Skip to main content

என் பயணங்களில்: வெள்ளையான பெண்களும் நானும்

வழக்கம் போல அப்பாவிற்கு இடமாறுதல் ஆணை வந்திருந்தது. கொஞ்சம் காலம் கடந்தேனும் - எங்களை அப்பா அந்த ஊருக்கு அழைத்து போகவேண்டி இருந்தது.

முதல் நாளில் இருந்தே அந்த ஊர் ஒரு புதிர். அவர்கள் பேசுகிற தமிழுக்கும் எங்கள் தமிழுக்கும் நிறைய வேறுபாடு. அவர்கள் வாழும் வாழ்க்கைக்கும் எங்கள் வாழ்க்கைக்கும் நிறையவே வேறுபாடு.

முதன் முதலில் என் வாழ்வில் நான் பார்த்த மிக பெரிய வேறுபாடு அங்கேதான் நிகழ்ந்தது. என்னை அப்பா பள்ளியில் சேர்த்து விட்டார்.புதிய பள்ளி - புதிய நண்பர்கள் - புதிய தொடக்கம்.

அங்கே கொஞ்சம் வெள்ளயாக சில மாணவிகளும் - நம்ம ஊரின் அழகான பழுப்பு மாணவிகளும் இருந்தார்கள். பையன்களும் அப்படிதான்.

முதல் வகுப்பு ஆங்கிலம்.வந்தார்கள் பாடம் நடத்தீனார்கள். புரிந்தது - நமக்கு தெரிந்த அளவு.

அப்புறம் கணிதம். வந்தார்கள். மிரட்டினார்கள் - ஆமாங்க எனக்கு கணக்கு என்றாலே கொஞ்சம் பயம். அதுவும் இந்த நம்பரை எல்லாம் கரும் பலகையில் எழுதினா எதோ நம்ம அது சாப்பிட வர்றமாதிரி இருக்கும்.

மூன்றாவது வகுப்பு ஆரம்பிச்சுது. வகுப்புல பாதி பேருங்க எழுந்திரிச்சு போய்ட்டாங்க. அதிலும் இந்த வெள்ளையா இருந்த பொண்ணுங்க எல்லாம் போய்டுச்சுங்க.

ஒரு
பையன் என் பக்கத்தில் வந்து - "தமிழா ?" என்றான். எனக்கு புரியவில்லை - நம்ம என்ன இங்கிலீஷ் காரன் மாதிரியா இருக்கோம்?தலையை ஆட்டிவிட்டு உட்கார்ந்தது இருந்தேன்.

ஒரு
ஆசிரியை வந்தார். தமிழ் பாடம் நடத்தினார். வகுப்பு முடிந்தது. மீண்டும் வந்தார்கள் அந்த வெளிநடப்பு செய்திருந்த பெண்களும் ஆண்களும்.
என்ன கொடுமைடா இது ? இந்த வெள்ளையான பெண்கள் தமிழா சேத்துக்க மாட்டாங்களா ?


பக்கத்தில் இருந்த மாணவனிடம் கேட்டேன். அப்போது தான் அவன் சொன்னான்.
"அவர்களுக்கு எல்லாம் இந்தி இரண்டாம் மொழி. நமக்கு தமிழ்"

காலம் கடந்தது கொஞ்ச காலத்திற்கு முன் வேலைசெய்ய அந்த ஊருக்கு போய் இருந்தேன்.
"என்னங்க ? பாட்டு போடவேண்டியத்து தானே" - என்று என் அலுவல் பேருந்தில் கேட்டேன்.

"போடலாம்தான். பலருக்கு தமிழ் தெரியாது அதான்" - என்றார் பேருந்து பொறுப்பாளர்.

அந்த ஊரின் பெயர் சென்னை. தமிழ் நாட்டின் தலை நகரம். வாழ்க தமிழ்!

பயணம் தொடரும்

Comments

  1. அந்த ஊரின் பெயர் சென்னை. தமிழ் நாட்டின் தலை நகரம். வாழ்க தமிழ்!

    ..... நினைச்சேன்,...... அதான்னு..... சென்னையில் தான் பிறந்து வளர்ந்து படித்து விட்டு வந்தாலும் - தமிழ் சரியாக பேச, எழுத, வாசிக்க தெரியாமலே இருக்க முடியும். வேதனையான உண்மை. எங்கள் நண்பர்கள் குழுவிலும் சிலர் இப்படி உண்டு.

    ReplyDelete
  2. நல்ல பரையேற்றம்

    ReplyDelete
  3. நன்றி சித்ரா, சௌந்தர்.
    சித்ரா அக்கா Profile போட்டோ கலக்குது!

    ReplyDelete
  4. சென்னையைப் பற்றி இவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறீர்கள் கார்த்திக்.
    சென்னை மீது ஏன் இந்த கோபம்.

    ReplyDelete
  5. என்ன கொடுமை சார் இது? செம்மொழி தழைத்த நமது ஊரிலா இந்த நிலை....ஐயகோ.... (சரி சரி...சீன் போதும்னு சொல்றது இங்க வரைக்கும் கேக்குது...)

    ReplyDelete
  6. Abul bazar sir - Naan kopamaa eluthave illeenga :-)

    ReplyDelete
  7. கடல் அன்பன்June 16, 2010 at 11:20 PM

    பொதுவாக நம்மை 'மாநிறம்' என்று தான் குறிப்பிடுவோம்.பழுப்பு என்ற சொல்லாடல் நன்று.

    ReplyDelete
  8. நன்றி கடல் அன்பன்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்