Skip to main content

த நா வரலாறு : குமரி கண்டத்தில் இருந்த ஊரா திருநெல்வேலி ?

திருநெல்வேலி - இந்த ஊருக்கு தமிழ் வரலாற்றில் மிக பெரிய பங்கு இருக்க வேண்டும். தற்போதைய திருநெல்வேலி என்கிற ஊர் குமரி கண்டத்திலோ அல்லது இந்தியாவின் வேறு ஒரு நிலா பகுதியிலோ உள்ள ஊர் ஒன்றின் காரணமாக பெயர் இடபட்டிருக்கலமோ என்கிற ஆய்வு ஒன்றை படிக்க நேர்ந்த தருணம் அது.

தற்போதய பீகாரின் தலைநகரம் பாட்ன என்று அழைக்கபடுகிறது. இதனுடைய இன்னொரு பெயர் அல்லது வரலாற்று பெயர் பாடலிபுத்திரம். தமிழ் மண்ணின் பூம்புகாரை போல் ஒரு காலத்தில் பெருமையோடு விளங்கிய ஊர்.

அதன் பெயர் இன்னொரு ஊருக்கும் சூட்டப்பட்டது என்கிறார் ரா பி சேது பிள்ளை. இது பள்ளியில் படிக்கிற பொது படித்தது. ஒரு தலைவன் பெருமையோடு விளங்குகிறான் என்றால் - அவன் பெயர் பிளயகளுக்கு சூட்டப்படும். என்னோடு படித்த நண்பரின் பெயர் கார்ல் மார்க்ஸ் - ஆனால் அவர் கிருத்துவர் அல்ல. கார்ல் மார்க்ஸ் மார்க்ஸ் மதங்களுக்குள் சிக்குகிற மனிதர் அல்ல.

நிரஞ்சன் ஜார்ஜ் மார்க்ஸ் என்று ஒரு நண்பர் படித்தார் - அவரும் கிருத்துவர் இல்லை. இது நிலங்களுக்கும் பொருந்தும். வடக்கேயும் ஒரு காசி - தெற்கேயும் ஒரு காசி.

இந்த ஒப்பீடுதான் திருநெல்வேலியின் பெயரிலும் ஒளிந்து உள்ளது. திருநெல்வேலி என்கிற பெயரில் பழங்கால நகர் ஒன்று இருந்திருக்க வாய்புகள் உண்டு.
இலங்கையிலும் திருநெல்வேலி உண்டு என்று கேள்வி பட்டு உள்ளேன்.

திருநெல்வேலி பற்றிய ஆய்வு செய்தால் - திரு நெல்வேலி என்கிற பெயர் வந்ததின் காரணம் தெரியலாம். மதுரை என்கிற பெயர் கூட மூன்று நகர்களுக்கு சூட்டப்பட்ட ஒன்றே.

அமெரிக்கர்கள் தங்கள் மண்ணை கட்டி எழுப்பும் போது இங்கிலாந்த், பிரான்ஸ் , ஜேர்மன் , இத்தாலியில் இருந்து வந்தவர்கள் தங்கள் நகரங்களின் பெயரை வைத்து உள்ளார்கள். நான் தங்கிய ஊர் ஒன்றின் பெயர் ஷாம்புர்க் - இது ஒரு ஜேர்மன் மக்களால் கட்டி எழுப்பப்பட்ட ஊர்.

நேற்றே எழுத நினைத்த இந்த பதிவை இன்றுதான் எழுதுகிறேன்.

திருநெல்வேலி கதையை நான் எழுத நினைத்தபோது - நண்பர் ஒருவர் சொன்னார் - இப்படி ஒருவரின் பதிவில் ஏற்கனவே படித்து உள்ளேன் என்று. ஒருவர் இவ்வளவு ஆய்வுபூர்வமாய் எழுதும்போது - அவரை பாராட்ட வேண்டும். இந்த வலைதளத்தை பார்க்க நேர்ந்தமை எனக்கு மகிழ்ச்சி. http://valaakam.blogspot.com/2009/12/01.html இதுதான் நண்பர் எனக்கு தந்த இடுக்கை முகவரி. தமிழர்களில் பலர் ஆய்வு கட்டுரைகள் எழுதுவது மகிழ்ச்சி.

குமரி கண்டம் இருந்திருக்குமோ என்று இன்னும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.


அப்புறம் ஒரு கதை - வள்ளுவரின் மனைவி பற்றியது. வள்ளுவரின் மனைவி அவருக்கு உணவு பரிமாறிக்கொண்டு இருந்த தருணம் - ஒரு துறவி பிச்சை கேட்டு வருகிறார். அவர் பெயர் கொங்கணர். அவர் தவ வலிமையால் ஒரு கொக்கை ஏற்கனவே எரித்தவர். வாசுகி கொஞ்சம் பொறுங்கள் - சிறிது நேரத்தில் வருகிறேன் என்று சொல்கிறார். நேரம் தாமதம் ஆகிறது. வாசுகி வருகிறார் - கொங்கணர் முறைக்கிறார் - வாசுகிக்கு எதுவும் ஆகவில்லை - வாசுகி சொன்னாராம் "வசுகியா கொக்கா ? ( கொக்கென நினைத்தாயா - கொங்கணவா ?)" நம் ஊரில் பலர் நாங்களா கொக்கா ? என்கிற போதெல்லாம் இந்த கதை எனக்கு ஞாபகத்தில் வரும்.

உங்களுக்கும் தெரியும் என்று நினைக்குறேன்.

தொடரும்

Comments

  1. எனக்கும் தெரியும்.. கேள்விப் பட்டிருக்கிறேன்

    ReplyDelete
  2. அடேங்கப்பா ...... அதிலும் திருநெல்வேலி கொக்குனா சும்மாவா? :-)

    ReplyDelete
  3. நன்றி செந்தில், சித்ரா.

    ReplyDelete
  4. nice article nanbare

    endrum anbudan,
    N.Parthiban

    http://parthichezhian.blogspot.com/

    ReplyDelete
  5. நன்றி - TVR மற்றும் பார்த்திபன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

மதராசபட்டினமும் கூவமும் நீங்களும்

அது நீண்ட வருடங்களுக்கு முன்னாள் பார்த்த கலைவாணரின் படம். "என்ன அப்படி பாக்குற அது வைகை ... தண்ணி வெள்ளமா ஓடுத்துலா ?" - கலைவாணர் ஒரு காட்சியில் சொல்லும்  போது  பலரும் சிரித்து விட்டோம். இந்த படம் பார்க்கையில் மதுரையில் இருந்தேன். நாங்கள் பார்த்த வரை வைகையில் தண்ணீர் அதிகம் ஓடவில்லை. கலைவாணரின் காலத்திலும்தான். ஆனால் கலைவாணர் ஓடும் என்று தன நம்பிக்கையை விதைத்து இருந்தார். இன்னும் அந்த நம்பிக்கை விதை மௌனமாய் ஏதோ திரை சுருளுக்குள் சுருண்டு கிடக்கிறது. மதராசபட்டினம் படம் பார்த்தவர்கள் பலரும் சொல்லும் விடயம் - கூவத்தில் படகு விட்டதை. இப்பக்கூட விடலாம்தான். நீங்கள் போகமாட்டீங்க அதான் விடல. அந்த காலத்து சென்னையை / மதராசை காட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்ப சென்னை எவ்வளவு அழகா இருக்கு என்கிறார்கள் படம் பார்த்துவிட்டு வருபவர்கள். என் நண்பர் சொல்வார் குழந்தையில எல்லாம் அழகாதான் இருக்கும் வயசாயடுச்சுனா .... போய்டும்பா. சென்னைக்கும் இதுதான் நடந்துவிட்டது என்று யாரும் சொல்லாதவரையில் நலம். விடுதலை பெற்ற தருணத்தில் சென்னை நல்லாத்தான் இருந்தது என்கிற எண்ணம் நிறைய பேருக்கு வருவத...