Skip to main content

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 7

நான்  சத்யா. எங்கள் திருமண வாழ்வின் மிக பெரிய துயரம் அது. கட்டியவளை   ஆறே மாதங்களில் பறி கொடுத்து விட்டு நிற்கிறேன். கட்டியவளை காப்பாற்ற முடியாத ஆண்மகன் நான்.

இந்த செய்தியை சொன்னவுடன் பெருமாளும் மற்றவர்களும் மௌனமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இருட்டு காட்டில் நாங்கள் புரியாமல் நின்று கொண்டு இருந்தோம். என்ன செய்வது ? எங்கள்தேடலில் எங்கும் அவள் கிடைக்கவில்லை.

இருட்டு  காட்டுக்குள் குருட்டு பூனை திருட்டு மனிதர்களை தேடி அலைந்தால் இது தான் நடக்கும்.
விடிந்து விட்டது. சில காவலர்களுக்கு தூக்கம் கண்களில் ஆட்சி செய்ததது.

எங்கள் படை குடில் அமைத்து கொண்டது. தூங்கினோம். நான் இந்த வேட்டைக்குத்தான் வந்தேன் ஆனால் தற்போது லட்சியம் மாறி உள்ளது.
பறவைகள் இறை தேட பறந்தன. கதிரவன் பூமிக்கு வணக்கம் சொன்னான். இப்போதுதான் சிலர் தூங்கினர்.

தூக்கம் எனக்கு வரவில்லை. தொலைத்து நான். அழைத்து வந்தது தொலைத்து விடவா ? கண்களின் ஓரத்தில் கண்ணீர் சம்மனமிட்டது.

ஒரு சிறுமி சுள்ளி போருக்க வந்தாள். குடில்களை பார்த்தவுடன் ஓடினாள். அவளோடு ஒரு இளம் பருவ மங்கை.இருவரும் இந்த மலை வாழ் மக்கள். கருதமேநியினர்.

நான் ஓடினேன் . அவர்களை பின் தொடர்ந்து. அவர்கள் நின்றார்கள். நானும் நின்றேன்.

பயம் அவர்கள் இருவர் முகத்திலும் படர்ந்து நின்றது.இதழ் திறக்கவில்லை அவர்கள். பயத்தில் அந்த சிறுமியை இவள் தன் காரத்துக்குள் வைத்திருந்தால். சிறுமியின் தோள்கள் இந்த இளம் பெண்ணின் கைகளுக்குள். சிறுமி என்னை உற்று பார்த்தாள்.

நான் சிறுமிக்கு முன்னால் ஒரு காலில் மண்டி இட்டேன். சிறுமியின் கண்களுக்கு முன்னால் என்னவளின் நிழற் படம் காட்டி நிஜம் கேட்டேன். அந்த சின்ன பெண் வாய்திறக்க இளம் பருவ மங்கை அந்த சிறுமியை கட்டி அனைத்து வாயை பொத்தினாள். விவரம் தெரியாத வயது. சிறுமி தன்இடது  கையால் ஒரு திசையை காட்டினாள். அருவி ஓவென்று கொட்டி கொண்டு இருந்தது.

அங்கே அருவி ஓவென்று கொட்டி கொண்டு இருந்தது. அது ஒரு மலை உச்சி. ஒரு பெரிய பாறை. அருகிலேயே - கொஞ்சம் புகை வந்து கொண்டிருந்தது. குளிர் காய்ந்திருப்பார்கள். அங்கேதான் பைரவி இருக்க வேண்டும்.

என் காவல் படையிடம் ஓடினேன்.

இப்போத்துதான் கண்ணயர்ந்தவர்கள்  சிலர். ஆழ்ந்த உறக்கம் கொண்டோர் சிலர். நேற்றைக்கு விட்ட தூக்கத்தை அவர்கள் இன்றைக்கு இரவுதான் பெறவேண்டும்.

இளையபெருமாளும் நன்றாக உறங்கி கொண்டிருந்தார். உலுக்கினேன் அவரை. கட்டளை பறந்தது. துப்பாக்கிகள் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. தூக்கம் பறந்தது. முகம் கழுவியதில் தூங்கம் துலைந்தது அவர்களுக்கு.

ஜீப்புகள் இனி உதவாது. எங்கள் படை மலை ஏறியது. தடதடவென. பூட்ஸ் சப்தங்களில். பாம்புகள் வழியில் அவசரமாய் வழி மாறின.

மலை உச்சியை அடைந்தோம். ஒளி பெருக்கியில் சப்தம் இட்டோம்.
"இனி தப்பி போக முடியாது மாடசாமி"

அருவியின் சலசலப்பிலும் வெங்களத்தில் உளி அடித்தமாதிரி மலையில் விழுந்து எதிரொலித்தது. நாங்கள் உச்சியில் இன்னும் சில நொடிகளில் எங்கள் இலக்கு.

கண்களின் துளாவலில் தெரிந்தது அந்த காட்சி. நான் அதிர்ந்து போனேன்.
நதி சலசலத்தது. இதயம் படபடத்தது. திரும்பி பார்த்தேன் எங்கள் படை - துப்பாக்கிகளுடன்.

தொடரும்

Comments

  1. Another Good point la break..... :-)

    ReplyDelete
  2. interesting. lemme read the other parts too.

    ReplyDelete
  3. நன்றி சித்ரா & வித்யா. தொடர்ந்து படியுங்கள்.

    ReplyDelete
  4. நன்றி தங்கமணி. தொடர்ந்து படியுங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

ஆங்கிலத்தில் எழுதுங்கள்

நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர். சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர். நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?). என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை ) ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? ) சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு. நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com   என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது. மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம். இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் -  நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர