Skip to main content

தி லாஸ்ட் ஏர் பெண்டர் - விமர்சனம்

னோஜ் நைட் ஷியாமளனின் படங்களின் மேல் நான் அதிகம் நம்பிக்கை வைப்பதில்லை.  எனவே இந்த படத்தை நான் அதிகம் எதிர்பார்க்கவில்லை.

நான் இதன் விமர்சனங்களை படித்துவிட்டு படம் பார்க்காமல் இருப்பதே சிறந்த்தது என்று இருந்த போது தோழர் ஒருவரின் குடும்பம் படம் நல்ல முறையில் எடுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் ஒரு முறை போய் பாருங்களேன் என்றனர். அதிலும் அவர்கள் இந்த படத்தின் மூல வடிவமான தொடரை அவர்கள் குழந்தைகள் பார்த்ததாக சொல்லினர்.

இரவு நேரத்தில் இந்த படத்தை பார்க்க திரை அரங்குக்குள் சென்றோம்.

திரையில் படம் ஒளிர தொடங்கிய தருணத்திலேயே சீன எழுத்துக்கள் மின்ன ஒருவன் சாகசம் செய்ய எழுத்துக்கள் மிளிர தொடங்கின.
கராட்டே கிட் - இப்போது இது. சீனம் வாழ்கிறது.

அவதாரம் - ஆங்கிலத்தில் அவதார் - பற்றி ஒரு முன்னுரை ஓடியது. அதில் ஒரு காலத்தில் காற்று, நிலம். நீர், நெருப்பு நாடுகள் எல்லாம் ஒரு காலத்தில் நட்புறவோடு இருந்ததாகவும். பின்னர் நெருப்பு நாடு ஆதிக்கம் கொள்ள ஆரம்பித்த தருணத்தில் அவதார் காணமல் போய் விட்டான் - என்று சொல்லப்படுகிறது.

கடைசி சோழன் பற்றி சொல்லும் ஆயிரத்தில் ஒருவன் என் நினைவுக்கு வந்தான்.

ஒரு சகோதரனும் சகோதரியும் இந்த அவதாரத்தை ( அதாவது  ஏற் பெண்டர் ) கண்டு பிடிக்கின்றனர். அவர்களின் ஊர் இன்று நெருப்பு நாட்டின் ஆதிக்க வெறியில் உள்ளதை தொடரும் காட்சிகள் சொல்கின்றன. நெருப்பு நாடும் அவதாரத்தை தேடி அலைகிறது. தேடுவது சேரி நாய் கோடிஸ்வரன்  புகழ் தேவ் படேல் மற்றும் அவர் நாடு.

தன் தந்தையிடம் இழந்த பெயரை திரும்ப பெற தேவ் இந்த முயற்சியில் உள்ளார். அவரது முயற்ச்சிகள் தோற்கின்றன.
யாளியிடம்  நினைவில் அவ்வப்போது அவதார் பேசுகிறான்.

மொட்டை தலையும் அதில்  சிறிய பச்சை (டட்டூ)    குறியீடுகளால் உருவான  மிக பெரிய அம்புக்குறி ஒன்றும் என
காட்சி அளிக்கிறான் அவதார்.
அந்த தலையை தன் அடையாளத்தை காட்டாமல் இருக்க மறைத்துக்கொள்கிறான். அவதார் ஒரு புத்த பிக்கு. அவன் பெயர் ஆங். அவன் நினைவுகளில் அவனது பழைய நாட்கள் வந்து போகின்றன. அவனது ஆசிரியருக்கு இந்திய முகம்.

காற்றை கை ஆள்வதை பற்றி மட்டுமே
அவதாருக்கு தெரிகிறது. நீரை கையாள அதாவது மடக்க கற்றுக்கொள்ள அவன் நீர் நாடு செல்கிறான். அவ்வப்போது அவன் கண்கள் மின்னுகின்றன - யாளி ( dragon ) பேசுகிறது - பழைய நாட்கள் விரிகிறது. குழந்தைகள் ரசிப்பார்கள்.

நான்கு தரப்பட்ட மக்கள் நான்கு நாடுகள் என்கிற போது என் நினைவில் வந்த நாடு இலங்கை. அங்கே நான்கு தரப்பு மக்கள் இருந்த வரலாறு உண்டு.

படம் கிராபிக்ஸ் கலாட்டாவாக உள்ளது. அவதாரை கண்டுபிடிக்கும் பெண் - சில இடங்களில் நன்றாக நடித்து உள்ளார்.
படம் - மூன்று பகுதிகள்  உள்ளது போல. வந்து உள்ளது முதல் பகுதி.

அவதாரை
அழிக்க வேண்டும் என்று நெருப்பு நாடு நினைக்க படம் வணக்கம் சொல்கிறது.

கெட்டவர்கள் பாத்திரங்கள் எல்லாம் இந்தியர்கள் செய்து உள்ளார்கள். படத்தில் பெரிய திருப்பம் எதுவும் இல்லை. போர் நடக்கையில் சில இடங்களில் நாயகன் தேமே என்று நிற்கிறான்.

குழந்தைகள் ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன். என்னுடன் வந்த நண்பர் - நல்ல முயற்சி என்றார். ஒரு திரைதொடர் பட வரிசைக்கு உள்ள நேர்த்தி படத்தில் இல்லை என்றே உணர்கிறேன். இதே குறை ஆயிரத்தில்  ஒருவனில் இருந்தது.


ஷியமலன் அவர்கள் இன்னும் உழைக்க வேண்டும். கதை சொல்லும் திறனில் கொஞ்சம் கற்க வேண்டும். நல்லபடம் எடுக்க முயன்று முக்கால் கிணறு தாண்டி உள்ளார்.


வீட்டில் குழந்தைகள் இருந்தால் அழைத்து செல்லுங்கள். மற்றபடி படம் பெரிய அளவில் இல்லை. காமிக்ஸ் விரும்பி படிப்பவர்களை கவரலாம். லாம்தான் .

Comments

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்