Skip to main content

த நா வரலாறு: கோட்டை இல்லாத ஊரா புதுகோட்டை ?

கடந்த பதிவில் அறந்தாங்கி பற்றி எழுதி இருந்தேன். அறந்தாங்கி கோட்டை பற்றி எழுதும்போதே நினைவுக்கு வந்த ஊர் கிழநிலை கோட்டை.

18  ஆம் நூற்றாண்டின் முடிவில் தென் இந்தியாவின் வரி வசூல் வேந்தர்களான நவாப்கள் தங்கள் அந்திம பொழுதை நோக்கி இருந்தனர். அவர்கள் புத்திசாலிதனமாக ஏற்கனவே தங்களின் வரிவசுலிக்கும் உரிமையை வெள்ளையர்களுக்கு வழங்கி இருந்தனர்.

தமிழ் மண்ணில் கிழநிலை கோட்டை என்கிற பகுதி தஞ்சையின் அரசர்களின் கீழ் இருந்ததது. இவர்கள் சோழர்கள் அல்ல. ராஜா என்கிற பட்டத்தை இவர்கள் வெள்ளைய அரசிடம் இருந்து பெற்று இருக்கலாம். இவர்களின் ஆட்சி திறமையோ புத்திசாலித்தனமோ பற்றி எனக்கு தெரியவில்லை.

ஆனால் இவர்களின் வரிவசூல் மீது நம்பிகை இன்மை நவாபுகளுக்கும் வெள்ளையர்களுக்கும் இருந்து உள்ளது. இந்த தருணத்தில்தான் ராஜா பஹுதூர் பட்டம் பெற்று இருந்த தொண்டைமான்கள் வெள்ளையர்களின் கண்ணில் பட்டார்கள்.

தொண்டைமான்கள் கட்டபோம்மன்னையும் மருதிருவரையும் எதிர்க்க வெள்ளையர்களுக்கு தேவைப்பட்டனர்.

கிழாநிலை  கோட்டை  என்பது தஞ்சை அரசர்களின் கீழ் இருந்தது. இந்த கோட்டை ஒரு சிற்றரசன் கீழ் இருந்திருக்கலாம். கட்டபொம்மன் பிடிபட்டதற்கு வெள்ளைய மன்னர்கள் தொண்டைமாங்களுக்கு பரிசாய் கொடுத்த கோட்டை கிழநிலை கோட்டை.

புதுக்கோட்டையில் இன்று எதுவும் கோட்டை இருப்பதாய் தெரியவில்லை. சோழன் ஒருவனின் இரண்டாம் மனைவிக்கு பிறந்தவன் ஒருவன் தொண்டை பெருத்து காணப்பட்டதாகவும் அவன் தனக்கு என்று ஒரு கோட்டையும் அரசும் வேண்டும் என்று கோரியதாகவும். அவனுக்கு என்று உருவாக்கப்பட்டதே புதிய கோட்டை. ஆனால் அது தற்போதைய புதுகொட்டயா ? தொண்டைமான்கள் என்று அழைக்கப்பட்ட ஆட்சியாளர்கள் காலத்தில் திருமயம் கோட்டை பற்றியும் கிழாநிலை கோட்டை பற்றியும் பேசப்பட்ட அளவு புதுகோட்டையில் கோட்டை இருந்ததாக பேசப்படவில்லை என்றே அறிக்கிறேன். புதுகோட்டை மாவட்டத்தில் அறந்தை, கிழநிலை மற்றும் திருமயமே கோட்டை தளங்கள். புதுகோட்டையில் கோட்டை இல்லை. 

சரி பட்டுகொட்டையில் - எதுவும் கோட்டை உள்ளதா ? இந்த ஊருக்கு அறந்தாங்கிக்கும் என்ன தொடர்பு - ஏன் அறந்தாங்கி பட்டுகோட்டை என்று அழைக்க படுகிறது. இந்த ஊர்கள் அருகாமையில் இல்லையே ?

தொடரும்

Comments

  1. வரலாறு இன்னும் விரிவாக பார்க்கப்படவில்லை, பட்டுக்கோட்டை அருகில் அறந்தாங்கி இல்லை, இரண்டுக்கும் பத்து கிலோ மீட்டர் இடைவெளி,
    கோட்டை இருந்தால் மட்டுமே அப்பெயர் வரவில்லை, கோட்டை என்பது மன்னனின் இருப்பிடம் மட்டுமல்ல, பாதுகாப்பான இடங்களையும் அப்படிதான் அழைப்பார்கள்,
    சிற்றூர்களும் கோட்டை என்ற பெயரில் முடிகிறது..

    கார்த்திக் கோட்டை என்று முடியும் ஊர்கள், நகரங்கள் பற்றி தனிப் பதிவு போடுங்கள் ...

    ReplyDelete
  2. உங்கள் கருத்து உண்மைதான். நீங்கள் சொன்ன மாதிரி ஒரு பதிவு போடலாம். யோசனைக்கு நன்றி!

    ReplyDelete
  3. எங்கே இருந்து எல்லா தகவல்களும் பிடிக்கிறீங்க?
    ...... very interesting!

    ReplyDelete
  4. is there any posting(minister post) available for MK/jeya?

    ReplyDelete
  5. நண்பரே ....புதுக்கோட்டையில் அரண்மனை இருந்தது. புதிய கோட்டை கட்டப்ப்பட்டதால்தான் புதுக்கோட்டை எனப்பட்டது. மேலும்...
    அறந்தாங்கிக்கும் பட்டுக்கோட்டைக்கும் 50 கிலோமீட்டர்கள் தூரம்...!

    ReplyDelete
  6. நண்பர் சுரேகா - உங்கள் கருத்து எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த கோட்டை பற்றி ஏதேனும் தொடுப்பு இருந்தால் அனுப்பவும்.
    மிக்க நன்றி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்!

    ReplyDelete
  7. @சித்ரா - இவை எதுவும் நான் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததில்லை. எல்லாம் பிறர் சொல்ல கேள்வி அல்லது படித்தது. The hollow Crown என்று ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் உண்டு. அதில் புதுக்கோட்டை பற்றி விரிவாக சொல்லபட்டிருக்கும். அப்புறம் - அதில்மறுத்து பாண்டியர்களும் கட்டபொம்மனும்
    கலகக்காரர்கள் ( rebels ) என்று இருக்கும். அது ஆசிரியர் பார்வை.

    ReplyDelete
  8. ட்ட்பியன் - உங்கள் பின்னோட்டம் புரியவில்லை எனக்கு

    ReplyDelete
  9. //பட்டுக்கோட்டை அருகில் அறந்தாங்கி இல்லை, இரண்டுக்கும் பத்து கிலோ மீட்டர் இடைவெளி,//
    யப்பா....ஏனுங்க அளந்து பாத்தீங்களா? ரெண்டுக்கும் குறைஞ்சது 50 கிலோ மீட்டர் இருக்குமுங்க!

    ReplyDelete
  10. பட்டுக்கோட்டையில் கோட்டை குளம், கோட்டை மேடு என்ற பகுதியும் தஞ்சை சாலையில் உள்ளது. முதலில் இந்த ஊரின் பெயர் பட்டுக்கோட்டை இல்லை. வீரமாநகர் என்பதாகும். தஞ்சை மன்னன் சரபோஜி மல்லிப்பட்டிணத்தில் கடலில் குளிக்க வந்தபோது மன்னனை வரவேற்க குறிகிய நேரமே இருந்ததால்... கோட்டைச் சுவர்களுக்கு பட்டுத்துணிகளால் போர்த்தி வைத்தானாம். அதனாலேயே வீரமாநகர் பட்டுக்கோட்டை என்று அழைக்கப்பட்டதாக செவி வழிச் செய்தி உண்டு,,,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்