Skip to main content

Posts

Showing posts from August, 2010

விஜய் டிவியும் தமிழ் கடவுளும்

என் கண்களில்  விழுந்த செய்தி அது. அப்போது நான் போதி தர்மரை பற்றி ஒரு ஆய்வை செய்து கொண்டு இருந்தேன். ஒரு நிலையில் போகரும் போதி தர்மரும் ஒன்றோ என்கிற குழப்பமான நிலை வந்தது. போகர் சித்தர், போதி தர்மர் - புத்தர். சித்தி பெற்றவன் சித்தன் - அதாவது ஆய்ந்து அறிந்தவன். புத்தி பெற்றவன் புத்தன் - அதவாது எப்போதும் விழிப்புடன் இருப்பவன். இவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. யோ என்கிற சீடன் போதிதர்மருக்கு இருந்ததாகவும் ஒரு செய்தி உண்டு. புலிப்பாணி என்கிற சீடனை கொண்டிருந்தார் போகர். இருவரும் ஒருவரே என்கிற கருத்தும் உண்டு. போதி தர்மத்தில் குமாரசாமி அதாவது கௌமார மதத்தின் தெய்வம் வழிபட பட்டு உள்ளதா என்கிற கேள்வி என்னிடம் உண்டு. போதி தர்மத்தவர்கள் போலவே முருகன் சிலைகள் திருப்பதி மற்றும் பழனியில் நிறுவப்பட்டு உள்ளதாம். இதுவும் ஆய்வுக்கு உட்படுத்த படவேண்டிய ஒன்றே. திருப்பதி புத்த தளம் என்றும் அங்கே இருப்பது முருகன் என்றும் கருத்துக்கள் உண்டு. முருகன் போதி தர்மத்தில் வழிப்படபட்ட தருணத்தில் சாகிய முனி கௌதம புத்தன் தெய்வமாக இல்லாமல் இருந்து இருக்கலாம். முருகனின் அருளின் காரணமாகவே எ

மீண்டும் நான்

இந்திய மண்ணிற்கு வந்து. பின்னர் இனைய இணைப்பு பெற்றுவிட்ட பின்னும் இன்றுதான் எழுதுகிறேன். இந்தியா, தமிழகம், என் இல்லம் - இவற்றில் நான் எதிர்பார்த்த பலவும் அப்படியே உள்ளன. மதுரையில் நிறையவே உள்ளூர் தொலைக்காட்சிகள். இன்னும் மண் மனம் மாறவில்லை. பேருந்துகளில் சென்னையை போல் நகரும் மின் எழுத்துக்கள். கட்டணம் பற்றி கேட்பது இந்த பதிவில் தடை செய்யபடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாய் நாம் அமெரிக்கத்தனம் நோக்கி நகர்கிரோமோ என்று கூட நான் சில இடங்களில் நினைத்தேன். அம்மா தினமும் கோயில் செல்கிறார். வழக்கம் போலவே. அப்பா நிறைய அரசிலும் சமூகமும் பேசுகிறார் வழக்கம் போலவே. எப்போது சென்னை வருகிறாய் என்று நண்பர்கள் கேட்கிறார்கள் வழக்கம் போலவே. மிட்டாய்கள் விநியோகம் வழக்கம் போலவே. வாழ்க்கை உயிர்ப்புடன் மட்டும் அல்ல சுட சுடவும் உள்ளது. அப்புறம் தமிழ் நாடு முழுதும் மழை மதுரை நீங்கலாக. எழுதுவதை தொடர்வேன். அவ்வளவு சீக்கிரத்தில் விட்டு விடுவேனா ?

இந்தியாவிற்கான பயணம்

எதிர்பார்த்து கேட்ட ஒன்று. கடைசியில் அமெரிக்க அரசாங்கத்தின் கருணையால் நடந்து விட்டது ( விசா முடிஞ்சுருசுல ). இந்த முறை விசா நீடிப்போ, மீண்டும் விண்ணப்பிக்கும் என்னமோ இல்லை என்று சொன்னபோது மேலாளர் ஒரு மாதிரி பார்த்தார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் - நான் ரசித்த மண் அமெரிக்கா. நீங்களும் வாருங்கள் எங்கள் ரத்த கொடை நாளுக்கு. தொடர் நடை பயணத்திற்கு என்று தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்ட மனிதர்கள். ஏதாவது தவறாக செய்தால் அறைக்கு அழைத்து - நீ ஏன் இப்படி முயற்ச்சிக்க கூடாது. என்று எடுத்து சொன்ன வெள்ளைக்கார மேலாளர்.அவர் ஒரு இஸ்ரேலியர். நல்லது செய்தால் ஊரையே கூட்டி பாராட்டும் நல்ல மனிதர். அமெரிக்கர்களிடம் நிறையவே கற்றுக்கொண்டேன். அவர்களின் தேவைகள், சிந்திக்கும் தன்மை எல்லாம் வேறுபட்டதாக இருந்தது. காரணம் அவர்கள் வளர்க்கப்பட்ட முறை. திருமணத்திற்கு பின்னும் பெற்றோருடன் வாழ்வீர்களா ? எப்படி இது என்று கேட்ட ஆப்பிரிக்க அமேரிக்க நண்பர்.மீண்டும் வா ... என்று தன் தனிப்பட்ட தொலைபேசி மற்றும் தொடர்புகளை தந்து உச்சி முகந்து அனுப்பிய சீனர்.எனக்கு நிறையவே கற்றுக்கொடுத்த கிரேக்கர்.கை குலுக்கி

சிந்தனையில் மூழ்கிய தேவதை ( சிறுகதை )

நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுதிய கதை. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. ****************** அது ஒரு இருள் பொழுது. அந்த இருள் தேசத்திற்குள் வந்து குத்திதாள் அந்த வெள்ளை உடை தேவதை. இளம்பெண் அவள். புன்னகை பூத்தாள். "உன் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது" தன் கையில் இருந்த மந்திரக்கோலால் இருளில் ஆசிர்வதித்தாள். அங்கே ஒரு மனித உருவும் மண்டியிட்ட நிலையில் உயிர் பெற்றது. "நன்றி" - மௌனத்தில் சொன்னான். அது ஒரு அதிகாலை வேலை.வரண்ட பூமி. வந்து விழுந்தான் அவன். வரப்பில் ஒருவர் படுத்து இருந்தார். பக்கத்தில் எலிக்கறி. அவரை எழுப்பினான். "காய் ..." - தன மொழியில்  வந்து விழுந்த மனிதன் ஆரம்பித்தான். "அட! காயாவது பழமாவது? சொத்துக்கு வழி இல்லாம செத்துக்குட்டு இருக்கோம்"  - வரப்பு மனிதன் மீண்டும் களைப்பில் படுத்தான். வானத்தில் இருந்து வந்தவன் கொஞ்ச தூரம் நடந்தான். பெட்டி கடைகளில் செய்தி ஏடுகள் தொங்கி கொண்டு இருந்தன. குஜராத்தில் சமயக்கலவரம். நடந்தான். இன்னும் சாதியும் மதமும் ... கண்டு நகர்ந்தான். பக்கத்து நாட்டில் படுகொலைகள் மறைமுகமாய் இந்திய

உ த ப : மூன்று தலைவர்கள்

அவருடைய வேலை பளுவுக்கு இடையில் அந்த நாடகம் பார்ப்பது அவருக்கு சற்று இளைப்பாற செய்யும். அதுவும் அந்த நாடகத்தின் ஒரு சிரிப்பு நிகழ்வு அவர் மனதை இலகுவாக்கும். தன குடும்பத்துடன் அந்த நாடக ஆரங்கத்திற்கு வந்தார். மௌனமா அவர் அந்த நாடகம் பார்க்கும் மாடத்தில் அமர்ந்தார். அந்த மாடத்திற்கு பாக்ஸ் 13  என்று பெயர். மாடத்திற்கு கீழே மக்கள் திரள். ஆர்வமாய் அந்த கூட்டம் நாடகம் பார்க்க திரண்டு இருந்தது. நாடகம் ஆரம்பித்தது. எல்லோரும் ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தனர் - அவனைத்தவிர. மாடத்திற்க்கான கதவு அருகில் வந்து நிட்று கொண்டான். தன் கைத்துப்பாக்கியை சரி பார்த்துக்கொண்டான். மெல்லமாய் கதவை திறந்தான். தலைவரின் மெய்க்காவலன் அங்கே இருந்தான். மெய்க்காவலன் இவனை இன்னும் பார்க்கவில்லை. துப்பாக்கியில் குறிபார்த்தான். விசையை அழுத்தினான். குண்டு பறந்தது. பட் என்று தலைவரின் கபாலத்தில் பட்டு தலைவர் துடிதுடித்தார். கூட்டம் கூச்சலும் குழப்பமுமாய் மாறியது. உடனடியாக அந்த மாடத்தின் கைப்பிடி சுவரில் ஏறி நாடக மேடையில் குதித்தான். வெற்றி முழக்கம் இட்டுவிட்டு ஓடினான். கிட்டத்தட்ட ஒழிந்தான் கொடுங்கோலன் என்க

உ த ப : தோற்றுப்போன படுகொலை முயற்சி

இந்த கட்டுரை தொடரின் நோக்கம் தோற்று போன ஒரு படுகொலை முயற்சியை எழுதுவது இல்லை. அனாலும் ஒரு முறை ஒலி ஒளி வடிவத்தில்  கண்ட இந்த செய்த்திப்பதிவை  நான் பதிவிட நினைக்கிறேன். இதன் ஆதாரங்கள் உங்களுக்கு கிட்டலாம்.  என்னிடம் சரியான ஆதாரம் என்று கூறும் அளவில் எதுவும் கிட்டவில்லை. எனவே புறம்தள்ள தங்களுக்கு முழு உரிமை உண்டு.படிப்பவர்கள் இதன் நம்பத்தன்மையை ஆராய நினைப்பதன் மூலம் காணமல்  போன ஒரு வரலாற்று நிகழ்வு நமக்கு கிட்டலாம் என்கிற ஆவலின் அடிப்படையில் எழுத்தப்படும் பதிவே இது.   உலகின் உயர்வான மனிதர்களுள் அவருக்கு ஒரு பெயர் உண்டு.உலகமே வியந்த மனிதர் அவர்.  இன்றைக்கு நேற்றைக்கு அல்ல என்றைக்கும் அவருக்கு புகழ் உண்டு.    மானுட வரலாற்றில் பூத்த பெருந்தலைவன் என்கிற கருத்து அவரது நாட்டை சேர்ந்தவர்களைப்போலவே இல்லாவிட்டால் கொஞ்சம் அதிகமாகவே மற்ற நாடுகளில் உண்டு.   காலை கதிரவன் வானில் பூக்க அந்த நகரம் சோம்பல் முறித்தது. பறவைகள் இரைதேடி பறக்க செவிக்கு உணவு தேடி ஒரு கூட்டம் வேற்று நகரங்களில் இருந்தும் வந்திருந்தது.   உலகத்தின் ஆட்சி மனிதர்களை கேள்வி கேட்கும் ஆற்றல் படைத்தவர் என்று நம்பப்பட்ட அந்த

மீண்டும் ஒரு கவிதை!

வெண்ணிலா வதனம் கண்டேன் செந்நிலா அதனில் கண்டேன். என்னவோ என்றிருக்க - திலகம் என்று நீ உரைத்தாய். மூக்கின் குழலா ? மூங்கில் குழலா ? காற்றை எடுத்து கீதம் தருதே! அதரங்களா மதுரங்களா? தேனின் சுவை கண்டுகொண்டேன்! கண் விழியா ? வன் குழியா ? என்னை இழுக்குதே! வேதனை நிலையில் கொத்திதாலும் வெள்ளரி பழமாய் உன் பேச்சு குளிரச் செய்யுதே! (உந்தன்) சுட்டுவிரல் அசைவிலே சுத்துதே உலகமே! பட்டு மேனியை தொட்டு பார்த்தால் நெஞ்சில் சுகமே! விட்டு விலகும் நேரமெல்லாம் சுட்டு விடுதே நெஞ்சம் முழுதும்!