தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Sunday, June 20, 2010

என் பயணங்களில் : எழுத்து அறிவித்தது!

தந்தையின் இடமாற்றங்கள் எனது கல்வியை பாத்தித்தது. எப்போதெல்லாம் இடமாற்றல் ஆணை வருகிறதோ அப்போதெல்லாம் முதல் பலி கல்வியாகவே இருந்தது.

அதிலும் கல்வியின் ஆரம்ப கட்டம் அது. கணிதம் மற்றும் மொழிகளை அறிமுகம சேயும் தருணத்தில் நான் மரம் விட்டு மரம் தாவும் குரங்கு மாதிரி இடம் தாவி கொண்டிருந்தேன்.

என் தாய் மொழி தமிழ் - அதன் ஆரம்பம் கூட எனக்கு இப்படிதான் கிட்டியது. இடமாற்றல் பணிகளில் அம்மாவும் அப்பாவும் தீவிரம் காட்டவேண்டிய நிலை.

இங்கிலீஷ் ஈ என இளிக்க தமிழ் கண்ணாமூச்சி காட்டியது. நல்லவேளை தமிழை சின்னத்திரை வழியாக நான் கற்கும் நிலை இல்லை. அப்போது இந்த தொலைகாட்சி அக்கபோர்கள் இல்லை. தமிழ் வாழ்ந்தது.

பள்ளிக்கூடத்திலும் சூழலாலும் தமிழ் கற்றாலும் எழுத படிக்க கற்றுகொடுத்து
பெருமை இவர்களை விட வேறு ஒன்றிற்கு உண்டு. அந்த ஆசிரியர்    காலையில் வருவார். "ஏக் காவ் மே ஏக  கிஷான்  ரகுதாத்தா" கதை சொல்லி தரும் ஆசிரியர் அல்ல அது.

அது ஒரு நாளேடு. அதன் பெயர் தினமணி. தினமணி மூலம்தான் நான் ஆரம்பகாலத்தில் எழுத கற்றுக்கொண்டேன் . எழுத்து அறிவித்தது தினமணி

தமிழ் மண்ணிலேயே நிறைய இப்படி பிரச்சனை இருக்கும் போது - அயல் நாடுகளில் நம் தமிழ் குழந்தைகளின் நிலை ? நம் ஊரு சினிமா பாத்து நம்ம தமிழையும் தமிழ் மக்களையும் தெரிஞ்சுகிட்டா கிழிஞ்சுது.

இது எல்லா மொழியினருக்கும் உள்ள பிரச்சனை.தாய் மொழியை காப்போம்.

தொடரும்   

1 மறுமொழிகள்:

Chitra said...

தமிழ் மண்ணிலேயே நிறைய இப்படி பிரச்சனை இருக்கும் போது - அயல் நாடுகளில் நம் தமிழ் குழந்தைகளின் நிலை ? நம் ஊரு சினிமா பாத்து நம்ம தமிழையும் தமிழ் மக்களையும் தெரிஞ்சுகிட்டா கிழிஞ்சுது.

..... கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடியல.
When you have time, read:
http://konjamvettipechu.blogspot.com/2010/01/blog-post_20.html

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை