கதிரவன்னின் கதிர் மலை உச்சியில் விழுந்து தண்ணீரில் விழும்போது வெள்ளியை காய்ச்சி உற்றியமாதிரி தண்ணீர் விழும். அருவி வீழும் இடத்தில் -- குருதி விழுந்தால். அதுவும் ஒரு ஆண் சிங்கம் கத்திகொண்டே விழுந்தால் ... இதயம் சுருங்கி விட்டு விரிய மறுக்கும். கண்கள் மூடுவதா இல்லை பார்க்க நேர்ந்ததே என்றுதன்னையே சாடுவதா என்று நினைக்கும்.
அவன் அப்படி தான் அந்த 120 அடி உயரத்தில் இருந்து விழுந்தான்.
"சத்யா ..... " - விழுகிற போது என் பெயரை சொல்லிக்கொண்டே.
என்னை சுற்றி ஒரு கூட்டம் இருந்தது அவனை சல்லடை என தோட்டாக்களால் துளைக்க. குண்டுகள் பாய அந்த வீரன் என் கண்களுக்கு முன்னால்
கம்பீரத்தோடு விழுந்தான்.
அலாரம் அடித்தது. கண்களை கசக்கிவிட்டு எழுந்தேன். எனது வீட்டில்தான் படுத்திருக்கிறேன். மணியை பார்த்தேன் - ஆறு. ஆறும் அருவியும் இனி என் வாழ்வின் நினைவலைகளில் கலந்துவிட்டவைகள்.
எழுந்து உட்கார்ந்தேன். என் படுக்கைக்கு பக்கத்தில் இருந்தது அந்த நாளேடு மேசையில். கூடவே காபி கப்பும் சாசரும்.
நாளேட்டை எடுத்தேன் - தலைப்பு செய்திகள், "கடத்தல்காரன் மாடசாமி வழக்கு பாராட்டு விழா" என்று இருந்த்தது.
"என்னங்க கோயிலுக்கு நேரம் ஆச்சு" - என் மனைவி பைரவி கத்தினாள். காதில் விழுந்தது.
குளியல் அறைக்குள் போனேன். பல் விளக்கினேன். குளிக்க வேண்டி வந்தது. ஷவரை திறந்தேன். நீர் பாய்ச்சி அடித்தது. அருவி மனுதுக்குள் வந்தது.
அந்த அருவியின் ஓசை நூறு யானைகள் சேர்ந்து பிளிவர்து போல இருக்கும். அவ்வளவு தண்ணீர் விழும்.
ஷவரின் தண்ணீர் எதோ நிறம் மாறுவது போல் இருந்தது எனக்கு. ஷவரை நிறுத்தினேன். கையில் இருந்த நீரை பார்த்தேன் சிவப்பாய் இருந்தது.
துண்டை எடுத்து துடைத்தேன். கண்ணாடியில் முகம் பார்த்தேன். என் மனைவி கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருந்தாள் -
"நீர் சிவப்பாக இல்லை. அது உங்கள் கற்பனை"
தலையை வாரிக்கொண்டேன்.
அவள் கோயில் செல்ல தயாராகவே இருந்தாள். ஆனால் அவள் முகத்தில் கலையே இல்லை.
நாங்கள் கோயிலுக்கு போனோம்.
எங்களுக்காகவே ஒரு குருக்கள் காத்திருந்தார். குளக்கரையில் அமர்ந்தோம்.
"இப்படி உட்காருங்கோ. இதை கையில கட்டிகூங்கோ"
நானும் அவளும் அவர் சொன்னதை செய்தோம்.
"நான் சொல்லறத திருப்பி சொல்லுங்கோ"
மீண்டும் அலை அடித்ததும். அருவி விழுந்தது. அவனும் விழுந்தான்.
"சத்யா .... " -காததில் விழுந்தது அவனது குரல்.
"சார் ..." - குருக்கள் இடை மரித்தார்.
"ஸ்வாகா சொல்லுங்கோ " - குருக்கள் சொன்னார்.
"ஸ்வாகா" - சொன்னேன்
என் பெயர் சத்யமூர்த்தி. தமிழ் நாட்டின் காவல்துறையில் நானும் ஒருவன். மாடசாமியை என் தலைமையின் கீழ் இருந்த படைதான் சுட்டு கொன்றது. நான் அவன் சாகும்போது அங்கேதான் இருந்தேன்.
மாடசாமி தமிழ்நாட்டின் காவல்துறையின் தலைவலியாய் இருந்தவன். இன்று அவனை கொன்றதற்குதான் பாராட்டு விழா.
எங்கள் சடங்குகள் முடிந்தன. என் மாமனாரும் மாமியாரும் வந்திருந்தனர்.
"என்ன குருக்களே, எப்படி போச்சு ?" - மாமியார் கேட்டார்.
"எதுவும் மனசு ஒத்து செஞ்சமாதிரி தெரியல. பாவம் கலயனும்னா மனசு ஒத்து செய்யணும்" -சொல்லிவிட்டு என் மாமனார் கொடுத்து தட்சணையை வாங்கி விட்டுகிளம்பிவிட்டார்.
"மாப்பிள .... குருக்கள் ..." - என் அத்தை ஆரம்பித்தார்.
நான் எதுவும் கேட்காமல் நடந்தேன். இன்று நான் பாராட்டுவிழவிற்கு போகவில்லை. ஏன் தெரியுமா ...?
தொடரும்
I am sure that the reason is special.... :-)
ReplyDeleteThanks Chitra
ReplyDeleteகாவலர் தன் கடமையைத்தானே செய்தார்? அப்புறம் ஏன்?
ReplyDeleteஇப்பதானே படிக்க ஆரம்பிச்சு இருக்கீங்க. போக போக தெரியும். தொடர்ந்து படியுங்கள்.
ReplyDeletegood start...will read the rest
ReplyDelete//மிக பெரிய மலை உச்சி. கீழே விழுந்தால் சாம்பல் கூட மிஞ்சாது. பச்சை பசேல் என்று அந்த மலைக்கு பச்சை கம்பளி போர்த்திவிட்ட மாதிரி காடு.//
ReplyDeleteசாம்பல் கூட மிஞ்சாதா ? எரிந்து கொண்டே விழுந்தால் தான் அப்படிச் சொல்ல முடியும்,பொதுவாக எலும்புகள் கூடாத் தேறாது என்று தான் சொல்லுவார்கள்.
தொடர்கதை நல்ல முயற்சி பாராட்டுகள் கார்த்திக்