தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Sunday, June 6, 2010

த நா வரலாறு: ஊமைத்துரை கட்டிய கோட்டை ?

வரலாற்றை படிக்கிற போது - வெள்ளைய அதிகாரிகள் பெருமையோடு குறிப்பிடும் ஒரு கோட்டை -  ஊமைத்துரை கட்டிய கோட்டை. ஊமைத்துரை  ஒரு வாரத்துக்குள் காட்டி விட்டதாகவும் அதை பார்த்து வியந்ததாகவும் வெள்ளையர்கள் பதிவு செய்கிறார்கள்.


இப்படி ஒரு வீரனையும் ஆளுமை திறன் படைத்தவனையும் நான் கண்டதில்லை - என்று வெள்ளை படை தளபதி ஒருவர் பதிவு செய்தது உள்ளார். ஊமைத்துரை ஒரு வெள்ளைய அதிகாரியை கைது செய்த போது -அவரது மனைவி வந்து கெஞ்சி மன்றாட ஊமை துரை மனம் இளகி அந்த தம்பதிகளுக்கு விருந்தினரை போல் வழி அனுப்பி வைத்ததாகவும் நான் ஒரு ஆவன படத்தில் பார்த்து உள்ளேன்.


தமிழ் மண் ஊமைத்துரையை ஒரு அழவுகேனும் பதிவு செய்தாலும். தமிழ் மண்ணில் ஊமைத்துரை தங்கிய கோட்டைகள் சில இன்னம் உயிர்ப்போடு இருந்தே ஆக வேண்டும்.

புதுக்கோட்டை பகுதியில் அறந்தங்கியும்  திருமயமும் கட்டபொம்மன் மற்றும் ஊமை துரையுடன் தொடர்பு உள்ள இடங்களே.  அந்த மண்ணில் வாழ்பவர்களுக்கு இந்த உண்மை தெரியுமா என்று தெரிய வில்லை.

ஊமைத்துரை கட்டிய கோட்டை வெள்ளையர்களால் அழிக்க பட்டு இருக்கலாம் இல்லாவிட்டால் புதுக்கோட்டை  மன்னனுக்கும் பரிசாய் அளிக்கப்ட்டிருக்கலாம்.

அறந்தாங்கி பரிசாய் தந்த ஒன்று  என்று புதுக்கோட்டை  தொண்டைமான்களை பற்றி எழுதும் போது hollow  Crown  என்கிற ஆங்கில புத்தகம் பதிவு செய்கிறது.

திருமயம் கோட்டை ஊமைத்துறையால் கட்டபட்டிருக்கலாம் என்று சிலர் கருதுவதாக கேள்வி பட்டதுண்டு. இல்லை இங்கே ஊமைத்துரை தங்கினார்  - அதுவும் புதுகோட்டை மன்னரின் நட்பினால்  என்று கதை சொல்லபடுவதில் - கொஞ்சம் வரலாறு இடிப்பதாக  உணர்கிறேன்.
திருமயம் கோட்டை தற்போது தொல்லியல் துறையிடம் உள்ளது என்று உணர்கிறேன். அங்கே இன்னும் பீரங்கிகள்  செயல் படும் நிலையில் உள்ளது எனவும் ஒரு முறை இணையத்தில் படித்த ஞாபகம்.

ஊமைத்துரை அடுத்து தங்கியதாக பதிவு செய்யப்படும் இடம் - சிவகங்கை. சிவகங்கை அரண்மனை இன்றும் கம்பீரமாய் நிற்பதாகவும் - அதற்கு முன் வேலு நாச்சியின்  சிலை உள்ளதெனவும் சொல்லப்படுகிறது. இந்த அரண்மனையில் ஊமைத்துரை தங்கினாரா ? இல்லை வேறு இடத்தில் தங்கினாரா ? நானே அந்த அரண்மனையை கடந்து சென்று உள்ளேன். ஒரு வரலாறு நிற்கிறது என்கிற எண்ணம் தமிழர்கள் பலருக்கு இல்லை.

அப்புறம் கண்ணகி தங்கிய இட பகுதியில்தான் தற்போதய மதுரை ஆட்சியர் அலுவலகம் உள்ளதாக ஒருவர் சொன்னார். காந்தி தங்கிய மதுரை இடம் ஒன்றில் மீனாக்ஷி பெண்கள் கல்லூரி இருக்கிறது என்று அங்கே பனி ஆற்றிய ஒருவர் சொன்னார்.

வரலாறுகள்  பதிவு செய்யப்படவேண்டும். அவை நிறையவே பாடம் சொல்லும். அலெக்ஸாண்டரின் கால் சுவட்டில் என்று ஒரு ஆவன படம் பல வருடங்களுக்கு முன் BBC  தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

யுவான் சாங் அவர்களின் காலடி ஒட்டி சில வரலாற்று ஆய்வாளர்கள் பயணம் மேற்கொண்டனர். போதி தர்மரின் சீன பயணத்திற்கும் போகர் மற்றும் புலிபாணி சித்தர்கள் கதைக்கும்  ஒற்றுமை உள்ளதென்று ஒரு குழப்பம் கூட உள்ளதாம். போதி தர்மரின் பயணம் காஞ்சியில் ஆரம்பித்து சீனத்தில் முடிகிறது - இடையில் மலேசியாவில் அவர் சில நாட்களோ சில மணி நேரமோ தங்கி இறுக்கலாம். புத்தர் கூட தமிழ் நாடு வழியாக இலங்கை பயனித்திருக்கலாம். நேதாஜியின் INA பயணம் வந்த வழியாக உயிரோடு உள்ள INA  வீரர்கள் சிலர் அழைத்து ஒரு பயணம் மேற்கொள்ளப்பட்டு அது இந்திய தொலைகாட்சியில் ஒளிபரப்பானது.

தமிழர்களில் ஊமைத்துரை பல பயணம் மேற்கொண்டு உள்ளான். அவன் கால் சுவட்டில் தமிழ் வரலாறு ஆய்வாளர்கள் பயனிகின்றனரா  என்று தெரியவில்லை.

வரலாறு பயணிக்கும் - தொடரும்

6 மறுமொழிகள்:

கே.ஆர்.பி.செந்தில் said...

புதிய தகவல்கள், அங்கு உள்ளோருக்கு ஊமைத்துரை பற்றிய கதைகள் தெரியும்
செவி வழிக் கதையாக என் நண்பர் சொல்ல கேள்விப் பட்டிருக்கிறேன்

Karthick Chidambaram said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.பி.செந்தில் - கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. வரலாறு பாதுகாக்கபடவேண்டும்.

விந்தைமனிதன் said...

சமீமத்தில் திருமயம் கோட்டைக்குச் சென்றிருந்தேன். நெகிழ்ச்சி, பெருமிதம்,சோகம்,வருத்தம்,ஆதங்கம் என கலையான உணர்வுகள்.. இன்று தமிழனுக்கு அவனது 5000 ஆண்டுகால வரலாற்றுத் தொடர்ச்சியும் தொல்பெருமையும் நினைவிலில்லை... அன்றாடப் பிழைப்பு மட்டுமே.. இருக்கவே இருக்கிறது தமிழ்சினிமா மற்றும் தொலைக்காட்சிகள்... ஹூம்!

Karthick Chidambaram said...

நீங்கள் சொல்ல்வது மிகவும் உண்மை விந்தைமனிதன். சிவகங்கையிலும் இதே நிலையை பார்த்தேன். வருகைக்கு நன்றி!

Chitra said...

தமிழர்களில் ஊமைத்துரை பல பயணம் மேற்கொண்டு உள்ளான். அவன் கால் சுவட்டில் தமிழ் வரலாறு ஆய்வாளர்கள் பயனிகின்றனரா என்று தெரியவில்லை.


..... கல்வெட்டுக்களையும் வரலாறையும் பாதுகாக்க வேண்டியது கடமை.

Karthick Chidambaram said...

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சித்ரா - நாம் நம்முடைய கல்வெட்டுக்களை காப்பாற்ற வேண்டும்.

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை