தமிழர்கள் குடியானவர்களாகவும் வேடுவர்களாகவும் இருந்து உள்ளனர். முருகன் வேட்டுவ கடவுள். முருகனை வணங்கியவர்கள் தங்களுக்கு என ஒரு மதம் வைத்திருந்தாகவும் கூறப்படுவது உண்டு. இவர்கள் பெரும்பாலும் மலை பகுதிகளில் வசித்தனர். குடியானவர்கள் அதாவது ஒரே இடத்தில தங்கள் வாழ்வை அமைத்து கொண்டவர்கள் - வேளாண் பெருமக்கள் இவர்கள் பல தெய்வ வழிபாட்டில் இருந்திருக்க கூடும்.
வர்த்தக சமுகம் ஒன்றும் உருவாக தொடங்கியது இவர்கள் பொருள் தேடி பல தேசங்கள் பயணம் செய்தனர். நம் மொழியின் வார்த்தைகளும் பழமொழிகளும் இவை சொல்லும்.
அம்மாவாசை என்பது வணிக குலத்தின் திருநாள். இந்த நாளில் அவர்கள் கப்பல் பயணம் மேற்கொள்வர். காரணம் வருவது வளர்பிறை.
தாயின் வசம் பிள்ளையை ஒப்படைத்து செல்வதே அம்மா வாசை என்றும் சொல்வது உண்டு. இந்த வணிக மக்களின் பெருநகரம் பூம்புகார்.
தற்போது பூம்புகார் பெரிய அளவில் இல்லை. பூம்புகார் மட்டுமே நகரம் என்று அழைக்கப்பட்டதாக ஒரு செய்தி உண்டு. இந்த மண்ணில் வாழ்ந்த கண்ணகி பத்தினி வழிபாட்டின் அச்சாணி. தாய் வழி சமூகமான இந்த வணிக சமூகம் கண்ணகியை தங்கள்கடவுளாய் ஏற்றுகொண்டது.
இந்த பூம்புகார் நகரத்தை சேர்ந்தவர்கள் தமிழ் மண்ணின் வேறு நகரங்களுக்கு இடம் பேராதவர்கள் என்றும் அதனாலே இது புகார் என்று அழைக்க பட்டதாகவும் செய்திகள் உண்டு. இது ஒரு சோழர் கால நகரம். இதற்கென போர்கள் நடந்ததா எனதெரியவில்லை.
இந்த பூம்புகார் ஒரு கடற்கோளில் அழிந்து போனது. சிலப்பதிகாரம் இந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் பதிவே. தமிழ் மண்ணில் முதன்முதலில் அரசர்கள் அல்லாமல் செல்வ செழிப்போடு வாழ்ந்தவர்கள் இந்த மண்ணை சார்ந்தவர்களே. இந்த பூம்புகார் மண்ணை போலவே வட தமிழ் மண்ணில் ஒரு துறை முகம் நகரம் பிற்காலத்தில் பெருமையோடு விளங்கியதாகவும் அங்கே சிங்கர்கள் என்கிற வணிகர்கள்வாழ்ந்ததாகவும் செய்திகள் உண்டு. அது மல்லை.
தொடரும்
Shane Warne - எனக்கு ராஜாவா நான் வாழுறேன் - இறந்த பின்பும் !
-
Shane Warne !1990களில் அவுஸ்திரேலியா அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறை
சுழல்பந்துவீச்சாளரை அறிமுகப்படுத்தி வந்திருந்த காலத்தில், ‘யார்ரா இது ?’
என்று ஆச்சர...
2 months ago
3 மறுமொழிகள்:
பேரைப்பார்த்தவுடன் ஷாக்.
மந்திரி சிதம்பரம் பையனோன்னு? அவர் பெயரும் கார்த்திக் சிதம்பரம்தானே
நெறைய பேருக்கு இந்த குழப்பம் இருக்கு. நான் அவர் இல்லை.
அமாவாசைக்கு நீங்கள் சொல்லும் விளக்கம் சரிபார்க்கவும்.
சமஸ்கிருதத்தில் எதேனும் கிடைக்கலாம் :)
Post a Comment