நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர். சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர். நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?). என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை ) ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? ) சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு. நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது. மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம். இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் - நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.
thanks karthick
ReplyDelete:-) Thats nice.
ReplyDelete