என் அருகில் வந்தான் மாடசாமி. என் கண்களை பார்த்தான். அவனது கண்களில் வெறி இருந்தது. தன வலது கரத்தை நீட்டினான்.
அந்த மெலிந்த தேகத்தவன் ஒரு பெரிய அருவாளை கொடுத்தான்.
அருவாளை பிடித்த மாடசாமி. மெதுவாக அதை என் கழுத்தருகில் கொண்டு வந்தான்.
கழுத்தில் வைத்தான்.
"கொன்னுடவா ?"
என்னிடம் கேட்டான்.
கோயிலுக்கு நேந்து விட்ட ஆட்டிடம் சம்மதம் கேட்பது மாதிரி. நான் திரு திரு என முழித்தேன்.
என் கண்கள் பயத்தில் உறைந்தன. வியர்வை என்னை நனைத்து இருந்தது.
நா வறண்டு போனது. அருவா என் கழுத்தை நெருக்கியது. ஆனால் அறுக்கவில்லை.
"சொல்லு ஆத்தா ... தம்பி கேக்குதுல்ல"
பாம்பட பாட்டி குறுக்கே புகுந்து சங்கு ஊதிக்கோ என்றது.
"கொன்னுடுங்க தம்பி"
மாடசாமியின் அண்ணனும் வேகபடுதினான்.
குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. எல்லோரும் ஒரு நிமிடம் கவனம் சிதறினர்.
அந்த சிறுவன் மலை மீது இருந்து கீழே எட்டி பார்த்தான்.
"அண்ணே வந்துட்டாய்ங்க"
அது நிச்சயமாக காவல்துறையாகதான் இருக்கும்.
என்னை மாடசாமி ஒரு முறை பார்த்தான்.
"உங்கள கொல்ல கூட்டி வரல. எங்க வீட்டு பொண்ணுகள மத்தவன் தொட்டா மட்டும் இல்ல, மத்த வீட்டு பொண்ணுங்கள நாங்க தொட்டாலும் குத்தம்தேன். நீங்க என்ன செஞ்சீங்க ... கொல்ல?"
சொல்லி விட்டு அருவாளை கீழே போட்டான்.
"எங்கள கொன்னுட்டு இந்த மலய எடுத்துக்குவாக , ... யாருக்கு வேணா வித்துக்குவாக ... எங்க பொண்ணுக உசுரோட இருந்தா அவுகளையும் ... " - மாடசாமி இதயத்தில் இருந்து கத்தினான்.
அடிவாரத்தில் போர் உக்கிரம் அடைந்தது. இவர்களும் துப்பாக்கியும் ரவயுமாக தயார் ஆகினர்.
நான் எதுவும் புரியாதவளாய் நின்றேன். போரின் வெம்மை அவர்களை துரத்தியது.
குண்டுகளை வீசுவதும் துப்பாக்கியால் சுடுவதுவுமாக மாறினார் அவர்கள். அந்த பெண்ணின் உடல் முழுமையாக எரிந்து முடிவதற்கு முன்னால் அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர வேண்டி இருந்த்தது. நானும் அவர்களுடன் பயணிக்க வேண்டி இருந்தது.
ஒரு நிலையில் விண்ணில் ஹெலிகோப்டேர்கள் சுழல தொடங்கின. கை எறி குண்டும் துப்பாக்கி சூடும் இனி அவர்களை காக்க போதுமானதாக எனக்கு தென்படவில்லை.
அவர்கள் ஓடி ஓடி மறைந்து மறைந்து போர் புரிந்தனர்.
இரவும் பகலுமாய் போர்.
அது ஒரு இரவு பொழுது ....
மாடசாமி அந்த மெலிந்த தேக மனிதனிடம் எதோ சொன்னான்.
அவன் என்னருகில் வந்தான்.
வந்தவன் என்னை ஒரு விதமாக பார்த்தான்.
"வாங்க .. அடிவாரத்துக்கு போகலாம்" -சொன்னான்.
"அவுங்க எல்லாம் ?" - நான் கேட்டேன்.
"செத்துபோவாய்ங்க" -சொல்லிவிட்டு என் முன்னால் நடந்தான்.
துப்பாக்கியால் காவலர்களின் நிலைகளை பார்த்து சுட்டு கொண்டிருந்த மாடசாமி திரும்பி பார்த்தன்.
"போங்க ... இங்க இருந்தா செத்து போவீக" என்று கண்களால் சொல்லி வழி அனுப்பி வைத்தான்.
அவனது வார்த்தைகளை என்னால் மறுக்க முடியவில்லை. ஒரு வீரனின் வார்த்தையை மதிக்க வேண்டிய நிலை.
அவன் ஒரு நல்ல இதயம் கொண்ட வீரன்.
நான் அந்த மெலிந்த தேகத்தவனின் பின்னால் நடந்தேன்.
தாக்குதல்களின் நடுவில் பயணித்தோம்.
அந்த இளம் பெண்ணின் மரணம் கண்ணில் வந்து மோதியது.
அழகானவள் ... அவளின் மரணம் ஒரு மிக பெரிய வருத்தம்தான். அந்த சிறுவன் இப்போது அநாதை. அந்த சிறுவன் போல பலர்.
ஒரு பெண்ணை தொட்ட காவலர்கள் எங்கே ? என்னை விட்ட இந்த வீரன் எங்கே ?
நாங்கள் மலை காடு அப்புறம் அந்த நதியையும் கடந்தே வந்தோம்.
அடிவாரத்திற்கு வந்தோம். காவல் நிலையம் என்று ஒரு பெரிய எழுத்து பலகை தெரிந்தது.
"நீங்க போங்க ?" - அவன் சொல்லி விட்டு காட்டுக்குள் ஒளிந்து கொள்ள போனான்.
"ஏய் நில்லு "
அவன் என்னை பார்த்தான்
"ராக்காயி ?" - நான் கேட்டேன்
"அவுக மாடசாமி அண்ணனுக்கு வாச்ச தெய்வம். தெய்வமாயிட்டாக " - சொல்லி விட்டு மறைந்தான்.
நான் காவல் நிலையத்துக்குள் வந்தேன்.
ஒரு ஏட்டு இருந்தார்.
நான் அப்போதுதான் அந்த சத்தம் கேட்டேன். மலை உச்சியில் மாடசாமி கொல்லபட்ட சத்தம். ஒரு யானை விழுந்த சத்தம். வீரன் விழுந்த சத்தம்.
நானும் ஏட்டும் வெளியில் வந்து பார்த்தோம்.
"நான் ராக்காயி மாதிரியா இருக்கேன்" - கேட்டேன்.
"அந்த அம்மா கருப்ப கலையா கடவுள் மாதிரி இருக்குங்க "
"அப்ப நான் ?" -கேட்டேன்
"ஒரு சாடையில அப்படிதான் இருக்கீக. என்ன வெள்ளையா இருக்கீங்க" - என்றார் ஏட்டு.
அப்புறம் சத்யா வந்தார் அடிவாரத்திற்கு.
நாட்கள் ஓடின. இன்னும் என் இதயத்தில் அந்த காடு உள்ளது. அதற்காக உயிர் தந்த நல்ல உள்ளங்கள் உள்ளனர்.
இன்று பாராட்டு விழா. என்னிடம் மாடசாமியை கொல்லவில்லை என்று பொய் சொல்லி கொண்டு உள்ளார்.
நீரை பார்த்தால் சிவப்பாய் தெரிகிறது என்கிறார் சத்யா .
வெளியில் இருந்து பார்த்தால் அவர்கள் பயங்கரவாதிகள்.
நன்றிகளுடன்
பைரவி.
நான் சத்யா பேசுறேங்க ....
நான் என் மனைவியை கொஞ்சம் ஏமாத்திக்கொண்டு தான் உள்ளேன். அவள் வந்த பின் அவளுக்கு தெரியாமல் அவளை பரிசோதித்துவிட்டேன். அவள் உத்தமி.
அவளிடம் நான் மாடசாமியை கொல்லவில்லை என்று சொல்லிக்கொண்டு உள்ளேன். என் அலுவலக தோழர்கள் மற்றும் என் நலன் விரும்பிகளின் காரணமாக நான் கடைசியில் இன்று சென்று பதக்கம் வாங்கிக்கொள்வேன்.
இப்படிக்கு
சத்யா
முற்றும்.
இது ராவணன் பார்த்த பாதிப்பில் எழுதிய கதை. ராவணன் சாயல் நிறைய இருக்கும். விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன.

கடைசி 2- 3 அத்தியாயங்கள் மிக மிக விறுவிறுப்பு.நல்ல முயற்சி.நிறைவான ஒரு கதை.
ReplyDelete// வெளியில் இருந்து பார்த்தால் அவர்கள் பயங்கரவாதிகள்.//
மனதோடு உரசிப்போனது.
நன்றி ஹேமா
ReplyDelete//கோயிலுக்கு நேந்து விட்ட ஆட்டிடம் சம்மதம் கேட்பது மாதிரி. நான் திரு திரு என முழித்தேன்.
ReplyDeleteஎன் கண்கள் பயத்தில் உறைந்தன. வியர்வை என்னை நனைத்து இருந்தது.//
தல ..சிங்கம் -னு சொல்லி இருன்தீக...பயப்படலாமா ........
கதை நல்லா இருக்கு.....14 தொடர் படிக்க போர் அடிக்குதுங்க ....ஒரு 5,6 பதிவோட தொடர முடிசீன்கனா விறு விறுப்பா இருக்கும் ............
@தனி காட்டு ராஜா
ReplyDeleteசிங்கம்னு பைரவிய சொன்னது சத்யா. பைரவி இல்லை. புரியுதுங்களா ?
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
ஒரே மூச்சுல படிச்சுரலாம். பெரிய கதை இல்லை.
If the one who protects the earth and forest is termed as anti-social, our freedom fighters were once labelled as anti-social and terrorists. The real terrorist is the one who is a power monger- both official and political,the one who wants to exploit others -grab others properties with the help of political power and affluence and by all illegal means.
ReplyDeleteA community which was termed as terrorist robberers during the British rule, has almost full control of all political parties in Tamilnadu.