தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Saturday, June 26, 2010

ஒரு அரவமில்லா காட்டில் .... பகுதி 4

பசுமை காடுகளின் நடுவில் எங்கள் தேடுதல் வேட்டை ஆரம்பமானது.

என் கை துப்பாக்கி என் கைபிடிக்குள் இருந்தது. தடினமான ஜெர்கின் என் மீது இருந்தது.

கல்லும் முள்ளும் சூழ்ந்த அந்த இடத்திற்குள் என் கண்கள் துருவி துருவி தேடியபடி இருக்க நான் பயணித்தேன். எனக்கு பின்னாடி எங்கள் ஆட்கள்.

நதி சலசல என ஓடிக்கொண்டு இருந்தது. எங்களை யாரும் தாக்க வில்லை. நாங்கள் அந்த வெட்ட வெளிக்குள் நுழைந்தோம்.

என் கை துப்பாக்கி வானம் பார்த்து வெடித்தது.

கூட்டம் சலசலத்து. அது ஒரு கோயில் திருவிழா. ஒரு நிமிடம் நிசப்பதம். சுற்றிய ராட்டினங்கள் நின்றன.

"மாடசாமி - ஓடி ஒழியாத! நாங்க வலைச்சிட்டோம் " - நான் கத்தினேன்.

கூட்டம் மௌனம் காத்தது. இளைய பெருமாள் என் பக்கத்தில் வந்தான். அந்த விஷயத்தை சொன்னான்.

இந்த முறையும் ஏமாற்றம். தோல்வி எங்கள் தோள்பட்டைகளில் உள்ள நட்சித்திரங்கள் மாதிரி எங்கள் உடுப்பில் ஒட்டிகொண்டது. தோற்றுபோவதில் ஒரு வலி உண்டு. அதுதான் வெற்றியை நோக்கி செலுத்தும் சக்தி படைத்தது. தோற்பவர்கள் எல்லாம் வெல்வதற்கு என்னவேண்டும் என்றுதான் ஆராய்வார்கள் - ஒரு நிலையில் அவர்களுக்கு எந்த விதிமுறைகளும் கண்களுக்கு தெரியாது - இது தான் ஆயுதம் ஏந்திய தோல்வியாளனின் நிலையும். கடைசி வரை தளராது போரடி விதியும் மீறாமல் வெல்பவன் - மிகவும் பக்குவம் படைத்தவன்.உயர்வானவன்.

எங்கள் நாய்கள் குரைத்தன. இருள் கவிலத்தொடங்கியது. தேடினோம் - அவன் கிட்டவில்லை. கிட்டியவற்றை அள்ளிக்கொண்டு கிளம்பினோம்.

காவல் நிலையத்திற்கு வந்தோம். நான் முகத்தை கழுவினேன். கண்ணாடியில் பார்த்தேன்.

அழுக்கடைந்த அந்த கண்ணாடியை தொடைதேன். தோற்றவனின் முகம் -கண்ணாடியில் படர்ந்தது. இதயம் வலித்தது. என்னை நானே காரி உமிழ்ந்து கொண்டேன்.

வெளியில் வந்து நின்றேன். நிலா உயரத்தில் இருந்து சிரித்தது. காவல் நிலையத்துக்குள் விசாரணை நடந்து கொண்டிருந்தது. வலியும் ரணமுமான கத்தல்கள்.

காதுகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

"ஆ.... " அந்த குரல் கத்தியது. உள்ளே நுழைந்தேன். வெறித்து பார்த்தேன்.

கொஞ்ச நேரம் போய் இருக்கும்.

என் கை பேசி அலறியது.

"என்ன .... சொல்ற ?" - நான் கத்தினேன். அதிர்ச்சியில் உறைந்து போனேன். என் வாழ்வின் மோசமான நாளின் கடைசி நிமிடங்கள் அது.

வெளியில் ஓடி வந்து ஜீப்பில் அமர்ந்தேன். யாருக்கும் காத்திருக்கவில்லை. வண்டியை உயிர்பித்தேன். வண்டி பறந்தது.

நிலா மயங்கியது. நான் வேதனையில் விழுந்தேன்.

வண்டியை நிறுத்தி விட்டு பார்த்தேன். பின்னல் எங்கள் படை இளையபெருமாளுடுன் வந்திருந்தது.

"சார்..." - பெருமாள் ஓடிவந்தான்.

நான் சொன்னேன். எல்லோரும் மௌனம் காத்தனர்.

நதி சலசலத்தது.

தொடரும்

2 மறுமொழிகள்:

Chitra said...

good going! :-)

அப்பாவி தங்கமணி said...

nice

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை