Skip to main content

கராடே கிட்: சீனமும் அமெரிக்காவின் வலியும்

வெள்ளி மாலை இந்த திரைப்படம் செல்வது என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தோம்.

ஏற்கனவே வந்த கராடே கிட் படங்களை பார்த்தவன் என்பதோடு மட்டும் அல்லாமல் - ஜாக்கி இருக்கிறார் என்பதாலும் - இந்த படம் நாங்கள் பார்க்க வேண்டிய பட்டியலில் வந்து இருந்தது.

மாலை நேர மயக்கத்தில் - வாரக்கடைசியின் துவக்கத்தில் திரைப்படம் பார்ப்பது மகிழ்ச்சி தருவது.

நாங்கள் திரை அரங்கம் நோக்கி பயணித்தோம்.

திரை அரங்கில் கூட்டம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருந்தது.

திரையில் படம் ஆரம்பிக்கையில் என் கண்களில் விழுந்த ஒன்று - படம் தயரிதவர்களில் ஒருவர் வில் ஸ்மித்.

அமெரிக்காவை பிரதிநிதுவபடுத்தும் மக்களில் நம் வண்ணத்தோடு ஒத்து செல்லும் இந்த ஆப்ரிக்க அமெரிக்கர்கள் நிறைய. நம்மவர்களும் இப்போது அமெரிக்க பிரதிநிதிகள் ஆகிவருகின்றனர்.

திரையில் படம் விரியும் போதே - நாயகனின் ( சின்ன பயங்க  ) தந்தை மரணடைந்துவிட்டார் என்பது வெகு நேர்த்தியாக சொல்லப்பட்டுவிடுகிறது. அப்போதே சரன்யவோ, மனோரமாவோ, சுஜாதாவோ தான் நாயகனின் தாய் என்று மூளை நினைக்க - தாயாக வேறு ஒருவர் வர - நாம் பார்ப்பது இங்கிலீஷ் படம் என்று மூளை சொன்னது.

சீனாவிற்கு நாயகனின் குடும்பம் நகர்கிறது. சினம் மிகுந்த சீனம் நாயகனுக்கு பிடிக்கவில்லை.ஆனால் அவனது தாய்க்கு வேறு வழி இல்லை.
"இது தான் நம் வீடு. டெட்ராய்டில் எதுவும் இல்லை" - என்று சொல்லும் போது டெட்ராய்ட் பற்றி தெரிந்தவர்கள் அந்த வலியை அறிந்திருக்க கூடும்.
இன்று அந்த மாகாணம் காலி செய்யபடிகிறது. GHOST CITY என்கிறார்கள். வெறிச்சோடுகிறது என்று பொருள்.

பல நிறுவனங்கள் தங்கள் இடத்தை அங்கே இருந்து மாற்றி விட்டனர்.
"என் தாய் ஒரு ஆடோமொபில் ( தமிழில் செரியான வார்த்தை என்ன ? ) நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவருக்கு இடமாறுதல் ( நல்ல வேலைப்ப எங்கப்பா வேலை செய்த வங்கியில் தமிழ் நாட்டிற்குள்தான் சுற்ற விட்டனர் )" - என்று நாயகன் சொல்கிறான்.

அங்கே ஒரு சீன சிறுமியை பார்கிறான். மனம் ஈர்க்கபடுகிறான். காதல் இல்லை நண்பர்களே.

அப்போதுதான் ஒரு சீன சிறுவனிடம் சண்டை வருகிறது. சீனம் பிடிக்காமல்  போகிறது. ஜாக்கி ஒரு முறை நாயகனை காப்பாற்றுகிறார்.
பின்னர் அவனுக்காக வாதாடுகிறார். வேறு வழி இன்றி கராடே கற்று தருகிறார். சொல்லப்போனால் குங் ப்ஹு. ( தமிழர் தற்காப்பு கலை )
குங்  ப்ஹு கிட் என்று பெயர் வைத்திருக்கலாம்.

சீன சிறுமியின் குடும்பம் ஒரு நிலையில் நாயகனுக்கு முதுகை காட்டி விட - ஜாக்கியின் உதவியோடு சென்று சமாதான கடிதம் வாசிக்க.
நம்ம ஊரு ரஜினி காந்த் முத்துவில் பேசும் வசனம் பேசுகிறது சீன குடும்பம்.
கொடுத்த பொருளையும் கொடுத்த வாக்கையும் திருப்பி வாங்க மாட்டோம் நாங்கள் என்று. யாருங்க வசனம்?

ஒழுக்கம் முதலில் கற்று தரபடுகிறது. பின்னர் ஒரு நிலை படுத்தல் பின்னர் கொஞ்சம் குங் ப்ஹு. கடைசியில் நாயகன் வென்றானா என்பதே கதை.

சீனத்தின் அழகை பார்க்கும் போது மனம் கொள்ளை போகிறதும். அதுவும் மலை மேல் ஒரு பெண்ணும் பாம்பும். சீனம் சிலிர்க்க வைக்கிறது.

நம்ம ஊரின் வறுமை பணமான அளவு மேன்மை பணமாகவில்லை.

முடிந்தால் ஒரு முறை போய் பாருங்கள். ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Comments

  1. /////நம்ம ஊரின் வறுமை பணமான அளவு மேன்மை பணமாகவில்லை.////

    ..... நீங்கள் சொல்வது உண்மை. நம்மூரு உயரிய அம்சங்களை வைத்து இன்னும் படங்கள் வர வேண்டும்.....

    ReplyDelete
  2. Thanks for the visit and the comment Chitra

    ReplyDelete
  3. இன்னும் பார்கல கார்த்திக்.. பார்க்க தூண்டுகிறது உங்கள் பதிவு..

    ReplyDelete
  4. பாத்திருவோம்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

ஆங்கிலத்தில் எழுதுங்கள்

நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர். சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர். நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?). என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை ) ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? ) சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு. நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com   என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது. மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம். இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் -  நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர