Bookmark and Share
தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Thursday, May 20, 2010

த நா தல வரலாறு: சர்ச்சில் அறிந்த திருச்சி

இந்தியாவுக்கு பல பெருமைகள் உண்டு. நான் அயல் நாடு ஒன்றில்  ஒரு விமான சேவை நிறுவனத்தில் பயணிக்கும் போது பம்பாய் சரக்கு என்று ஒன்று மெனு அட்டையில் இருந்தது. இது உலக புகழ் பெற்ற சரக்கு இதை அருந்துவது மரியாதை - கவுரவம் என்கிற மாதிரி எழுதி இருந்தது.

அப்புறம் நண்பர் ஒருவர் சொன்னார் அந்த மாதிரி ஒரு போதை பெருமை தமிழ் மண்ணுக்கும் உண்டு என்று. அந்த பெருமையின் பெயர் திருச்சி புகை இலை. சர்ச்சிலுக்கு மிக பிடிக்குமாம். அது என்ன திருச்சி போகயிலை என்று விசாரித்த போது அது திருச்சியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புகை இலையாம். அனால் அது திண்டுக்கலில் பயிரிட பட்டதாம்.

திருச்சி மண் பலதருணங்களில் பலர் கைகளில் இருந்து உள்ளது. சோழர் தலைநகரம் என்கிற பெருமையும் அதற்க்கு உண்டு. ஆனால் அது ஒரு வளமான இலக்காக பல போர்களிலும் இருந்து உள்ளது. கடைசி போரை கர்நாடக போர் என்று அழைகிறார்கள். அது என்ன கர்நாடக போர் என்று கேட்டால். கருநாடக என்றால் தமிழில் பழைய நாடு என்று பொருள். கருநாகம் என்பதற்கு கூட அப்படிதான் பெயராம்.

முதலில் காவிரியை ஒட்டி நாடுதான் பழமை நாடு என்கிற கருத்தில் இது உருகொண்டிருகலாம்.

ராபர்ட் கிளைவ் மற்றும் டுப்லே என்கிற இரண்டு பெரிய பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் போர் படை தளபதிகளுகளுக்கு நடந்த நாடு பிடிக்கும் போட்டியில் திருச்சி மாட்டிகொண்டது.

ராபர்ட் கிளைவ் திருவரங்கம் மற்றும் சமயபுரம் எதையும் தொடக்கூடாது என்று சொல்லி விட்டாராம். சந்தா சாஹிப் என்கிற மன்னனின் புத்திசாலித்தனம் அற்ற போர் முறையில் திருச்சி விழுந்தது. இந்த சந்தா சாஹிப் ஒன்று தமிழர் அல்ல. இவர் மராட்டியர். மராட்டியர்கள் தஞ்சையையும் திருச்சியையும் ஆண்டனர்.

டுப்லே அவர்களின் மொழிபெயர்ப்பாளர் ஆக இருந்த அனந்த ரங்க பிள்ளை - திருவரங்கம் இந்த போரில் அடைந்த பாதிப்பை சொல்கிறார். அனந்த ரங்க பிள்ளையின் நாட்குறிப்பு மிகுந்த புகழ் பெற்ற ஒன்று. அதில் இந்த கருநாடக போர் பற்றி சொல்ல பட்டு உள்ளது.

ஆனந்த ரங்க பிள்ளை அவர்களை து-பாஷி என்று அழைக்கின்றனர். அதாவது இரு மொழி தெரிந்தவர். சந்தா சாஹிப் குறைவான படை வீரர்களை விட்டுவிட்டு தன் நண்பனை பிரிட்டிஷ் போரில் இருந்து காக்க போய் திருச்சியை ராபர்ட் கிளைவின் முட்ட்ருகையில் விழ வழி செய்த்துவிட்டாராம்.

புத்திசாளிதனமற்ற போர் முறையால் திருச்சி விழுந்ததாக சொல்வது உண்டு. திருச்சிராப்பள்ளி என்கிற பெயரை கேட்கிறபோதே அதன் புத்த சமண தொடர்பும் தெரியும் - பள்ளி என்பது துறவிகள் தங்கும் இடம். சர்வபள்ளி வேங்கடபள்ளி என்று பல தென் இந்தியாவில் உண்டு. தமிழ் மண்ணில் உள்ளது திருச்சிராப்பள்ளி.

உறையூர் என்பதே சோழர்களின் தலைநகரம் அதன் புறநகரை ஒரு வேலை திருச்சி இருந்திருக்கலாம். ஆனால் இன்று நிலை வேறு.

சரி சர்ச்சிலுக்கு வருவோம் - அவர் ஒரு மென்மையான சுருட்டுக்கு தேர்ந்தெடுத்த புகை இலை திருச்சி புகை இலை. அந்த புகை இலை சென்னை வழியாக இரண்டாம் உலக போரின் தருணத்தில் கூட லண்டனை அடைந்ததாம். அவருக்கு அதன் மீது ஒரு காதல் இருந்ததாம்.

நீங்க தம் போடுற ஆளா - திருச்சி தம் கிடைக்குமான்னு பாருங்க.

தொடரும்

4 மறுமொழிகள்:

Unknown said...

நல்ல தகவல் கார்த்திக் .. இப்படி வித்தியாசமான யாருக்கும் அதிகம் தெரியாத தகவல்களை தொடர்ந்து எழுதுங்கள்,
ஒரு புத்தகமாக வெளியிடலாம் ....

Chitra said...

ுதலில் காவிரியை ஒட்டி நாடுதான் பழமை நாடு என்கிற கருத்தில் இது உருகொண்டிருகலாம்.


..... பழைய நாட்டை பற்றிய புதிய தகவல்...... நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுக்கள்!

Karthick Chidambaram said...

நன்றி @சித்ரா! நன்றி @செந்தில் ! உங்கள் கருத்துக்கு. எனக்கு கொஞ்சம் தான் தெரியும். பார்ப்போம் எவளவு எழதலாம் என்று.

பாரதசாரி said...

உங்கள் எழுத்து கட்டி போடுது நண்பரே,

உறையூர் சுருட்டு- ஷெர்லாக் ஹோம்ஸின்(Arthur conan doyle) பல கதைகளில் , திருச்ணாபோலி சிகார் என்று வரும் அளவுக்கு பிரபளம் அது.

Post a Comment

Related Posts with Thumbnails

Pages

Powered by Blogger.

நான் தொடர்பவை