என் பெயர் பைரவி. நான் சத்தியமூர்த்தியின் மனைவி. நாங்கள் அந்த நாட்களில் தேனீ பகுதிக்கு சென்றோம். அந்த வெள்ளம் நிறைந்த காட்டு மலை பகுதியில் எங்கள் வண்டி பயணித்த போது இவர் இறங்கிஏதோ கத்திக்கொண்டு இருந்தார். நான் பயத்தில் உறைந்து இருந்தேன்.
துப்பாக்கி சூட்டுக்கிடையில் எங்கள் பயணம் இருந்தது. எங்களுக்கு என்று மிக அழகான ஒரு வானமும், வனமும் அதன் அருகில் ஒரு வீடும் இருந்தது. மென்மையான ஓட்டி தரை. நெஞ்சம் கவரும் சூழல். இங்குதான் எங்கள் வாசம் என்கிற போது மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன.
எங்கள் வாழ்வின் தேனிலவு இது என்று இதயம் சொன்னது. ஆனாலும் துப்பாக்கியும் கையுமாக இவர் சுற்றினார். தடினமான ஜெர்கின் - தடினமான பூட்ஸ் என்று எல்லாம் இவர் இதயம் போலவே. ஆனாலும் இவர்என் செல்ல காதலர்.
அந்த நாள் எனக்கு நிறையவே ஞாபகத்தில் உள்ளது. இரவு பொழுது. நிலவு இந்த மண்ணில் குளுமை தந்துகொண்டிருந்தாள். பொன்னிற நிலவு சிதறிய நட்சத்திரங்களும் ஒரு அழகிய ஓவியம் போல இருந்தது.
இவர் காவல்நிலையத்தில் இருந்தார். வருவதற்கு தாமதம் ஆகும் என்று தொலை பேசி அழைப்பு விடுத்து சொன்னார்.
இவர் தொலைபேசி அழைப்பு விடுத்து சொன்னதும் - நான் என் படுக்கையில் போய் படுத்துக்கொண்டேன். கொஞ்ச நேரம் போய் இருக்கும். ஏதோ வண்டி வரும் சத்தம். எழுந்தேன். வெளியில் வந்தேன்.
ஒரு முருட்டு ஜீப் வந்து கொண்டிருந்தது. அது ஒளி வெளிச்சத்தை பாய்ச்சியபடி வந்தது. இவர்தானோ - விளயாடுகிராரோ என்று நினைத்தபடியே வாசல் வந்தேன். எங்களுக்கான இரண்டு காவலர்கள் வாசலில் நின்றுகொண்டிருந்தனர்.
ஜீப் சிறுத்தை மாதிரி வந்தது. எங்கள் வீட்டு வாசலில் நின்றது. சில மனிதர்கள் இறங்கினர்.
"பயப்படாத தாயீ" - வண்டி ஓட்டி வந்தவன் சொன்னான். அவன் இறங்கவில்லை.
எங்கள் காவலர்கள் தாக்கப்பட்டனர். நான் கதறினேன். அவர்கள் என்னை கடத்தினர். கண்களை கட்டினர்.
எனக்கு இந்த வண்டி ஓட்டியை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. முரட்டு உடல். கூர்மையான விழிகள். இரண்டு நாள் தாடி. முரட்டு கட்டபொம்மன் மீசை. இவன் யார். இவனை நான் எங்கே பார்த்தேன். இவனுக்கும் எனக்கும் இடையில் என்ன ?
ஜீப் பறந்தது. காவலர்கள் வீழ்ந்து கிடந்தனர். நிலா எல்லாவற்றையும் பார்த்துகொண்டு இருந்த்தது. இந்த குளிர் பகுதியில் இந்த இரவில் என் முகம் முத்து குளித்திருன்தது. நிலவின் கதிர் என் வியர்வை முத்தில் விழுந்து மின்னி சரிந்தது.
இவன் யார் ? - என் இதயம் என் நினைவுகளை அலசியது.
தொடரும்
கடத்தி கொண்டு போய் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மெதுவா அசை போடுதே, இந்த பொண்ணு..... ஆஆஆ...
ReplyDelete