Skip to main content

தமிழுக்கு என்று ஒரு ஆண்டு!

இது தமிழ் தல வரலாறு தொடரின் பகுதி இல்லை. இன்று தான் தமிழ் செம்மொழி மாநாட்டின் கரு பாடலை பார்த்தேன். ஏற்கனவே கேட்டிருந்தாலும், இந்த ஒலி-ஒளி வடிவம் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் நம்பி பார்த்தேன்.

பாடலை கேட்ட தருணத்தில் நான் ரசித்ததை விட இந்த வடிவில் பார்த்ததும் கேட்டதும் பிடித்திருந்தது. முதலில் இந்த பாடலில் கொஞ்சம் மண் மனம் மங்கி உள்ளது என்கிற கருத்தை புறம் தள்ளி விடமுடியாது என்றாலும் - வடிவமைப்பில்  விளம்பர யுத்தி போலவே தெரிந்தது.

தமிழ் மண்ணின் தமிழரின் பெருமை கொஞ்சம் அந்நிய தாக்கத்துடன் சொல்ல பட்டிருந்தாலும் - ரசிக்க முடிந்தது. என்னை ஈர்த்தது.

விமர்சனங்களுக்கு அப்பால் இந்த முயற்சி பாரட்ட பட வேண்டியதே. தமிழர்கள் இன்றும் ஒற்றுமையாய் இல்லை என்பது வேறு. ஆனால் தமிழ் மொழிக்கான விழா என்கிற போது மகிழ்ச்சி இதயம் நிறைத்தது.

அப்பாவி தமிழன் பல தருணங்களில் அழகிய வார்த்தைக்கும் முகத்துக்கும் மட்டும் அல்ல காசுக்கும்  விலை போகிறான். தமிழனை திசை திருப்ப பல்வேறு வழிகள் கை ஆளப்படுகின்றன.

ஆனால் இது ஒரு திசை திருப்பலான விழா என்று கூறினால் - கடைசியல் தமிழனை திசை திருப்ப தமிழ் மொழி மாநாடு வேண்டி வந்தது என்றால் மகிழ்ச்சியே.

இதை பார்க்கிற போது என் நெஞ்சில் வந்த ஒரு கேள்வி - தமிழ் செம்மொழி இருக்கை ஏறி அமர்ந்துவிட்டாள். அதற்கு பின் நடைபெறும் பெரும் திருவிழா இது.

ஏன் இந்த ஆண்டை தமிழ் ஆண்டாய் மத்திய மாநில அரசுகள் அறிவிக்க கூடாது? இது ஒரு ஆசைதான். வடமொழிக்கு ஒரு முறை ஒரு ஆண்டு அறிவிக்க பட்டது என் நினைவில் உள்ளது.

இப்படி அறிவித்தால் பிற மொழியாளர்களும் கேட்க கூடும் என்று சிலர் சொல்லலாம். அது நல்லதே! இந்திய மண்ணின் மொழிகளை இந்தியாவில்தான் காக்கவேண்டும். மலையாளத்திற்கு ஒரு ஆண்டு மாரத்திக்கு ஒரு ஆண்டு அறிவித்தால் - அந்த ஆண்டில் அந்த மொழி பெருமை பரப்பபட்டால் நாமும் பிற மொழிகளை அறிந்து கொள்ள எதுவாக இருக்கும்.

கன்னடத்திற்கு ஒரு ஆண்டு கோரப்பட்டால் - நான் ஆதரிப்பேன். உங்கள் பதில் யான் அறியேன்.

மொழிகள் மனிதர்களின் பண்பாட்டின் பல்லக்குகள். தமிழ் மொழிக்கும் இந்த ஆண்டை ஏன் அர்பணிக்க கூடாது. இந்த ஆண்டில் தமிழ் மண்ணில் எல்லோரும் தமிழில் கை ஒப்பம் இடுங்கள். தமிழர் உடை அணியுங்கள் பொங்கல் தமிழ் புத்தாண்டு அன்றாவது.


மத்திய அரசு அறிவிக்காவிட்டாலும் தமிழக அரசு அறிவிக்கலாம். அரசுகளால் இயலாமற் போனாலும்  - நாம் ஏதாவது செய்யலாம். என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.

என்னை எத்தனை பேர் வழி மொழிகிறீர்கள் ?

வாழிய செந்தமிழ்!

Comments

  1. நல்ல சிந்தனை ..
    நான் வழிமொழிகிறேன் ..

    ReplyDelete
  2. அருமையான யோசனை !! ஆனால் எப்படி செயல்படுத்துவது ??

    ReplyDelete
  3. நன்றி செந்தில். இந்த சிந்தனையை பரப்புங்கள். இதை செயல்படுத்த - முடிந்தால் நண்பர்களிடம் ஆலோசிக்கவும்.நான் இது தொடர்பான சில வழி முறைகளை ஆராயலாம் என்று உள்ளேன்.

    ReplyDelete
  4. பெயர் இன்றி வந்தாலும் ஆதரவு நல்கிய நண்பரே.
    நாம் எல்லோரும் ஏன் ஏடுகளுக்கு - ஆசரியர் கடிதங்களுக்கு எழுதக்கூடாது - இணையத்திலும் அஞ்சலிலும்.

    ReplyDelete
  5. அருமையான யோசனை. வரவேற்கிறேன்! இந்திய ஒற்றுமைக்கு இந்திய மொழிகளின் புரிதல் அவசியம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

மதராசபட்டினமும் கூவமும் நீங்களும்

அது நீண்ட வருடங்களுக்கு முன்னாள் பார்த்த கலைவாணரின் படம். "என்ன அப்படி பாக்குற அது வைகை ... தண்ணி வெள்ளமா ஓடுத்துலா ?" - கலைவாணர் ஒரு காட்சியில் சொல்லும்  போது  பலரும் சிரித்து விட்டோம். இந்த படம் பார்க்கையில் மதுரையில் இருந்தேன். நாங்கள் பார்த்த வரை வைகையில் தண்ணீர் அதிகம் ஓடவில்லை. கலைவாணரின் காலத்திலும்தான். ஆனால் கலைவாணர் ஓடும் என்று தன நம்பிக்கையை விதைத்து இருந்தார். இன்னும் அந்த நம்பிக்கை விதை மௌனமாய் ஏதோ திரை சுருளுக்குள் சுருண்டு கிடக்கிறது. மதராசபட்டினம் படம் பார்த்தவர்கள் பலரும் சொல்லும் விடயம் - கூவத்தில் படகு விட்டதை. இப்பக்கூட விடலாம்தான். நீங்கள் போகமாட்டீங்க அதான் விடல. அந்த காலத்து சென்னையை / மதராசை காட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்ப சென்னை எவ்வளவு அழகா இருக்கு என்கிறார்கள் படம் பார்த்துவிட்டு வருபவர்கள். என் நண்பர் சொல்வார் குழந்தையில எல்லாம் அழகாதான் இருக்கும் வயசாயடுச்சுனா .... போய்டும்பா. சென்னைக்கும் இதுதான் நடந்துவிட்டது என்று யாரும் சொல்லாதவரையில் நலம். விடுதலை பெற்ற தருணத்தில் சென்னை நல்லாத்தான் இருந்தது என்கிற எண்ணம் நிறைய பேருக்கு வருவத...