Skip to main content

Posts

Showing posts from December, 2010

சோழர்களும் அவர்கள் தோழர்களும் - III

ஒரு கட்டிட கலை வேறு நாடுகளை நிலங்களை சென்று அடைய வேண்டும் என்றால் - அதற்கு அந்த மக்கள் வேறு நாடுகளுக்கு பயணிக்க வேண்டும். வர்த்தகர்களும் அரசர்களும் செய்த மிகப்பெரிய பங்களிப்புகளில் இதுவும் ஒன்று. மயன்களின் கட்டிடகலையும் அவர்கள் தமிழர்களாக இருக்கலாம் என்கிற ஆய்வு நிலையை தொட்டது. தமிழ் வணிகர்களில் பலரும் நாம் அறிந்தவர்களாக இல்லை. ஏலேல சிங்கர் என்று சொல்லப்படும் வள்ளுவரின் காலத்தில் வாழ்ந்த ஒரு வணிகரும் சிலப்பதிகாரத்தில் வரும் மாசாத்துவான், மாநாய்க்கன்  என்கிற வணிகர்கள்தான் நாம் அறிந்தவர்கள். இந்த வணிகர்களின் கட்டிடகலை ஆய்வுக்கு உரியது. இவர்களின் இல்லம் ஒன்றில் தங்க கலசம் இருந்ததாகவும் அதனால் அரசர் கோபம் கொண்டதாகவும் செய்தி உண்டு. கலசம் என்பது கோயில்களில் மட்டும் வைக்கப்படும் வடிவமைப்பாக இருந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. இஸ்லாமிய கட்டிட காலையில் இது மிகசாதரனமாக உண்டு. இந்த வணிகர்களின் கட்டிடக்கலையில் இஸ்லாமிய தாக்கம் உண்டு என்று படித்த ஞாபகம். இது  வேறு விதமாக இருந்தாலும் இருக்கலாம். வ (கால் பாகம் ? ) என்கிற எழுத்துடன் கூடிய சிற்ப வேலை கூடிய தூண்களை  நான் பார்த்து உள்ளேன்.

சோழர்களும் அவர்கள் தோழர்களும் - II

தமிழ் மண்ணின் வரலாற்றில் என்னை கவர்ந்த மாந்தர்களில் ஊமை துரை குறிப்பிட தக்கவர். கட்டபொம்மனின் வீழ்ச்சிக்கு பிறகு ஊமைத்துரை கட்டிய கோட்டையை பற்றி சொல்லும் போது அது ஒரு வார காலத்துக்குள் கட்டி முடிக்க பட்டது என்றும் அதற்க்கு பயன்படுத்தப்பட்ட கலவை கரும்பு முட்டை போன்றவை எல்லாம் கொண்டு இருந்தது  என்று சொல்லப்படுகிறது. கோட்டைகள் பெரும்பாலும் வேகவேகமாக கட்டவேண்டிய சூழ்நிலை இருந்து உள்ளது. அடுத்ததாக வீழ்ந்த மன்னன் கட்டிய கோட்டையில் வென்ற மன்னன் ஆழ விரும்பவில்லை. கோயில்கள் என்று வரும்போது - கோயில்கள் மதம் மாற்ற பட்டு உள்ளன. ஆக சில நேரங்களில் கல் கோட்டைகள் இருந்தாலும் அவை நொறுக்கவே பட்டு உள்ளன. இன்னும் ஒன்று அவசர கதியில் கோட்டைகள் கட்டப்பட்டாலும் அவை வலுவுடனம் பிரங்கி குண்டுகளை தாங்கும்  நிலையில் இருந்தன என்று ஊமைத்துரையின் கோட்டை பற்றி வெள்ளையர்கள் பதிவு செய்து உள்ளன. உலகின் சிறந்த தச்சர்கள், கட்டுமான வல்லுனர்கள் என்று தமிழர்கள் ஒரு காலத்தில் போற்றப்பட்டு உள்ளனர். தேவதச்சர்களாக ராமாயணம் வர்ணிக்கும் மாயன் மற்றும் நீலன் ஆகிவர்கள் தமிழர்களாகவே இருக்க வாய்ப்புகள் உண்டு. கோட்