Skip to main content

தமிழ் நாட்டின் தள வரலாறு - I

இப்படி ஒன்றை எழுதலாம் என்று எனக்கு ஒரு ஆசை. முடிந்தவரை எழுதவும் முற்சிக்கிறேன். தமிழ் நாடு என்று ஒன்று ஆரம்ப காலத்தில் இல்லை.
தற்போதைய கர்நாடகம்தான் கிஷ்கிந்தை என்கிறார் ஒரு நண்பர். இந்த கிஷ்கிந்தையை சார்ந்தவர்களே குரங்குகள் என்று ராமாயணத்தில் சொல்லபட்டிருதாக அவர் சொல்வதற்கு பதில் எங்கள் மண்ணின் மைந்தர் அனுமன் என்றார்.

அனுமநிடத்தில் சீதை உள்ள இலங்கை எங்கு உள்ளது என்று ராமன் கேட்க அது சேர நாடு, பாண்டிய நாடு சோழ நாடு எல்லாம் கடந்தால் ஒரு கடல் வரும் அதை தாண்டினால் இலங்கை வரும் என்று அன்மான் சொல்கிறார்.

இது தான் தமிழ் நாட்டை பற்றி ராமாயணம் சொல்லும் செய்தி. சரி சேரர்கள் சோழர்கள் பாண்டியர்கள் என்ற பெயர்கள் எப்படி உறவாகி இருக்கும் ? என்று ஆய்வு செய்வது அவசிய படலாம். ஆனால் அவை நம் ஆய்வின் நோக்கம் அல்ல.

நான் முதலில் தமிழ் மண்ணின் எல்லைகள் என்று விடுதலைக்கு முந்தய இந்தியாவில் பாரதி சொன்ன வேங்கடத்தையும் குமாரியையும் எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன். தவறுகளை சுட்டி காட்டுங்கள். திருத்துங்கள்.

விமர்சனங்கள் வரவேற்கப்படும்!

திருபதி என்கிற தற்போதய நகரத்தின் ஆரம்ப காலத்திய பெயர் திருப்தி இல்லை. அது வேங்கடம் என்று அழைக்க பட்டு உள்ளது. வேங்கடம் என்பது ஒரு காலத்தில் புத்த நிலையமாக இருந்திருக்க வாய்புகள் உண்டு என்று சிலர் சொல்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி அங்கு புத்தம் இருந்தது. இன்றும் ஆந்திரத்தில் வேங்கடம் பள்ளி என்று ஒரு தளம் உண்டு - பள்ளி என்பது புத்த சமண சமயத்தவர்கள்தங்கும் பகுதி.

இந்த பகுதியின் கடவுள் வேங்கட ஈஸ்வரன் ஆதாவது வேங்கடத்தின் கடவுள். வேங்கடம் ஒரு மலை பகுதி. வேங்கடத்தின் இறைவன் எப்படி இங்கு கோயில் கொண்டான் என்பதற்கு பெரிய ஆதாரம் இல்லாவிட்டாலும். இந்த இறைவனின் கோயில் பலராலும் பராமரிக்கப்பட்டு வந்து உள்ளது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வட வேங்கடம் என்று கூறுகின்றன. ஒரு வேலை தென் வேங்கடம் உள்ளதா என்று தெரியவில்லை.
வழக்கமாகவே வட காசி என்று ஒன்று இருந்தால் தென் காசி என்று ஒன்று இருக்கும். எனவே தென் வேங்கடத்தை தேடுவது நலம்.

பிறகு மலைக்கு இறைவனின் பெயர் வந்தது அதாவது திருவின் கணவர் திருபதி என்று ஆயிற்று என்றாலும் திரு அம்பதி ஆதாவது செல்வத்தின் தளம் என்பது கூட மருவி திருபதி ஆகி இருக்கலாம். மதுரையம்பதி பழநியம்பதி என்பது போல.

இந்த கடவுள் அணிகலன் எதுவும் அணியதவாரகவே காட்சி தந்தாகவும் பின்னரே இவர் செல்வர் ஆனதாகவும் சொல்பவர்கள் உண்டு. பல்லவ குடைவரை குகை கோயில் வடிவமைப்பில் இது கட்டப்பட்டு உள்ளது.

இது தமிழ் நாட்டின் வட எல்லை. இனி மற்ற ஊர்களை பற்றி பார்ப்போம். உங்கள் கருத்துக்களை கூறவும்.

Comments

  1. அண்ணே, நீங்க நம்ம தல அஜித்த பத்தி தானே எழுதப் போறிங்க

    ReplyDelete
  2. எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் அதனுடைய வரலாற்றுத் தேடல் அவசியம். அந்தவகையில் தங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    வேங்கடமும் காளகத்தியும்தான் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக இருந்திருக்கவேண்டும். பெரும்பான்மை தமிழனின் பொறுப்பற்றத்தனத்தால் இவை பறிபோனது.

    திருப்பதியில் இருக்கும் மூலவர் திருமால் அல்ல என்றும் அது முருகன் என்றும் கருத்து நிலவுகிறது. வைணவர்களால் முருகனின் திருவுருவம் ஒப்பனைகள் மூலம் பெருமாளாக காட்டப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். ஒப்பனையில்லாத திருப்பதி மூலவரை பார்க்க பொதுமக்களுக்கு இதுவரை அனுமதியில்லை என்பது மேலும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வது உண்மையே. ஆனால் நான் கேள்விப்பட்ட செய்தி வேறுமாதிரி உள்ளது. அதாவது - திருப்தியில் இருப்பது புத்தராம்.
    ஆதாரம் பற்றி தெரியவில்லை. ஆனால் பெருமாளை ஆபரணங்கள் இல்லாமல் வியாழன் காலை பார்க்கலாம் என்று கேள்வி பட்டேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...