நான் சத்யா. அந்த கருப்பு ஆட்டை எங்கள் வழி காட்டியாக வைத்துக்கொண்டு நாங்கள் எங்கள் வழியில் பயணித்தோம்.
எங்கள் ஜீப் அந்த காட்டு மலை பகுதிக்குள் சீறி பாய்ந்தது. பின்னல் எங்கள் படை.
நாங்கள் அவன் சொன்ன இடத்தில் நிறுத்தினால் - அங்கே யாரும் இல்லை.
"எனக்கு தெரியாதுங்க" - அவன் அலறினான்.
என் கை துப்பாக்கி அவனை பதம் பார்க்க நினைத்தது. அந்த நேரம் பார்த்து அந்த பழங்குடியினர் அந்த பக்கம் வந்தனர்.
நாங்கள் அவர்களை வழி மறித்தோம். அவர்கள் கையில் குருவி சுடும் துப்பாகிகள் இருந்தன.
"எங்கே மாடசாமி ?" - கேட்டேன்
"தெரியாது சாமி" - அவர்கள் சொன்னார்கள்.
நான் இளைய பெருமாளை அழைத்தேன்.
இந்த கருப்பு ஆட்டை தீர்த்து கட்டிவிட திட்டமிட்டோம்.
நாங்கள் எங்கள் துப்பாகிகளை பயன்படுத்தினோம்.
அந்த கருப்பு ஆடும் மற்றும் சிலரும் எங்கள் தரப்பில் இறந்தனர். அந்த பழங்குடி கூட்டத்தில் எல்லோரும்.
யுத்தம் முடிந்த மாதிரி இருந்தது. மாடசாமிக்கு யார் அதரவு அளித்தாலும் தீர்த்துக்கட்டவேண்டியததுதான். இந்த பழங்குடி கூட்டமும் அவனின் ஆதரவு கூட்டாம் தான்.
நான் எங்கள் குழுவை பார்த்தேன்.
அவர்கள் பிணங்களை அள்ளி கொண்டிருந்தனர்.
நான் தண்ணீர் குடித்தேன். என் துப்பாக்கி குழலை ஊதி விட்டேன். அது துயில் கொள்ள தயார் ஆனது.
அப்போதுதான் அந்த குரல் கேட்டது.
அதிர்ந்தோம். நான் திரும்பிபார்த்தேன்.
நான் மட்டும் அல்ல எல்லோரும்.
"நாந்தேன் மாடசாமி"
என் துப்பாக்கியை தயார் செய்தேன். அது உயிர் குடிக்க தயாரானது.
ஆனால் ....
தொடரும்
கதை நன்றாக போகிறது..போராட்டகாரர்களின் வரலாறு..
ReplyDeleteநன்றி செந்தில்
ReplyDeletemmm... twistaa?
ReplyDeleteநன்றி தங்கமணி
ReplyDelete