.சென்னையில் இருக்கும் தருணங்களில் நான் கேட்கும் எந்த பண்பலையும் தமிழ் பேசுவதில்லை. தமிழ் மாதிரி ஏதோ பேசுகிறார்கள்.
" Welcome Back " , " Stay tuned ", "Break " , " None other then " - இதெல்லாம் தெரிய வேண்டும் தமிழ் ஊடகம் எதுவும் பார்க்கவோ / கேட்கவோ.
அதிலும் சிலர் பேசும் வேகமான ஆங்கிலத்தில் தமிழ் திணறுகிறது. விட்டுதொலைடா அப்படின்னு கெஞ்சுது தமிழ்.
ஆங்கில வார்த்தைகள் நம்மிடம் நீக்கமற நிலைத்து விட்டது எனபதில் நான் வேறுபடவில்லை. ஆனால் நம் பயன்பாட்டில் இல்லாத வார்த்தைகள் இந்த வானொலிகளில் புழங்குகிறது.
பண்பலை எங்கள் ஊரில் கேட்டவன் என்கிற நிலையில் சென்னை வானொலி பணபலைகள் எனக்கு கொஞ்சம் ஆச்சிரியம் தருவது. எங்க ஊரில் பண்பலை கேட்டு இப்போது வருடங்கள் ஓடிவிட்டது. இணையத்தில் சென்னை பண்பலை வானொலிகள் வரும்.
சரி! நிகழ்ச்சி தொகுப்பாளர்தான் வேற்று மொழிக்காரரோ என்று நினைத்தால், பேசும் நேயர்களும் - ஏதோ எலிசபெத் ராணி வீட்டு அண்டை வீட்டுக்காரன் மாதிரிதான் பேசுகிறார்கள்.
நாம் தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா இல்லை அமெரிக்காவிலோ ஆங்கில நாட்டில் இருக்கிறோமோ என்று நினைக்க வைக்கிறது.
தமிழ் பட நாயகிகள் தமிழர்களாக இருப்பதில்லை. அதே மாதிரி நிகழ்ச்சி தொகுபாளினிகள் தமிழர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.
எங்கள் ஊர் பண்பலை - கோடை பண்பலை. அது இன்னும் அப்படியேதானே இருக்கு?
நீங்கள் தமிழ் பண்பலைகளில் அதிகம் கேட்கும் ஆங்கில வார்த்தை என்ன என்று பின்னூட்டத்தில் சொல்லவும்.

அரைவாசி ஆங்கிலம் தான்.. சொன்னால் போய்க்கொண்டே இருக்கும்.. நாம் வழக்கமாக பேச்சு வழக்கில் உபயோகிக்கும் ஆங்கில வார்த்தைகள் வருவதில் தவறில்லை. வலிய உபயோகிக்கும் போது தான் பிரச்சனை..
ReplyDeleteஇங்கு நம்மவர்கள் வானொலி நடத்துகிறார்கள் முழுத்தமிழில் பேசி.புலத்தில் வளரும் நம் குழந்தைகளுக்கு ஏதுவாக இருக்கிறது.ஓரளவு அதிஸ்டம் செய்தவர்கள் நாங்கள்.
ReplyDeleteநீங்கள் சொல்வதே உண்மை பிரசன்னா.
ReplyDeleteநீங்கள் கொடுத்துவைத்தவர் ஹேமா.
//தமிழ் பட நாயகிகள் தமிழர்களாக இருப்பதில்லை//
ReplyDeleteஎனக்கு நமிதா வின் "மச்சா " தமிழ் தான் பிடிக்கும் .....ம் ம் ம் ம் ம்
டெடிகேட் செய்றேன்
ReplyDeleteஒரே ஹேப்பியா இருந்துச்சு
அட சர்ப்ரைஸ் நீங்களா
ஆல் வ்யூவர்ஸ்
நூறு வார்த்தைகளாவது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
தொடக்கத்தில் கோபமாக இருந்தது. இப்ப இந்த நாதாரித்தனத்தை இதற்குப் பின்னால்உள்ள வணிக லாபத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டேன்.