Skip to main content

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான்.

சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

அதிலும் நம்மவர்கள் பலர் அழகாக ஆங்கிலம் பேசுவதை சிலர் பாராட்டியதை பார்த்து உள்ளேன்.

என் ஆங்கில பேராசிரியை சொல்லுவார் - தென் இந்தியர்கள் மட்டும்தான் எல்லா எழுத்துக்களையும் உச்சரிக்க முடியும் என்று. சில வட இந்திய நண்பர்கள் ஆங்கிலம் பேசும்போது இதை நான் நன்றாக உணர்ந்தேன். ஆனால் சொல்லவில்லை. அது பண்பு அல்ல.

சரி செய்திக்கு வருவோம். அவர்கள் கிண்டல் செய்யும் இன்னொரு மாநிலம் பஞ்சாப்.

தெனிந்தியா என்றால் அது தமிழ் தான் பல வடஇந்தியர்களுக்கு. நான் தில்லி சென்று இருந்த நேரம் - ஒருவர் என்னிடம் மதராசியா? என்று கேட்ட போது - ஆமாம் என்றதும் அவர் - சென்னையா ? பெங்களூரா என்றார். எனக்கு புரியவில்லை.

அவர்களுக்கும் இன்னும் தென்னிந்தியாவின் தலைநகரம் சென்னைதான்.
அமெரிக்காவில் ஒரு நண்பர் என்னிடம் - நீங்கள் தமிழரா என்றார் ? ஆம் என்றதும் - சிருவின் படங்கள் எப்படி போகிறது என்றார். நான் அது தெலுகு என்றேன்.

சக் தே இந்திய என்று ஒரு படம் - அதில் ஒரு பெண் தன்னை ஆந்திர மகளிர் என்று சொல்லுவாள். "ஓ தமிழா ? " என்று கேள்வி வந்து விழும்.
இல்லை தெலுங்கு என்றதும் - "ரெண்டும் ஒன்றுதானே என்பார்" கேள்வி கேட்டவர்.

இந்திய மண்ணில் தனியாக சில மாநிலங்கள் தெரிவதற்கு சில காரணங்கள் உண்டு. குஜராத் - காந்தி பிறந்ததினாலும், கலவரங்களாலும்; பீகார் - மாட்டுதீவனத்தாலும் ரயில்வே யாலும்; மராட்டியம் - தொழில்வளத்தாலும்,இருண்ட உலகத்தினாலும்.

ஆனால் இவற்றில் இருந்து வேறுபட்டவை தமிழ் மண்ணும், சீக்கியர்களின் நிலமும். சீக்கியர்களும் தமிழர்களும் - ஒரு காலத்தில் இந்தியா எங்களுக்கு வேண்டாம் விடுதலை வேண்டும் என்று கோரியவர்கள். இருவரும் கடுமையான உழைப்பாளிகள். அதிலும் உலகம் முழுதும் பரவி கிடப்பவர்கள். சிகாகோவில் நான் தமிழ் சங்கங்களும் செல்வாக்கு மிகுந்த தமிழர்களையும் பார்த்து உள்ளேன்.

இந்தியாவுக்கு வெளியே செல்வாக்கு உள்ள ஒரு மொழி தமிழ். இந்தியாவில் வடமொழியில் வேர் கொள்ளாத ஒரே மொழி என்று வாஜ்பாய் வடமொழிக்கான ஆண்டை அறிவிக்கும் போது சொன்ன மொழி தமிழ்.

சீக்கியர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடிய நல்ல மனிதர்கள் - என்று சொல்ல கேள்வி பட்டு உள்ளேன். சர்தார்ஜி நகைச்சுவைகள் மட்டும் அல்ல - தமிழனை பற்றிய நகைச்சுவைகளும் நிறையவே வடஇந்திய மண்ணில் உண்டு. தமிழ் தேறி மா என்று ஒரு நகைச்சுவை உண்டு.

நீங்கள் ஏன் இந்தி பேசுவதில்லை என்றால் - உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதா என்று கேட்டு உள்ளேன். என்ன இருந்தாலும் இந்தி தேசிய மொழி என்று சொல்வார்கள்.

 என்னோடு வேலை பார்க்கும் சில குஜராத்திகள் எங்கள் மொழியில் கலைகள் அழிந்து வருகின்றன - எல்லாம் பாலிவுட் மாயம் ஆகி வருது என்று சொல்லி உள்ளனர்.

பிஹாரி, மைதிலி, போஜ்புரி இதெல்லாம் ஹிந்தியால் காணமல் போன / போய்கொண்டிருக்கும் மொழிகள்.

சரி - ஹிந்தி மனிதர்கள் நம்மை ஏன் கிண்டல் செய்யவேண்டும். த்ரீ இடியட்ஸ் என்று ஒரு ஹிந்தி படம் அதில் எல்லோரும் வெறுக்க வேண்டும் என்றே உருவாக்கபடும் பாத்திரம் - நான் பாண்டிச்சேரி க்காரன் என்றே பதிவு செய்கிறான். அந்த கதாபாத்திரத்தை புரிந்து கொள்ளுங்கள் - நீங்கள் நம் மீதான விமர்சனங்களை புரிந்து கொள்வீர்கள்.

