தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Wednesday, June 23, 2010

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 3

டை உடைந்து வெள்ளம் வடிவத்தை நான் பார்த்திருக்கிறேன். எங்களிடம் தப்பிக்க வழியில் சேதம் ஏற்படுத்துவதை  பார்த்திருக்கிறேன்.
சமூக விரோதிகளிடம் பண்பை எதிர்பார்க்க முடியாது. கெஞ்சி மன்றாடிய பலரை போட்டு தள்ளி  உள்ளோம். எங்களுக்கு தெரியும் அதெலாம் உயிர் வழியில் பிறக்கும் நாடகம் என்று.

நான் எப்போதும் இறக்கபட்டதில்லை சமூக விரோதிகளுக்கு; ஆயுதம் ஏந்திய சட்டவிரோதிகளுக்கு; ரௌடிகளுக்கு.

ஆனால் நான் அங்கே பார்த்தது ஒரு மிக பெரிய ஆச்சரியம். வெள்ளத்தின் நடுவே பிழை குடிகளுடன் குடும்பம் குடும்பமாய் மக்கள் வெள்ளம்.

வண்டியை விட்டு இறங்கினேன்.
என் குளிர் கண்ணாடியை கழட்டினேன். கதிரவன் மேலே இருந்து செங்குத்தாய் விழுந்தான். வட்ட வட்டமாய் அவனது கதிர்கள் வட்டமிட்டன ஒரே நேர்கோட்டில்.

திரும்பிப்பார்த்தேன் - பைரவி, நடுக்கத்துடன் இருந்தால் ஜீப்பில்.

எங்கள் வண்டியின் ஓட்டுனர் இறங்கி வந்தார். நான் அந்த நீர் வெள்ளத்தின் மேல் என் அழுத்தமான பூட்ஸ் கால்களை அழுத்தி வைத்திருந்தேன்.
நான் எங்களுக்கு பின்னல் வந்த ஜீப்பை வெறித்து பார்த்தேன்.

இந்த பகுதி இன்ஸ்பெக்டர் இளைய பெருமாள் அந்த ஜீப்பில்தான்  இருந்தார். வேகமாய் ஓடி வந்தார்.
"சார் - இவனுங்க மடசமிக்கிட்ட காசுவன்ன்கிட்டு வந்திருப்பாணுக. சுட்டு தள்ளிடலாம்"

நான் அவர் கண்களை நேருக்கு நேராக பார்த்தேன். சுடுவதால் பிரச்சனைதான் வரும்.
நான் அவர்களை நோக்கி நடந்தேன்.
"அய்யா திரும்பி போய்டுங்க"
"நான் நெனச்சா உங்கள சுட்டு போட்டுடுவேன்" - கத்தினேன்

அவர்களிடம் ஒரு அசைவும் இல்லை. வானத்தை நோக்கி எங்கள் படை சுட்டது.
வழி மறித்திருந்தவர்களை பார்த்தேன். கத்தியும் அருவாளும் கம்புகளும் அவர்களிடம் இருந்தது. சட்டவிரோதிகளிடம் என்ன பைபிளும் கீதயுமா இருக்கும் ?

வேறு வழி இல்லை இவர்களை சுட்டுதான் ஆகவேண்டும்.
"சூட்" - கட்டளை  இட்டேன்.

நான் நினைத்த மாதிரியே அவர்கள் எங்களை தாக்கினர். துப்பாக்கி சூடுகள் நடக்கும் போதே நாங்கள் பயணித்தோம்.

ரம்யமான  மலை பகுதி. எங்களுக்கு என்று ஒரு வீடு. கண்ணுக்கு இனிமையான  பச்சை. சொர்கத்தின் தரை கூட பச்சையாகதான் இருக்குமோ.

பைரவி கொஞ்சம் பயன்திருந்தாலும். அவளுக்கு தெரியும் இது எங்கள் வாழ்வின் அங்கம் என்று. சிங்கத்தின் மனைவி என்றால் புலியின் கூச்சலுக்கு கூட கொட்டாவிதான் விடவேண்டுமே தவிர பயப்பட கூடாது. அவள் சிங்கத்தின் மனைவி. என்னவள்.

வெள்ளை வண்ண சுடிதாரில் நீல வண்ண பூக்கள் பேச அவள் அந்த பச்சை நிலத்தின் அழகை அதிகப்படுத்தினாள்.

நான் ஒரு சின்ன வெள்ளை வட்ட  மேசைக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்து செய்தி எட்டில் மூழ்கி இருந்தேன். அவளை பார்த்தேன். அவள் பூக்களை வருடிகொண்டிருந்தால். இனம் இனத்தோடுதானே சேரும். மென்மை மேன்மயோடுதானே சேரும்.

என் தொலை பேசி சிணுங்கியது. இளைய பெருமாள் அழைக்கிறார்.
"சொல்லுங்க பெருமாள்"

என் வாழ்நாளில் ஒரு திருப்புமுனையான நாளை சந்திக்க இருக்கிறேன் என்பது அப்போது எனக்கு தெரியாது. கிளம்புவதற்கு ஆயத்தமானேன்.
என் ஜீப் கிளம்பியது.

அந்த நாளின் நினைவு இன்றும் உள்ளது. நான் மறக்கமாட்டேன் அந்த நாளை.

தொடரும்

5 மறுமொழிகள்:

Chitra said...

முக்கியமான இடத்துல, BREAK ....... very interesting.

Karthick Chidambaram said...

Thanks Chitra

அப்பாவி தங்கமணி said...

//வெள்ளை வண்ண சுடிதாரில் நீல வண்ண பூக்கள் பேச அவள் அந்த பச்சை நிலத்தின் அழகை அதிகப்படுத்தினாள்//

அழகான வரிகள்

தனி காட்டு ராஜா said...

//சிங்கத்தின் மனைவி என்றால் புலியின் கூச்சலுக்கு கூட கொட்டாவிதான் விடவேண்டுமே தவிர பயப்பட கூடாது//

தல ....விஜய் கூட உங்க கிட்ட பிச்சை வாங்கணும் போல இருக்கே...உங்க பஞ்ச் டயலாக் ...

Karthick Chidambaram said...

@தனி காட்டு ராஜா
அட! நீங்க சொன்ன உடன்தான் நானே ரொம்ப ரசித்தேன்.
திரைத்துறைக்கு அனுப்பிடுவோம் .... :-)

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை