அப்போது மதுரையில் நான் பள்ளி படிப்பு படித்துக்கொண்டிருந்தேன். மதுரையில் வைகை ஓடுகிறது. இது சொல்லி தெரியவேண்டியதில்லை. அதை போலவே - அதில் தண்ணீர் அதிகம் ஓடுவதில்லை என்பதும் சொல்லி தருவதில்லை.
நாங்கள் வசிக்க வந்த நேரமோ என்னமோ தெரியவில்லை - வானம் கூரையை பிய்த்துகொண்டு கொண்டியது.
"நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு பெய்யும் மழை" என்று எல்லாம் சொல்ல முடியாது. முதன்முதலில் வைகையில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு ஓடியது.
பார்பதற்கு ரம்யமாக இருந்தது என்று எல்லாம் சொல்ல முடியாது. பயங்கரமாக இருந்தது. மார் அளவு கூட தண்ணீர் சில இடங்களில் நின்றது. எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த வண்டியூர் கண்மாய் உடைந்தது. தெப்பகுளத்தில் யாரும் கிரிகெட் விளையாட முடியாத அளவு தண்ணீர் நின்றது.
ஆற்றுக்குள் வசித்த பல சலவை தொழிலாளிகள் அரசிடம் வெள்ள நிவாரண நிதி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆற்றில் தண்ணீர் ஓடாது (!?) என்கிற அவர்களின் நம்பிக்கையில் மண் விழுந்திருந்தது.
வைகை எல்லாவற்றையும் எடுத்து சுருட்டிக்கொண்டு சிரித்தாள். ஆற்றில் தண்ணி ஓடினால் இப்படி எல்லாம் நடக்கும் என்று அவளுக்கு தெரிந்திருக்காது.
அதற்கும் மேலாக ஆற்றில் மட்டும் அல்ல சாலைகளிலும் தண்ணீர் ஓடியது. சில இடங்களில் நீரில் பாம்பும் மனிதர்களும் ஒன்றாக பயணித்தனர்.
"தண்ணீர் பாம்பு ஒன்றும் செய்யாது" ( நல்ல அறிவுரைங்க ! ) என்று எனக்கு அறிவுரை கூறிய கிராமவாசிகளை பார்த்தேன்.
பள்ளிக்கு சாலையில் போய்விட்டு மாலையில் ஆற்றில் மிதந்து வந்தோம்.சில இடங்களில் மடை உடைந்து சாலையில் மட்டும் அல்ல எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் நீர் ஆடியது; ஓடியது; மிரட்டியது.
BP (அட! பிரிட்டிஷ் பெட்ரோளியமோ பாரத் பெட்ரோளியமோ இல்லை ) குளம் கண்மாய் உடைந்துவிடவில்லை. அது உடைந்திருந்தால் மதுரை நீருள் மாயந்திருக்கும் என்றனர்.
( மாயந்திருக்கும் - மூழ்கி அல்ல ).
பள்ளிகள் கல்லூரிகள் விடுப்பு விட்டன. நான் படித்த பள்ளிக்கும். விடாவிட்டாலும் யாரும் பள்ளிக்கு வரமுடியாது. நீர் மேலாண்மை கொஞ்சமும் இல்லாத நம் நகரங்களுக்கு இந்த மழை பாடம் கற்பித்தாலும் - யாரும் படித்தமாதிரி தெரியவில்லை.
தமிழ்நாடு முழுக்க மழை. அதிமுக ஆட்சி நடந்திருந்த தருணம் அது. முதல்வர் ஹெலிகோப்டேரில் பறந்து பார்த்தார்.
வெள்ளம் வடிந்த பின் - பள்ளிகள் திறந்தன.
நாங்களும் போனோம் ( வேறு வழி ? ). எல்லோருக்கும் ஒரு கதை இருந்தது. நீர் எந்த
அளவு எங்களை ஆண்டு கெடுத்து இருந்தது என்று பேசிக்கொண்டோம்.
அப்போதுதான் அந்த உரையாடல் நடந்தது. அவன் என் பள்ளி தோழன்.அவர்கள் பகுதி பெரிதும் இந்த வெள்ளத்தால் பாதித்து இருந்தது.
"இப்போது நிலவரம் பரவா இல்லையா ?" - உதவி தலைமை ஆசிரியர் கேட்க
"பரவா இல்லை" - அவன் சொன்னான்
"சேதாரம் ரொம்பவா ? வீடு எப்படி இருக்கு ?"
"தறி மூழ்கி போச்சு சார் " - அவன் பதில் சொல்லி முடிக்கவும் அவன் கண்களின் ஓரத்தில் கண்ணீர் நின்றது.
அவருடைய இரண்டு கேள்விக்கும் அவன் பதில் சொன்னானா என்பதை விட ... அவனது குடும்பத்தின் வாழ்வாதாரம் நிலை குலைந்து போய் இருந்தது தெரிந்தது. நெசவாளிகள் நிறைய பாதிக்க பட்டு இருந்தனர். விவசாயிகளும்.
இந்த கதையை ஒரு முறை என் திட்ட மேலாளர் ஒருவரிடம் சொன்னபோது அவரும் கொஞ்சம் கண்ணீர் விட்டு விட்டு சொன்னார் ... "நானும் நேசவாளிதான் கார்த்திக். கடனை உடனை வாங்கி என் அப்பா படிக்க வைத்ததே நிறைய இழப்புகளை பார்த்த பின் தான்"
இழப்புகளை சந்த்தித்துவிட்டு மனிதன் தன தொழிலை உயிருக்கும் மேலாக பார்க்க வேண்டும் என்பதெலாம் மிதமிஞ்சிய ஆசை.
காசிப்பட்டு இப்போது இல்லை. நிழல் விழாத தஞ்சை கட்டிட கலை இப்போது இல்லை. புதுப்பானையில் புது அரிசியில் பொங்கல் வைப்பது நாம் பொங்கல் கொண்டாட இல்லை. உழவனும் குயவனும் கொண்டாட வேண்டும் என்று சமத்துவத்தில். ( எங்கள் வீட்டிலும் புது பானை வாங்குவது இல்லை - எல்லா காய்கறியும் மஞ்சளும் வாங்குவோம் ஆனால் பானை இல்லை. ஆனால் அம்மா கோடைக்கு வாங்குவார். இப்போது பிரிட்ஜ் வந்து விட்டது வீட்டுக்கு)
ஊரெல்லாம் வீடு கட்டி விட்டால் - சோற்றுக்கு எங்கே போவது? விவசாயிகளின் வாழ்க்கை அழிவு - இந்தியாவின் அழிவு.
தொடரும்
ஊரெல்லாம் வீடு கட்டி விட்டால் - சோற்றுக்கு எங்கே போவது? விவசாயிகளின் வாழ்க்கை அழிவு - இந்தியாவின் அழிவு.
ReplyDelete...... சரியாகத்தான் கேட்டு இருக்கீங்க..... !
மீண்டும் விவசாயம் தழைக்கும் நண்பா
ReplyDeleteநன்றி சித்ரா அக்கா - வருகைக்கும் கருத்துக்கும்!
ReplyDeleteசெந்தில்- உங்கள் வார்த்தைகள் ஊக்கம் அளிக்கின்றன.
ReplyDeleteநல்ல விஷயம்
ReplyDeleteவிவசாயத்தின்பால் தற்போது அதிகம்பேர் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், சரியான வழிமுறைகள்தான் தெரியவில்லை (என்னைப்போல). இதுவும் சரியாகும்.
ReplyDeleteMy tamil fonts not working today. @Annaamalayan - Nandri thangal varugai.
ReplyDelete@Husainamma - Neengal sollvathu sarithaan. Aanal naam valimuraigalai thedavendum. Naan oru valimurayay oru kaalaththil eluthivaiththen. Athai konja naalil athai pathivu seigiren