தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Thursday, July 1, 2010

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 9

மீண்டும் நான் பைரவி. அந்த சத்தம் கேட்ட பிறகு நான் தரதரவென பாறைக்கு அந்த பக்கம் இருந்த ஒரு பெண்ணால் இழுத்து செல்லப்பட்டேன்.
எங்களுக்கு முன்னாலும் பின்னாலும் மாடசாமியின்  ஆட்கள். ஒரு நிலையில் என்னை இழுத்து சென்ற பெண் அடிவாயிற்றை பிடித்திக்கொள்ள. பாம்பட பாட்டி எங்கள் எல்லோரையும் பக்கத்தில் இருந்த குகைக்கு.

என் காலில் ரத்தம் சொட்டியது. அந்த இளம் பெண் இழுத்ததில் என் கால் அருகில் இருந்த மரக்கிளையில் குத்தி ரத்தம் பட. என் சேலைத்தலைப்பை கிழித்து காலில் கட்டிவிட்டால் அவள் அப்போது. பத்தி சேலை தலைப்பு இன்னும் பாறையில் கிடக்கும்.

குகை இருளாக இருந்தது. இப்போது சத்தம் எதுவும் இல்லை.

அந்த  இளம் பெண் சுருண்டு படுத்துக்கொண்டாள். மாடசாமியின் ஆட்களில் ஒருவன் வெளியில் போய் சில கிளங்குகளுடன் வந்தான்.

பாட்டி சமைத்தாள். சாப்பிட என்னிடம் நீட்டினால் பாட்டி.
நான் மறுத்தேன்.

"சரி! அந்த புள்ளைக்காவது கொடு"
நான் வாங்கிக்கொண்டேன். அவளிடம் நீட்டினேன்.

அவள் கண் விழித்தாள். சிநேகமாய் புன்னகைத்தாள்.
"தாங்க ராக்காயியக்கா" - வாங்கிக்கொண்டாள்.

வெளியில் மழை ஆரம்பம் ஆகி இருந்தது. ஓவென்று பேய்ந்து கொண்டு இருந்தது, மாடசாமி குகை வழியில் நின்று மழையை பார்த்துகொண்டிருந்தான்.

அந்த இளம் பெண்  சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
"ராக்காயியக்கா  ... "
மீண்டும் அழைத்தாள் அந்த பெண்.

பாட்டிக்கு கோபம் பொத்திக்கொண்டு வந்தது.
"இவளாடி ராக்காயி ?"

நான் புரியாமல் நின்றேன்.மாடசாமி திரும்பி பார்த்தான். மிரட்டும் பார்வை.
பாட்டி மௌனம் ஆனாள்.

யார் அந்த ராக்காயி ? எனக்கும் அவளுக்கும் என்ன தொடர்ப்பு.
மாடசாமி தன் கையில் இருந்த  துப்பாக்கியை என் நெற்றியில் வைத்தான்.

பாட்டியும் அந்த இளம்பெண்ணும் என்னையே பார்த்தனர்.
டிரிக்கரை அழுத்தினான். அதிர சிரித்தான்.

"ரா...க்...கா...யீ .... "
உரக்க கத்தினான். டிரிக்கரை அழுத்தினான்.

"சத்யா ...."
நான் கத்தினேன் என் நெஞ்சுக்குள். பயம் முகத்தில்... வியர்வை அதன் மீது.

தொடரும்

4 மறுமொழிகள்:

Chitra said...

////வெளியில் மலை ஆரம்பம் ஆகி இருந்தது... ///

.....மழை

......நல்ல கதையில், எழுத்து பிழை இருக்கும் போது, கொஞ்சம் நடையின் வேகத்தை குறைக்கிறது. இது எனது தாழ்மையான கருத்து. :-)

Karthick Chidambaram said...

தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி சித்ரா. திருத்திவிட்டேன்.

அப்பாவி தங்கமணி said...

குட் flow ...

Karthick Chidambaram said...

நன்றி தங்கமணி

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை