எப்போதும் எங்களுக்கு இடமாறுதல்கள் புதிய அனுபவங்கள் பலவற்றை கொண்டு வந்து உள்ளன..
எங்களின் வாழ்வில் நல்ல அனுபவங்கள் பல இந்த பயனத்தில் உண்டு - நாங்கள் தமிழ் மண்ணின் பூர்வ குடிகளை ஒரு முறை பார்த்தோம். அவர்களை பண்பாடு அற்றவர்கள் - பட்டிகாட்டார்கள் - என்று யாரவது இன்னமும் சொல்லி கொண்டுதான் இருக்கின்றனர். இது வருத்தத்திற்கு உரியது.
அந்த உள்வாங்கிய சிற்றூரின் உள்ளே எங்களுக்கு வங்கி அமைந்து இருந்தது. அப்பாவிற்கு எங்களை எப்போதும் கூடவே அழைத்து செல்லும் வழக்கம்.இதனால் என் பள்ளி கல்வி கெட்டாலும் - உலக கல்வி விரிவடைந்தது.
எங்களுக்கு அந்த வங்கி கட்டடத்தின் உரிமையாளர் அவர்கள் வீட்டிலேயே வாடகைக்கு ஒரு வீடு கிடைத்தது. நாங்கள் தான் அங்கே தங்கினோம்.மற்றவர்கள் பக்கத்தில் இருக்கும் நகரத்தில் தாங்கிக்கொண்டனர்.
அந்த வீட்டின் ஒரு பகுதியில் வீட்டுக்காரர்கள். இன்னொரு பகுதி வாடகை பகுதி - எங்கள் இடம்.
எப்போது எது சமைத்தாலும் எங்களுக்கும் கொண்டு வந்து தருவார்கள். அவர்கள் மிகவும் வெள்ளந்தியான மனிதர்கள். ஒரு நாள் அவர்களின் பேச்சின் போது சுவாரசியமாக நிறைய விஷயம் சொல்லினர். வேட்டையாட போவது பற்றி.
வேட்டை என்றால் சிங்க வேட்டை, புலி வேட்டை எல்லாம் இல்லை. அருகில் காடு இருந்தாலும் - சிங்கம் புலி எல்லாம் இல்லை.
அவர்கள் நரி வேட்டை ஆடுவது கூட இல்லை. அவர்கள் பெரிய வேட்டை என்று சொன்னது காட்டு பன்றி பற்றி. அது கரும் பன்றி. அம்மா ஒரு நிமிடம் திகைத்து விட்டார்.
அப்புறம்தான் உச்சகட்டமே - அவர்கள் அந்த பன்றி கரியின் ருசியை பற்றி பேசினர். ஒரு நிலையில் - அது சமைத்தால் உங்களுக்கு தருகிறோம் என்று சொல்ல அம்மா - இல்லைங்க நாங்க எல்லாம் சைவமங்க ( அட! முழு பொய்ங்க ) என்கிற மாதிரி சொன்னார்.
எனக்கு ஆச்சிரியம் - இன்னமும் வாழும் பாம்பு பிடிக்கும் இருளர்கள். காட்டு பன்றி பிடிப்பவர்கள், உள்ளார்கள். இவர்கள் பூர்வ குடிகள். இவர்களுடன் சேர்ந்து வாழ்வது நமக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் இவர்களின் வாழ்விற்கு அரசுகள் சில விடயங்கள் செய்கின்றனர் - குறைந்த பட்சம் தமிழ் நாட்டில். பாம்பை பிடித்து இருளர்கள் அரசிடம் பாம்பு பண்ணைக்கு கொடுலாம் என்று கேள்வி பட்டு உள்ளேன்.
தமிழ் மண்ணில் ஒரு பச்சை வேட்டை - இது வரை இல்லை. நல்லதே நடக்க வேண்டுவோம்.
பயனம தொடரும்.

Interesting facts. :-)
ReplyDelete