தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Tuesday, June 15, 2010

என் பயணங்களில்: வெள்ளையான பெண்களும் நானும்

வழக்கம் போல அப்பாவிற்கு இடமாறுதல் ஆணை வந்திருந்தது. கொஞ்சம் காலம் கடந்தேனும் - எங்களை அப்பா அந்த ஊருக்கு அழைத்து போகவேண்டி இருந்தது.

முதல் நாளில் இருந்தே அந்த ஊர் ஒரு புதிர். அவர்கள் பேசுகிற தமிழுக்கும் எங்கள் தமிழுக்கும் நிறைய வேறுபாடு. அவர்கள் வாழும் வாழ்க்கைக்கும் எங்கள் வாழ்க்கைக்கும் நிறையவே வேறுபாடு.

முதன் முதலில் என் வாழ்வில் நான் பார்த்த மிக பெரிய வேறுபாடு அங்கேதான் நிகழ்ந்தது. என்னை அப்பா பள்ளியில் சேர்த்து விட்டார்.புதிய பள்ளி - புதிய நண்பர்கள் - புதிய தொடக்கம்.

அங்கே கொஞ்சம் வெள்ளயாக சில மாணவிகளும் - நம்ம ஊரின் அழகான பழுப்பு மாணவிகளும் இருந்தார்கள். பையன்களும் அப்படிதான்.

முதல் வகுப்பு ஆங்கிலம்.வந்தார்கள் பாடம் நடத்தீனார்கள். புரிந்தது - நமக்கு தெரிந்த அளவு.

அப்புறம் கணிதம். வந்தார்கள். மிரட்டினார்கள் - ஆமாங்க எனக்கு கணக்கு என்றாலே கொஞ்சம் பயம். அதுவும் இந்த நம்பரை எல்லாம் கரும் பலகையில் எழுதினா எதோ நம்ம அது சாப்பிட வர்றமாதிரி இருக்கும்.

மூன்றாவது வகுப்பு ஆரம்பிச்சுது. வகுப்புல பாதி பேருங்க எழுந்திரிச்சு போய்ட்டாங்க. அதிலும் இந்த வெள்ளையா இருந்த பொண்ணுங்க எல்லாம் போய்டுச்சுங்க.

ஒரு
பையன் என் பக்கத்தில் வந்து - "தமிழா ?" என்றான். எனக்கு புரியவில்லை - நம்ம என்ன இங்கிலீஷ் காரன் மாதிரியா இருக்கோம்?தலையை ஆட்டிவிட்டு உட்கார்ந்தது இருந்தேன்.

ஒரு
ஆசிரியை வந்தார். தமிழ் பாடம் நடத்தினார். வகுப்பு முடிந்தது. மீண்டும் வந்தார்கள் அந்த வெளிநடப்பு செய்திருந்த பெண்களும் ஆண்களும்.
என்ன கொடுமைடா இது ? இந்த வெள்ளையான பெண்கள் தமிழா சேத்துக்க மாட்டாங்களா ?


பக்கத்தில் இருந்த மாணவனிடம் கேட்டேன். அப்போது தான் அவன் சொன்னான்.
"அவர்களுக்கு எல்லாம் இந்தி இரண்டாம் மொழி. நமக்கு தமிழ்"

காலம் கடந்தது கொஞ்ச காலத்திற்கு முன் வேலைசெய்ய அந்த ஊருக்கு போய் இருந்தேன்.
"என்னங்க ? பாட்டு போடவேண்டியத்து தானே" - என்று என் அலுவல் பேருந்தில் கேட்டேன்.

"போடலாம்தான். பலருக்கு தமிழ் தெரியாது அதான்" - என்றார் பேருந்து பொறுப்பாளர்.

அந்த ஊரின் பெயர் சென்னை. தமிழ் நாட்டின் தலை நகரம். வாழ்க தமிழ்!

பயணம் தொடரும்

9 மறுமொழிகள்:

Chitra said...

அந்த ஊரின் பெயர் சென்னை. தமிழ் நாட்டின் தலை நகரம். வாழ்க தமிழ்!

..... நினைச்சேன்,...... அதான்னு..... சென்னையில் தான் பிறந்து வளர்ந்து படித்து விட்டு வந்தாலும் - தமிழ் சரியாக பேச, எழுத, வாசிக்க தெரியாமலே இருக்க முடியும். வேதனையான உண்மை. எங்கள் நண்பர்கள் குழுவிலும் சிலர் இப்படி உண்டு.

soundr said...

நல்ல பரையேற்றம்

Karthick Chidambaram said...

நன்றி சித்ரா, சௌந்தர்.
சித்ரா அக்கா Profile போட்டோ கலக்குது!

abul bazar/அபுல் பசர் said...

சென்னையைப் பற்றி இவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறீர்கள் கார்த்திக்.
சென்னை மீது ஏன் இந்த கோபம்.

அப்பாவி தங்கமணி said...

என்ன கொடுமை சார் இது? செம்மொழி தழைத்த நமது ஊரிலா இந்த நிலை....ஐயகோ.... (சரி சரி...சீன் போதும்னு சொல்றது இங்க வரைக்கும் கேக்குது...)

Karthick Chidambaram said...

Abul bazar sir - Naan kopamaa eluthave illeenga :-)

Karthick Chidambaram said...

Thanks for the comment thangamani.

கடல் அன்பன் said...

பொதுவாக நம்மை 'மாநிறம்' என்று தான் குறிப்பிடுவோம்.பழுப்பு என்ற சொல்லாடல் நன்று.

Karthick Chidambaram said...

நன்றி கடல் அன்பன்!

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை