Skip to main content

த நா வரலாறு : திப்புசுல்தான் ஒளிந்திருந்த திண்டுக்கல்

இந்த இடுக்கயோடு த நா வரலாற்றை கொஞ்சம் இடை நிறுத்தலாம் என்று எண்ணம். இன்னும் நிறைய எழுத வேண்டி உள்ளது.ஆனால் அதற்கு இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் ஆழமாய் எழுத வேண்டும்.

தமிழர்கள் வரலாறு பற்றி நிறையவே சிந்திக்க வேண்டி உள்ளது. தமிழனின் வரலாறு தமிழின் வரலாறு வேண்டும் என்றே சில தருணங்களில் அழிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி தமிழ் வரலாறு இன்னும் ஒளிந்து கிடக்கிறது.

இந்த பதிவில் நண்பர் செந்தில் கேட்ட ஒன்றை என்னால் இயன்றவரை எழுத முற்சிக்கிறேன். கோட்டை என்று முடியும் ஊர்கள் நகரங்கள் பற்றி எழுத முயல்கிறேன்.

கோட்டை என்பது அரணுக்குள் இருக்கும் இடம் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். கோடை என்பது அறனும் அதுற்குள்ளும் ஆன பகுதி. அதாவது பாதுகாப்பான பகுதி.

அது எங்கள் கோட்டை என்று சொல்லும் வழக்கம் இன்றும் உள்ளது. இயற்கை அமைத்த அரண்கள் தாண்டி மனிதனுக்கு அரண் அமைக்க வேண்டிய நிலை வந்தது. அதுதான் கோட்டை என்று இன்று நாம் அழைக்கிறோம்.

அருப்புக்கோட்டை, நிலக்கோட்டை, கிழாநிலக்கோட்டை, புதுக்கோட்டை, நாட்டரசன்கோட்டை என்று எல்லாம் எத்தனையோ இருந்தாலும் இவற்றில் எத்தனையில் கோட்டை உள்ளது என்று ஆய்வு செய்ததால் தெரியும்.

கோ என்றால் அரசன். கோவின் வீட்டைதான் கோட்டை என்று சொல்கிறார்களோ என்று ஆய்வு செய்வதும் நல்லதே. கோயில் என்பதற்கு அரசனின் இல்லம் என்றுதான் பொருள். அரசர்கள் ஒரு காலத்தில் இறைவனாக போற்றப்பட்ட வழக்கம் உண்டு. நேபாளத்தின் கடைசி மன்னரை கூட விஷ்ணுவின் அவதாரம் என்றுதான் அந்த மக்கள் நம்பினார்.

எங்கோ படித்த ஞாபகம் - இது விவிலியம் ( பைபிள் ) பற்றியது. யாருக்கேனும் கருத்து வேறுபாடு இருந்தால் மன்னிக்கவும்.

இயேசு பிறக்க போகிறார் என்கிற செய்தி கிழக்கில் இருக்கும் சிலருக்கு தெரிகிறது. அவர்கள் உடனே பயணிக்கிறார்கள் இறைவனின் பிள்ளையை பார்க்க. அவர்கள் திரவிய வர்த்தகர்கள். நேராக அரசனிடம் சென்று பிள்ளை பிறந்து விட்டதா ? வாழ்த்துக்கள் என்கிறார்கள்.

இந்த கதை உங்களுக்கு தெரியும். இது உலகம் அறிந்த கதை. விவிலியத்தில் இவர்கள் கிழக்கில் இருந்து வந்தார்கள் என்று உள்ளதா என்று தெரியவில்லை. கிழக்கு என்பது இந்தியாவை குறிப்பது. இஸ்ரேலுக்கு கிழக்கில் இருப்பது இந்தியா. திரவிய வர்தர்கர்கள் என்றால் திரவிடார்கள்.
திராவிடர்கள் என்றால் தமிழர்களாக இருக்கலாம். கடவுள்தான் அரசன் - அரசன்தான் கடவுள் என்பது தமிழ் நம்பிக்கையாய் இருந்திருக்க வேண்டும். மிக விரைவில் தமிழன் இதில் இருந்து விடுபட்டிருக்க கூடும். சிலப்பதிகாரதிற்கு முன் போற்றப்பட்டவர்கள் அரசர்கள்தான். ஏற்கனவே சொன்னமாதிரி இந்த கதை விளக்கத்தில் மாறுபடுபவர்கள் என்னை மன்னிக்கவும். இது ஒரு சிந்தனையே ஒழிய முடிவுஅல்ல.

கோயிலும் கோட்டையும் கிட்டதட்ட ஒன்றாக உள்ள நிலையில் தமிழின் ஒரு பழமொழி என் நினைவுக்கு வருகிறது - "கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்" - இதை நீங்கள் இப்படியும் பொருள் கொள்ளலாம் - அரசன் இல்லாத ஊரில் வாழாதே - தலைவன் இல்லாத இடத்தில் இருக்காதே அது உனக்கு பாதுகாப்பு இல்லை.

தற்போது இருக்கும் பல பழங்கால கோயில்களில் தமிழ் வரலாறு மிக நேர்த்தியாக ஒழித்து வைக்கப்பட்டு உள்ளது. தல விருட்சம், தல உயிர்கள் என்பதே ஆங்கிலம் flora and fauna என்கிறது. அவர்கள் இப்படி தங்கள் உயிரியலில் பதிவு செய்வதை தமிழன் கோயில் வரலாற்றில் பதிவு செய்கிறான்.

நகரம் - நகர் அல்லது நகார் என்பது கொண்டு உருவாக்கப்படும் வெள்ளை கோட்டைகள் அல்லது மாளிகைகள் பற்றி சொல்லும் சொல்லே. நகரம் மாளிகைகளின் இடம் என்பதன் சுருக்கமே என்று தெரிகிறது. இது தொடர்பாக நிறையவே மொழி ஞாயிறு தேவநேய பாவனார் நிறைய ஆய்வு செய்து உள்ளார்.

தமிழில் மனிதர்களின் பெயர் ஒரு இடத்தின் ஆகு பெயர் ஆகலாம். உதாரணமாக திருபதி - இது ஒரு கடவுளின் பெயர் - திருபதி கோயில் என்றோ திருபதி நகரம் என்றோ அந்த இடத்திற்கு பெயரிடப்படவில்லை. இது பழனி , சிதம்பரம், கானாடுகாத்தான் என்று எல்லாவற்றிற்கும் பொருந்தும். ஆங்கிலத்திலும் வாஷிங்டன், வெல்லிங்டன் என்பவை ஆகு பெயரே. அதில் சிட்டி இல்லை. வடமொழியில் நகரம் ஒட்டிக்கொள்ளும் என்று நினைக்கிறேன். வடமொழி ஐரோப்பா மொழிகளின் தாய் என்றால் - ஏன் இப்படி ஆங்கிலம் தமிழ் நிலை கொள்கிறது என்று ஆராயலாம். அல்லது வடமொழி தமிழ் போல் பின்னரே நகரம் இணைத்து கொண்டு இருக்கலாம்.

இந்த நகரம், புறம் என்பதெல்லாம் பின்னால் ஏதோ இடப்பெயரின் தேவை போல் ஆகிப்போனது. காஞ்சிபுரம், கங்கைகொண்ட சோழபுரம் என்பவை புறங்களின் எடுத்துகாட்டுகள். அல்லிநகரம் என்று ஒரு ஊர் உள்ளது.

மனிதர்கள் வாழ தாங்கள் பற்றிக்கொண்ட காடே பின்னலில் பட்டிக்காடு ஆகி இருக்கலாம். அதிலும் நாங்கள் பற்றிய இடம் என்று வர பற்றி மட்டும் நிலைத்து இருக்கலாம். தமிழ் மண்ணில் நிறைய பட்டிகள் உள்ளன. எடுத்துக்காட்டு சொல்லவேண்டியத்தில்லை.

காட்டை வெட்டி மாளிகைகள் கொண்டு எழுவது நகரம் - கட்டோடு இணைந்து வாழ்வை பற்றி வாழ்வது பட்டிக்காடு. அதாவது கோ கிரீன் என்பது கிராமம்.

கிராமம் என்பது நில அளவாக இருந்திருக்க கூடும். இவ்வளவு நிலபரப்பு ஒரு ஏக்கர் எனபது போல் - இவ்வளவு நிலப்பரப்பு - இல்லை அதினினும் கீழ் என்பது கிரமாம். எத்தனை ஏக்கர்கள் சேர்ந்தது கிராமம் என்று தெரியவில்லை.

ஊருணி என்றும் சில ஊர்களுக்கு பெயர் உண்டு - மதுரைக்கு அருகில் கருப்பாயி ஊரணி என்று ஒரு ஊரு உள்ளது. மாடு உணவு உண்ணும் இடமே மட்டுதாவணி இங்கேதான் இன்று மதுரை பேருந்து நிலையம் உள்ளது.

வெளி என்று சில இடங்களுக்கு பெயர் உண்டு - வெளி - வேலி இவற்றிற்கும் தொடர்பு இருக்கலாம். திறந்த வெளி என்ற சொல் உள்ளது.
வேலி இடப்பட்ட இடம் வெளியா இல்லையா வெளியே உள்ள இடம் வெளியா என்பதெல்லாம் சுவையான ஆராய்ச்சி ஆக இருக்கும்.

மலை சார்ந்த ஊர்கள் மலை அல்லது குன்று என்று முடிகிறது.

திண்டுகல் என்பது ஒரு கோட்டை பெயரே - அந்த கோட்டை திண்டு மாதிரி இருக்குமாம் - அந்த கோட்டையில் திப்புசுல்தான் ஒரு காலத்தில் தங்கி இருந்தாராம். ஹைதர் அலி இந்த கோட்டையில் தான் வெள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற இந்த கோட்டையில்தான் திப்புவை வைத்திருந்தார் எனபது வரலாறு. இதை ஒரு நாயக்கர் தான் கட்டினாராம். இந்தக் கோட்டையில் மழை நீர் அந்தக் காலம் முதல் சேமிக்கப்பட்டு வருகிறது.போரின்போது வீரர்கள் அவசர காலங்களில் தப்பிக்கவும் வழிவகை இருக்கு ( அட! இதுவும் ஒரு அரச தந்திரம் போர் உத்தி )மங்கம்மாளும் இந்த கோட்டையில் தங்கி உள்ளார். அரசி மங்கம்மாள் பற்றி தமிழில் அழகான திரை படம் ஒன்று உள்ளது. இந்த கோட்டை ஏறுவது பழனி மலை ஏறுகிற மாதிரியாம் - அதனாலேயே இங்கே நிறைய பேர் வருவதில்லையாம். திண்டுக்கல் போனால் இங்கே போய் வாருங்கள்.

எனக்கு ஆதரவு நல்கிய கே. ஆர் .பி செந்தில், சித்திரா அக்கா, நண்பர் விஜய், நண்பர் பிரபு, ராஜ நடராஜன், TVR ஐயா, நண்பர் பார்த்திபன் இன்னும் இணைந்து என்னை பின்தொடரும் நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்.

நன்றிகளுடன் -
கார்த்திக் சிதம்பரம்

அப்புறம் சொல்ல மறந்துட்டேன் - ஒரு தொடர் கதை எழுதலாம் என்று உள்ளேன். அதையும் படியுங்கள். எந்த அளவுக்கு நல்ல கதை எழுதவேன் என்று தெரியனுமா ? கீழை உள்ள தொடுப்பு உதவலாம்
சாவித்திரி – இளம் சூழ்ச்சிக்காரி: தொடரின் முதல் பகுதி

Comments

  1. hats off to you sir very glad to read this because Tamil having very long history and having linguistic book and literature so keep write

    ReplyDelete
  2. Very Good attempt. Karthick keep it up.
    with good wishes

    ReplyDelete
  3. திண்டுக்கல்லின் நகரின் நடுவில் அமைந்துள்ள அந்த மலை, தொலைவில் இருந்து பார்பதற்கு திண்டு போன்று இருக்கும். முழுக்க கல்லால் ஆனது அந்த மலை. ஆகையால் அதற்கு திண்டுக்கல் என்று பெயர். அந்த மலை மீது கோட்டை கட்டுவதற்கு முன்பிருந்தே அந்த மலையும் அதை சுற்றியுள்ள நிலபரப்பிற்கும் திண்டுக்கல் என்று தான் பெயர். அந்த கோட்டை திண்டு போல் இருக்காது sir... அதற்கு பெயர் மலைக்கோட்டை மலை மீது அமைந்த கோட்டை மலைகோட்டை அவ்வளவே ....

    உங்களுடைய முயற்சிக்கு எனது வாழ்த்துகள்

    ReplyDelete
  4. உப்புரூணி (உப்பு+ஊருணீ) என்ற ஒரு ஊர் கமுதி தாலுக்கா, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.

    ReplyDelete
  5. intha unmaigal innum velipadaiyaga ovvoru tamilanukum therinthal nandru, melum athai unarnthu ungalathu thedalaio thodara asai padugiren nanbare...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

ஆங்கிலத்தில் எழுதுங்கள்

நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர். சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர். நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?). என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை ) ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? ) சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு. நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com   என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது. மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம். இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் -  நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர