Skip to main content

ஒரு அரவமில்லா காட்டில் .... பகுதி 13

ந்த இளம் பெண் மரணம் அடைந்து விட்டாள். இவர்களோ சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர். மலைக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள் மாதிரி இவர்கள். இவர்களால் அவளை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடியாது. காவல்படைகள் நெருங்கு கின்றன. இவர்களின் தோல்வி இவர்களின் தோளில் ஏறி அமர நேரம் அதிகம்இல்லை.

மாடசாமி அந்த இளம் பெண்ணை பார்த்து விம்மி விம்மி அழுதான். தன் உடன் பிறந்தவளை இழந்த மாதிரி.
சுடுகாட்டுக்கு செல்ல முடியாது - தற்போதைய சூழலில்.

மாடசாமியின் அண்ணன் வந்தான். பார்க்க கொஞ்சம் கனமாக இருந்தான். மீசை முறுக்கி விடப்பட்டு இருந்தது.
அவனோடு ஒரு மெலிந்த தேகதவன்.

மாடசாமி வந்த அண்ணனிடம் பிணத்தை காட்டினான்.
கண்களை கசக்கினான். அழுதான்.

"தம்பி. நம்ம பயலுகு வலுவா நிக்குராணுக. கண்ண கசக்காத"
தன் தம்பியை தாங்கிக்கொண்டான் அண்ணன்.

அந்த மெலிந்தவன் என்னை பார்த்தான்.
"இது தான் அந்த படுபாவி பொண்டாட்டியா?" - மாடசாமியிடம் கேட்டான்.

எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"யார படுபாவிங்குற ?"

நான் கோபத்தோட அந்த மெலிந்த தேகதவனை நெருங்கினேன்.
மாடசாமி அந்த மெலிந்த தேகத்தவனை பிடித்துக்கொண்டான். அவன் திமிறினான்.

ஒரு சின்ன சிறுவன் வந்தான்.
எல்லோரும் அவனை நோக்கி தங்கள் பார்வையை திருப்பினர்.
"அக்காடா ....."
எல்லோரும் அவனை கண்டிக்கொண்டு அழுதனர்.

அவன் அந்த இளம்பெண்ணின் தம்பி போல.
"அவளுக்கு கண்ணாலம் கட்டி வைக்கனும்னு இருந்தோமே ... " - பாம்பட பாட்டி கதறினாள்.

நிமிடங்கள் கடந்த பின்.
மரக்கட்டைகள் கொண்டு வரப்பட்டு அந்த குகைக்கு வெளியில் அவள் எரிக்கபட்டாள்.

இந்த புகை கூட அவர்களை காட்டி கொடுத்துவிடும் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். மனிதர்கள் எங்கு எல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இங்கே தாக்குதலும் இருக்கின்றது. காரணம் - இங்கே மனிதர்கள் என்றால் இவர்கள் இல்லாவிட்டால் காவலர்கள்.அண்ணன்  - மாடசாமிக்கு, அந்த சிறுவனுக்கு  ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தான்.

நான் அவர்களை பார்த்தேன் என் மீது அவர்களின் வெறுப்பு திரும்பவில்லை.
போலீஸ் அவர்களை நெருங்கி கொண்டு இருந்தது.

அந்த பெண்ணிடம் எப்போதும் ஒரு நட்பு புன்னகை இருக்கும். சில தருணங்களில் அவளுக்கு ரத்த போக்கு இருந்தது. பாதிக்கப்பட்டவள்.

நாங்கள் இருக்கும் இடத்திற்கு கொஞ்ச தூரத்தில் மோதல் நடந்து கொண்டு இருக்கலாம். கிளம்ப ஆயத்தம் ஆகினர் மாடசாமியின் அண்ணனும் அந்த மெலிந்த தேகத்தவனும். அந்த பெண்ணின்  தம்பி இங்கேயே தங்கி விட இருந்தான்.

"சரி. இந்த பொம்பளைய என்ன செய்ய போற தம்பி ?" - மாடசாமியின் அண்ணன் போகிற போக்கில் கொல்லி வைத்தான்.

எனக்குள் ஒரு பயம் சம்மணம் இட்டது.
என்னை மறித்துக்கொள்ள மனதளவில் தயார் ஆனேன்.

நான் மட்டும் அல்ல எல்லோரும் மாடசாமியின் வார்த்தைக்காக காத்திருந்தோம்.
அவனது வாயை பார்த்தேன்.
அவன் கண்களில் ஒரு வெறி இருந்தது. பழிவாங்கும் வெறி.
அவன் வாய் திறந்தான். என் கதி அவன் வாயில் ....


தொடரும்

Comments

  1. ஒரே மூச்சில் படித்தேன்.. இன்னும் படிப்பேன் ..

    ReplyDelete
  2. நான் மட்டும் அல்ல எல்லோரும் மாடசாமியின் வார்த்தைக்காக காத்திருந்தோம்.
    அவனது வாயை பார்த்தேன்.
    அவன் கண்களில் ஒரு வெறி இருந்தது. பழிவாங்கும் வெறி.
    அவன் வாய் திறந்தான். என் கதி அவன் வாயில் ....

    ...... திகில் நிறைந்த தருணங்கள்..... Keep going! :-)

    ReplyDelete
  3. Thanks
    @கே.ஆர்.பி.செந்தில்
    @Chitra

    ReplyDelete
  4. Good going... கொஞ்சம் பெரிய பதிவா போடுங்க கார்த்திக்... ரெம்ப சின்னதா இருக்கற மாதிரி தோணுது...நல்லா போகுது... good write up

    ReplyDelete
  5. Thanks @அப்பாவி தங்கமணி

    ReplyDelete
  6. எப்பிடித் தலை இதெல்ல்லாம்? இன்ப அதிர்ச்சி கொடுப்தை விட திகிலூட்டியல்லவா அதிர்ச்சி கொடுக்கிறீர்கள். உங்கள் எழுத்து நடை, கதை நகர்த்தும் ஆற்றல், விறுவிறுப்புடன் கதையில் சரிவு ஏற்படாதபடி கொண்டு செல்லும் திறன் ஆகியவற்றை ரசித்தேன். தொடர்ந்தும் எழுதுங்கோ தோழா!
    வாழ்த்துக்கள்.


    ஏதாவது, பத்திரிகை அல்லது சஞ்சிகைக்கு அனுப்பி வைத்தால் இக் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

    ReplyDelete
  7. நன்றி தமிழ் மதுரம். ஏடுகளுக்கு ... பார்ப்போம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

ஆங்கிலத்தில் எழுதுங்கள்

நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர். சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர். நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?). என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை ) ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? ) சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு. நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com   என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது. மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம். இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் -  நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர