Skip to main content

Posts

Showing posts from 2011

புத்தர் தமிழர் சிங்களர் - VI

முதன் முதலில் தீபவம்சம் என்கிற நூல் தான் சிங்கள இனம் பற்றிய வரலாற்றை பதிந்தது. வரலாறு என்பது பல விபத்துகளை சந்திப்பது.  உண்மையின் பலவீனம் அது திரிக்கபடுவது, மறைக்கபடுவது, மறக்கடிக்கபடுவது என்று மகாத்மா காந்தி சந்தை ஞாபகம்.  இந்த தீவின் வம்சம் நாங்கள் என்பதை சொல்ல நினைத்தது தீபவம்சம். எல்லா இனங்களும் தங்களின் பெருமைகளை சொல்லவே முற்படும். ஆனால் பல இனங்கள் இவற்றை ஒற்றை நூலில் சாதிப்பது இல்லை. புத்தம் மற்றும் கிருத்துவம் ஆகியவை ஒற்றை புத்தகத்தில் நிறைய வரலாற்றை அல்லது புராணத்தை ஒரு புதினத்தை போல அல்லது ஒரு தொகுக்கப்பட்ட பதிவை போல வழங்க விளையும். இது அவர்களை பற்றி தெரிந்து கொள்ள நல்ல வழி அமைத்து தரும். இந்த உக்தி பாராட்ட தக்கது. இதில் நிறைய லாபங்கள் உண்டு. ஆனால் தீபவம்சம் - ஒரு சமய புத்தகம் அல்ல. தீபவம்சம் தான் முதன் முதலில் மண்ணின் மைந்தர்கள் பற்றியும் வந்து குடி அமர்ந்தவர்கள் பற்றியும் சொல்கிறது.  குடி அமர்ந்த சிங்களர்கள் உயர்ந்தவர்கள் என்கிறது. இங்கேதான் சிங்கள வரலாறு கொஞ்சம் நாடக தன்மை கொள்கிறது. சிங்களம் என்கிற மொழியும் சிங்களம் என்கிற இனமும் பின்னால் உருவானவை.  சிங்களம் என்கிற இ

புத்தர் தமிழர் சிங்களர் - V

சிங்களர்கள் என்று ஒரு மொழி இனம் உருவாக வேண்டிய நிலையை சங்க மித்திறரின் வரவோடுதான் பார்க்க வேண்டும். தேவனை நம்பிய(து) ஈசன் ( நம்பி ஈசன் என்கிற குடும்ப பெயர் இன்றும்  கேரளா மண்ணில் உள்ளது) என்கிற தமிழ் அரசரின் இதயத்தில் புத்த ஆட்சி என்கிற கருத்து இயல் விதைக்க பட்டது சங்க மித்திறரின் வரவில்தான். புத்தரின் பல்லையும் போதி மரத்தையும் காக்க அப்படி ஒரு நிலைப்பாடு தேவை என்கிற நிலைப்பாடு அப்போது சங்கமித்ரருக்கு தோன்றி இருக்க வேண்டும். மூத்த சிவன் வழி வந்தவர்கள் புத்த ஆட்சியை நிறுவ முனைந்தனர். சின்ஹலம் இந்த தருணத்தில் எங்கே இருந்தது என்கிற கேள்வி எனக்கு இன்னும் உண்டு. பாலி, வடமொழி மற்றும் தமிழின் அடிப்படையில் ஒரு மொழி உருவாக்கம் நிகழ்ந்தது. அதுவே சின்ஹலம் ஆனது. இன்று பெருமையோடு பேசப்படும் சில சிங்கள கருத்து இயல்கள் சிங்களமே இல்லை என்பது சில சிங்கள ஆய்வாளர்களின் கருத்தும். ராவணனின் வழி வந்தவர்களும் - கும்ப கர்ணனின் வழி வந்தவர்களும் என்று பெருமை பகன்றவர்கள் பலர் சிங்களர் ஆகினர். சிங்க கோடி என்பது கும்ப கர்ணனின் கோடி என்றும் சில கருத்துகள் உண்டு. சிங்கள மொழியின் உருவாக்கம் பு

