

இந்த மாயன்கள் பின்னர் மெக்ஸிகோ பயணித்தமை பற்றி viewzone .com என்கிற ஆங்கில இணையதளத்தில் படித்தேன்.

தமிழின் பயன்பாடு இவர்களை போன்ற வர்த்தக குழுக்களால் அதிகம் பரப்பப்பட்டது. இவர்கள் தங்கள் வர்த்தக மொழியாக தமிழையே பயன்படுத்தினர். அப்போதெல்லாம் தமிழர்கள் என்பதை விட அந்த குழுக்களின் பெயரே பயன்பாட்டில் இருந்து வந்து உள்ளது. திருக்குறளின் காலகட்டத்தில் தமிழ் என்கிற வார்த்தை இருந்ததா என்பதே ஒரு ஆய்வுக்குஉரியது.

தங்களுக்கு என்று ஒரு மொழி உருவான தருணத்திலும் தாய்லாந்த் போன்ற நாடுகளில் ஆட்சி மொழி தமிழே! இந்தோனேசியா தமிழ் மண்ணாகவே இருந்து வந்து உள்ளது.

சிந்து சமவெளி:  - அஸ்கோ  பர்போலா  அவர்கள் இது தொடர்பாக நிறைய ஆய்வு செய்து செய்திகள் வெளி இட்டு உள்ளதே தற்போதைய சலசலபிற்கு காரணம்.

சிந்து சமவெளி பற்றி ஏற்கனவே திரு மகாதேவன்  சொல்லி வந்துள்ளதை படித்து உள்ளேன். தினமணியில் அவரது ஆய்வு கட்டுரைகள் படித்து உள்ளேன். முரு மற்றும் மீன் ஆகிவை. தமிழில் தற்போதும் வழக்கில் இருந்து வரும் வார்த்தைகளை குறிக்கின்றன. இவை சிந்து சமவெளியில் கிடைக்கபட்டவை.

இன்று பக்ஷ்டூங்கள் என்று தங்களை அழைத்து கொள்ளும் பாகிஸ்தானியர்கள் மக்கட் குழு தங்களை திராவிடர்கள் என்றே பதிவு செய்கின்றனர்.

சிந்து சமவெளியில் இருந்த இறைவனின் பெயர் பசுபதி நாதர். அதிகம் தமிழ் கொண்டுள்ள பெயர் இது. இவரை பசுபதீஸ்வரர் என்றும் சொல்கிறார்கள்.
பசுவின் அதிபதி. அதிபதி என்பவன் உடையவன் என்று பொருள் - இதுவே பின்னர் கணவன்களுக்கு. திருவின் உடையவன் - திரு பதி.

இந்தியாவின்  கல்வி அலைவரிசையில் சிந்து சமவெளி பற்றிய ஒரு பாடம் நடத்தப்பட்ட போது - வடமொழியோ தேவநகரி மொழிகளோ எங்கே இல்லை என்றே பதிவு செய்த்தனர். திராவிடமந்தான் மொழியாக இருக்கலாம் என்று சந்தேகம் கிளப்பப்பட்டது. இன்று இது பலரால் ஏற்றுகொள்ளபடுகிறது.

தமிழர்கள் யார்:

இதுதான் முதலில் அதிகம் பார்க்கபடவேண்டியது. பல குழுக்கள் தமிழை பேசினர். ஆனால் அவை கொஞ்சம் கொஞ்சம் வேறுப்பட்டே இருந்தன. அப்புறம் அவர்களின் எழுத்துவடிவங்கள் வெவ்வேறானவை.

பல்லவ வட்டெழுத்து முறையில் இருந்தே தன் வரி வடிவத்தை தாய் ( தாய்லாந்தின் ) மொழி எடுத்துக்கொண்டது.

மூர்கள் என்று சொல்லப்படும் மொரக்காவை சார்ந்தவர்கள். ஐரோப்பியர்கள்; கிரேக்கர்கள்; எகிப்தியர்கள் என பல வர்தககுளுக்கள் அவர்களின் மொழிபயன்பட்டை அதிகபடுத்தியவை.

தமிழர்கள் இது போன்றே இருந்து வந்து உள்ளனர். இப்ன் பட்டுடா என்கிற அரேபியாவின் வழிப்போக்கன் கேரளம் வந்தது இன்னும் வரலாற்றில் உண்டு. ஆனால் பட்டுடவின் மரக்கலம் உடைந்த தருணத்தில் அவனுக்கு மன்னன் உதவில்லை என்றும் உதவினார் என்றும் பதிவு செய்யபடுகிறது.
வழக்கம் போல் BBC வாயிலாகவே இந்த உண்மை அறிய கிடைத்தது.

தமிழர்களின் வணிக பொருள் திரவியங்கள். அதில் மிளகும் அடக்கம். மிளகு தமிழ் மண்ணில் மட்டுமே  ( கேரளமும் ) விளைந்ததாக பதிய படுகிறது.

ஏசுவின் பிறப்பின் தருணத்தில் ஏசுவை காண வந்தது திரவிய வர்தர்கர்கள் - கிழக்கில் இருந்து வந்தவர்கள் - என்று நம்பபடுகிறது. இது உண்மையாக இருந்தால் - அவர்கள் தமிழர்கள் ஆக இருக்கலாம்.

சுமேரியர்களுடன் தமிழர்கள் தென் அமெரிக்காவில் கலந்துகொண்டனர் என்று சொல்லப்படுகிறது. மேசிகோவில் உள்ளவர்கள் அந்த மண்ணின் மனிதர்களைத்தான் திருமணம் செய்து கொண்டனராம். இது அங்கே விதி போல் கடைபிடிக்கபட்டிருக்கலாம். வெள்ளையர்கள் வந்த தருணத்திலும் இந்த  நிலை என்று ஒரு முறை அறிந்துகொண்டேன்.

First நேஷன்ஸ் என்று ஒரு குழு கனடா மண்ணில் உண்டு - இவர்கள் பூர்விகர்களுக்கு பின்னல் வந்திருக்கலாம் - இவர்கள் வணிக குழுவாக இருக்கலாம். எனக்கு இது தொடர்பாக முழுமையாக தெரியவில்லை.

மேசிகோவின் பல நகர் பெயர்கள் தமிழ் பெயர்களின் திரிபே என்று சில ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். மலையூர் என்கிற ஊரின் பெயரே மலேசியா என்கிறது ஆங்கிலர்களின் ஆய்வு.

ஆக வெள்ளையர்களின் வரவிற்கு முந்தய வரலாற்றில் தமிழர்கள் என்று எந்த நிலையிலும் தமிழர்கள் அறியப்படவில்லை அவர்களின் குழு பெயரிலே அறியப்பட்டனர். மாயன்கள் - அபோர்கின்கள் - ஈழர்கள் - வேட்டுவர்கள்  - நாகர்கள் - யட்சர்கள் ( இந்த பெயர் பற்றி ஆய்வு செய்வது நலம் ) என்று நிறைய குழுக்களாகவே தமிழன் அறியப்பட்டான். தமிழனாய் அல்ல. இன்றும் தமிழர்களை குழு பெயர் சொல்லி குறிக்கும் வழக்கம் மலையாள பூமியில்  உண்டு. பாண்டிகள் நாம் சேரர்களுக்கு.

தமிழ் மொழி எப்படி உருவானது ?:
இது மில்லியன் டாலர் கேள்வி. தமிழ் மொழியின் ஆய்வை பார்த்தால் - சிலர் தமிழ் தான் முதல் மனிதன் பேசிய மொழி என்று சொல்லி விடுகின்றனர்.
ஆதாம் என்று விவிலியத்தில் வரும் பெயர் - ஆத்மா - ஆன்மா - ஆண்மகன் என்பதன் திரிபே என்று சொல்ல்பவர்கள் உண்டு. eve  - என்று சொல்லப்படும் பெயர் என் வாழ்வே அல்லது ஏ வாழ்வே ! என்பதின் திரிபாக  இருக்கலாம். EVE என்பதை தமிழ் விவிலியம் ஏவாள் என்று பதிவு செய்கிறது. - ஆது ஏவாழ் ஆக இருக்கலாம்.

இதில் நான் முழுமையாக உடன்படுவதில்லை. காரணம் முதல் மனிதர்கள் பேசினாரா என்பதன் ஆய்வுகள் எதுவும் நம்மிடம் முழுமையாக இல்லை. அதுவும் போக ஒரு சமயபுத்தகத்தை அவர்களின் நிலையில் இருந்து வேறு நிலையில் நோக்குவது சரியானதா என்பதில் எனக்கு பல கேள்விகள் உண்டு. மற்றவர் மத நம்பிக்கையில் நாம் உள் நுழைதல் நலம் இல்லை.

ஆனால் கிருத்துவம் தமிழ் மண்ணில் முதலில் இருந்ததா ? - நாங்கள் இந்தியாவில் இறங்கியபோது கிருத்துவ வழிபாடு கேரளத்தில் இருந்தது என்று போர்டுகேசியர்கள் பதிவு செய்கிறார்கள்.

ஒரு நிலையில் தமிழ் மொழி குடும்பம் தமிழ் என்கிற மொழியாக உருவெடுத்து உள்ளது. இது ஆரம்ப காலத்தில் திராவிடம் - திரவிய மனிதர்களின் மொழி என்று அழைக்க பட்டு பின் தமிழ் என்று ஆகி இருக்க கூடும்.கன்னடம் இந்த நிலையில் தொடங்கி இருக்கலாம். இந்த நிலையிலே தமிழின் கடினமான எழுத்துக்கள் நீக்கபட்டிருக்கலாம். திருக்குறள் தமிழ் என்கிற வார்த்தை உருக்கொல்வதர்க்கு முன் எலுதபட்டிருக்கலாம்.

தில்லி என்கிற தற்போதய இந்தியாவின் தலைநகரம் பற்றி ஒரு தொடர் ஒரு முறை ஒளிபரப்பானது - அது சோழர்கள் பூமி என்று அதில் ராஜ்பாப்பர் என்கிற இந்தி நடிகர் பட்டும் படாமல் பதிவு செய்வார். இது ஒரு மொழியாக்க நிகழ்ச்சி. இந்தியில் என்ன சொன்னார் என்று தெரியாது.

வடமொழி புத்தகங்கள் சொல்வது - தில்லி என்கிற காடு - ஆடுகள் மேய்வதற்கு கொடுக்கப்பாட்ட ஒரு நிலம். இடையில் வந்தவர்கள் இடையர்கள்.
குதிரை   தமிழ் மண்ணில் ஆரம்பத்தில் இல்லை. ஆடுகள் ? ஆனால் பின்னர் தமிழ் மண்ணிலும்  நிறைய ஆடு மேய்க்கும் பழக்கம் வந்தது. எனவே இடையர்கள் தொழில் பெயர் ஆனது!

தமிழ் ஆட்சி முறை பெயர்கள் :

இராவணன் , ராசன் , ராஜன், கோன், கோ என்று அரசர்கள் அழைக்கப்பட்டனர். இது எதுவும் மானுட பெயர் அல்ல. ராவணனின் பெயர் இரவின் வண்ணம் கொண்டவன் என்று சொல்ல பட்டாலும் - இலங்கையில் பத்து பகுதிகள் இருந்ததகவும் - அங்கே நான்கு குழுக்கள் இருந்தன என்றும் - வரலாறு உண்டு. ராவணன் என்பது ஈழர்களை பொறுத்தவரை அரசன் என்பதின் குறிப்பாக இருந்திருக்கலாம். இந்திரன் என்பது அவ்வாறே வழங்கபடுகிறது -வடபுலத்தில்.

தமிழர்கள் பற்றி சொல்லும் போது - புத்திசாலிகளின் பகுதி லெமுரியா என்று செவ்வாயில் இருந்து வந்ததாக நம்பும் ஒரு அறிவிர் சிறந்த சிறுவன் சொல்வதாக ரஷ்ய ஏடுகள் பதிவு செய்த நிகழ்வு ஞாபம்வருகிறது.

தென்புலத்தில் இருந்தோர் அறிவிர் சிறந்தவர்  - வடபுலத்தில் இருந்தோர் வலிமை மிகுந்தோர். ஒரு குழு லெமுரியா குழு ஒரு குழு அட்லாண்டிஸ் குழு - இவர்களே முதலில் தோன்றிய மனிதர்களா என்று கேள்வி கேட்கப்பட்டு ஆய்வு நடக்கிறது.

இதில் லெமுரியா பற்றி பேசுவது நாம்தான்.

Search Amazon.com for TAMIL HISTORY

8 மறுமொழிகள்:

மீன்துள்ளியான் said...

நண்பரே சில விடயங்களை ஆதாரங்களுடன் எழுதினால் நன்றாக இருக்கும . உ தா , viewzone link , mexican city பெயர்கள்

மீன்துள்ளியான் said...

asko parpalo was President, Organizing Committee, 12th World Sanskrit Conference (Helsinki, Finland, 14-19 July, 2003) . so his sayings are very improtant .

Karthick Chidambaram said...

மீன்துள்ளியான் -

Please read the below

http://viewzone2.com/ancientturks.html
http://www.viewzone.com/lanka22.html

அருள் said...

தமிழின் மேன்மையை, வரலாற்று உண்மைகளை - கேலி, கிண்டலுக்கு உள்ளாக்குவது ஒருவிதமான மனநோய்.

அந்த நோய் உங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.

Karthick Chidambaram said...

நண்பர் அருள் - எனக்கு தங்கள் கருத்து புரியவில்லை. எந்த வரிகள் தங்களை இப்படி நினைக்க வைத்தது என்று சொல்வது நலம்.
என்னை நான் திருத்திக்கொள்ள அல்ல அது துணை புரியும்.

eraeravi said...

வணக்கம் மதுரையில் தங்கள் தந்தை கவிஞர் லட்சியம் சிதம்பரம் அவர்களுடன் தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி .தங்களின் ஆய்வுக் கட்டுரை மிக நன்று .பாராட்டுக்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

Unknown said...

குதிரை தமிழ் மண்ணில் ஆரம்பத்தில் இல்லை. ஆடுகள் ? ஆனால் பின்னர் தமிழ் மண்ணிலும் நிறைய ஆடு மேய்க்கும் பழக்கம் வந்தது. எனவே இடையர்கள் தொழில் பெயர் ஆனது!//

கடுங் கண்ண கொல் களிற்றான்
காப் புடைய எழு முருக்கிப்
பொன்இயல் புனை தோட்டியான்
முன்பு துரந்து, சமந் தாங்கவும்
பார் உடைத்த குண்டு அகழி

நீர் அழுவம் நிவப்புக் குறித்து
நிமிர் பரிய மா தாங்கவும்
ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும், குரிசில்!

இதன் பொருள்:-

கொடிய கண்களையுடைய, கொல்லும் யானைகளால், பாதுகாப்பிற்காகப் பகைவர்கள் வைத்திருந்த கணையமரங்களை முறித்து, இரும்பால் செய்யப்பட்ட அழகிய அங்குசத்தால் வலிமையாகக் குத்தி யானைகளைப் பிடித்து இழுத்து நிறுத்துகிறாய். நிலத்தைத் தோண்டி உருவாக்கப்பட்ட அகழிகளின் நீர்ப்பரப்புகளின் ஆழம் கருதி அவைகளின் மீது செல்லாமல் விரைவாக ஓடும் குதிரைகளைக் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்துகிறாய். அம்புறாத்தூணியை முதுகில் பொருத்தித் தேர் மேலிருந்து வில்லின் நாணால் கையில் வடு உண்டாகுமாறு அம்பைச் செலுத்துகிறாய். மற்றும், பரிசிலர்க்குப் பெறுதற்கரிய அணிகலன்களை அளிக்கிறாய், அரசே! --புறநானூறு, 14

புறநானூறு காலத்திலேயே குதிரை தமிழ் மண்ணில் உண்டு என்பதன் ஆதாரம் இது நண்பரே!

http://www.facebook.com/Aasiriyarpakkam

தமிழ்பித்தன் said...

நீர் அழுவம் நிவப்புக் குறித்து
நிமிர் பரிய மா தாங்கவும்
ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும், குரிசில்

இதில் குதிரை எனப்பொருள்படும் சொல் எது தோழரே.?

Post a Comment

Related Posts with Thumbnails

Pages

Powered by Blogger.

நான் தொடர்பவை