கல்வியில் சிறந்தவன் தமிழன் அதிலும் ஆங்கிலத்தில். தமிழர்கள் தான் இந்திய விடுதலை தருணத்திலும் அதற்கு பின்னும் சில காலம் ஆட்சியர் பொறுப்பில் அதிகமாய் இருந்தவர்கள். இதை எப்படி மாற்றுவது என்கிற போது வந்த யோசனைதான் மாநில மொழியில் பரிட்ச்சை ஆட்சியர் தேர்வுகளுக்கு என்று. அதிலும் தமிழர்கள் ஓரளவு வென்றனர். இப்போது மத்திய பல்கலைகலகம். நாடு முழுக்க ஒரே கல்வி முறை என்பது எல்லாம்.

உழைப்பில் சிறந்தவர்கள் பஞ்சாபியர்கள் - வட இந்தியாவில் நான் பார்த்த லாரி ஓட்டிகள், ஆட்டோ ஓட்டிகள், கடும் உழைப்பாளிகள் எல்லாம் அவர்களே. அவர்களின் உழைப்பு எல்லோருக்கும் தேவை படுகிறது. ஆனால் அவர்களின் முன்னேற்றம் பிடிக்கவில்லை.

இந்தியாவில் இலங்கையில் பிரச்சனை என்றபோது அதை பற்றி கொஞ்சமாவது மனிதர்களாய் சிந்தித்தவர்கள் சீக்கியர்கள் ( நான் பஞ்சாபில் வசிப்பவர்களை பற்றி சொல்கிறேன்).

ஆக - தமிழ் சொல்வது போல் பழுத்த மரத்திற்கான கல்லடிதான் இந்த நகைச்சுவைகள். இப்போது ஒரு புதினம் வெளிவந்து உள்ளது. இன்னும் படிக்கவில்லை. சேத்தன் பகத் ( சேத்தன் என்று எழுதினால் கூகுளே transliteration  -இல் செத்தான் என்று வருதுங்க ) எழுதி உள்ள புதினம் 2 states. அதே மூன்று முட்டாள் கதை எழுதியவர்தான்.

பகத் ஒரு பஞ்சாபி - அவர் மனைவி ஒரு தென் இந்தியர் என்று கேள்வி. இந்தியாவில் அதிகம் கிண்டல் செயப்படும் இரண்டு மாநிலங்கள் பற்றிய புதினம்! படித்தவர்கள் சொல்லுங்கள் கருத்தை.

Comments

  1. நன்றி கோவி கண்ணன்

    ReplyDelete
  2. நல்பதிவு. சீக்கியர்கள் யாரும் பிச்சை எடுப்பதில்லை. ஆனால் தமிழன் ...........

    ReplyDelete
  3. எப்போதும் புத்திசாலிகளை முட்டாள்கள் முந்த முடியாது, அதனால்தான் இப்படி ஒரு கிண்டல்
    வடநாடு என்ன, அருகில் உள்ள மலையாளிகள் நம்மை செய்யும் கிண்டலுக்கு அளவே கிடையாது ..

    ஈழப் பிரச்சினையில் பஞ்சாப் மட்டுமே நமக்கு ஆதரவாக இருந்தனர் ..
    மனித நேயம், புரட்சி இரண்டும் சமமாக கொண்டவர்கள் அவர்கள் ..

    ReplyDelete
  4. Madras-karanin anavasiyamana payamum thevai illatha koochamum vittolithal nam munnetram abarimithamaha irukkum

    ReplyDelete
  5. நன்றி கே . ஆர் . பி செந்தில். நாம் முன்னேறியே ஆகவேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

    ReplyDelete
  6. சர்புதின் - நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  7. அமாம் கலாநேசன். நம்மில் பிச்சை எடுப்பது எப்போது மறையுமோ ?

    ReplyDelete
  8. ஜெய் ஹோ - என்று போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான் போல.....

    ReplyDelete
  9. கடல் அன்பன்June 14, 2010 at 3:22 AM

    "நாடு முழுக்க ஒரே கல்வி முறை என்பது எல்லாம்"
    அப்படி என்றால்?

    ReplyDelete
  10. Kadal Anban avargale - Nadu muluvathirkkum ore paada thittathai Manithavala membaduttu amaichagam vagukkum athai ellorum padippathu. Kittathatta CBSE ( Central Board of School Education ).

    ReplyDelete
  11. thonmayaana mozlihazlil nam mozi ontu, 64 kalaikazlaium thottuvikka perum karanamai eruntha nam mozliyai vemarcippavarkal manitharkaley kedaiyathu,
    tamil meethu pattu kondu ezlutherukkum en nanbanukku en valllthukkal.

    ReplyDelete
  12. தமிழனை இழிவுபடுத்தும் செயல் இந்தியாவில் மட்டுமல்ல, மலேசியாவிலும் நடக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

ஆங்கிலத்தில் எழுதுங்கள்

நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர். சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர். நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?). என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை ) ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? ) சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு. நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com   என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது. மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம். இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் -  நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர