தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Sunday, June 13, 2010

என் பயணங்களில் : இன்றய செய்தியும் நேற்றைய சாத்தூரும் !

என் அப்பா வங்கியில் வேலை பார்த்த காரணத்தால் எங்கள் வாழ்க்கை பயணத்தில் தமிழ் மண்ணின் பல பகுதிகளை காண முடிந்தது.
இன்றைக்கு படித்த ஒரு செய்தி என்னை கொஞ்சம் பழைய காலத்திற்கு அழைத்து சென்றது.
சிலேட்டு என்று சொல்லப்படும் சிறிய தூக்கி செல்லும் கரும்பலகை ( அட! - சிலேட்டுன்னா புரியாதா என்ன ? ) விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதை படிக்கிற போது அப்பா சொன்ன நிப்பு கதை ஞாபகத்திற்கு வந்தது. நிப்பு என்பது எழுதொகோல் முனை. இந்த தருணத்தில் நாங்கள் மதுரையில் தங்க வைக்கப்பட்டோம். அப்பா மதுரையில் இருந்து பயணிப்பார் வேலை தளத்திற்கு.

கத்தி முனைகளை விட பேனா முனை வலிமையானது என்கிற கருத்து எல்லாம் எழுத்திற்குதானே தவிர உண்மையில் எழுதொகோல் முனைகளுக்கு இல்லை. அயல்நாட்டு எழுதுகோல்களின்  வரவினால் நம் நாட்டுஎழுதுகோல்கள்  தொலைந்து போயின.

அரசு மைபேநாவில் கை ஒப்பும் இடவும் என ஆணை பிறப்பித்த பின்னர் - பலரும் மை பேனா வைத்திருக்கும் கட்டயத்திற்கு தள்ளப்பட்டனர். இது மாநில அரசின் ஆணை என்று நினைவு. மத்திய அரசு அயல் நாட்டு நிறுவனங்கள் வர அனுமதித்தது.

இந்த ஆணை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. நிப்பு என்பதை பற்றி ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம். அது ஒரு பொருள். அதன் தேவை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து போனது. ஒரு நிலையில் அதன் தேவை முற்றிலும் நின்று போனது.

இந்த அழிவு தருணத்தில் இந்த தொழில் அழிவு நல்லதே என்றும் சொன்னவர்கள் உண்டு. காரணம் இந்த தொழிலும்  சிறுவர்கள் அதிகம் பயன்படுத்த பட்டனர். ஏதோ இந்த தொழில் அழிந்து விட்டதால் சிறவர்கள் நல்வாழ்வு பெறுவதாக யாரவது சொன்னால் அதில் கொஞ்சமும் உண்மை இல்லை. இந்த நிப்பு உற்பத்தி ஒரு குடிசை தொழில் போல் இருந்து வந்தது. இதில் அந்த குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் பணியாற்றினர். இந்த தொழில் இல்லாவிட்டால் வேறு தொழிலுக்கு இந்த சிறுவர்கள் பயனித்திருப்பர். குழந்தைகளின் கல்வி வாய்ப்பிற்கானவழி முறைகளை நாம் பார்க்க வேண்டும்.

இந்த தொழில் அழிவுக்கு வருவது கிட்டத்தட்ட நிறுத்த முடியாத ஒன்றாக இருந்தது. நிப்பு எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது என்று தெரியவில்லை.
நாடக கலை அழிந்து திரை கலை ஆட்சிக்கு வந்ததற்கு சிலர் காலத்தின் கட்டாயம் என்று கதை சொல்லலாம். ஒரு முறை கமல் அவர்கள் கூட அப்படி சொன்னதாக நினைவு.

திரு மனோகர் அவர்கள் - மற்ற மாநிலங்களில் நாடகம் வாழ்வது பற்றி ஒரு நேர்காணலில் சொல்லி இருந்தார். தமிழ்நாடுதான் விதிவிலக்கு என்று தன் ஆதங்கத்தை பதிவு செய்திருந்தார். காப்பாற்ற படவேண்டிய கலைகள், தொழில்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. நிப்பு காப்ற்ற படவேண்டிய தொழில் என்று என்னால் சொல்லமுடியவில்லை. அது அழிந்துவிட்டது. ஆனால் ஒரு தொழில் அழியும் நிலையில் உள்ள போது அந்த தொழில் தெரிந்தவர்கள் அதற்கு அருகாமையில் உள்ள வேருதொழிளுக்கு மாற அரசு மற்றும் தன் ஆர்வ அமைப்புகள் உதவி செய்தால் நலம்.

குழந்தை தொழிலார்கள் பற்றி பேசும் போது எனக்கு எப்போதும்  வரும் கேள்வி அதன் வேர் எது என்று ஆராயாமல் - அதை நிறுத்துவதை பற்றி பேசுவது.மதுவிற்கு பல ஏழைகள் பணம் விரயம் செய்கின்றனர். இதுவும்ஒருகாரணம்.

சிலேட்டுகள் அழிவை நோக்கி பயணிப்பதன் காரணம் எனக்கு விரிவாய் தெரியவில்லை. ஆனால் அதன் காரணம் தற்போதைய கல்வி முறையே.சிலேட்டை காப்பாற்றுகிறேன் என்று கல்வியில் குழப்பம் உண்டு செய்யவேண்டாம். அதற்கு மாற்றாக  சிலேட்டு செய்யும் மைதர்கள் வேறு எந்த தொழில் நோக்கி பயணிக்கலாம் என்று தன்னார்வ / அரசு அமைப்புகள் உதவலாம். வழிகாட்டலாம்.

கல்வி வாழ்ந்தாகவேண்டும் - மனிதன் வாழ்வதற்கு!

பயணம் தொடரும்

7 மறுமொழிகள்:

கோவி.கண்ணன் said...

//
இதில் அந்த குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் பணியாற்றினர். இந்த தொழில் இல்லாவிட்டால் வேறு தொழிலுக்கு இந்த சிறுவர்கள் பயனித்திருப்பர்.
கல்வி வாழ்ந்தாகவேண்டும் - மனிதன் வாழ்வதற்கு!
//

இடுகை சிறப்பாக இருக்கிறது

Chitra said...

நல்ல கருத்துக்களுடன், அக்கறை கொண்டு எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்!

கே.ஆர்.பி.செந்தில் said...

நல்ல அலசல்.. கல்லு சிலேட்டு போய் தர சிலேட்டு வந்தது..
நிப்பு போய் பால் பாயின்ட் வந்துவிட்டது..
இன்னைக்கும் நிப்பு பேனாவை நேசிக்கும் பலர் உண்டு ,, கலைஞர் உட்பட .

Karthick Chidambaram said...

நன்றி கோவி. கண்ணன், சித்ரா, கே ஆர் பி செந்தில்

அப்பாவி தங்கமணி said...

நிப்பு பேனாவும் camel ink ம் natraj geomentry பாக்ஸ்ம் .... அது எல்லாம் ஒரு வசந்த காலம்... நல்ல அலசல்...

Karthick Chidambaram said...

நீங்கள் சொல்லவதெல்லாம் உண்மைதான். அது ஒரு வசந்த காலம். வருகைக்கு நன்றி தங்கமணி.

ஜோதிக்குமார் said...

போங்க சார்.. எங்க ஊர் பேரு (சாத்தூர்) போட்டிருக்கேனு ஆர்வமா ‘க்ளி்க்’ பண்ணுனா..உள்ள ஒரு வார்த்தை கூட சாத்தூரை பத்தி எழுதலையே.. இருந்தாலும் நீங்க எழுதுனதை படிக்கிறப்போ, நான் ஸ்கூலுக்கு போகும் போது நிப்பு கம்பெனியில் வேலை பார்க்கும் பையன்கள் நினைவுக்கு வந்து போனார்கள்.. அருமையான பதிவு. தொடருங்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை