Skip to main content

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம்.

சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

அரிசியில் - அ மௌன எழுத்து. ரிசி என்பதின் மிக அருகமையான வார்த்தை இன்று உலகம் முழுதும் வழங்கப்படும் ஆங்கில வார்த்தையான ரைஸ் ஆகும். ரி (Ri ) சி (ce ) என்று வழங்கபட்டே இன்று அது ரைஸ் ஆகி உள்ளது என்று மொழி ஆய்வாளர்கள் நினைகின்றனர். இந்த மாதிரி கொஞ்சம் ஏற்கனவே யோசித்து எழுதி இருக்கேன் கொஞ்சம் படிச்சு பாருங்க.
http://eluthuvathukarthick.wordpress.com/2010/02/10/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

இந்த சோனாடு என்கிற வார்த்தையின் மிக சமிபத்திய பதிவு ஆயிரத்தில் ஒருவன் திரை படம். இங்கேதான் நம்ம அறிவு இந்த கானாடு பற்றி யோசிக்க ஆரம்பித்தது. இது சிவகங்கை மாவட்டத்தில் இருந்திருக்கலாம்.

இந்த கானாடு எங்கே உள்ளது ? என்று தெரியவில்லை. கங்கை கொண்டான் மாதிரி கானாடு காத்தான் என்பது ஒரு மனிதனுக்கு பெயராக தரப்பட்டு பின்னர் ஆகு பெயர் ஆகி இந்த ஊரின் பெயர் ஆகிவிட்டதா ? நம்மிடம் பெரிய ஆதாரம் எதுவும் இல்லை.

இன்று இந்த ஊரில் செட்டிநாடு ( அட! இதுவும் நாடுப்பா !) மாளிகைகள் உள்ளன. கானாடு என்பது காழ நாடு என்று எழுதபட்டிருக்கலாம். எல்லாம் நம் யூகம் தான்.

சித்தன்னவாசல் பற்றி எழுதவே நினைத்தேன் . பின்னர் திடீர் என்று வந்து விழுந்த சிந்தனை இது. எதாவது தெரிந்தால் சொல்லுங்கள். என் பனி வரலாற்றை தேடுவதே.

தொடரும்

Comments

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்