புத்தர் தமிழர் சிங்களர் IV

காஞ்சி புத்தத்தின்  தலை நகரை இருந்த நாட்கள் இன்னும் எச்சங்களாய் உள்ளது. இன்றும் காஞ்சிக்கு அருகில் இருக்கும் திருத்தலங்கள் சிலவற்றில் ஒரு ஒழுக்கம் கடைபிடிக்க படுகிறது.  அது ஆலயங்களில் பலி கொடுக்காமை. இந்த ஆலயங்கள் இந்து ஆலயங்களை இருந்தாலும் இவை காலத்தால் முந்தய புத்த ஆலயங்களே என்று சொல்கிறார்கள். அசோகர் காஞ்சியில் புத்த அடையாளங்கள் நிறுவி இருக்கலாம்.  நாகர்களுக்கும் புத்ததிர்க்கும் இருக்கும் தொடர்பு. தமிழுக்கும் புத்ததிருக்குமான தொடர்பை நிறையவே சொல்லும். புத்தர் மூன்று முறை  இலங்கை வந்ததாகவும் அதில் இரண்டு முறை நாகர்களின் நலனுக்கே வந்ததாகவும் இலங்கையின் வரலாறு பதிகிறது. புத்தர் நாகர்களில் ( தமிழர்களில் ) பிரச்சனையில் ஈடுபட்ட இரண்டு தரப்பை அவர் அழைத்த தருணத்திலேயே அவர்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொண்டனர் . இயக்கர்கள் தமிழர்களா என்பது தெரியவில்லை. அவர்களின் பிரச்சனைகளுக்கும் புத்தர் தீர்வு வழங்கி உள்ளார்.  இலங்கையை புத்தர் மூன்று முறை இலங்கை வந்து இருந்தால் அவர் தமிழ் மண்ணின் வழியாகவே பயணித்து இருக்க வேண்டும். புத்தர் எந்த நிலையிலும் வின் வழி பயணம் மேற்கொண்டதில்லை என்றே நம்ப படுக

புத்தர் தமிழர் சிங்களர் - III

புத்தர் அவர்களின் பயணம் பற்றிய ஆய்வு நிறைய கதவுகளை திறக்கலாம். தமிழ் மண்ணில் வசித்த புத்த கோஷர் என்கிற புத்த துறவி பிறந்து பின் இலங்கை வந்து நிறையவே புத்தம் படித்தார் என்பது நம்பபடும் வரலாறு. புத்த மதம் சார்ந்த தமிழ் மனிதர்கள் பற்றி பேசும் போது அவர்களின் இயற் பெயர்கள் நமக்கு கிடைக்காதது சற்று வருத்தம் தரும் செய்தியே. ஆய்வுகள் பெரிதும் இந்த விடயத்தில் சரியான முடிவுகள் தர தவறி  உள்ளன. பிரசன்னா தரரின் மாணவராக இருந்து சீன மக்களுக்கு சஹோளின் புத்த மதத்தை சொல்லி கொடுத்த போதி தர்மரின் இயற் பெயர் - புத்தி தார பல்லவர் என்றும் அவரது தாதனார் பெயர் சிமவர்ம பல்லவன் என்பதும் இன்னும் குழப்பத்தில் உள்ள பெயர்களாகவே உள்ளன. தமிழ் மண் தான் ஆரம்ப காலத்தில் புத்தம் செழிக்க நிறைய உதவி உள்ளது. தமிழ் மன்னர்கள் எம் நண்பர்கள் என்று அசோகரின் கல்வெட்டு சொல்கிறது. இந்த கல்வெட்டுகளின் வாயிலாக ஆய்வு செய்யலாம். புத்தர் காஞ்சியிலும் சென்னையில் எழும்பூரிலும் தங்கி இருந்து இருக்கலாம். தென்னாட்டின் கயா என்று சொல்லப்பட்டது சென்னையே. தன் பயணத்தின் பொழுது அவர் திருச்சி மற்றும் தஞ்சையிலும் தங்கி இருந்து இருக்கலாம். த

புத்தர் - தமிழர் - சிங்களர் - II

தமிழ் மற்றும் பாலி பற்றி பேசுகையில் எனக்கு நினைவில் வரும் ஒன்று மேக  சந்தேசதில் வரும்  ஒரு காட்சி. "அய்யா உத்தா" - என்று ஒரு வார்த்தை. அதாவது ஐயாவின் ரத்தம்.  இதை ஆர்ய புத்திரன் என்று வடமொழி பொருள் சொல்லும். ( ஆதாரம் : ஆரிய மாயையா ? திராவிட மாயையா ? - பி ராமமூர்த்தி என்று நினைவு ) புத்தம் என்பது ஒரு வகையில் ஒரு வாழும் வழி சொல்ல வந்த இயக்கம். புத்தம் என்பது தமிழ் மன்னர்களின் சைவ நெறி பரப்பல் காலத்திலும் அரச ஆதரவு பெற்றே வந்தது.  புத்த மடாலயம் ஒன்று சாவக தீவின் அரசனால் நாகபட்டினத்தில் கட்டப்பட்டது  - ராஜராஜ சோழனின் அனுமதியின் பெயரால். சமண கோயில் ஒன்றை ராஜராஜ சோழனின் சகோதரி கட்டியுள்ளார். புத்தம் மதத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் பல்லவர்களுக்கு நிறைய உண்டு. சிம்ஹா வர்மா பல்லவன் என்கிற பல்லவன் ஒருவனின் பேரனோ என்று போதி தர்மர்  என்று என்னவும் வழி  உண்டு. முதன் முதலில் புத்தம் சார்ந்த மத சின்னங்கள் தமிழ் மண்ணில் தோன்றி இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. தமிழ் கடவுள் முருகனின் திரு ஆலயமாக புத்த மதத்தினர் நிறுவிய கோயில்தான் திருப்பதி என்பதும் எங்கோ படித்த ஞாபகம்.  புத்தர் தமிழ் மண்

புத்தர் - தமிழர் - சிங்களர் - I

தமிழ் மண்ணாகட்டும் வேறு எந்த மண்ணாகட்டும் வரலாறுகள் நடுநிலை தவறுவது என்பது இயல்பு. உண்மையான வரலாறு என்பது கிட்டத்தட்ட உண்மையாக இருப்பது இல்லை. அதற்காக வரலாறுகள் வெறும் கட்டுகதையாக - வெறும் புதினமாக இருக்க இயலாது.  தமிழ் மக்கள் திரளில் வணிகர்களில் பெரும்பான்மையினர் ஒரு நிலையில் சமணர்களாக இருந்து இருக்கலாம் என்றும் பின் அவர்கள் சைவர்களாக மாறி இருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு.  இலங்கையை பற்றிய  வரலாறு தமிழ் நாட்டு தமிழர்களுக்கு பெரிதும் தெரிவதில்லை. தங்கள் தமிழ் நாட்டு வரலாற்றை தெரிந்து கொள்ளும் நிலை  தமிழர்களுக்கு வாய்த்து  இருந்தும் அதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.  புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது வரலாறு. அவர் நாகதீவில் இருந்த தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது சிலரின் கருத்து. இந்த நாக தீவு இன்றைய இலங்கையின் ஒரு பகுதி என்பது கணிப்பு. புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்த போது அவர் என்ன மொழியில் பேசினார் என்பது ஆய்வுக்கு உரியது.  இயக்கர்கள் ( யட்சர்கள் ) மற்றும் நாகர்கள் இடையே இருந்த எல்லை தகராறு புத்தர் பேச்சுவார்த்தையால் தீர்ந்தது என்கிற கதை கூட உண்டு. நாகர்கள் பற்

அரசியல் அவியல் : தன்மானம் காத்த தமிழர்கள்

அரசியல் இப்போதெல்லாம் புரிவதற்கு கடினமாக இல்லை. செய்தியை படிக்கிறவன் அதன் உள்ளர்த்தத்தை சீக்கிரம் கண்டுபிடித்து விடுகிறான். மக்கள் தெளிவாகவே உள்ளனர் அனால் தெளிவான முடிவை எடுக்க அவர்களின் நேர்மை தடுக்கிறது. (நீங்க சொல்லறது எல்லாம் சரிதான் ஆனால் பணம் வாங்கியாச்சு; கொடுத்த வாக்க காப்பாத்தனும் இல்லையா ?) தமிழ் நாட்டில் இப்போது குட்டை குழம்பி உள்ளது. காங்கிரஸ் கொஞ்சம் முன்னதாக முடிவு செய்து இருந்தால் நிறையவே விளையாடி இருக்கலாம்.  இப்போதும் விளையாடி உள்ளார்கள்.  காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் பெரிதாக எதுவும் சாத்தித மாதிரி எனக்கு தென்படவில்லை. தில்லி ஒரு விதிவிலக்கு.  தற்போதைய ஆட்சியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது மன்மோகன் சிங்கக்கு தெரியும். அவருக்கு அதிகாரம் என்ன என்பது உங்களுக்கு தெரியும்.  காங்கிரஸ் உண்மையில் தமிழ் நாட்டில் வளர நினைத்தால் தமிழர்களை பற்றிய சிந்தனை அதிகம் அவர்களிடம் வளர வேண்டும். மக்களாட்சி என்பது என்ன என்பதே தெரியாமல் நம்மில் பலர் உள்ளோம்.  இது தேர்தலை பாதிக்காது என்று ஊழல்கள் பற்றி சொல்லும் போது நாம் ரொம்ப நல்லவர்கள் என்பது தெரிகிறது. அமெரிக்காவில் ஒரு முதல்வர் (

அப்பாவும் அவர் நண்பர்களும்

நே ரமும் வேலையும் இந்தியாவில் போட்டி போட்டுக்கொண்டு நம்மை தின்கின்றன. அதுவும் அலுவலகங்கள் வேறு மாவட்டத்தில் இருப்பது போலத்தான் உள்ளது இங்கு. சென்னை வந்த நாட்களில் இருந்தே எனக்கு இந்த எண்ணம் அதிகம். அலுவலக நாட்காளில் நம்முடைய சொந்த வாழ்க்கை நொந்த வாழ்க்கை ஆகிவிடுகிறது. சனிக்கிழமை அயர்ச்சியை போக்கவும் ஞாயிறு தொலைக்கட்சிகளில் தொலைந்து போகவும் என்று வாழ்க்கையை கவனிப்பார் அற்ற குழந்தையாக விட்டு விடுகிறோம். நம்முடைய குழந்தை வளர்ப்பு நாளைய நாட்டின் நிலையை நிர்ணயிக்கும் என்கிற நிலை நம்மில் பலருக்கு உரைத்ததாய் தெரியவில்லை. குழந்தைகள் மதிப்பெண் வாங்கும் எந்திரங்கள் என்கிற நிலை இன்னும் மாறவில்லை. அப்பாவின் நண்பர்களை சந்தித்தேன். வழக்கம் போலவே கவிதை சமுதாய தொண்டு அப்புறம் என்றும் மாறாத நகைச்சுவை. அப்பாவின் நண்பர்களில் ஒருவர் மின்னல் பிரியன் - செயற்கை கால்கள் செய்து தருகிறார். இவருடைய பணிக்கு உதவ நினைப்பவர்கள் இவரை தொடர்பு கொள்ளலாம் - 9842293774  - நீங்களே விசாரித்து தெரிந்து கொள்ளலாம். என் அலுவலக நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் சொல்ல சொன்னார். மனித தேனீ திரு சொக்கலிங்கம் அவர்களை கண

கணினி : உயிரை தின்னும் கண்ணி நீ ? - I ( Super Computer)

எதோ ஒரு ராணுவ தலைமையகம். இந்தியா. மெல்லிய மாலை வேலை. இரவின் சாயல் இந்த மண்ணில் இறங்கிக்கொண்டு இருந்தது. அந்த கட்டிடதிற்குள்ளும்தான். மருத்துவ சாய்வு நாற்காலியில் ஒரு இளைஞன். அருகில் அவன் முகம் பார்த்தபடி ஒரு இளம்  வாடாமல்லி வண்ண (லைட் பிங்க்) t  ஷர்ட் மற்றும் இளம் பச்சை வண்ண குறும் பாவாடையும் அணிந்து இருந்த வெள்ளைக்கார இள நங்கை. இவர்கள் போக ஒரு மருத்துவர் மற்றும் சில படை வீரர்கள் ஒரு படை தலைவருடன். வெளிச்சம், தலைக்கு மேல் இருக்கும் அதி ஒளி விளக்கு  வழியாக இளைஞனின்  முகத்தில் கொட்டிக்கொண்டு இருந்தது. "ரூபன் ... ரூபன்" - அந்த பெண் பயமும் மென்மையுமாய் அந்த இலைஞநை அழைத்தாள். விழிகள் மெதுவாக திறந்தது அந்த இலைஞகனுக்கு. "ரூபன் ..." கண்ணீர் துளி கண்களின் ஓரத்தில் எட்டி பார்க்க அவள் மெதுவாய் புன்னகைத்தாள். அவன் அவளை பார்த்தான். அங்கு இருந்த ஒரு நாள் காட்டும் கருவி அவன் கண்ணில் விழுந்தது. தன் கை கடிகாரத்தை பார்த்தான். இன்று ... அந்த பெண்ணை பார்த்தான். கண்களை மூடினான். மனக்கண்ணில் ... காலண்டரில் நாள்கள் ஓட்ட ஆரம்பித்தன வேகமாய். கடிகாரத்தின் முற்கள்

மீண்டும் ஒரு தொடர் கதை

நீண்ட நாட்களாய் எதுவும் எழுதவில்லை. ஆவன படங்கள் சிலவற்றை தமிழ் படுத்தும் முயற்சியில் நானும் எனது நண்பர் ஒருவரும் இறங்கினோம். வெற்றி பெரிதாக கிட்டாதபோது கூட அந்த தாகம் இன்னும் உள்ளது. நம்பிக்கை தான் வாழ்க்கை. என்னை மீண்டும் ஆசுவாசபடுத்திக்கொள்ள மீண்டும் ஒரு தொடர் கதை எழுத திட்டம். இந்த முறை கணிப்பொறி சார்ந்தே இந்த தொடர். உங்கள் விமர்சனங்கள் வழக்கம் போல் வரவேற்கபடுகின்றன.  கதையின் தலைப்பை மட்டும் இப்போது சொல்கிறேன். சூப்பர் கம்ப்யூட்டர் - இந்த கதைக்கு ஆங்கில தலைப்பு வேண்டாம் என்றும் மனம் சொல்கிறது. ஆனால் இந்த கதை இந்த கருவியை சுற்றிதான்.