தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Thursday, September 2, 2010

ஆங்கிலத்தில் எழுதுங்கள்

நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர்.
சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர்.

நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?).
என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை )

ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? )
சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு.

நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com   என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது.

இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது.
மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம்.

இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் -  நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.

8 மறுமொழிகள்:

Chitra said...

இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் - நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.

..... Twice...... தமிழில் ஒரு முறையும் - once in English too?

அருண் பிரசாத் said...

வந்துடுவோம்....

Karthick Chidambaram said...

Thanks Chitra, அருண் பிரசாத்

வானவன் யோகி said...

ஆங்கிலத்தைக் கவனித்துக் கொள்ள அகிலத்தில் பல்லாயிரக்கணக்கிலும்,விடயங்கள் பல்லாயிரம் டன் கணக்கிலும் உள்ளது.அப்படித் தேவைப்படுவோர்க்கு அதனதன் சுட்டிகள் இணைப்பதே போதுமானது என்பது எனது கருத்து.

தமிழில் அதுவும் ”தமிழ்திரட்டிகள்” என்றெல்லாம் இணைத்துவிட்டு ஆங்கிலத்தில் எழுதுவேன் எனச் சொன்னால்!!!!!!!!??????(நான் சொல்வதை அப்படியே கேட்க தாங்கள் ஒன்றும் எனதடிமையில்லை)

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் ஏற்கனவே விடயங்கள் கொட்டிக் கிடக்கும் ஆங்கிலத்திலேயே எழுதினால் அம்மொழியின் சிறப்பு எங்களைப் போன்ற பாமரரும் அறிந்து அகமகிழ்தல் கூடும்...

பின்குறிப்பு:- எங்களை போன்ற பாமரர்களைத் திட்டுவதாக இருப்பினும் எமது அழியும் மொழியினூடாகத் திட்டுவது,எங்களுக்குப் புரிவதுடன்,மன மகிழ்வையும் தரலாம்.

ம.தி.சுதா said...

கட்டாயம் எழுதுங்கள் வாழ்த்துக்கள்...

தனி காட்டு ராஜா said...

வானவன் யோகி சொன்னதை வழி மொழிகிறேன் ....
என்னை போன்ற பாமர்களுக்காக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும் Karthick...

Karthick Chidambaram said...

நன்றி வானவன் யோகி
நன்றி ம.தி.சுதா
நன்றி தனி காட்டு ராஜா

தமிழுக்குதான் முன்னுரிமை. ஆங்கிலத்திலும் எழுதலாம் அவ்வளவே.

பிரசன்னா said...

அட..! எனக்கும் இதே எண்ணம் உண்டு :) வாழ்த்துக்கள்..

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை